O அன்பை விதைத்தவன் நன்றியை அறுவடை செய்கிறான்.
O அரண்மனை வாயிற்படி அதிகமாக வழுக்கும்.
O அறிவாளிகள் கடிதங்களை ஆரம்பத்திலிருந்தே படிப்பார்கள்.
O அழகு, அடைத்த கதவுகளை திறக்கும்.
O அதிகப் பேச்சும், பொய்யும் நெருங்கிய உறவினர்.
O இளமையில் நல்லறிவு முதுமையில் ஞானம்.
O இளமையில் சூதாடிகள், முதுமையில் பிச்சைக்கார்ர்கள்.
O உண்டு சுவை கண்டவன் ஊரைவிட்டுப் போகமாட்டான்.
O ஊசியைப் பார்த்து சல்லடை சொல்கிறது; உன்னுடைய வாயில் ஒரு ஓட்டை இருக்கிறது.
O எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் புத்திசாலியின் பார்வை இலக்கை நோக்கியே இருக்கும்.
O எப்படி வேண்டுமானாலும் சமையுங்கள்; ஆனால், அன்போடு பரிமாறுங்கள்.
O எளிதில் நம்புகிறவன் எளிதில் ஏமாற்றப்படுவான்.
O ஓரே குஞ்சு உள்ள கோழி ஓயாமல் கொக்கரிக்கும்.
O ஒருவர் பொறுமை இருவர் நட்பு.
O கனவில் குடிக்கும் பாலை தகரக் குவளையில் குடித்தால் என்ன தங்கக்கோப்பையில் குடித்தாலென்ன?
O கூட்டு வியாபாரம் குடுமிப்பிடி.
O கோணல் இல்லாத தென்னை மரத்தையும் விவாத்ததில் சளைக்கும் பெண்ணையும் காண்பது அரிது.
O சத்தியத்தின் மறுபெயர் மனசாட்சி
O சுண்டைக்காய் கால் பணம்; சுமை கூலி முக்கால் பணம்.
O செருப்புள்ள காலுக்கு பூமியெல்லாம் தோல் விரிப்பு.
O தங்கத்திற்குச் சோதனை நெருப்பு! பெண்ணிற்குச் சோதனை தங்கம்! மனிதனுக்கச் சோதனை பெண்!
O பெண்ணிற்குத் தெரிந்த இரகசியம் ஊரெல்லாம் பரவிய அம்பலம்.
O மனைவி, வீட்டின் ஆபரணம்.
O மலர்ந்த முகம், மலிவான உணவையும் அறுசுவை ஆக்கிவிடும்.
O மனிதன் ஒரு மனைவியைப் பெற முடியாதபோது துறவியாகிறான்.