13. எது பகுத்தறிவு?
ஒவ்வொரு பொருளின் படைப்புக்குக் காரணகர்த்தா ஒருவன் இருப்பது உண்மையானால், அந்தக் காரணக்கர்த்தாவின் படைப்புக்கு யார் காரணம்? என்ற சிந்தனையாளர்களளயும் தினரச் செய்யும் நாஸ்திகர்களின் கேள்விக்குரிய விளக்கத்தைப் பார்த்தோம். அடிப்படை உண்மைக்கும், அந்த அடிப்படை உண்மையை வைத்துப் பெறப்படும் உண்மைகளுக்கும் உள்ள பெருத்த வேறுபாட்டையும் கண்டோம்.
உலகக் காரியங்களில் அனைத்துத் துறைகளிலும் காணப்படும் இந்த பெருத்த வேறுபாட்டை ஒப்புக் கொள்ளும் நாஸ்திக நண்பர்கள் இறைவன் விஷயத்தில் மட்டும் அந்த மாபெரும் உண்மையை ஒப்புக் கொள்ளாமல் விதண்டாவாதம் செய்வது, அவர்கள் சாத்தானின் வலையில் சிக்குண்டிருக்கிறார்கள் என்பதையே படம் பிடித்துக் காட்டுகிறது என்பதைத் தெளிவாகப் பார்த்தோம், அடுத்து.
இந்த நாஸ்திகர்கள் சொல்லிக் கொள்ளும் பகுத்தறிவுதான் உண்மையில் பகுத்தறிவா? இந்தப் பகுத்தறிவு அவசியமா? என்பதை விரிவாக அலசுவோம்.
அவர்கள் தங்களின் புலன்கனைக் கொண்டுப் பெறப்படும் அறிவையே பகுத்தறிவு என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள், அதன் காரணமாக புலன்களின் எல்லைக்குள் கட்டுப்படாத காரியங்களை எல்லாம் பகுத்தறிவுக்கு அப்பாற்பட்டவை, மூடநம்பிக்கை என்ற தப்பான முடிவுக்கு அசரப்பட்டு வந்து விடுகிறார்கள்.
அவர்களின் புலன்களைக் கொண்டு அறியப்படும் காரியங்கள் முழுiயான பகுத்தறிவைச் சார்ந்தவை அல்ல. பகுத்தறிவின் ஒரு பகுதி என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம் என்பதை அவர்கள் உணர வேண்டும். தமிழ் பேசும் குடும்பத்தில் வளரும் ஒரு குழந்தை ”தண்ணீர்” என்று சொல்லும், அதே பொருளை ஹிந்தி பேசும் குடும்பத்திலுள்ள குழந்தை ”பானி” என்கிறது. ஆங்கிலம் பேசும் குடும்பத்திலுள்ள குழந்தை ”வாட்டர்” என்கிறது. ஆக ஒரே பொருள் மொழிக்கு மொழி, வேறு வேறு சொல்லால் அறியப்படுகிறது, அழைக்கப்படுகிறது. இதில் என்ன பகுத்தறிவு இருக்கிறது என்பதை நாஸ்திகர்கள் சிந்திக்க வேண்டும்.
நடைமுறையில் இருப்பதைக் காதால் கேட்டு உச்சரிப்பதைத் தவிர இங்கு பகுத்தறிவுக்கு வேலையே இல்லை. ஆறறிவு மனிதன் பேசுவது போல் ஐந்தறிவு (பகுத்தறிவு இல்லாத) கிளி, மைனா போன்ற பறவைகள் பயிற்றுவித்தால் அழகாகப் பேசுகின்றன. பகுத்தறிவில்லாத நாய், குரங்கு போன்ற மிருகங்கள் பயிற்சியின் மூலம் மனிதன் செய்யும் காரியங்களை, மனிதனிடும் கட்டளை கொண்டு விளங்கிச் செயல்படுத்துவதைப் பார்க்கிறோம். ஐந்தறிவைக் கொண்ட குரங்கு இனத்தைச் சார்ந்த ஒருவகை குரங்கு, பயிற்சியின் மூலம் அழகாக கார் ஓட்டிச் செல்வதை அறிகிறோம். இவை எல்லாம் நமக்கு எதை ஊர்ஜிதம் செய்கின்றன? இப்படிப்பட்ட காரியங்களுக்குப் பகுத்தறிவு அவசியமே இல்லை என்பதையே நமக்குத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
ஆக மனிதன் உலகில் பிறந்து, வளர்ந்து பேசுவதிலிருந்து, அவன் பெறும் கல்விகளிலிருந்து, அவன் செயல்படுத்தும் உலக காரியங்கள் அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கும் போது அவை முழுமையாக பகுத்தறிவு அடிப்படையிலானவை என்று சொல்லுவதை விட, அவனது ஐம்புலன்களைக் கொண்டு அவன் அடைந்து கொண்ட ஒருவகை அறிவு என்று மட்டுமே சொல்லமுடியும். ஏன் என்றால் பகுத்தறிவுவைக்கொண்டு செயல்படுத்தும் காரியங்களை ஐந்தறிவு பிராணிகள் ஒரு போதும் நிறை வேற்ற முடியாது. நாஸ்திக நண்பர்கள் பெருஞ்செயல்களாக, பகுத்தறிவு செயல்களாக நம்பும் காரியங்களை ஐந்தறிவு மிருகங்கள் பயிற்சிகள் கொண்டு செய்கின்றன.
14. இவ்வுலக வாழ்க்கைக்குப் பகுத்தறிவு தேவைதானா?
இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் மனிதனின் இந்த உலக வாழ்க்கைக்கு பகுத்தறிவு அவசியமே இல்லை என்று ஆணித்தரமாகச் சொல்லிவிடலாம். பகுத்தறிவோடு படைக்கப்பட்டுள்ள மனித சமுதாயம், பகுத்தறிவில்லாத ஐந்தறிவு சொண்ட ஒரு சமுதாயமாகப் படைக்கபட்டிருந்தால் மனிதனின் இந்த உலக வாழ்க்கை, இப்போதிருப்பதைவிட மிக சிறப்பாக அமையும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. நாஸ்திக நண்பர்கள் சொல்வது போல், இறைவன் இல்லை, மறுமை இல்லை என்றால் மனிதன் பிறந்து வளர்ந்து விருப்பம் போல் விரும்பியதை எல்லாம் சாப்பிட்டு, விரும்பியதை எல்லாம் அனுபவித்து, விரும்பியவர்களோடு எல்லாம் கலவிகள் செய்து வாழ்க்கையில் அனைத்தையும் அனுபவித்து மடிய வேண்டியதுதான்.
இவற்றையே ஐந்தறிவு பிராணிகள் செய்து கொண்டிருக்கின்றன. நாம் மேலே குறிப்பிட்ட காரியங்களை நிறைவேற்றுவதற்கு அந்தப் பிராணிகளுக்கு பகுத்தறிவு இல்லாதது ஒரு குறையாகவே இல்லை. மாறாக அது ஒரு வரப்பிரசாதமாகவே இருக்கிறது.
மனிதனின் இவ்வுலக வாழ்க்கை செழிப்பாக அமைவதற்காக கடவுள் இல்லை, மரணத்தறிகுப் பின் ஒரு வாழ்க்கை இல்லை என்ற பொய்த் தத்துவங்களை எடுத்துச் சொல்வதை நாஸ்திகர்கள் விட்டு, மனிதர்களின் இவ்வுலக வாழ்க்கை இன்பமயமாக அமைய பகுத்தறிவு அவசியம் இல்லை என்ற கோஷத்தை அவர்கள் கிளப்புவார்களானால், அது நிச்சயம் நல்ல பலனைத்தரும் என்பது நமது உறுதியான நம்பிக்கை.
கடவுள் இல்லை என்ற பொய் தத்துவத்தை, கம்யூனிஸக் கொள்கையை கடந்த சுமார் 75 ஆண்டுகளாக செயல்படுத்திப் பார்த்து விட்டார்கள். முழுக்க முழுக்க அவர்களின் ஆதிக்கத்தில் வந்திருந்த ரஷ்யா, சீனா போன்ற நாடுகில் கூட ஏற்றத்தாழ்வற்ற சமத்துவ வாழ்க்கையை, அனைவரும் அனைத்தையும் அடைந்து கொள்ளும் வாய்ப்பை அவர்களால் பெற்றுத்தர முடியவில்லை. கம்யூனிஸக் கொள்கை மக்களிடமிருந்து மறைய ஆரம்பித்து விட்டது என்பதற்கு ரஷ்யாவும், சீனாவும் நல்ல எடுத்துக்காட்டுகளாகும்.
எனவே நாஸ்திக சகோதரர்கள் அவர்களின் பழைய ”கடவுள் இல்லை” என்ற பொய்த்துவத்தை விட்டு ”பகுத்தறிவு மனிதனுக்கு அவசியமில்லை” என்ற புதிய தத்துவத்தை முழக்க ஆரம்பித்தல், அது கம்யூனிச தத்துவத்தைவிட அதிக பலன் கொடுக்கும் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
காரணம், உலகில் காணப்படும் போட்டி, பொறாமை, எதோச்சதிகாரம், ஆதிக்க வெறி, பதுக்கல், மிதமிஞ்சிய சொத்துக்களை சேர்த்து தனதாக்கிக் கொள்ளுதல், வஞ்சகம், மோசடி, கொள்ளை, களவு இவை அனைத்திற்கும் மனிதனின் பகுத்தறிவே(?) மூல காரணமாக இருக்கிறது. பகுத்தறிவில்லாத மிருகங்களிடம் இச்செயல்கள் காணப்படுகின்றனவா என்று சிந்தித்துப்பாருங்கள். மிருகங்கள் பல தலை முறைகளுக்குத் தேவையான சொத்துக்களை சேர்த்து வைப்பதில்லை. ஊரிலுள்ள நிலங்களை எல்லாம் தனதாக்கிக் கொள்ள நினைப்பதில்லை. கரன்ஸி நோட்டுக்களை சேர்த்து வைக்க நினைப்பதில்லை. பல ஆண்டுகளுக்கல்ல, பல நாட்களுக்குத் தேவையான உணவுகளiயும் சேர்த்து வைப்பதில்லை. இவை எதுவுமே இல்லாத பகுத்தறிவற்ற பிராணிகள் தங்கள் உலக வாழ்க்கiயை மிகவும் சந்தோஷமாக நடத்திக் கொண்டிருக்கின்றன. அப்படிபட்ட பகுத்தறிவற்ற மிருகங்களுக்கு அவற்றின் உலக வாழ்விற்கு எவ்வித தட்டுப்பாடும் இல்லை, கட்டுப்பாடும் இல்லை. அதே போன்ற சந்தோஷமான மிருக வாழ்க்கையை மனிதனும் ஏன் வாழக் கூடாது? என்றே நாஸ்திக நண்பர்களிடம் நாம் கேட்கிறோம்.
15. விஞ்ஞான வளர்ச்சி..?
பகுத்தறிவின்(?) மூலம் மனிதன் விதவிதமான பல நவீன கருவிகளை கண்டுபிடித்து, வசதியான உலக வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருக்கிறான். அதை எப்படி விட்டு விடுவது என்று நாஸ்திகர்கள் கேட்டால் அதற்கு நமது பதிலாவது, நீங்கள் குறிப்பிடும் அந்த விஞ்ஞான வளர்ச்சியின் மூலமும், (மறு உலக வாழ்க்கை ஒரு புறம் இருக்கட்டும்) இவ்வுலக வாழ்க்கைக்கும் மிரட்டல்களே அதிகப்பட்டுள்ளன. இவ்வுலகை அழித்தொழிக்கும் அணுகுண்டுகள், நாசகாரக் கருவிகள், மனிதகுண்டுகள் இன்னும் இவைபோன்ற நவீன கண்டு பிடிப்புகள் மனிதனின் இவ்வுலக வாழ்க்கையில் சந்தோஷத்திற்குச் சவலாக அமைந்துள்ளனவே அல்லாமல், இவ்வுலக வாழ்க்கையை மகிழ்ச்சிக் கடலில் மூழ்க வைக்க கூடியனவாக இல்லை. நிமிடத்திற்கு நிமிடம் அஞ்சிக்கொண்டே வாழ வேண்டியுள்ளது. அந்த வகையிலும் பகுத்தறிவு (?) கொண்டு இவ்வுலக இன்ப வாழ்க்கைக்கு கேடுகள் எற்பட்டுள்ளனவே அல்லாமல் நலன்கள் ஏற்படவில்லை என்பதே உண்மையாகும்.
ஐந்தறிவுள்ள பிராணிகள் செய்ய முடியாத ஒன்றையோ, அல்லது பல காரியங்களையோ சுட்டிக்காட்டி, இதை மனிதன் செய்கிறானே என்று நாஸ்திகர்கள் எதிர்கேள்வி கேட்டால், அதற்கு நமது பதிலாவது: மனிதனைப் போன்று முற்றிலும் உடலமைப்புள்ள ஒரு ஐந்தறிவுப் பிராணியைச் சுட்டிச்காட்டி அப்படிக் கூறினால் அது நியாயமாகும். முற்றிலும் மனிதனைப் போன்ற உடலமைப்பு இல்லாததே அதற்குப் பிரதானக் காரணம் என்று நாம் கூறினால் அவர்கள் என்ன மறுப்பு வைத்திருக்கிறார்கள். இவ்வளவு தெளிவாக எடுத்துக் சொல்லி பகுத்தறிவற்ற மிருக வாழ்க்கை வாழத் தயாரா? என்று நாஸ்திகர்களிடம் நாம் கேட்டால் அவர்கள் தயங்கவே செய்வார்கள். ஆயினும் அவர்கள் பகுத்தறிவு என்று நம்பிக்கொண்டிருப்பது உண்மையில் பகுத்தறிவு அல்லவென்பதை அவர்கள் உணராதது வேதனைக்குரிய ஒரு விஷயமே. அவர்கள் இதை உணர்ந்து கொள்ளத் தொளிவான ஒரு உதாரணத்தைத் தருகிறோம்.
16. ஒப்புக் கொள்கிறார்களா?
”கடவுளைக் காட்டுங்கள் ஒப்புக் கொள்கிறோம்” இது நாஸ்கிகர்களின் தாரக மந்திரம். இதை வாதம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். டாக்டர் கோவூர் இந்த அடிப்படையில் சவால் விட்டது நாடறிந்த விஷயம். ஆனால் ஆழந்து சிந்திப்பவர்கள்ட மட்டுமே இது வாதம் அல்ல, பகுத்தறிவற்ற மிருக வாதம் என்பதைப் புரிந்து கொள்வார்கள். எப்படி என்பதை விளக்குகிறோம்.
ஓர் ஆடு நின்று கொண்டிருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். ஆந்த ஆட்டை நோக்கி ”ஓ ஆடே! இதோ பார் உனக்கு மிகவும் விஷேசமான ஆகாரம் இங்கே வைத்திருக்கிறேன், இதை நீ சாப்பிடுவதால் உன் பசி தீரும், இது ஜீரணமானால் உனக்கு நல்ல சக்கி உண்டாகும். எனவே விரைந்து இதைச் சாப்பிட்டுப் பலன் அடைந்து கொள். இந்த அரிய சந்தர்ப்பத்தை நழுவ விடாதே” என்று அந்த ஆட்டின் காதுகளில் விழுமாறு ஒருவன் உரக்கக் கூறுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். இந்த அழைப்பை ஏற்று அந்த ஆடு – ஐந்தறிவுள்ள மிருகம – வருமா? என்று சிந்தித்துப் பாருங்கள். ஒருபோதும் வராது. மாறாக, இவன் போடும் சப்பதத்தைக் கேட்டு அந்த ஆடு வெருண்டோடலாம்.
அதே சமயம் இவன் அந்த ஆகாரத்தின் சிறப்பைப்பற்றி எதுவும் பேசாமல், அந்த ஆகாரத்தை அந்த ஆடு பார்க்கும் விதமாகத் தூக்கிப் பிடிக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்த ஆடு அந்த ஆகாரத்தைக் கண்டவுடன் அதை நோக்கி விரைந்து ஓடி வரும். இது பகுத்தறிவற்ற மிருகத்தின் நிலை.
அதே சமயம் ஒரு மனிதன் இன்னொரு மனிதரின் வீட்டுக்குப்போய் ”நாளை பகல் சாப்பாட்டிற்கு எங்கள் வீட்டுக்கு வந்துவிடுங்கள். ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருக்கிறோம். அவசியம் தவறாது கலந்து கொள்ளுங்கள்” என்று அழைப்பு விடுக்கிறான் என்று வைத்துக்கொள்ளுங்கள். இங்கு அழைக்கப்பட்ட மனிதன் விருந்துக்குரிய உணவு வகைகளையும் கண்ணால் பார்க்கவில்லை, உணவுகள் தயாரிக்கப்படக்கூடிய எந்த ஏற்பாட்டையும் பார்க்க வில்லை. விருந்து சம்பந்தப்பட்ட எந்த அறிகுறியும் இல்லை.
இந்த நிலையில் வந்த மனிதனின் அழைப்பை மட்டும் காதுகளால் கேட்கிறான். அந்த மனிதனையும், அவனது தராதரத்தையும் அறிந்து வைத்திருக்கிறான். அடுத்த நாள் குறிப்பிட்டிருந்த படி அந்த நண்பரின் வீட்டுக்குப் போய் பார்க்கும்போது விதவிதமான ஆகார வகைகளையும், குடிப்பு வகைகளையும் பார்க்கிறான். நன்றாக சாப்பிட்டு மகிழ்கிறான். நேற்று சொன்னதை இன்று கண்ணாரக் காண்கிறான், அனுபவிக்கிறான். ஐந்தறிவுள்ள மிருகத்தைப் பொறுத்தமட்டிலும் இது சாத்தியமா? என்றால் ஒரு போதும் சாத்தியமில்லை. பகுத்தறிவுள்ள மனிதனைப் பொறுத்த மட்டிலுமே இது சாத்தியமான காரியமாகும்.
வகையில் பகுத்தறிவு ”கடவுளைக் கண்டால்தான், மறுமையைக் கண்டால்தான் நம்பிச் செயல்படுவோம்” என்று சொல்லும் நாஸ்திகர்களின் வாதம், ஐந்தறிவு மிருகவாதமா? அல்லது பகுத்தறிவு வாதமா? என்பதை சிந்திப்பவர்கள் விளங்கிக் கொள்ள முடியும்.
பகுத்திறிவு இல்லாத நிலையிலும், இவ்வுலக மனித வாழ்க்கை சாத்தியமானதே, ஒரு வகையில் பகுத்தறிவு இருப்பதைவிட இல்லாமல் இருப்பது, மிகவும் மகிழ்ச்சிகரமானதாகவே இவ்வுலக வாழ்க்கை அமையக் காரணமாக இருந்தும், மனிதனுக்கு ஏன் பகுத்தறிவு கொடுக்கப்பட்டிருக்கிறது? அந்தப் பகுத்தறிவின் சரியான பொருள் என்ன? இவற்றை அடுத்துப் பார்ப்போம்.
நாஸ்திக நண்பர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் பகுத்தறிவு, உண்மையில் பகுத்தறிவு அல்ல, பகுத்தறிவு இல்லாமல் இவ்வுலக வாழ்க்கையைச் சிறப்பாக அனுபவிக்க முடியும் என்பதைப் பார்த்தோம்.
இன்ஷா அல்லாஹ், தொடரும்