Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

படைப்பினங்களின் தோற்றம்: களிமண் மற்றும் தண்ணீர்

Posted on July 29, 2010 by admin

படைப்பினங்களின் தோற்றம்: களிமண் மற்றும் தண்ணீர்

  ஜாஃபர் ஸாதிக். ஸி  

அருள் மறை திருக்குர்ஆனில், மனிதனை ஒரு சிறந்த அழகிய படைப்பாக படைத்திருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். 

”திடமாக, மனிதனை மிகவும் அழகிய அமைப்பில் படைத்தோம்.” (அல் குர்ஆன் 95:4).

முதல் மனிதனை இறைவன் களிமண்ணினால் வடிவமைத்து பின் அவ்வடிவத்திற்கு உயிரை அவன் தன் ஆவியிலிருந்து ஊதினான். இதனை அல்லாஹ் கீழ்க்கண்ட இறைவசனத்தில் இவ்வாறு கூறுகின்றான்.

”(நபியே நினைவு கூறுவீராக!) “நிச்சயமாக நாம் களி மண்ணிலிருந்து மனிதனைப் படைக்க இருக்கின்றேன்” என்று உம்முடைய இறைவன் கூறிய வேளையில்; நான் அவரை செவ்வைப்படுத்தி எனது ஆவிலிருந்து அவருக்குள் ஊதிய பொழுது அவருக்கு நீங்கள் விழுந்து சுஜூது செய்யுங்கள்” (அல் குர்ஆன் 38: 71,72).

இன்று இந்த நவீன அறிவியல் வளர்ச்சியின் மூலம் மனித உடல் கூறுகளை ஆராய்ச்சி செய்தபோது, இப்பூமியில் (நிலப்பரப்பில்) காணப்படும் பல்வேறு மூலக்கூறுகள் (சத்துக்கள்) மனித உடலிலும் காணப்படுவதாக அறிவியலறிஞர்கள் கண்டறிந்துள்ளனர். சராசரியாக ஒரு உயிரினம் 95% கார்பன், ஹைட்ரஜன், ஆக்சிஜன், நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் சல்பர் ஆகிய மூலக்கூறுகளை பெற்றுள்ளன.

மேலும் 26 வகையான வெவ்வேறு மூலக்கூறுகளையும் பெற்றிருக்கின்றன. நாம் மேலே கூறியது போன்று இன்னொரு இறை வசனம் கூறுகின்றது:

”நிச்சயமாக நாம் (ஆதி) மனிதரைக் களி மண்ணிலிருந்துள்ள சத்தினால் படைத்தோம்”. (அல் குர்ஆன் 23:12).

அரபிக் வார்த்தையான ‘சுளால’ (sulala) என்பதன் பொருள் ‘தாதுக்கள் அல்லது மூலக்கூறுகளிலிருந்து பிரித்தெடுக்கப் பட்ட (Extract) ‘ என்பதாகும். அதாவது ‘திரவசாறு’ (Essence) என்பதனைக் குறிக்கும். இதற்கு அல்லாஹ் ‘களி மண்ணிலிருந்துள்ள சத்தினால்’ என்று தனது வசனத்தில் குறிப்பிடுகின்றான்.

இதனை நாம் சற்று சிந்திப்போமானால், சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்னதாக இறைவனிடமிருந்து இறக்கப்பட்ட வேதமான குரானில் கூறப்பட்டுள்ள இத்தகைய உண்மைகளை இன்றைய நவீன அறிவியல் (வளர்ச்சியின் மூலம் கண்டறியப்பட்ட) ‘மனித உடலில் மண்ணின் தாதுக்கள்’ இருப்பதை உறுதிசெய்கிறது.

சுமார் 70 கிலோ எடையுள்ள மனிதனின் உடலில் கீழ்க்கண்ட மூலக்கூறுகள் அமையப்பெற்றுள்ளன:

மூலக்கூறுகள் அடையாள எழுத்து % எடை(கிராம்)

(பெருங்கனிமங்கள்)

ஆக்சிஜன்O65.043,000

கார்பன் C18.512,000

ஹைட்ரஜன்H9.56,000

நைட்ரஜன்N3.32,000

கால்சியம்Ca1.51,100

பாஸ்பரஸ்P1.0750

பொட்டாசியம்K0.35225

சல்பர் S0.25150

குளோரின்Cl0.15100

சோடியம் Na0.1590

மக்னீசியம்Mg0.0535

சிலிகான்Si0.0530

பெருங்கனிமங்கள்

எடை (மி.கி)

இரும்பு Fe0.014,200

துத்தநாகம் Zn0.012,400

தாமிரம் Cu0.0190

போரான்B0.0168

கோபால்ட்Co0.0120

வனடியம்V0.0120

அயோடின்I0.0115

செலேனியம்Se0.0115

மாங்கனீஸ்Mn0.0113

மோலிப்டெனும்Mo0.018

குரோமியம் Cr0.016

நாம் மேலே கண்ட காரணிகளை உற்று நோக்கும் போது, மனிதனுக்கும் மற்ற உயிரினங்களுக்கும் தண்ணீர் இன்றியமையாததாக உள்ளது என்பதை அறிகின்றோம்.

அல்லாஹ் தான் திருமறை குரானிலே கூறுகின்றான்:

மேலும், எல்லா உயிர்ப் பிராணிகளையும் அல்லாஹ் நீரிலிருந்து படைத்துள்ளான்; அவற்றில் தன் வயிற்றின் மீது நடப்பவையும் உண்டு அவற்றில் இரு கால்களால் நடப்பவையும் உண்டு அவற்றில் நான்கு (கால்)களை கொண்டு நடப்பவையும் உண்டு தான் நாடியதை அல்லாஹ் படைக்கிறான்; நிச்சயமாக அல்லாஹ் எல்லாவற்றின் மீதும் பேராற்றலுடையவனாக இருக்கின்றான். (அல் குர்ஆன் 21:45)

”நிச்சயமாக வானங்களும், பூமியும் (முதலில்) இணைந்திருந்தன என்பதையும், இவற்றை நாமே பிரித்(தமைத்)தோம் என்பதையும், உயிருள்ள ஒவ்வொன்றையும் நாம் தண்ணீரிலிருந்து படைத்தோம் என்பதையும் காஃபிர்கள் பார்க்கவில்லையா? (இவற்றைப் பார்த்தும்) அவர்கள் நம்பிக்கை கொள்ள வில்லையா?” (அல் குர்ஆன் 21:30) 

”இன்னும் அவன்தான் மனிதனை நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான்; மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன்.” (அல் குர்ஆன் 25:54)

மனிதனும் மற்ற உயிரினங்களும் படைக்கப் பட்ட விதத்தினை விவரிக்கும் இவ்வசனங்களைக் காணும்போது ஒரு தலை சிறந்த இன்னும் பல அற்புதத்திற்கான சான்றுகள் குர்ஆனில் உள்ளன என்பதை யாராலும் மறுக்க முடியாது. அவற்றில் ஒரு அற்புதம்தான் மனிதனும் மற்ற உயிரினங்களும் நீரிலிருந்தும் படைக்கப் பட்டதாக கூறும் இறை வசனங்கள். மனிதர்களால் பல நூற்றாண்டுகளுக்குப் பின்னர் அதுவும் மைக்ரோஸ்கோப்பின் கண்டுபிடிப்பிற்கு பின்னால் அதன் உதவிகொண்டு இவ்வசனங்கள் கூறும் உண்மையான தகவல்களை இன்று நாம் அறிகின்றோம்.

உலகில் வாழும் எல்லா உயிரினங்களும் உயிர்வாழ தண்ணீர் இன்றியமையாததாய் இருக்கின்றது. பாலைவன மற்றும் வரட்சியான பிரதேசங்களில் வாழும் உயிரினங்கள் நீரின் பற்றாக்குறையை தாங்கும் வகையில் தங்களது உடலில் ஜீவத்துவ பரிணாம வளர்ச்சியைப் (metabolism) பெற்றிருக்கின்றன. மேலும் தண்ணீர் கிடைக்கும் போது அப்பிராணிகள் அவற்றிலிருந்து தமக்கு தேவையான பலன்களையும் பெறுகின்றன.

ஒரு சராசரி மனிதனுக்கு தண்ணீர் மிகவும் அவசியமானதாகும். சில காரணங்களினால் உடலில் தண்ணீரின் அளவு குறையும்போது, அககுறைவினை சரியான தருணத்தில் ஈடு செய்யவில்லையெனில் நாம் உயிருடன் வாழ முடியாது என்பதை அறிவோம். 17-ம் நூற்றாண்டு வாழ்ந்த அறிவியலறிஞர் ஜான் பப்டிச்டா வான் ஹெல்மொன்ட் (Jan Baptista van Helmont) என்பவர் 1640-ம் ஆண்டுதான் தாவர வளர்ச்சிக்கு மண்ணிலிருக்கும் தண்ணீர் சத்து மிகவும் அவசியம் என்பதனை கண்டறிந்தார்.

source: www.eegarai.net

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 3

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb