Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ரமளான் மாதமும் நோன்பும் (2)

Posted on August 2, 2010 by admin

ரமளான் மாதமும் நோன்பும் (2)

     சுயமரியாதை      

மனித சமுகத்தில் தோன்றக்கூடிய எல்லா பிரச்சினைகளும் முஸ்லிம்களுக்கும் ஏற்படும். முஸ்லிம்களுக்கும் அடுத்தவரிடம் கையேந்தக்கூடிய நிலை ஏற்படலாம். அந்த நேரங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும் நோன்பு கடமையாக்கப்பட்டது.

இன்று நம் நாட்டில் சுயமரியாதைக்காக பல்வேறு இயக்கங்கள் தன்னுடைய பொன்னான நேரத்தையும், பொருளாதாரத்தையும் செலவழித்து வருகின்றன. ஏனெனில் நம் நாட்டில் சாதியம் என்ற பெயரால் மிகப்பெரிய கொடுமை பெருஞ்சமுதாயத்திற்கெதிராக கட்டவிழ்த்து விடப்படுகிறது.

நாம் அவர்களின் விஷயத்தில் அவர்கள் விரும்பாதவரை தலையிடப் போவதில்லை. ஆனால்; இதில் முஸ்லிம்கள் மிகப்பெரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளார்கள். எந்த நிலையிலும் வயிற்றுப் பசியைக் காரணங்காட்டி யாரிடமும் அடிமைப்பட்டுவிடக்கூடாது மேலும் யாரையும் அடிமைப் படுத்திவிடவும் கூடாது. நமது சுயமரியாதை எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என நாம் நினைக்கின்றோமோ அதே போன்று அடுத்தவர்களின் சுயமரியாதையையும் நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம். (திருக்குர்ஆன் 17:70)

”மக்களே உங்களின் இரத்தமும், செல்வமும் மிக சிறப்பிற்குரியதாகும். அரபா நாளான இன்றைய நாளைப்போல! ஹஜ்ஜுடைய இந்த மாதத்தைப்போல! மக்காவுடைய புனிதத்தைப்போல!

நான் இறைவனின் செய்திகளை உங்களிடம் சொல்லிவிட்டேனா? இறைவனே நீயே இதற்கு சாட்சி. முஸ்லிமின் எல்லா உரிமைகளும் தூய்மையானது. அவன் இரத்தம், செல்வம், மானம் ஆகியவைகளும் புனிதமானது.” என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜத்தில் விதாவில் உரை ஆற்றினார்கள்.

வயிறு பசித்து அடுத்தவனிடம் கையேந்தி அடிமைப்படாமலிருக்க நீண்ட பயிற்ச்சி தேவை. எந்த வகையான பயிற்ச்சியும் இல்லாததின் காரணமாகத்தான் நம்நாட்டில் தீண்டத்தகாதவர்களாகவும், காலணிவாசிகளாகவும் ஆகிப்போனார்கள். இந்த நிலை முஸ்லிம்களுக்கு எந்தக்காலத்திலும் ஏற்பாடாமலிருக்க ஒவ்வொரு வருடமும் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட பயிற்ச்சிதான் நோன்பு.

அடுத்தவரிடம் பசியின் காரணமாக அடிமைப்படும் அவல நிலை ஒருவேலை நமக்கும் ஏற்பட்டால்; ‘ரமழான் மாதத்தில் பசியோடு மாத்திரம் அல்ல! பெருந்தாகத்தோடும் இருந்தேன். அற்ப ஒருபிடி சோறுக்காக என் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன். இறைவனல்லாத யாருக்கும் அடிமைப்பட்டுவிட மாட்டேன். பசியென்ன எனக்கு புதிதா? ரமழான் மாதம் முழுவதும் பசித்திருந்தேனே அப்போது யாரிடமும் அடிமைப்பட வில்லையே! இப்போது நான் ஏன் அடிமைப்பட வேண்டும். எக்காரணங்கொண்டும் எனது சுயமரியாதையை எதற்காகவும் அதிலும் குறிப்பாக வயிற்றுக்காக விட்டுக்கொடுக்கவே மாட்டேன்’ என்ற வீரஉணர்வை நமக்கு ஊட்டக்கூடிய பயிற்ச்சிதான் நோன்பு.

     பிச்சை எடுத்தல்     

நோன்பு கடமையாக்கப்பட்ட நோக்கத்தை ஆராய்ந்துவருகிறோம். இந்த நோன்பு எப்படியெல்லாம், எதற்கெல்லாம் பயிற்ச்சியளிக்கிறது என்று பாருங்கள்.

நீங்கள் தெருக்களில், கடைவீதிகளில் பார்த்திருப்பீர்கள். உடற்கட்டான மனிதன் பார்ப்பதற்கு ஆஜானுபாகுவான ஆள். சைக்கிளிலே கையை விட்டுவிட்டு தன் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக சர்க்கஸ் சாகசங்களை செய்துகாட்டுகிறான். அதன் முடிவில் ஒரு டியூப்லைட்டை தரையில் வைத்துக்கொண்டு தன் நெஞ்சால் உடைத்துக் காட்டுவதையும் அதன் பின்னால் தன் வயிறை சுட்டிக்காட்டி எல்லாம் ஒரு ஜான் வயித்துகாகத்தான் என்று சொல்லிக் கொண்டே பிச்சை கேட்பதையும், இது போன்றே மோட்டார் சைக்கிளிலே வேகமாக ஓட்டிக்கொண்டு வந்து சாகசங்கள் செய்து காண்போரை வியக்கவைக்கும் திறமைகள் கொண்டவர்களும் அதன் முடிவில் கடைகடையாக எல்லா நபர்களிடம் பிச்சை கேட்பதையும், அதுபோன்றே கேட்பதற்கினிய குரல் பெற்றிருப்பதால் உடலில் எந்த ஊனமில்லாத நிலையில் பாட்டுப் பாடிக்கொண்டே வயிற்றில் அடித்துக்கொண்டு பிச்சை எடுப்பதையும் நாம் பார்த்திருப்போம்.

இப்படி கஷ்டப்பட்டு சாகசங்கள் செய்பவர்களுக்கு பிரச்சினையாக தெரிவதெல்லாம் ஒரு ஜான் வயிறும்இ பசியம்தான். இவர்கள் எப்படியெல்லாம் திறமைப் படைத்தவர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். சைக்கிள் ஓட்டுபவரை நாம் பார்க்கும்போது என்ன ஆகுமோ என நாம் பயந்து நடுங்குவோம். மோட்டார் சைக்கிள் ஓட்டுவரை பார்க்கும்போது சொல்லவேண்டிய தேவையே இல்லை. இவர்களை விட திறமையற்றவர்களாகிய பார்வையாளர்கள் மூன்று நேரமும் வயிறாற சாப்பிட்டுவிடுகிறார்கள். ஆனால் பிரமிக்கத்தக்க ஆற்றல் படைத்தவர்களுக்கு சோற்றுக்கு வழியில்லை என்றால் என்ன ஆச்சரியம்.

இவ்வளவு சாகசங்களையும் செய்துக்காட்டி பிச்சை எடுப்பதற்கு முன்னால் ஒரு நிமிடம் சிந்தித்;துப்; பார்த்திருந்தால் பிச்சை எடுப்பதற்கு அவர்களுக்கு மனது வருமா?. நமது செயல்களைப் பார்த்து பயப்படுகிற, ஆச்சிரியப்படுகிற இந்த மக்கள் நன்றாக சாப்பிடுகிறார்களே! நாம் ஏன் நமது திறமைகளை வெளிப்படுத்தி உழைத்து சம்பாதிக்ககூடாது! வாழ்வில் முன்னுக்கு வரக்கூடாது என ஒரு நிமிடம் அவர்கள் சிந்திப்பதற்கு அவகாசம் இல்லை. ஏன் இந்த இழிநிலை?. காரணம் அவர்களுக்கு முறையான பயிற்சி கிடையாது. மனோதத்துவ ரீதியாக தெம்பூட்டுவதற்கு பயிற்ச்சி அளிக்கப்படவில்லை. அவர்களும் தன்னை முறையான பயிற்ச்சிக்கு உட்படுத்திக் கொள்ளவில்லை.

ஒரு முஸ்லிம் வருடாவருடம் பயிற்ச்சியளிக்கப்படுகிறான் இது போன்ற நிலையை சந்திக்ககூடிய முஸ்லிம்கள் மனோதத்துவ பயிற்சி அளிக்கப்படுவதால் தன்னை வெகுவாக மாற்றிக்கொள்ள இயலும்.

இதை சொல்ல வேண்டிய கண்ணியமிக்க உலமாக்கள் ரமழான் மாதம் வந்து விட்டால்; பையை தூக்கிக்கொன்டு வந்துவிடுகிறார்கள். ஒரு மணி நேரம்; அல்லது மக்களது ஆர்வத்தை பொறுத்து அடுக்கடுக்கான வசனங்களால் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தி விட்டு மக்களிடம் கை ஏந்திவிடுகிறார்கள். சில கண்ணிமிக்க உலமாக்கள் இதற்காக பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையிருப்பதால் நோன்பும் வைப்பதும் கிடையாது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அல்லாஹ் பயணத்திலிருப்பவர்களுக்கு நோன்பு வைக்கவேண்டாமென சலுகை தந்துள்ளான் என தப்ஸீர் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இவர்கள் நோன்பின் நோக்கத்தை நன்றாக படித்தவர்கள் அந்தோ பாவம் மகத்துவம் உணராதவர்கள்.

எந்த நேரத்திலும் யாரிடமும் கையேந்தக் கூடாது, எந்த நிலையிலும் நம் சுயமரியாதையை இழந்து விடக்கூடாது என்ற கருத்தில் வருகிற குர்ஆனின் வசனங்களையும், நபிமொழிகளையும் ஆராய்ந்தால் பிச்சை எடுத்தலை இஸ்லாம் எந்த அளவிற்கு வெறுக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

     விபச்சாரம் செய்யாமலிருக்க பயிற்சி    

நீங்கள் விபச்சாரத்தை நெருங்காதீர்கள்; நிச்சயமாக அது மானக்கேடானதாகும். மேலும், (வேறு கேடுகளின் பக்கம் இழுத்துச் செல்லும்) தீய வழியாகவும் இருக்கின்றது (திருக்குர்ஆன் 17:32)

மனித சமூகம் அனைவருமே விபச்சாரம் செய்யக்கூடாது என்பதிலே இருவேறு கருத்துக்கொண்டவர்கள் அல்;லர். ஆனால் அதை எப்படி ஒழிப்பது என்பதில்தால் பலவகை கருத்து மாற்றங்கள் உள்ளது.

இஸ்லாம் எடுத்த எடுப்பிலேயே கல்லெறிந்து கொல்வதையோ அல்லது கசையடி கொடுப்பதையோ கடைபிடிக்கவில்லை. அதற்கு முன்னால் மனதளவில் பெரும் மாற்றத்தையும், விபச்சாரம் செய்ய தூண்டக்கூடிய அனைத்து காரணகாரியங்களையும் களைந்தெடுத்துவிட்டு அதன்பிறகு மனக்கட்டுபாட்டையும் போதிக்கிறது. இவ்விஷயத்தில் அதிகமானவர்கள் மனக்கட்டுப்பாடு உடையவர்களாக காணப்படுவதில்லை.

இப்படிப்பட்டவர்களுக்கு மனக்கட்டுபாட்டு பயிற்ச்சியளிப்பது மாத்திரம் போதுமாக அமையாது. ஆனால் அவர்கள் திருந்தும் வண்ணம் மறுபடியும் அந்த தவறை செய்யாமலிருக்கவும் அடுத்தவர்களும் அதன்மூலம் பாடம் பெறவும் சற்று வலுவான தண்டனைகள் கொடுத்தாக வேண்டியுள்ளது. ஆகவே நியாயமான உணர்வுடனும், நிதானத்தோடும், நடுநிலையோடும் அணுகுவோர் இஸ்லாம் விபச்சாரத்திற்கு அளிக்கிற தன்டனைகளில் தவறு காண முடியாது.

இந்த அணுகுமுறைகள் தவறானது என விமர்சிப்போர் உண்மையில் விபச்சார பிரியர்களாகத்தான் இருக்கமுடியும். விபச்சாரத்தை ஒழிப்பதிலே அவர்களுக்கு எள்முனை அளவினும் ஆர்வம் கிடையாது என்று தான் பொருள் கொள்ள வேண்டி வரும்.

விபச்சாரம் ஒழிய இஸ்லாம் காட்டிய ஆக்கப்பூர்வமான வழிமுறைகளை குர்ஆன் சுன்னாவின் ஒளியிலும்இ இஸ்லாமிய சட்டங்கள் நடைமுறையிலுள்ள நாடுகளில் நடக்கும் விபச்சாரத்தின் எண்ணிக்கையும் பற்றி சிந்தித்தால் இஸ்லாம் எந்த அளவிற்கு விபச்சாரத்தை வேரோடும் வேரடி மண்ணோடும் களைந்திருக்கின்றது என்பதை அறியமுடியும். வெறும் சட்டங்களால் மட்டும் விபச்சாரத்தை ஒழித்துவிட இயலாது மாறாக மக்களிடம் விபச்சாரம் ஒரு கொடும் தீமை என்பதை புரியவைக்க வேண்டும். விபச்சாரம் புரிய வாய்ப்புகள் கிடைத்தாலும் அதிலிருந்து தன்னை காத்துக்கொள்ளும் அளவிற்கு மனிதனுக்கு மனப்பக்குவத்தை அளிக்கவேண்டும். அத்தகைய மனப்பக்குவத்தை அளிப்பதற்கு நோன்பு பெரும் பங்கு வகிக்கிறது.

    கொலைவெறியிலிருந்து மீள எளிதான பயிற்ச்சி!     

கொலையை அல்லாஹ் விலக்கியிருக்க நீங்கள் எந்த மனிதனையும் நியாயமான காரணமின்றிக் கொலை செய்து விடாதீர்கள்; எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவருடைய வாரிஸுக்கு (பதிலுக்கு பதில் செய்யவோ அல்லது மன்னிக்கவோ) நாம் அதிகாரம் கொடுத்திருக்கிறோம்; ஆனால் கொலையி(ன் மூலம் பதில் செய்வதி)ல் வரம்பு கடந்து விடக் கூடாது; நிச்சயமாக கொலையுண்டவரின் வாரிச (நீதியைக் கொண்டு) உதவி செய்யப் பட்டவராவார். (திருக்குர்ஆன் 17:33)

மனித உயிர் மிக உன்னதமானது. இறைவனால் வழங்கப்பட்ட மிகப்பெரிய சன்மானம். அப்படிப்பட்ட உயிரை தகுந்த குற்றவியல் காரணங்களில்லாது கொலை செய்யக் கூடாது. இதுப்பற்றி இஸ்லாம் மிகுந்த சிரத்தையோடு கண்கானித்து மனித உயிருக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் சிறப்புமிகு பல சட்டங்களை இயற்றியதோடு நில்லாமல் அச்சட்டங்களை அமுல்படுத்துவது இறைவனுக்கு செய்யும் வணக்கவழிபாடுகளோடு இணைத்துள்ளது.

நோன்பு என்பது ”நான் வன்முறையில் கொலை போன்ற மாபாதக செயல்களில் ஈடுபடமாட்டேன்” என்ற உறுதிமொழி எடுத்துக்கொள்கிற பயிற்ச்சியுமாகும் என்பதை நோன்பு வைப்பவர்கள் உணரவேன்டும். எதையும் காரணங்காட்டி அநியாயமான முறையில் யாரையும் கொலை செய்துவிடக் கூடாது. ஒருவருடைய உயிரை பறிப்பதற்கு கூட சட்ட ரீதியான காரணங்களை அரசாங்கத்திடம் காட்டித்தான் அரசாங்கத்திடமிருந்துதான் அதற்குரிய விளைவை எதிர்பார்க்க வேண்டும் என இஸ்லாம் சொல்கிறது.

தனிமனித வாழ்விலும் இத்தகைய ஒழுக்கங்கள் நிறைந்து காணப்படவேண்டும் என்பதற்காக மனோதத்துவ ரீதியாகவும் ஒவ்வொரு வருடமும் வெகுசிரத்தையோடு பயிற்ச்சியளிக்கிறது. இப்படிப்பட்ட பயிற்சி எடுத்தவர்கள் மனித உயிர்களுக்கு உலை வைக்கமாட்டார்;கள் மேலும் வன்முறையில் இறங்கவோ அல்லது கொலை பாதகங்கள் செய்யவோ முன்வரமாட்டார்கள் என்பது தெளிவாக தெரியவரும்.

எவன் சட்ட ரீதியான காரணங்களில்லாது ஒரு உயிரைப் பறிக்கிறானோ அவன் மனித சமூகமனைத்தின் உயிரையும் பறித்துவிட்டவன் போலாகிவிடுகிறான். எவன் சட்ட ரீதியான காரணங்களில்லாத காரணத்தினால் ஒரு உயிரை கொலை செய்யாது விட்டுவிடுகிறானோ அவன் மனித சமூகமனைத்தையும் வாழவைத்து விட்டவன் போலாகிவிடுகிறான் என்பதை ஆல்குர்ஆன் மிகத் தெளிவாகவே எடுத்துறைக்கிறது.

மேற்கூறப்பட்ட அல்குர்ஆனின் வசனம் கொலை செய்யக்கூடாது என்பதை வலியுறுத்தும் வசனமாகும். இந்த வசனத்தில் ஒரு உயிரைப்பறிப்பது மனித சமூகமனைத்தின் உயிரை பறிப்பதற்கு சமம் என சொல்லப்படுகிறது. அதுபோன்று ஒரு உயிரை வாழ வழி வகுப்பது மனித சமூகமனைத்தும் வாழ வழி வகுப்பது என்று பரைகாற்றுகிறது.

    பொய் சொல்லமலிருக்க பயிற்ச்சி!     

இந்த தலைப்பு சற்று ஆச்சிரியமாக உள்ளதா? இருக்கத்தான் செய்யும். ஏனெனில் இயந்திரயிமாகிப் போன மனித வாழ்வில் எதற்கெல்லாமோ பயிற்சி கொடுக்கப்படுகிறது. நாம் அன்றாடம் செய்யும் பணிகள், யாருடைய தயவுமில்லாமல் செய்யும் வேலைகள் இன்று படிப்புகளாகவும், பயிற்ச்சிகளாகவும் மாறிப்போயிருக்கிறது. சமையல் என்பது நம் வீட்டு பெண்கள் தானவே செய்யும் வேலை என்ற காலம் மலையேறிப் போய் அதற்கு கூட மூன்றான்டு படிப்பு என்;றாகிவிட்டது.

வீட்டை எப்படி சுத்தமாகவும், நவீனமாகவும் வைத்திருப்பது என்பது தன்னுடைய சொந்த முயற்சியிலோ அல்லது குடும்ப அமைப்பிலிருந்து தெறியவரும் சமாச்சாரம் என்ற நிலை மாறி அதற்கும் படிப்புகள் அல்லது தனி கோர்ஸ்கள். இப்படி எல்லாவற்றையும் வியாபார யுக்தி ஆக்ரமித்த பின்னால் நாமும் செய்வதறியாது அதன்பின்னே அடியொட்டி நடந்திட வேண்டிய நிர்கதி ஏற்பட்டுவிட்டது.

பொய் சொல்லக்கூடாது என்பதிலே கொஞ்ச காலத்திற்கு முன்னால் இருவேறு கருத்துடையவர்கள் இருந்ததில்லை. இன்றும் கூட பொய் சொல்லக்கூடாது என்பது நமது மனசாட்சி அறிவுறுத்தும் விஷயமாகும். ஆனால் தொழில்இ வியாபாரம் என்று வரும்போதும் வயிற்றுப்பிரச்சினை என்று வரும்போதும் தனது கொள்கையை மனித சமூகம் வெகுவாகவே மாற்றிக்கொண்டு விடுகிறது. பிழைப்புக்கு பொய் சொல்லவிட்டால் எப்படி காலம் கழிக்கமுடியும்? சோற்றுக்கு என்ன செய்வது என்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது.

இஸ்லாம் இதில் முழுக்கவணத்தையும் செலுத்தி வயிற்றைக் காரணங்காட்டி பொய் சொல்வதை முழுவதுமாக தடை செய்துள்ளது. ‘இஸ்லாம் வெறும் சித்தாங்களை மட்டும்தான் சொல்லியிருக்கிறது அவைகள் நடைமுறைக்கு சாத்தியப்படாது’ என எவரும் சொல்லிவிடக்கூடாது என்பதற்காக வருடாந்திரம் ஒரு தடவை முஸ்லிம்களிடம் பொய் சொல்லக்கூடாது என்பதை உயிரோட்டம் உடையதாக ஆக்கும் வன்னம் தான் நோன்பை கடமையாக்கியுள்ளது. ஒவ்வொரு முஸ்லிமும் எந்த நேரத்திலும் பொய் சொல்லக்கூடாது என்பதை நோன்பின் மூலம் உளமார்த்தமான பயிற்ச்சியளிக்கப்படுகிறான்.

”பொய் ஈமானை தின்றுவிடும். (நபிமொழி)”

    ஹலாலான சம்பாத்தியம்!    

நோன்பு தரும் பயிற்சிகளில் மிக முக்கியமானது ஹலாலான சம்பாத்தியம். இன்றைய முஸ்லிம்களிடம் ஹலாலான சம்பாத்தியம் என்பது மிக குறைந்து விட்டது. எப்படியாவது பொருளீட்ட வேண்டும் என்ற முனைப்பில் இஸ்லாம் எதையெல்லாம் தடைசெய்துள்ளதோ அதையெல்லாம் தனது வணிக முறைகளாக மாற்றிக்கொண்டு விட்டார்கள். ஒருகாலத்தில் வட்டிக்கு கடன் வாங்குவதையே வெறுத்து ஒதுக்கிய இந்த சமுதாயத்தில் கந்து வட்டி கடைக்காரர்களும், மீட்டர் வட்டி கடைக்காரர்களும் பெருகி போய் இருக்கிறார்கள். சாராய வாடையே ஆகாது என்று சொன்ன சமுதாயத்தில் இன்று சாராய வியாபாரம் வெகு விமரிசையாக நடத்திகொண்டிருக்கிறது. சினிமாவுக்கு சென்றால் அபராதம் என்ற நிலைமாறி சினிமா தியேட்டர் முதலாளிகள் பள்ளிவாயில்களின் முத்தவல்லிகளாக விஸ்வரூபம் எடுத்திருக்கிறார்கள். இவர்கள்; ஐந்து நேரமும் தொழுகிறார்கள் நோன்பும் வைக்கிறார்கள்.

இதில் ஒரு விஷயத்தை பற்றி ஆச்சிரியப்படாமலிருக்க முடியவில்லை. இவர்கள்; ஹராமான தொழிற்துறைகளை தொடங்கும்போது பாத்திஹா ஓதாமல் தொடங்கமாட்டார்கள். அது வட்டிக் கடையானாலும் சரி அல்லது சினிமா தியேட்டர் ஆனாலும் சரி எப்படியாவது பாத்திஹா ஒதித்தான் தொடங்குவார்கள்.

இதற்கும் சன்மார்க்க காவலர்களாகிய கண்ணிமிக்க உலமாக்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். எல்லாவற்றுக்கும் அல்பாத்திஹா போட்டு பழகிப்போனவர்கள். இவ்வுலமாக்கள் இஸ்லாத்தின் கொள்கைகளில் சிறிதளவாவது உறுதியோடு இருக்கிறார்களா? இல்லவே இல்லை. ஹராமான பொருளை நாம் சாப்பிடக்கூடாது என்று ரமழான் முழுக்க உபதேசம் செய்பவர்கள் ஹராமான முறைகளில் தொழில் புரியும் அதிபர்களின் வீட்டு விருந்துகளில் கலந்து கொள்வது ஏன்?. சாப்பிட்டுவிட்டு அவர்களின் தொழில்களில் அபிவிருத்தி ஏற்பட துஆ செய்துவிட்டும் வருகின்றனர்.

ஏன் இந்த கொள்கை மாற்றம்? ஏன் இவ்விதமான இரண்டு நிலைபாடுகள்.? உண்மையில் நோன்பின் நோக்கம் இதுவல்ல. ரமழான் மாதத்தில் நமது நிலைப்பாட்டில் எவ்வாறு உறுதியாக இருக்கின்றோமோ அதே நிலைப்பாட்டை நோன்பல்லாத காலங்களிலும் கடைபிடிக்கவேண்டும் என்பதற்கான செயல் வடிவில் கொடுக்கப்பட்ட பயிற்சிதான் நோன்பு. நோன்பு நோற்பவர்கள் தனது நோன்பின் நோக்கம் ஹராமான வியாபாரம், தொழிற்துறைகளில் இனிமேல் ஈடுபடக்கூடாது என்பதற்;காக கொடுக்கப்படுகிற பயிற்சியாகும் என்பதை நமது கவனத்தில் கொள்ளல் மிக அவசியமாகும்.

    கோபம் மற்றும் பொறாமை கொள்ளாமலிருக்க பயிற்ச்சி!    

(பயபக்தியுடையோர் எத்தகையோர் என்றால்,) அவர்கள் இன்பமான (செல்வ) நிலையிலும், துன்பமான (ஏழ்மை) நிலையிலும் (இறைவனின் பாதையில்) செலவிடுவார்கள்;. தவிர கோபத்தை அடக்கிக் கொள்வார்கள். மனிதர்(கள் செய்யும் பிழை)களை மன்னிப்போராய் இருப்பார்கள். (இவ்வாறு அழகாக) நன்மை செய்வோரையே அல்லாஹ் நேசிக்கின்றான். (திருக்குர்ஆன் 3:134)

நோன்பு கடமையக்கப்பட்ட நோக்கத்தை ஒன்றன் பின் ஒன்றாக பார்த்துவருகிறோம். உலகில் எதற்கெல்லாமோ பயிற்சி தரப்படுகிறது. பொறாமை படாமலிருக்க எங்காவது ஒரு பயிற்ச்சி உன்டா? கோபப்படாதீர்கள்! டென்ஷென் ஆகாதீர்கள். கோபப்பட்டால் இரத்தம் அழுத்த நோய் வரும் என்றெல்லாம் மருத்துவ முடிவுகள் தெறிவித்தாலும் கொஞ்ச நேரம் பசியாய் இருப்பவனிடம் இந்த தத்துவத்தை சொல்லிப்பாருங்கள். இதில் யாரும் விதிவிலக்கல்ல. நான் கோபமே படமாட்டேன் என்று சொல்வார்கள். அவர்கள் சாப்பிடும் நேரத்தில் ஏதாவது இடையூறு செய்து பாருங்களேன். அப்போது தெறியவரும் அவர்கள் எவ்வளவு பெரிய பொருமைசாலிகள் என்று.

ஆகவே இந்த விஷயத்தில் இஸ்லாம் மிகத் தெளிவாகவே பயிற்சி கொடுக்க முற்படுகிறது. கோபத்தின் ஆனிவேர் எங்கிருந்து உருவாகுமோ அந்த இடத்தில் அந்த நேரத்தில் மிகுந்த கட்டுபாட்டுடைய பயிற்சி அளிப்பதின் மூலமாக கோபம் கொள்ளலை குறைக்க முடியும். ஆகவே கோபம் கொள்ளலையும்இ அடுத்தவரைப் பார்த்து இஸ்லாம் அனுமதிக்காத வழியில் பொறாமை படுவதையும் நீக்குவதற்காக இஸ்லாம் நோன்பை கடமையாக்கி பயிற்சி தருகிறது.

எனவே மேற்கூறப்பட்ட திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகள் சுட்டிகாட்டுகிற நோக்கங்களையும்இ அதன் அடிப்படையில் அமைந்த விளக்கங்களையும் நாம் அனைவரும் சரிவர புரிந்துகொள்ள வேண்டும். நோன்பு நோற்பது என்பது வெறுமனே பசியை அறிந்து கொள்ளும் நோக்கத்திற்காக கடமையாக்கப்பட்டது அல்ல மாறாக நம் உணர்வுகளை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து நல்லறங்கள் பல புரிந்து இறைவனின் திருப்பொறுத்தத்தைப் பெறுவதற்காக கடமையாக்கப்பட்டது என்பதை அறிந்து கொள்ள வேண்டும். அத்தகைய நன்மக்களாக நம் அனைவரையும் வல்ல அல்லாஹ் ஆக்கியருள்வானாக!.

source: http://www.ottrumai.net/TArticles/10-FastingIsObligation.htm 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb