25. அரசியல் மோசடிகள்:
மனித கூட்டு வாழ்க்கைக்கு அரசியல் மிக அவசியமான ஒன்றாக இருக்கின்றது. இந்த அவசியத்தைப் பயன்படுத்திக் கொண்டு சமுதாயத்தில் ஒரு சிறு தொகையினரான அரசியல்வாதிகள் என்னென்ன அநியாயங்களைச் செய்கிறார்கள்!.
சமுதாய நலனை விட தங்கள் நலனை எந்த அளவு முற்படுத்துகிறார்கள், அப்படி இருந்தும் சமுதாய நலன் கருதி நாஸ்திகம் பேசுவதாகச் சொல்லிக் கொள்பவர்களிலும் பலர் எந்த அளவு இந்த அரசியலில் ஈடுபட்டிருக்கிறார்கள். அவர்கள் அரசியலின் பெயரால் மக்களுக்கு இழைக்கும் கொடுமைகள் அனைத்தையும் அடுத்து விரிவாகவே பார்ப்போம்.
சமுதாய மேன்பாட்டிற்காக, மனித குல ஒற்றுமைக்காக நாஸ்திகர்கள் எடுத்து வைக்கும் திட்டங்கள் தவறு, சரியனவை அல்ல. மேலும், மனிதர்களுக்குச் சீரழிவையே உண்டாக்கும் என்ற விவரங்களைப் பார்த்து வருகிறோம். இனி சமுதாய கூட்டு அமைப்பிற்கு அரசியல் அத்தியாவசியமாக இருக்கின்றது. இந்தக் காரணத்தை பயன்படுத்தி அரசியல் இடைத் தரகர்களான அரசியல்வாதிகள் எப்படிப்பட்ட கொடுமைகளை எல்லாம் மனித சமுதாயத்திற்கு இழைத்து வருகின்றனர்.
நாஸ்திகர்கள் தங்கள் சித்தாந்தங்களின் படி ”அரசியல் வேண்டாம், அரசியல் என்று ஒன்று இல்லை, அரசியலை கற்பிப்பவன் முட்டாள்” என்று கோஷங்கள் போடுவதற்குப் பதிலாக, அரசியல் மிகமிகத்தேவை என்றே சொல்கின்றனர். அந்த அரசியலில் இவர்கள் மிகப்பெரும் பங்கே வகிக்கின்றனர்.
தமிழ் நாட்டில் செல்வாக்கினைப் பெற்றுள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகலெல்லாம் நாஸ்திகத்தைப் பரப்பிய பெரியாரின் போதனைகளின்படி செயல்படுகிறோம் என்று சொல்லிக் கொள்கிறவர்கள்தான் அங்கம் வகிக்கின்றனர். பெரும்பாலான இன்றைய அரசியல்வாதிகள் எப்படிப்பட்டவர்கள்? அவர்களுடைய குண நல ஒழுக்கங்கள் எப்படிப்பட்டவை? என்பதை அன்றாட பத்திரிக்கைகளைப் பார்ப்பவர்கள் மிக அதிகமாக தெரிந்து வைத்துள்ளனர்.
கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்கள், விபச்சார விடுதி நடத்துபவர்கள், அவற்றிற்காக துணிந்து பல கொலைகளை செய்பவர்கள் இன்னும் இது போன்ற பஞ்சமா பாதகங்களில் ஈடுபடுவோர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் அரசியல்வாதிகளையும், அரசாங்க அதிகாரிகளையும் நாட்டு மக்கள் அன்றாட செய்திகள் மூலம் நன்றாக தெரிந்து வைத்துள்ளனர். இப்படிப்பட்ட சமூக விரோத காரியங்கள் இன்றைய பல அரசியல்வாதிகளின் பூரண ஆதரவோடும், ஒத்துழைப்போடும்தான் நடந்து வருகின்றன என்பதை நம்மை விட நாஸ்திகர்கள் நன்கு அறிவார்கள். அப்படியிருந்தும் அவர்கள் ”அரசியலே அவசியம் இல்லை” என்று சொல்லுவதில்லையே!.
அரசியல் அமைப்பு நாட்டுமக்களின் நலனைக் கருதியே இருக்கிறது என்று மேடைக்கு மேடை பேசுகிறார்கள். ஆனால், நாட்டுமக்களின் நலனைவிட அரசியல்வாதிகளாகிய தங்களின் நலனை முன்வைத்தே சட்டங்கள் அமைக்கின்றனர். அவர்களால் இயற்றப்படும் சட்டங்களைக் கொண்டு, அரசியல்வாதிகளாகிய அவர்களும், அவர்களுக்குத் துணை நிற்கும் அரசாங்க அதிகாரிகளும் கொழுத்து வளர்கின்றனரே அல்லாமல், நாட்டு மக்கள் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாடி வதங்கி அவஸ்தப்படும் அவலக் காட்சிகளைத்தான் பார்த்து வருகிறோம்.
உதாரணத்திற்கு மக்களின் அன்றாட தேவைக்கு அத்தியாவசியமான பொருட்களில் விற்பனைவரி என்று அரசு அமைத்திருக்கும் வரிமுறையை உங்களின் கவனத்திற்குக் கொண்டு வருகின்றோம். மக்கள் நலனைக் கருதும் அரசாக இருக்குமேயானால் ஏழை மக்கள் உபயோகிக்கும் பொருட்களில் வரிவிதிக்கும் முறையை ஒருபோதும் மேற்கொள்ளாது. ஆனால், அதற்கு நேர்மாறாக ஒருமுனை வரிவிதிப்பைக் கொண்டும் திருப்தி படாமல், பல பொருட்களில் பலமுனை வரிவிதிப்பு முறையை அமுல்படுத்தியிருப்பதையும் பார்க்கின்றோம். இந்த பலமுனைவரிவிதிப்பு முறை நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ பலன் தரும் ஒரு முறையல்ல. மாறாக அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் வியாபாரிகளிடமிருந்து பணத்தைக் கொள்ளை கொள்ளையாகப் பிடுங்கும் ஒரு வழியாகும்.
ஒருமுனை வரி விதிப்பதால் நாட்டுக்கோ, நாட்டு மக்களுக்கோ எவ்வித இழப்பும் ஏற்படாது. மாறாக, செழிப்பான ஒரு நிலையைப் பார்க்கலாம். ஆனால், இன்றைய அரசியல்வாதிகளோ, அரசாங்க அதிகாரிகளோ அதற்கு தயாராவார்களா என்றால் நிச்யமாக ஒருபோதும் தயாராகமாட்டார்கள். காரணம், இத்திட்டத்தைக் கொண்டு நாட்டு மக்கள் பயனடைவார்களேல்லாமல் இந்த அரசியல்வாதிகளோ, அரசாங்க அதிகாரிகளோ கொழுத்த இலாபம் அடைய முடியாது. அரசியல்வாதிகளுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் உற்பத்தியாளர்களிடமும், வியாபாரிகளிடமும் இருக்கும் செல்வாக்கு இல்லாமல் போய்விடும். இவர்கள் இலட்ச லட்சமாக, கோடி கோடியாக உற்பத்தியார்களிடமிருந்தும், வியாபாரிகளிடமிருந்தும் திரட்ட முடியாது.
வியாபாரிகள் அதிகாரிகளின் மிரட்டல்களுக்கோ அச்சுறுத்தல்களுக்கோ ஆளாக வேண்டியிராது. உற்பத்தியாளர்களும், வியாபாரிகளும் இலட்ச லட்சமாக கோடி கோடியாக, இன்றைய அரசியல்வாதிகளுக்கும், அரசாங்க அதிகாரிகளுக்கும் கொடுத்துவிட்டு அதனை வியாபார முதலீடாகக் கருதி ஆதாயத்தோடு அவற்றைப் பெற்றுக் கொள்ள தரமில்லாத பொருட்களை தயார் செய்தும், கலப்படங்கள் செய்தும் பொதுமக்களை வஞ்சிக்கும் நிலை ஏற்படாது. ஆக இப்படி பலமுனை வரியால் நாட்டுமக்களுக்கு ஏற்படும் பல தீமைகளகை; களைய முடியும்.
26. ஏன் விலை போகிறார்கள்? பெரும் பெரும் வியாபாரிகளும், உற்பத்தியாளர்களும், அரசியல்வாதிகளையும், அரசாங்க அதிகாரிகளையும் விலைக்கு வாங்கி விடுகின்ற நிலை ஏற்பட்டுள்ளதே என்று யாரும் கேட்டால், அவர்கள் ஏன் அப்படி விலை போகிறார்கள்? என்பதே நமது கேள்வியாகும். சமீபத்தில் ஒரு அரசியல் கட்சி தனக்கு தேர்தல் நிதி இரண்டரைக் கோடி சேர்ந்துள்ளதாக அறிவித்தது. இன்னொரு கட்சி ஒன்றரை கோடி சேர்ந்துள்ளதாக அறிவித்தது. இப்படி தேர்தலுக்காக கோடிக்கணக்கில் பணம் தேவைதானா? ஒரு வேட்பாளருக்கு விளம்பர வகைகளுக்காகவும், தேர்தல் பிரச்சாரத்திற்காகவும் அவை முறைப்படி இருக்குமானால், எவ்வளவு செலவாகி விடப்போகிறது! புள்ளி விவரம் தெரியாமல்தான் இன்றைய அரசியல்வரிகள் இருக்கின்றனரா? கோடிக்கணக்கில் உற்பத்தியாளர்களிடமிருந்தும், வியாபாரிகளிடமிருந்தும் தங்களை விற்றுப் பெறவேண்டிய அவசியமென்ன வந்து விட்டது? கோடிக்கணக்கில் கொடுப்பவர்கள் அவர்களின் துணை கொண்டு பல கோடி திரட்டிட முடியும் என்ற தைரியமில்லாமலா கொடுக்கின்றனர். நாளை இவர்கள் ஆட்சியல் அமரும்போது கோடி கோடியாக கொடுத்தவர்களுக்கு அடிபணியாமல் இருக்க முடியுமா?
அதன் விளைவு என்னவாகும், அப்படிப்பட்ட ஆட்சிகளைக் கொண்டு, வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கும் பெரும்பான்மையான மக்களுக்கு நலன் ஏற்படும் என்று நாஸ்திகர்கள் நம்புகின்றார்களா? இப்படிப்பட்ட அரசியலில் இவர்களும் பங்கெடுக்கின்றார்களே, அப்படியானால் அதன் இரகசியம் என்ன? நாட்டு மக்களின் நலனிலும், ஒற்றுமையிலும், சமுதாய மேம்பாட்டிலும் உண்மையில் அக்கறை உடையவர்கள் இப்படிப்பட்ட அரசியலமைப்பைச் சரி என்று ஏற்றுக் கொள்ள முடியுமா? இதற்கு நாஸ்திகர்களின் பதில் தான் என்ன?
உணவு விடுதிகளில் சாப்பிடும் உணவு வகைகளுக்கும் வரி விதிக்கும் கீழ் நிலைக்கு இன்றைய அரசு ஆளாகியுள்ளது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். நமது நாட்டில் பிரபலமாக பேசப்பட்ட பீரங்கி ஊழல்-இந்திய பாதுகாப்புத் துறைக்கே கேடுதரும், அவமானத்தைத் தரும் நிகழ்ச்சி. அரசியல்வாதிகளின் முறைகேடான செயல்களால் அரசியலுக்கே இழுக்காக அமைந்துள்ளது. இன்று பரபரப்பூட்டும் பல கொலைகளுக்குப் பின்னணியில் அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் உடந்தையென கூறப்படுகிறது, இதுவும் அரசியலுக்கு ஏற்பட்டுள்ள ஓர் அவப்பெயர். மேலும் சாராயத் தொழிலிலும், சூதாட்டத் தொழிலிலும் அரசியல்வாதிகளின் அணி வகுப்பே மேலோங்கி நிற்கிறது. சுருங்கச் சொன்னால், இன்று நம் நாட்டில் நீக்கமற நிறைந்துள்ளது ஊழல்தான். அந்த ஊழல்களுக்கு முழு முதற்காரணமாக, களமாக இருப்பவர்கள் இன்றைய அரசியல்வாதிகளே!.
இன்றைய அரசியலை நாஸ்திகர்கள் சரி என்று ஒப்புக்கொண்டு அவர்களும் இன்றைய அரசியலில் எப்படி பங்கு வகிக்கிறார்கள், இவ்வாறு நாம் கேட்பதின் காரணம், இறைவனின் பெயரால் மதப்புரோகிதர்கள் மக்களை ஏமாற்றி அவர்கள் சுய ஆதாயம் அடைந்து வருகிறார்கள் என்பதற்காக ”கடவுள் இல்லை! இல்லவே இல்லை! கடவுளை கற்பித்தவன் முட்டாள்! கடவுளை ஆக்கியவன் அயோக்கியன்! கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி!” என்று கோஷமிடும் நாஸ்திகர்கள் இங்கு அரசியலின் பெயரால் அரசியல்வாதிகள் என்ற புரோகிதர்கள் மக்களை ஏமாற்றி அவர்கள் சுய ஆதாயம் அடைந்து வருவதை தெளிவாக அறிந்து வைத்திருக்கும் நாஸ்திகர்கள் ”அரசியல் இல்லை! இல்லவே இல்லை! அரசியலைக் கற்பிப்பவன் முட்டாள்! அரசியலை ஆக்கியவன் அயோக்கியன்! அரசியலை ஒப்புக் கொள்கிறவன் காட்டுமிராண்டி!” என கோஷமிடுவதில்லையே! ஏன்? மாறாக, இப்படிப்பட்ட முடை நாற்றமெடுக்கும் அரசியல் சாக்கடையில் இவர்களும் முங்கிக் குளிப்பதேன்? இதுவே நமது கேள்வியாகும். நாஸ்திக நண்பர்கள் விடையளிப்பார்களா?
நாஸ்திகர்கள் சிந்தித்து விளங்கத்தவறிய அந்தப் பேருண்மையை நாம் தெளிவுபடுத்துகிறோம். மனிதன் தேவையுடையவனே, தேவையற்ற ஒரு மனிதனை நம்மால் பார்க்க முடியாது. தேவை எந்தளவு முக்கியமானதாக அமைகிறதோ, அந்த அளவிற்கு நெருக்கடியும் ஏற்படும் எனவே, இடைத்தரகர்கள் ஏற்படுவதும் இயல்பே. இப்படிப்பட்ட இடைத்தரகர்களின் மனிதாபிமானமற்ற மிருகச் செயல்களைக் கண்டித்து, அவர்களைத் திருத்தப் பாடுபட வேண்டுமேயல்லாமல். அவர்கள் திருந்தாவிட்டால் அவர்களை அகற்றிட பாடுபட வேண்டுமேயல்லாது அத்தரகர்கள் உண்டாகக் காரணமாயிருந்த தேவைகளை மறுப்பது மனிதச் செயலல்ல. மனிதன் மனிதனாக வாழ இறைநம்பிக்கை மிகமிகத் தேவையானதாகும். இறைநம்பிக்கை உறுதியாகவும், தெளிவாகவும் உள்ள எந்த மனிதனும் மனசாட்சிக்கு விரோதமாக செயல்படுவான் என்று நாம் நம்பவே முடியாது. போலி ஆஸ்திகர்களைப் பார்த்து இந்த நாஸ்திகர்கள் ஒரு பெரிய தப்பான முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என்றே சொல்ல முடியும். மக்களிடையே சரியான, முறையான, தெளிவான, உண்மையான ஓரிறை நம்பிக்கையை உண்டாக்குவதன் மூலம், இன்று மக்களிடையே மலிந்து காணப்படும் பல ஊழல்களையும், தவறுகளையும், ஒருவரை ஒருவர் ஏமாற்றும் கொடுஞ்செயல்களையும் அகற்றி நேர்மையான, உன்னதமான சகோதரத்துவம் நிலவும் சமுதாயத்தை உருவாக்க முடியும் என்பதே அந்தப் பேரூண்மையாகும்!.
இறைவனின் பெயரால் ஒரு சிறிய கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப் பிழைக்க வழி ஏற்படுகின்றது. எனவே இறைவனைக் கற்பிப்பது மடமையாகும் என்று நாஸ்திக நண்பர்களின் கூற்றிலுள்ள மடமையைத் தெளிவாகப் பார்த்தோம். மேலும் இதே போல் ஒரு சிறு கூட்டம் பெருங்கூட்டத்தை ஏமாற்றிப்பிழைக்கும் அரசியல் அவசியமில்லை என்று இந்த நாஸ்திகர்கள் சொல்லுவதில்லை. மாறாக அதில் இவர்களே முன்னணியில் இருக்கின்றனர் என்ற விபரத்தையும் கண்டோம். மக்களுக்கு அத்தியவசியமாகத் தேவைப்படும் காரியங்களிலேயே இடைத்தரகர்கள் புகுந்து, தங்கள் சுய ஆதாயத்திற்காக பெருங்கூட்டத்தை ஏமாற்ற முற்படுவர். இதைக் காரணங்காட்டி அந்த அத்தியாவசியக் காரியங்கள் இல்லை என்றோ, அல்லது தேவையில்லை என்றோ சொல்வது அறிவாளிகளி;ன் கூற்றல்ல. குடியை ஒழிக்கத் தென்னை மரங்களையும், பனை மரங்களையும் வெட்டிச் சாய்க்கும் அறிவீனர்களின் கூற்றேயாகும் என்பதையும் தெளிவாகப் பார்த்தோம்.
இன்ஷா அல்லாஹ், தொடரும்