19. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறுகிறான்: பெருமை என்னுடைய மேலாடையாகவும், பெரும் வல்லமை எனது அங்கியாகவும் உள்ளன. இந்த இரண்டில் ஏதாவது ஒன்றில் எவன் என்னுடன் போட்டியிடுவானோ, அவனை நான் நரக நெருப்பில் வீசுவேன். (நூல்: முஸ்லிம்)
20. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
சுவர்கத்தின் கதவுகள் திங்கட்கிழமையும்,வியாழக்கிழமையும் திறந்து வைக்கப்படும்.தனது சகோதரனுடன் பகைமை பாராட்டுபவனைத் தவிர அல்லாஹ்விற்கு இணை கற்பிக்காத அனைவரும் மன்னிக்கப்படுவார்கள். (பகைமை பாராட்டும் சகோதரர்களைப் பற்றி பின்வருமாறு மூன்று முறை சொல்லப்படும்).அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும் வரை(மன்னிப்பை)தாமதப்படுத்துங்கள்.அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை(மன்னிப்பை)தாமதப்படுத்துங்கள்.அவர்கள் இருவரும் சமரசத்திற்கு வரும்வரை(மன்னிப்பை)தாமதப்படுத்துங்கள். (நூல்:முஸ்லிம்,திர்மிதி)
21. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ் கூறினான் : இறுதித் தீர்ப்பு நாளில் மூன்று நபர்களுக்கு நான் எதிராளியாக (பகைவனாக) இருப்பேன். ஒருவன் என் பெயரைச் சொல்லி கொடுத்த வாக்கை முறித்தவன். சுதந்திர மனிதனை விற்று, அத்தொகையை விழுங்கியவன். மற்றொருவன். வேலையாளை அமர்த்தி, அவனிடம் முழு வேலையையும் வாங்;கியபின், அவனுக்குரிய கூலியைக் கொடுக்காதவன். (நூல்: புகாரி)
22. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஸயீத் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உங்களில் ஒருவன் தன்னை இழிவாகக் கருதவேண்டாம். ஸஹாபாக்கள் கேட்டார்கள்: அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தன்னை எவ்வாறு இழிவாகக் கருத முடியும்?. அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள். ‘அல்லாஹ் எது குறித்து விசாரிப்பானோ அத்தகைய காரியத்தை காண்கிறான். ஆனால் ஆதுபற்றி ஒன்றும் கூறாமல் இருக்கின்றான். எனவே அல்லாஹ், இருதித் தீர்ப்பு நாளில் அந்த மனிதரிடம் இன்ன இன்ன விஷயத்தைக் குறித்து நீ (உன் கருத்தை) சொல்வதிலிருந்து உன்னை தடுத்தது எது? (என கேட்பான்) மக்கள் மீதிருந்த பயம்தான் என்று மனிதன் விடையளிப்பான். பின்னர் அல்லாஹ், நீ பயப்பட மிகவும் தகுதி வாய்ந்தவன் நான் மட்டுமே என்பான். (நூல் : இப்னுமாஜா, அஹ்மத்)
23. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் இறுதித் தீர்ப்பு நாளில் கூறுவான்: என்னுடைய மேன்மையினால் (மனிதர்களில்) ஒருவருக்கொருவர் நேசம் வைத்து இருப்பவர்கள் எங்கே? என்னுடைய நிழலைத்தவிர வேறு நிழலில்லாத இந்நாளில், என்னுடைய நிழலில் அவர்களுக்கு நான் நிழல் அளிப்பேன். (நூல் : முஸ்லிம்)
24. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் (தனது) ஒரு அடியானை நேசித்தால், அவன் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து நான் இன்ன மனிதரை நேசிக்கின்றேன். எனவே நீயும் அவரை நேசிப்பீராக என்று கூறுவான். ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவ்வாறே நேசிப்பார். பின்பு ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ் இன்ன மனிதரை நிச்சயமாக நேசிக்கிறான். எனவே அவரை நேசியுங்கள். என்று வானலோகத்தில் அறிவிப்பார். (பின்னர்) வானவர்களும் அம்மனிதரை நேசிப்பார்கள். பின் பூமியில் அவர் அங்கீகரிக்கப்படுவார். என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
மேலும், அல்லாஹ் (தனது) ஒரு அடியான் மீது கோபம் கொண்டால், ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களை அழைத்து நான் இன்ன மனிதர் மீது கோபம் கொண்டுள்ளேன். எனவே நீரும் அவர்மீது கோபம் கொள்வீராக என்று கூறுவான். பின் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர் மீது கோபம் கொள்வார். பின் ஜிப்ரயீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வானவர்களை அழைத்து அல்லாஹ் இன்ன மனிதர் மீது நிச்சயமாக கோபம்கொண்டுள்ளான். எனவே நீங்கள் அவர் மீது கோபம்கொள்ளுங்கள். என்று அறிவிப்பார். எனவே வானவர்களும் அவர் மீது கோபம் கொள்வார்கள். இவ்வுலகிலும் அவர்மீது கோபம் நிலை நாட்டப்படும். என அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (நூல் : புகாரி, முஸ்லிம்)
25. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறினான்: என்மீது நேசம் வைத்துள்ளவர்மீது எவர் பகைமை கொண்டுள்ளாரோ, அவருக்கு எதிராக நான் போர் தொடுப்பேன். என்னால் அதிகமாக விரும்பப்படும் எந்த அடியானும், நான் அவன் மீது கடைமையாக்கியுள்ளதை விட வேறு விருப்பமான எந்தக் காரியத்தின் மூலமும் என்னை நெருங்க முடியாது. நான் அவனை நேசிக்க வேண்டும் என்பதற்குhக மேலதிகமான உபரி வணக்கங்கள் செய்வதின் மூலம்;; என் அடியான் என்னை நெருங்கிக் கொண்டே வருகிறான்.
நான் அவனை நேசிக்கும்;போது, நான்; அவன் கேட்கும் கேள்வியாளவும், பார்க்கும் பார்வையாகவும், அவன் பிடிக்கின்ற கரமாகவும், நடக்கும் காலாகவும் ஆகிவிடுகிறேன். என்னிடம் (எதனையாவது) அவன் வேண்டினால் நான் நிச்சயமாக அதனை அவனுக்குக்; கொடுக்கின்றேன். அவன் என்னிடம் பாதுகாப்புத் தேடினால்;, நிச்சயமாக நான் அவனைப் பாதுகாக்கின்றேன்.
விசுவாசியான என் அடியானுடைய ஆன்மாவைக் கைப்பற்றுவதற்கு நான் காட்டும் தயக்கத்தைப்போல் வேறு எதனையும் செய்வதற்கு நான் தயக்கம் காட்டுவதில்லை. அவன் மரணத்தை வெறுக்கிறான். நான் அவனுக்குத் துன்பம் ஏற்படுத்துவதை வெறுக்கிறேன். (நூல் : புகாரி)
26. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபூஉமாமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான் : என் மீது நேசம் கொண்டுள்ள அடியார்களில் குறைந்த செல்வமுள்ள, நிறைந்த தொழுகையுள்ள, அதிபதியான என்னை வழிபடுபதில் மிகவும் கவணம் செலுத்திய, மறைமுகமாக எனக்கு அடிபனிந்து, மக்கள் மத்தியில் அறிமுகமில்லாத, விரலால் சுட்டிக்காட்டி புகழ்ந்து பேசப்படாத, தமது தேவைகளை நிறைவேற்ற (அளவுக்கு அதிகமில்லாமல்) போதுமான அளவு மட்டும் செல்வத்தை பெற்றிருந்தும் அதனைப் பொருமையுடன் தாங்கிக் கொண்டிருந்தவரே என்னிடத்தில் மிகவும் விரும்பத்தக்கவர். பிறகு அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; ‘மரணம் அவருக்கு விரைவில் வந்திருக்கும், அவருக்காக துக்கப்படுவோர் குறைந்திருப்பார்கள். அவர் விட்டுச்சென்ற சொத்து சொற்பமாக இருக்கும்.’ (நூல் : தித்மிதி)
27. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக ஜுந்துப் இப்னு அப்துல்லாஹ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
உங்களுக்கு முன் சென்றவர்களில் ஒரு மனிதன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஒரு காயம் ஏற்பட்டது. (காயத்தினால்) அவன் துயரமடைந்தான். வேதனையால் கத்தியைக் கொண்டு தன் கரத்தைத் துண்டித்தான். இதனால் இரத்தம் இடைவிடாமல்; கொட்டியதால் இறப்பெய்தினான். அல்லாஹ் கூறினான்: என் அடியான் (தனது செயலின் மூலம்) எனக்கு முன்னதாகவே நடவடிக்கை எடுத்துக் கொண்டான். நான் அவனுக்கு சுவர்க்;கத்தை ஹராமாக்கி (தடைசெய்து) விட்டேன். (நூல் : புகாரி, முஸ்லிம்)
28. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகிறான் : உலகிலுள்ளவர்களில் என்னுடைய முஃமினான அடியானுக்குப் பிரியமான நண்பன் ஒருவரின் உயிரை நான் பறித்துக்கொள்ளும்; போது, அதனை எனக்காக அவ்வடியான் பொருமையாக தாங்கிக் கொண்டிருந்தால் அத்தகைய விசுவாசமுடைய எனது அடியானுக்கு சுவர்க்கத்தை தவிர என்னிடத்தில் வேறு சன்மானம் இல்லை. (நூல் : புகாரி)
29. அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறியதாக அபுஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான் : என் அடியான் என் சந்திப்பை விரும்பினால், நான் அவன் சந்திப்பை விரும்புகிறேன். அவன் என் சந்திப்பை வெறுத்தால் நானும் அவன் சந்திப்பை வெறுக்கிறேன். (நூல் : புகாரி, முஸ்லிம்)
30. ஜுன்துப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் அல்லாஹ்வின் மீது (ஆணையாக) அல்லாஹ் இன்னாரை மன்னிக்கமாட்டான். என்று சத்தியம் செய்தார். அதற்கு அல்லாஹ் கூறினான், நான் இன்னாரை மன்னிக்க மாட்டேன் என்று என் மீது ஆணையிட்டு கூற இந்த மனிதன் யார்? நிச்சயமாக நான் (சாபமிடப்பட்ட) அந்த மனிதனின் பாவங்களை மன்னித்து விட்டேன். (சத்தியமிட்ட) உன்னுடைய நற்செயல்களை அழித்துவிட்டேன். (நூல் : முஸ்லிம்)
தொடர்ச்சிக்கு கீழுள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்