Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஹஜ் பயணிகளுக்கு போலீஸ் சான்றிதழ் இல்லாமலேயே பாஸ்போர்ட் வழங்கும் திட்டம்

Posted on August 9, 2010 by admin

சென்னை: ஹஜ் பயணம் மேற்கொள்வோருக்கு போலீஸ் சான்றிதழ் இல்லாமல் 8 மாத காலத்திற்கான பாஸ்போர்ட் வழங்கும் திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி முதல் பாஸ்போர்ட் சென்னையில் வழங்கப்பட்டது.

பாஸ்போர்ட் வாங்க ஒருவர் விண்ணப்பம் செய்தால் அவரை பற்றி காவல் துறையினர் விசாரித்து, விண்ணப்பித்த நபர் சரியான முகவரியில்தான் இருக்கிறார், தகவல்கள் சரியாக உள்ளன என்பதை தெரிவிக்கும் சான்றிதழ் வழங்க வேண்டும்.

அப்படி சான்றிதழ் கிடைத்த பின்னர்தான் சம்பநத்ப்பட்டவர்களுக்கு பாஸ்போர்ட் விநியோகம் செய்யப்படும். இதில் காலதாமதம் ஏற்படுவது வழக்கம்.

இந்த நிலையில் ஹஜ் யாத்திரை வருவோர் சர்வதேச பாஸ்போர்ட் வைத்திருக்க வேண்டும் என சமீபத்தில் சவூதி அரேபிய அரசு அறிவித்தது. இதையடுத்து ஹஜ் யாத்ரீகர்களின் நலனுக்காக, துரித கதியில் பாஸ்போர்ட் வழங்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்தது.அதன்படி, போலீஸ் சான்றிதழ் இல்லாமலேயே 8 மாத காலத்திற்கு மட்டும் செல்லுபடியாகக் கூடிய சர்வதேச பாஸ்போர்ட்டை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது. தற்போது அது நடைமுறைக்கு வந்துள்ளது.

இதன்படி விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் இந்த பாஸ்போர்ட் வழங்கப்படும். இது தற்காலிக பாஸ்போர்ட்தான். அதேசமயம், இதை நிரந்தரமாக மாற்றிக் கொள்ள விரும்பினால் தனியாக விண்ணப்பிக்க வேண்டும். பிறகு போலீஸ் சான்றிதழ் உள்ளிட்ட நடைமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு அவர்களுக்கு நிரந்த பாஸ்போர்ட்டாக அது மாற்றித்தரப்படும்.

இதுதொடர்பாக அனைத்து பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகங்களுக்கு மத்திய வெளியுறவுத்துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில்,

ஹஜ் கமிட்டியின் கவர் எண் உள்ள அனைத்து உண்மையான ஹஜ் பயண விண்ணப்பத்தாரர்களுக்கு புதிய திட்டப்படி உடனடியாக பாஸ்போர்ட் வழங்க வேண்டும்.

தனியார் ஹஜ் பயண முகவர்களுக்கு 45 ஆயிரம் பயண கோட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. அவர்கள் ஆகஸ்டு 13-ம் தேதிக்குள் தகுந்த நிரூபண ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

தற்போதைய புதிய திட்டத்தின்படி சென்னையில் விண்ணப்பித்த 15 நாட்களுக்குள் ஒருவருக்கு பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளதாக துணை பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ். தவ்லத் தமீம் அறிவித்தார்.

source: thatstamil.com

ஹெட் & ஷோல்டர் ஷாம்புக்குத் தடை!

உயிர்க் கொல்லியான கொடிய புற்று நோயை தோற்றுவிக்கக் கூடிய இரசாயனக் கலவை சேர்க்கப்பட்டிருப்பதை கண்டுபிடித்ததைத் தொடர்ந்து ஹெட் & ஷோல்டர் நிறுவனத்தின் இரண்டு உற்பத்தி பொருட்களுக்கு கத்தார் அரசாங்கம் தடைவிதித்துள்ளது. அத்துடன் இந்த தடை தற்காலிகமானதல்ல, அது நீடிக்கும் என்றும் கத்தார் சுற்றுச் சூழல் அமைச்சக ஆய்வுக் கூட பிரிவின் தலைமை அதிகாரி டாக்டர். ஸைஃப் அல் குவைரி தெளிவுபட கூறியுள்ளார்.

ப்ராக்டர் அண்டு கேம்பிள் நிறுவன தயாரிப்பான இருவகை ஹெட் & ஷோல்டர் ஷாம்பூக்களில் புற்று நோயை உண்டு பண்ணக் கூடிய “டயோக்சைடு” எனும் இரசாயனப் பொருள் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூடுதலாக கலக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் தான் கத்தார் நாட்டு அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

அழகு சாதனங்களின் மீதான மக்களின் மோகத்தை மூலதன மாக்கி நுகர்வோரை ஈர்க்கும் நோக்கில், சகல விதமான தார்மீக நெறிமுறைகளையும் மீறி & அபாய கரமான பின்விளைவுகளை பற்றிக் கூட கிஞ்சிற்றும் கவலைப் படாமல்தான் பெரும்பாலான இத்தகைய உற்பத்தி நிறுவனங்கள் தங்களின் தயாரிப்புகளை கவர்ச் சிகரமான விளம்பரங்களுடன் சந்தைப்படுத்தி வருகின்றன.

விளக்கை நோக்கி பாய்ந்து வீழ்ந்து மடியும் விட்டில்களைப் போல, மக்கள் அழகு மோகத்தால் இயற்கை அழகையும் ஆரோக்கியத்தையும் கெடுத்து பாழ்படுத்திக் கொள்வதுடன் கொடிய நோய்களுக்கும் ஆட்பட்டு வருகின்றனர்.

மக்கள் நலனில் அக்கறை காட்டாத அரசாங்கங்களும், அதிகாரிகளும் யார் எக்கேடு கெட்டால் நமக்கென்ன என்கிற போக்கில் தங்களின் வருவாயில் மட்டுமே குறியாக உள்ளனர்.

எதிர்பாராத வகையில் ஏதேனும் திடீர் அசம்பாவிதங்கள் நிகழ்ந்தால் ஒழிய இத்தகைய மென்விஷப் பொருட்களின் உற்பத்தி & வினியோகம் & பயன்பாடு பற்றியெல்லாம் எவரும் கவலைப்படுவதில்லை என்பதுதான் வேதனைக்குரிய விஷயமாகும்.

எனவே, சமூக நலனில் அக்கறை உள்ளவர்கள் இதுபோன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தி மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்ட வேண்டும், மக்களும் விழிப்படைய வேண்டும்.

Source : tmmk.in 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

22 − = 12

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb