எச்.முஜீப் ரஹ்மான்
[மனைவி சொல் கேட்பவன் அல்லது பெண்ணுடன் தனது கருத்தைப் பகிர்ந்து கொள்பவன் மோட்சத்தை அடையமாட்டான் என்ற எச்சரிக்கை, மற்றும் பெரியோர் மதிப்பைப் பெற மாட்டான் என்பதன் ஊடாக, மனிதத் தன்மையுள்ள ஆண் மிரட்டப்படுகின்றான். இந்தப் பெரியோர் என்பது யார்? ஆணாதிக்கச் சமூகத் தகுதி பெற்ற தனிச் சொத்துரிமையின் கொள்ளைக்காரர்கள் ஆவர். \
பெரியவர்கள் என்பது ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையைச் சமுதாயத்திடமிருந்து சூறையாடிப் பெற்ற சமுதாயத்தின் இழிந்த பிறவிகள் ஆவர். மற்றவனை அடக்கி அதில் தம்மைப் பெரியவர்கள் ஆக்கிக் கொண்டவர்கள். மற்றவனை அடக்கியபோது கிடைத்த அறிவு, செல்வம், அதிகாரம் போன்றவற்றால் பெரியவர்கள் ஆனவர்கள்.
பார்ப்பனியம் ஆழமாகத் தமிழ்நாட்டில் வேரூன்றாத காலத்துப் பாடல்கள் பெண்ணின் கற்பு, ஒழுக்கம், அறியாமையுடன் வாழ்வதே பெண்ணின் நற்குணமாகப் பிரகடனம் செய்த அதேநேரம்; பெண்ணின் நற்குணமாக அச்சம், நாணம், மடமையை அணிகலன்களாக்கினர். பெண் வீட்டு அடிமையாக ஆணுக்குக் கீழ்பட்டு வாழும் வாழ்வைத் தனிச் சொத்துரிமை வடிவில் உருவாக்கினர்.
இது உலகளவிலான பொதுப்பண்பாக இருந்ததால், இருப்பதால் எங்கும் பெண்ணின் நிலையை ஒரேமாதிரியாகவே ஆண்கள் மதிப்பிட்டனர். பெண் கடமையை உலகளவில் ஒரே சீராக வரையறுத்த ஆண்கள், சூழல் சார்ந்த உற்பத்தி வேறுபாடுகளில்தான் சில விதிவிலக்குகள் காணப்பட்டன. தமிழ் நாட்டில் பார்ப்பனியம் ஊடுருவிய போது ஆணாதிக்கம் இந்துமயமானது.]
மக்களின் சொத்துரிமையைத் தனிச்சொத்துரிமையாகக் கைப்பற்றி, ஆணாதிக்கமாக வளர்ச்சிபெற்ற நிலையில், ஆண்வழிக் குடும்பம் பெண்ணின் சொத்துரிமையைக் கைப்பற்றி அடிமையாக்கியது. அதேநேரம், பெண்ணிடம் கைப்பற்றிய தனிச்சொத்தைப் பெண்வழி சமுதாயத்துக்குப் புறம்பாக, ஆண்வழி சமுதாய உறவினருக்கிடையில் அனுபவித்தபோது, பெண்ணின் எதிர்ப்புப் போராட்டம் இயல்பாக இருந்தது. இதை எதிர்த்து ஆண்வழிச் சமூகத்தை உருவாக்கப் போரிட்ட திருவள்ளுவருக்கு, பெண்ணினுடைய பெண் வழிப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளமுடியாத நிலையில், பெண் எதிர்ப்பை வக்கரித்துக் காட்டும் ஆணாதிக்கக் குறள்தான் பெண் விரோதத் தன்மையில் வெளிப்படுகின்றது.
பெண் சொல் கேட்டு நடப்பவனை இழிவுபடுத்தவும், பெண்ணை விட அவ்வாணை இழிநிலைக்குத் தாழ்த்திவிடவும் திருவள்ளுவர் தவறவில்லை. ஆண், பெண் புத்தி கேட்டு நடந்தால், அவனின் ஆண்மையை ஆணுக்கு அடிமையான பெண்ணின் பெண்மையை விடக் கீழானது என்று திருவள்ளுவர் குறள் எழுதி, தனது ஆணாதிக்கத் திமிரைப் பறைசாற்றுகின்றார். இன்று சமுதாயத்தில் ஆண்களுக்கிடையில் நடக்கும் மோதலில், எதிரியைப் பெண் குறித்த உறுப்பினூடாகக் கீழ் இறக்கி திட்;டுவது அல்லது அது போன்ற சொற்களால் அவமானப்படுத்துவது இயல்பாக உள்ளது. இங்கு ஆணாதிக்கக் கொப்பளிப்புகள் பெண் அடிமைத்தனத்தின் மீதான ஆணாதிக்கத்தில் இருந்து வெளிக்கிளம்புகின்றன.
பெண்ணின் பாலியல் இன்பத்தைப்பெற அவள் சொல் கேட்பவன் என்றதன் மூலம், பெண்ணைப் பாலியல் இயந்திரமாகப் பயன்படுத்தக் கோருகின்றார், ~மாமேதை| திருவள்ளுவர். பெண்ணுடனான உறவை வெறும் பாலியல் நுகர்வுப் பண்டமாகக் கருதும் திருவள்ளுவர், அதைத் தாண்டிய மனித உறவுகளைக் கொச்சைப்படுத்துகின்றார். பாலியல் இன்பத்தை நுகர்வுச் சந்தையில் பெறுவது போல் பெற்று, உறவைத் துண்டிக்கும் இழிநிலைக்குத் திருவள்ளுவர் வழிகாட்டுகின்றார். பெண், ஆணின் ஒரு பாலியல் அடிமையாக இன்பத்தைத் தருவதுடன், ஆணுக்குச் சேவை செய்யும் ஒரு வளர்ப்பு நாய்தான் என்பதைத் தாண்டி குறளின் ஒழுக்கம் செல்லவில்லை.
மனைவி சொல் கேட்பவன் அல்லது பெண்ணுடன் தனது கருத்தைப் பகிர்ந்து கொள்பவன் மோட்சத்தை அடையமாட்டான் என்ற எச்சரிக்கை, மற்றும் பெரியோர் மதிப்பைப் பெற மாட்டான் என்பதன் ஊடாக, மனிதத் தன்மையுள்ள ஆண் மிரட்டப்படுகின்றான். இந்தப் பெரியோர் என்பது யார்? ஆணாதிக்கச் சமூகத் தகுதி பெற்ற தனிச் சொத்துரிமையின் கொள்ளைக்காரர்கள் ஆவர். பெரியவர்கள் என்பது ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையைச் சமுதாயத்திடமிருந்து சூறையாடிப் பெற்ற சமுதாயத்தின் இழிந்த பிறவிகள் ஆவர். மற்றவனை அடக்கி அதில் தம்மைப் பெரியவர்கள் ஆக்கிக் கொண்டவர்கள். மற்றவனை அடக்கியபோது கிடைத்த அறிவு, செல்வம், அதிகாரம் போன்றவற்றால் பெரியவர்கள் ஆனவர்கள். இவர்கள் சிந்தித்தப்படி மனைவியுடன் சேர்ந்து வாழ்ந்தவன், உயர்ந்த சமூகத் தகுதியைப் பெற்றவர்கள் ஆவர்.
ஆணும் பெண்ணும் சேர்ந்து வாழ்வதை அல்லது பெண்ணின் வழி காட்டுதலில் வாழ்பவனின் வாழ்க்கையை, திருவள்ளுவர் திட்டவட்டமாக எதிர்த்துக் குறள் மூலம் ஆணாதிக்க அதிகார ஒழுக்கத்தைக் கோரினார். இதன் மூலம் பெண்ணை நாயினும் கீழான பிறவியாக இழிவுபடுத்தினர். ஆணாதிக்கக் குறள் என்பது ஆணாதிக்கச் சமுதாயத்துக்கு மட்டும் உதவக் கூடிய எல்லைக்குட்பட்டதுதான். ஆணாதிக்கத்துக்கும், தனிச் சொத்துரிமைக்கு எதிரான போராட்டத்தில் குறளும், அதன் ஒழுக்க விதிகளும், நொறுக்கப்படும்;. இன்று குறளை முன்னிலைப்படுத்தி, திருவள்ளுவருக்கு வைக்கும் சிலைகள், தமிழன் பெயரில் ஆணாதிக்கத் தனிச் சொத்துரிமையை, அதன் ஒழுக்கத்தை மீளவும் உறுதியான கோட்பாட்டின் ஊடாக நிலைநிறுத்துவதாகும். இதை மறுத்து, இதைத் தகர்க்கும் போராட்டத்தில், தனிச் சொத்துரிமைக்கு எதிரான போராட்டத்துடன் ஒன்றி நிற்கும் பெண்ணியப் போராட்டத்தில், திருவள்ளுவரின் நிர்வாணமான ஆணாதிக்கத்தின் சில பக்கங்களை வர்க்க அரசியல்மயமாக்கும் முயற்சியின் சிறுபகுதியே இவையாகும்
கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி இரண்டாம் நூற்றாண்டை உள்ளடக்கிய காலமே சங்க இலக்கியக் காலமாகும். கி.மு மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த தொல்காப்பியமும் ஆணாதிக்கச் சமுதாயத்தின் எதார்த்த நிலைமைகள் ஊடாகப் பல தகவல்களைத் தந்துள்ளன. இந்த எதார்த்தம் கூட மேல்மட்டச் சமூகப் பிரிவுகளின் நிலையை மட்டுமே பிரதிபலிக்கின்றது. இதை வரலாற்று ரீதியாகப் புரிந்து கொண்டு, சமூக வரலாற்றைப் புரிந்து கொள்வது அவசியம்.
பொருளாதார ரீதியாக நசிவுற்ற பிரிவுகளின் வாழ்க்கையில் ஆணாதிக்கக் கூறுகள் பலவீனமாகவும், பெண்வழிச் சமுதாயத் தொடர்ச்சிகள் ஆழமாக வேரூன்றி இருந்ததையும் கவனத்தில் கொள்வது அவசியம். சமுதாயத்தில் முரண்பட்ட பிரிவுகளிடையே உள்ள ஆழமான வேறுபாட்டின் மீது, ஆணாதிக்கக் கூறுகள் கூட வேறுபட்ட அளவில் இருப்பது எதார்த்தமாகும். சமூக முரண்பாட்டில் அதிகாரத்திலுள்ள பலமான பிரிவுகளின்; ஆணாதிக்கம் பண்பியல் ரீதியாக வளர்ச்சியுற்று இருக்கும் அதேநேரம், மற்றைய தளத்தில் நலிவுற்றும் காணப்படும்;. தொடர்ச்சியான இக்கட்டுரையின் பலபகுதிகளை இலகுவாக எடுத்த எழுத, தொகுக்கப்பட்ட பாடல் வரிகளை ~பத்தினித் தெய்வங்களும் பரத்தையர் வீதிகளும் – பிரேமா அருணாசலம்| என்ற நூல் துணையாக அமைகின்றது. இதைவிட பல நூல்களில் இருந்து இந்தப் பகுதியை ஆராய்வோம். அக்காலத்தில் காதல் எல்லை கடந்ததாக இருந்தது.
”எந்நில மருங்கிற் பூவும் புள்ளும்
அந்நிலம் பொழுதொடு வாரா வாயினும்
வந்த நிலத்தின் பயத்த வாகும்.”42
இந்தத் தொல்காப்பியப் பாடல் சாதிகடந்த, நில எல்லை கடந்த காதலைக் குறித்து நிற்கின்றது. அரசு அமைப்புகளில், தொழில்கள், உழைப்புகள் எல்லை கடந்து விரிந்தபோது அங்கு காதலுக்கும், திருமணத்துக்கும் கட்டுபாடு இருப்பதில்லை. அங்கு ஆணும் பெண்ணும் விரும்புகின்ற வரையறை, குடும்ப இணைவைக் கோரியது. அறிமுகமில்லாத நிலையிலும் காதல் அவர்களை இணைக்கத் தயங்கவில்லை.
அன்று கற்பு திருமண விசுவாசத்தின் மட்டம் குறித்து, திருமணத்தின் பின்னான ஒழுக்கம் கோரப்பட்டது.
”கற்பெனப்படுவது கரணமொடு புணரக்
கொள்ளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக்
கொடைக்குரி மரபினோர் கொடுப்பக் கொள்வதுவே”43
அன்று கன்னிப் பெண்களிடயே கற்பு எதிர்பார்க்கப்படவில்லை. இன்று இந்தியாவில் சில பழங்குடி இனங்களிடையே கன்னியில் கற்புக் கோரப்படுவதில்லை. அவர்கள் வரைமுறையற்ற புணர்ச்சியில் ஈடுபடுகின்றனர். (பார்க்க – இயல்பான புணர்ச்சி தெரிவுகள்) அன்று திருமணத்தின் பின் கணவனுக்கு விசுவாசமாக இருப்பதை ஆணாதிக்க ”கற்பு” கோரியது. ஆனால், பெண்ணின் கற்புரிமை அனைத்துப் பெண்களின் உரிமையாக இருந்தது.
பெண், ஆணின் அடிமையாக இருப்பது நிபந்தனையாக இருந்தது. மொழியின் இலக்கண வழியில் பெண்ணின் இலக்கணத்தைத் தொல்காப்பியர் ஏற்படுத்தினார். இந்த ஆணாதிக்க இலக்கணங்கள் பெண்ணின் வாழ்வு மீதான, தமிழச்சி மீதான சிறையாக மாறியது. அதைப் பார்ப்போம்.
”அச்சமும் நாணும் மடனும் முந்துறதல்
நிச்சமும் பெண்பாற் குரிய”44 (தொல்- பொ – 96)
”உயிரினும் சிறந்தன்று நாணே நாணினும்
செய்தீர் காட்சிக் கற்புச்சிறந் தன்று”44 (தொல்- பொ – 111)
”நாணும் மடனும் பெண்மைய ஆகலின்
கற்பும் காமமும் நற்பால் ஒழுக்கமும்
மெல்லியல் பொறையும் நிறையும் …
… கிழவோள் மாண்புகள்”44 (தொல்- பொ – 150)
பார்ப்பனியம் ஆழமாகத் தமிழ்நாட்டில் வேரூன்றாத காலத்துப் பாடல்கள் பெண்ணின் கற்பு, ஒழுக்கம், அறியாமையுடன் வாழ்வதே பெண்ணின் நற்குணமாகப் பிரகடனம் செய்த அதேநேரம்; பெண்ணின் நற்குணமாக அச்சம், நாணம், மடமையை அணிகலன்களாக்கினர். பெண் வீட்டு அடிமையாக ஆணுக்குக் கீழ்பட்டு வாழும் வாழ்வைத் தனிச் சொத்துரிமை வடிவில் உருவாக்கினர். இது உலகளவிலான பொதுப்பண்பாக இருந்ததால், இருப்பதால் எங்கும் பெண்ணின் நிலையை ஒரேமாதிரியாகவே ஆண்கள் மதிப்பிட்டனர். பெண் கடமையை உலகளவில் ஒரே சீராக வரையறுத்த ஆண்கள், சூழல் சார்ந்த உற்பத்தி வேறுபாடுகளில்தான் சில விதிவிலக்குகள் காணப்பட்டன. தமிழ் நாட்டில் பார்ப்பனியம் ஊடுருவிய போது ஆணாதிக்கம் இந்துமயமானது. இப்படி பெண்களை அடிமைப்படுத்தி பாடிய தொல்காப்பியர், ஆண்கள் விபச்சாரிகளை அணுகுவதை அங்கீகரிக்கின்றார்.
”காமக்கிழத்தி மனேயோள் என்றிவர்” (தொல். பொ – 144)
”மாயப் பரத்தை உள்ளிய வழியும்” (தொல். பொ – 145)
– என்று பாடும் தொல்காப்பியர், விபச்சாரம் சமூக அங்கீகாரமாக இருப்பதை மறுக்கவில்லை. பெண்ணின் ஒழுக்கத்தைக் கட்டுப்படுத்தும் பாடல்கள், ஆணின் விபச்சாரத்தைப் பெண்கள் ஏற்றுப்போகக் கோருகின்றன. இதை அவர் நூற்.171 இல், விபச்சாரியிடம் தாய் போல் பேசி அவளைத் தழுவி வாழவேண்டும் என்று பெண்களுக்கு அறிவுரை கூறுகின்றார். இதை நியாயப்படுத்த ஆண் துன்பப்படவும், சோர்வு அடையவும் கூடாத வகையில் பெண் இணங்கிப் போகவேண்டும் என்று கூறுகின்றார். அதாவது ஆணின் விபச்சாரத்துக்குப் பாய்விரித்து ஊக்கம் கொடுத்து, அனுசரித்து நிற்க வேண்டும் என்பதைப் பெண்ணுக்குரிய நல்லொழுக்கமாகக் கூறுகின்றார்.”அவன் சோர்வு காத்தல் கடனெனப் படுதலின்
மகன்தா யுயர்புந் தன்னுயர் பாகுஞ்
செல்வன் பணிமொழி இயல்பாகலானஸ”44 (தொல். பொ.கற்பியல் – 33)
ஆணுக்கு அடங்கி, பாலியல் இயந்திரமாகிப் போகும் பெண்களைப் பரஸ்பரம் மதித்து உயர்வாகப் போற்றி வாழவேண்டும் என்று கோருகின்றார். விபச்சாரியைத் தொல்காப்பியர் ~மகன் – தாய்| என்று கூறுவதன் மூலம், வாரிசு வழியாக ஆணின் சமூக அடையாளத்தை உயர்த்திக் காட்டுகின்றார். ஆணைவிட உயர்ந்த அறிவும் தகுதியும் கொண்டிருந்தாலும், பெண் அடங்கி நடப்பதே பெண்மை என்கின்றார்.
”தற்புகழ் கிளவி கிழவன்முற் கிளத்தல்
எத்திறத் தானும் கிழத்திக் கில்லை
முற்பட வகுத்த இரண்டலங் கடையே”44 (தொல். பொ.அடி – 178)
ஆண் தன்னைப் புகழவும், பெருமை பேசவும் உரிமையுண்டு என்று கூறும் தொல்காப்பியர், பெண்கள் அப்படிப் பேசுவது பெண்மையின் சிறுமையென்கின்றார். பெண்கள் அடக்க ஒடுக்கமாக, நசிந்து வாழ்வதையே உயரிய பண்பாக முன்வைக்கின்றார். ஒரு பெண் தனது சொந்தக் காதல் வேட்கையைக் கூறுவது அழகு அல்ல என்று சட்டம் போடுகின்றார்.
”தன்னுறு வேட்கை கிழவன்முற் கிளத்தல்எண்ணுங் காலைக் கிழத்திக் கில்லை”44
(தொல். பொ. அ – 116)
கணவனிடம் கூட பெண் தனது இயற்கையான பாலியல் தேவையைக் கோருவது, கூறுவது பெண்ணின் அடக்க ஒடுக்கமான நாணத்துக்குப் பங்கமானது என்பதை ஒழுக்கப் பண்பியலாக்குகின்றார். பெண்கள் வீட்டில் வாழ வேண்டியதன் தேவையையும், ஆண்களுக்குப் பணிவிடை செய்வதையும் பெண்ணின் பணியாக்குகின்றார்.
”முந்நீர் வழக்கம் மகடூஉவோடு இல்லை”44 (தொல். பொ – 37)
”எண்ணருங் பாசறைப் பெண்ணோடும் புணரார்”44 (தொல். பொ – 173)
பெண்கள் போருக்குச் செல்வது, வெளியிடங்களுக்குச் செல்வது தடுக்கப்பட்டதை இந்த வரிகள் காட்டுகின்றது. பெண்ணைச் சமுதாய உழைப்பில் இருந்து அன்னியப்படுத்தியதன் மூலம், அவளின் கடமைகள் எல்லைப்படுத்தப்படுகின்றன. மூலதனத்தைத் திரட்டித் தரும் வழியில் ஆண்களின் கடமை விரிவாகின்றது. வெளியிடம் செல்வது முதல் பொருளுக்கான யுத்தம் செய்வது வரை ஆணின் பணியாக வரையறுக்கப்பட்டதன் மூலம், ஆணாதிக்கத் தனியுடைமை அமைப்பிலான சுதந்திரம், ஜனநாயகம் பெண்ணுக்கு மறுக்கப்பட்டதன் மூலம், பெண் மேலும் பலவீனமான பயந்த அடிமையாக்கி இழிவாக்கப்பட்டாள். மாறாகப் பெண்ணின் கடமை வரையறுக்கப்பட்டது.
”விருந்துபுறந் தருதலும் சுற்றம் ஒம்பலும்
பிறவு மன்ன கிழவோள் மாண்புகள்”44 (தொல். பொ. அ – 150)
பெண் வருவோரை வரவேற்று உபசரித்து விருந்து கொடுத்து, சுற்றத்தாரை நயமாகப் பராமரிப்பதையே தமிழரின் பண்பாடு என்பது பெண்ணுக்கு இட்ட விலங்காகும். இந்த ஆணாதிக்கத் தமிழ்ப் பண்பாட்டின் பின்னால் பார்ப்பனியம் கைகோர்த்து ஒன்று கலந்தபோது அது இந்து ஆணாதிக்கமாக வளர்ச்சிபெற்றது.
சங்க இலக்கியங்கள் 2000 ஆண்டுகளுக்கு முந்தியவை. காதல் தொடர்பாகக் குறுந்தொகைப் பாடல்கள் என்ன கருத்தை முன்வைக்கின்றது எனப்பார்ப்போம்.
”யாவும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்
யானும் நீயும் எவ்வழி அறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடைய நெஞ்சம் தாங்கலந் தாவே”42
இயற்கையான புணர்ச்சியற்ற நிலையில் பாடுவதாக அமைகின்றது. அதில் காதல் புணர்ச்சிக்கு எந்த வரையறையும் அவசியமற்றது என்பதையும், அன்பான நெஞ்சங்களின் இணைப்பே போதும் என்றும் கூறிநிற்கின்றது. இதுபோன்று நற்றிணைப்பாட்டு காதலைத் தொழில் சார்ந்து விரிந்த தளத்தில் நடந்ததை எடுத்துக் காட்டுகின்றது.
”இவளே கானல் நண்ணிய காமர் சிறுகுடி
நீலநிறப் பெருங்கடல் கலங்க உள்புக்கு
மீனெறி பரதவர் மகளே நீயே
நெடுங்கொடி நுடங்கும் நியம மூதூர்க்
கடுந்தேர்ச் செல்வன் காதல் மகனே
நிணச்சுறா அறுத்த உணக்கல் வேண்டி
இனப்புள் ஒப்பும் எமக்குநலன் எவனோ
புலவுநாறுதும் செலறின் றீமோ
பெருநீர் விளையுளெஞ் சிறுநல் வாழ்க்கை
நும்மொடு புரைவதோ அன்றே
எம்ம னோரின் செம்மலு முடைத்தே”42
– என்ற பாடல் தொழில் சார்ந்த நிலையில் எல்லைகடந்த, சாதிகடந்த திருமணம் நடப்பதைக் காட்டுகின்றது. அன்று பார்ப்பனியம் ஆழமாக ஊடுருவாத நிலையில், உழைப்பு சார்ந்து சாதியிருந்த போதும், பரம்பரை சாதி உறவு உருவாகி விடவில்லை. அதாவது குடும்ப வழியாகச் சாதி தோன்றாத நிலையில் உழைப்பு சார்ந்து சாதி உருவானபோது, திருமணம் பரந்த எல்லைக்குள் நடப்பதைத் தடுத்துவிடவில்லை. குடும்பம் சார்ந்த உறவுதான் குறுகியத் திருமணத்துக்கான ஊற்றுமூலமாகியது. திருமணத்தின் எல்லை விரிந்திருந்த போது, பெண்ணின் சுதந்திரமும் விரிந்த தளத்திலேயே இருந்தது.
”சுடர்த் தொடீஇ கேளாய் தெருவில் நடமாடு”42 என்று தொடங்கும் குறிஞ்சிக்கலியில் அறிமுகமற்ற ஒருவன் குடிக்க நீர் கேட்டு வந்தபோது , தாய் ஒருத்தி மகளை நீர் கொடுக்க அனுப்புகின்றாள். அவன் தனது வலக்கையைப் பிடித்தான் என்று பாடல் வரிகள் கூறுகின்றன. அவனின் முதுகைத் தாய் தடவுவதும், தாய் அவனைக் கள்வன் (களவு தொழிலைச் செய்த மக்கள் கூட்டம் கள்வர் சாதியாக இருந்தது.) மகன் எனக் கூறுவதும், அவர்கள் பாலான உறவையும் குறிப்பிடுகின்றாள்.
இந்தத் திருமணத்தில் ஆணே வெளியிடத்தில் இருந்து வருபவனாக இருக்கின்றான்;. அதாவது பெண்வழிச் சமுதாயத்தின் எல்லை ஆண் – பெண் வீடு தேடி வருவது அன்றைய மரபாக இருந்துள்ளது. பெண் தனது தாய்வழிப் பிரதேசத்தைத் தாண்டிச் செல்வது என்பது கிடையாது. பெண்ணின் வாழ்க்கை தாய்வழி நிலத் தொடர்களிலேயே வாழ்ந்தாள்.
இங்கு பல வெளியிடத்து ஆண்கள் வந்து போவதும், பெண் அவர்களைக் காண்பதும் இயல்பான நிகழ்ச்சியாகும்;. இந்த ஆண்களில் இருந்தே பெண் ஆணைத் தெரிவு செய்கின்றாள்;. ”மற்றிவன் மகனே தோழி” என்ற கருத்தின் மூலம் ஆணின் சமூகத் தகுதி எதையும் கோரவில்லை. உழைப்பு இயற்கை மீதே சார்ந்து இருந்ததால், உற்பத்திக்கான மூலம் அசையாச் சொத்தாக இருந்ததால், பெண்ணின் நிலையான சொத்தை நோக்கி ஆண் வரும்போது உழைப்பைத் தவிர பொருளாதார ரீதியாகத் திருமணத் தகுதி என்பது எல்லைப்பட்டது. ஆண், பெண்ணுக்கும் பெண்ணின் குடும்பத்துக்கும் அன்பளிப்புகள் கொடுக்க வேண்டியிருந்தது.
”சான்றோர் வருத்திய வருத்தம் தமது
வான்தோய் வன்ன குடிமையும் நோக்கித்
திருமணி வரன்றும் குன்றம் கொண்டிவள்
வருமுலை ஆகம் வழங்கினோ மன்றே
அஃதான்று, அடைபொருள் கருதுவார் ஆயின் குடையொடு
கழுமலம் தந்த நற்றோர்ச் செம்பியன்
பங்குனி விழவின் உறந்தையொடு
உள்ளி விழவின் வஞ்சியும் சிறிதே”42
தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்