திருமணமான ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா?
[ தம்பதிகளே! உங்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்படும்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து குளித்துப்பாருங்கள்; உங்கள் பிரச்சனைகள் காற்றோடு பறந்துபோவதை கண்கூடாக காண்பீர்கள்.
உடல் குளிர்ந்தால் உள்ளமும் குளிரத்தானே செய்யும். உள்ளம் குளிர்ந்தால் இல்லறமும் குளிருமே – அதாவது இல்லறமும்நல்லறமாகும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!]
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அவர்களின் துணைவியார் ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா அவர்களும் சேர்ந்து குளித்ததற்கான ஆதாரங்கள் ஹதீஸ்களில் காணக்கிடைக்கின்றன.
”நானும் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஒரு பித்தளை அண்டாவிலிருந்து தண்ணீர் எடுத்து குளித்து வந்தோம்’ (அறிவிப்பாளர்: ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல்: அபூ தாவூது)
ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? படிப்பவர்கள் ஆச்சரியப்பட வேண்டாம்! திருமணமான ஆணும் பெண்ணும் சேர்ந்து குளிக்கலாமா? நிச்சயமாக சேர்ந்து குளிக்கலாம் என்று மனமொத்து வாழும் தம்பதியினரிடம் எடுத்த புள்ளி விபரங்கள் கூறுகின்றன!
நம் நாட்டில் பொதுவாக சேர்ந்து குளிப்பது அபூர்வம். பெரிய குளியல் அறைகளோ, வீட்டில் நீச்சல் குளமோ இருக்காது. ஏன் குளிக்கும் பாத் டப் கூட நாம் உபயோகிப்பதில்லை! ஆனால் பிற நாடுகளில் குளிப்பதையும் அனுபவித்துக் குளிக்கிறார்கள்.
இது ஒரு புறம் இருக்க தற்போது விவாகரத்து என்பது இளம் தம்பதியினரிடம் அதிகமாகிவருகிறது. வேலைக்குச் செல்லும் தம்பதியர்களில் இது மிகவும் அதிகம்!
விவாகரத்துக்கு சொல்லப்படும் காரணங்களில் பெண் பெரும்பாலும் வரதட்சிணை கேட்கிறான், அடிக்கிறான் போன்ற காரணங்களைப் பொதுவாகச் சொல்லுவார்கள்.
இரண்டுபேருக்கும் மனசு ஒத்துவரலைன்னு சொல்லுவதும் உண்டு. இதையும் மீறி பாலியல் சிக்கல்களும், உளவியல் பிரச்சினைகளும் நிறைய இருக்கு. அவற்றையெல்லாம் மேலோட்டமாக கண்டுபிடித்து திருத்துவது கஷ்டமான வேலை.
அதே சமயம் கணவனும் மனைவியும் சேர்ந்து குளிக்கும் பழக்கம் உடையவர்களாக இருந்தால் பிரச்சனைகள் ஓடி ஒளிந்து கொள்ளுமே!அதற்காக தினசரி சேர்ந்து குளிக்க வேண்டும் என்பதல்ல, அது சாத்தியமும் இல்லை.
உடல் குளிர்ந்தால் உள்ளமும் குளிரத்தானே செய்யும். உள்ளம் குளிர்ந்தால் இல்லறமும் குளிருமே – அதாவது இல்லறமும்நல்லறமாகும் என்று சொல்லித்தான் தெரிய வேண்டுமா என்ன!
தம்பதிகளே! உங்களுக்குள் சண்டை சச்சரவு ஏற்படும்போது இருவரும் ஒன்றாக சேர்ந்து குளித்துப்பாருங்கள்; உங்கள் பிரச்சனைகள் காற்றோடு பறந்துபோவதை கண்கூடாக காணலாம்.
தினசரி சேர்ந்து குளிக்காவிட்டாலும் வாரத்திற்கு ஒருமுறையாவது அல்லது மாதத்திற்கு ஒருமுறையாவது தம்பதிகள் சேர்ந்து குளிப்பது பல பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும் என்பது எதார்த்தமான உண்மையாகும். இதில் வயது வித்தியாசமெல்லாம் கிடையாது.
சரி, அதையெல்லாம் வல்லுனர்களிடம் விட்டுவிடுவோம். பொதுவா ஏதாவது புதுசா இருக்கா? புதுசுதான் ஆனா பழசு!
அதுதான் மணப் பிரச்சினை! மணப் பிரச்சினைன்னா…. உடல் மணப் பிரச்சினை!! இதென்ன பிரமாதம்ன்னு சொல்றீங்களா? நான் சொல்லலைங்க!! மலேசியா அரசாங்க்கமே சமீபத்தில் சொல்லியிருக்கு!
பொதுவாகவே ஒருவருக்கு தன் உடலின் மணம் அவருக்குத்தெரியாது. பக்கத்தில் இருப்போர் கதிதான் அதோகதி. பக்கத்தில் இருக்கும் நமக்கே இப்படின்னா கணவன் மனைவிக்கு எப்படியிருக்கும்?.
இது இப்படின்னா வெளியூர் போகும்போது சில கார் டிரைவர்கள் அவசரத்தில் குளிக்காம வண்டியில் ஏறிவிடுவார்கள். காருக்குள்ளே நம்ம உட்கார முடியாது. இதெல்லாம் நல்லாத்தெரிந்தும் நம்மில் பலர் நம்ம உடல் மணத்தின்மேல் அக்கரை காட்டுவதில்லை.
சில பேர் நான் பவுடரே போடமாட்டேன்னு பெருமையா சொல்லிக் கொள்வார்கள். அதுல என் உடம்பில் கெட்ட மணமே வராதுன்னுவேறு!! தமிழ் நாட்டில் சாப்பிட்டவுடன் தாம்பூலம் போடுவதும் இதற்காகத்தான்(இது எல்லாருக்கும் தெரியும்). மலேசியாவில் நடந்த ஆராய்ச்சியில் பத்தில் மூன்று கல்யாணங்கள் விவாகரத்தில் முடியுதாம். அதற்குக் கூறப்படும் காரணங்களில் உடல் மணமும் ஒன்று.
சேர்ந்து வாழும் தம்பதியினர் நல்ல துவைத்த சட்டை அணிவதையும், உடலில் சென்ட் போன்ற நறுமணப்பொருட்களை உபயோகிப்பதையும் விரும்புவதாகச் சொல்லியிருக்கிறார்கள்.தொள தொள உடைகளைவிட சரியான அளவுள்ள உடைகளே அவர்களுக்குப் பிடிக்குதாம்.
இதெல்லாம் எல்லோரும் செய்யலாம். கடைசியா ஒரு தம்பதியினர் சொன்னதுதான் ஆச்சரியம்!! ஆமாங்க, இருவரும் சேர்ந்து ஒன்றாகக் குளிப்பதுதான் அவர்கள் மணவாழ்க்கையின் ரகசியம் என்று கூறியிருக்கிறார்கள். சேர்ந்து ஒன்றாக வெளியில் செல்வதையே இன்னும் பலர் கடைப் பிடிப்பதில்லை. மனைவி அழகாக இல்லாத பலர் இன்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு மனைவியை அழைத்துச் செல்வதில்லை. அப்படியிருக்கும்போது சேர்ந்து குளிப்பது என்பது எவ்வாறு சாத்தியம் என்ற கேள்விகூட எழலாம்.
மிகவும் மனமொத்த தம்பதியினர் மட்டுமே இந்த அளவு அன்னியோன்னியமாக இருக்க முடியும்.
ஏன் நீங்கள் கூட மனமொத்த தம்பதியர்கள் என்று சொல்லிக்கொள்வதில் உடன்பாடு இல்லையா?
தம்பதிகளே…! சிக்கலற்ற வாழ்க்கைக்கு சேர்ந்து குளியுங்கள்!