0 ‘ஒரு தொழுகையை ஒரே நாளில் இரு முறை தொழாதீர்கள்’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூ தாவூது, நஸாயி)
0 ‘தொழுகைக்கு இகாமத் கூறப்பட்டு விட்டால் ஃபர்லான தொழுகையைத்தவிற வேறு எத்தொழுகையும் கிடையாது’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லீம், அபூ தாவூது, திர்மிதீ, நஸாயி)
0 ‘எவர் இமாமுடன் தொழுகையில் ஒரு ரகஅத்தை அடைந்து விடுகின்றாரோ அவர் நிச்சயமாக, அத்தொழுகை முழுவதையம் அடைந்து விட்டவராவார்’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரீ, முஸ்லீம், முஅத்தா, அபூ தாவூது)
0 ‘எவர் மறுமை நாளை தம் கண்ணார உள்ளது உள்ளபடி காண விரும்புன்கிறாரோ அவர், 81, 82, 84 ஆகிய அத்தியாயங்களை ஓதவும்’ என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்கூறினார்கள். (அறிவிப்பாளர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதீ)
0 ‘நானும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரு பித்தளை அண்டாவிலிருந்து தண்ணீர் எடுத்து குளித்து வந்தோம்’ (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: அபூ தாவூது)
உயர்த்தப்பட்டிருக்கறது. 0 ‘தொழுகை ஐம்பது முறையாகவும்,
முழுக்குக் குளியல் ஏழு முறையாகவும்,
மூத்திரம் பட்ட துணியை ஏழு முறை கழுவ வேண்டியதாகவும் (ஆரம்பத்தில்) இருந்து வந்தது.
ஆனால் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவனிடம் திரும்பத் திரும்ப தொழுகையை ஐந்து வேளையாகவும்,
முழுக்குக் குளியலை ஒரு முறையாகவும் செய்து
மூத்திரம் பட்ட துணியை ஒரு முறை கழுவிக் கொள்ளவும் செய்தனர்.’ (அறிவிப்பாளர்: இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூ தாவூது)
0 நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: “ஹலாலும் (அனுமதிக்கப்பட்டதும்) தெளிவாக உள்ளது. ஹராமும் (தடுக்கப்பட்டதும்) தெளிவாக உள்ளது. ஆனால் இவ்விரண்டுக்குமிடையே சந்தேகத்திற்குரிய சில விஷயங்கள் உள்ளன. சந்தேகத்துக்குரிய பாவங்களிலிருந்து விலகி இருப்பவன் பகிரங்கமான பாவங்களிலிருந்தும் கண்டிப்பாக விலகியே இருப்பான். சந்தேகத்திற்குரிய பாவங்களில் துணிவுடன் ஈடுபடுபவன் வெளிப்படையான பாவங்களில் வீழ்ந்துவிட பெரிதும் வாய்ப்புண்டு. பாவங்கள் அல்லாஹ்வினால் தடை செய்யப்பட்ட பகுதிகளாகும் (அவற்றினுள் நுழைந்திட அனுமதியில்லை, அதனுள் அத்துமீறி நுழைந்துவிடுவது குற்றமாகும்.) தடை செய்யப்பட்ட பகுதியின் அருகே மேய்கின்ற பிராணி அதனுள் புகுந்துவிட பெரிதும் வாய்ப்புண்டு.” (அறிவிப்பாளர் : நுஃமான் பின் பஷீர் ரளியல்லாஹு அன்ஹு புகாரி, முஸ்லிம்)
0 நபிமணி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நவின்றார்கள்: “நாம் பாவத்தில் ஆழ்ந்து விடுவோமோ என்னும் அச்சத்தால் ஒரு பாவமில்லாத விஷயத்தைக் கூட விட்டுவிட முன்வராதவரை இறைவனை அஞ்சும் நல்லடியார்களின் பட்டியலில் எந்த மனிதனும் இடம் பெற முடியாது.” (அறிவிப்பாளர் : அத்திய்யதுஸ் ஸஃதி ரளியல்லாஹு அன்ஹு திர்மிதி)
0 ‘மூவரை விட்டும் எழுதுகோல் உயர்த்தப்பட்டிருக்கறது. 1) தூங்குபவர் விழிக்கும் வரை, 2) குழந்தை வாலிபப் பிராயத்தை எட்டும் வரை, 3) பைத்தியம் பிடித்தோர் பித்துத் தெளியும் வரையில் என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினர்’ (அறிவிப்பாளர்: அலீ ரளியல்லாஹு அன்ஹு, நூல்: அபூ தாவூது, திர்மிதீ)
அபூ தாவூதிலுள்ள அறிவிப்பில் முதிய வயதின் காரணமாக புத்தி தடுமாறி இருப்பவரும் என்று அதிகமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
0 (ஒரு முறை) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “உன் சகோதரன் அக்கிரமக்காரனாக இருக்கும் நிலையிலும் அக்கிரமத்துக்குள்ளானவனாக இருக்கும் நிலையிலும் அவனுக்கு உதவி செய்” என்று கூறினார்கள். மக்கள், “இறைத்தூதர் அவர்களே! அக்கிரமத்துக்குள்ளானவனுக்கு நாங்கள் உதவுவோம். அக்கிரமக்காரனுக்கு நாங்கள் எப்படி உதவுவோம்?” என்று கேட்டனர். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “அவனுடைய கைகளைப் பிடித்து (அக்கிரமம் செய்யவிடாமல் தடுத்து)க் கொள்வாய் (இதுவே, நீ அவனுக்குச் செய்யும் உதவி)” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள், நூல்: புகாரி)