Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பணமா? மானமா ?

Posted on July 8, 2010 by admin

படிப்பதற்கு முன்…

சமுதாயத்தில் நடைபெறும் அவலங்களைச் சுட்டிக் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். இதில் இடம் பெற்றுள்ள சம்பவங்கள் அனைத்தும் உண்மையில் நடந்த நிகழ்வுகளாகும். சமுதாயத்தில் அனைத்துப் பெண்களும் இப்படித் தான் என்பது இதன் பொருளல்ல!

மார்க்கத்தைப் பின்பற்றி, தங்கள் கற்பு நெறிகளைப் பாதுகாக்கும் பெண்கள் பெரும்பான்மையாக இருந்தாலும், சூழ்நிலை காரணமாக வழிதவறும் பெண்களைப் பற்றி எச்சரிப்பது மார்க்க அடிப்படையில் நமது கடமை என்பதற்காகவே இந்தக் கட்டுரை வெளியிடப்படுகின்றது.

காலம் காலமாக முஸ்லிம்கள் வெளிநாட்டில் போய் சம்பாதித்து வருகின்றனர். கடந்த காலத்தில் சிங்கப்பூர், மலேஷியா என்று பயணம் மேற்கொண்டனர். அப்படிப் பயணம் சென்றவர்கள் இரண்டாண்டுக்கு ஒரு முறை அல்லது ஓராண்டுக்கு ஒரு முறை வந்தாலும் ஆறு மாத காலம் விடுப்பில் வருவார்கள்.

இத்தகைய பயணங்களால் பெரும்பாலும் பிரச்சனை எதுவும் ஏற்படவில்லை. அரபு நாட்டுப் பயணம் துவங்கியது தான் தாமதம். பிரச்சனைகள், மடை திறந்த வெள்ளமாய் சமுதாயத்தை நோக்கிப் பாய ஆரம்பித்து விட்டன.

வளைகுடாப் பயணம் மேற்கொள்வோருக்குப் பெரும்பாலும் இரண்டாண்டுகளுக்கு ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்கள் அல்லது 40 நாட்கள் விடுமுறை தருகிறார்கள். சில கம்பெனிகளில் ஆண்டுக்கு ஒரு மாதம் விடுமுறை!

இவ்வளவு குறைந்த விடுமுறையில் வருகின்ற ஒருவர் திருமணம் முடித்து விட்டுச் செல்கின்றார். கணவனின் முகம் மனைவிக்கும், மனைவியின் முகம் கணவனுக்கும் நினைவில் நன்கு பதியாத இந்தக் குறைந்த அவகாசத்தில் மீண்டும் வெளிநாடு திரும்பி விடுகின்றார்.

அடுத்து அவர் ஊருக்குத் திரும்புவது இரண்டாண்டுகளுக்குப் பின்னர் தான். இதற்கிடையே இங்கே நடப்பது என்ன? அது தான் இரத்தத்தைக் கொதிக்க வைத்து இதயத்தை வெடிக்கச் செய்யும் அதிர்ச்சி நிகழ்வுகளாகும்.

குடும்பத்திலேயே குள்ள நரி

நம் நாட்டு வாழ்க்கை அமைப்பு முறை கூட்டுக் குடும்பமாகும். அண்ணன், தம்பிகள் எல்லோரும் ஒரே குடும்பமாக, ஒன்றாய் உண்டு ஒரே வீட்டில் வாழ்கின்றனர்.

அண்ணன் மனைவி தம்பியிடமோ, தம்பி மனைவி அண்ணனிடமோ பலியாகி விடுகின்றனர். கணவன் ஊரில் இருக்கும் போதே இந்த அபாயம் நடக்கின்றது எனும் போது கணவன் வெளிநாட்டில் இருந்தால் ஏற்படும் அபாயத்தைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. கணவன் வீட்டிலே அல்லது மனைவியின் வீட்டிலே கூட இந்தப் பேராபத்தும் பெரு விபத்தும் நடைபெறுகின்றது. இதற்கெல்லாம் அடிப்படைக் காரணம் மக்களிடம் இஸ்லாம் அதன் தூய வடிவில் வந்து சேரவில்லை.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்” என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகற்ல் ஒருவர், “அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?” என்று கேட்டார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “கணவருடைய (சகோதரன் போன்ற)

”உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்” என்று கூறினார்கள். (அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 5232)

தவ்ஹீத் ஜமாஅத் வந்து தான் இந்த ஹதீஸை தயவு தாட்சண்யமின்றி போட்டு உடைத்துச் சொல்கின்றது. மார்க்கம் சொல்கின்ற இந்தத் தடுப்பு அரண் கணவன் ஊரில் உலவிக் கொண்டிருக்கும் போதே உடைத்து நொறுக்கப்பட்டு விபத்தும் விபரீதமும் ஏற்படுகின்றது. கணவன் வெளிநாடு சென்று விடுகிறான் எனும் போது ஷைத்தான் முழுமையாகப் புகுந்து விளையாடி விடுகின்றான். இப்படிக் குடும்பத்தில் விளையாடும் குள்ள நரிக்கு இப்பெண்கள் பலியாவது ஒரு ரகம்.

வேலி தாண்டும் வெள்ளாடு

குடும்பத்தில் நடக்கும் இந்தக் குழப்பம் புகைந்து, பற்றி எரிந்து விவாகரத்தில் போய் முடிகின்றது. அண்ணன், தம்பிக்கு மத்தியில் மாறாப் பகை, தீராப் பழி ஏற்பட்டு விடுகின்றது.

குடும்பத்தைத் தாண்டிச் சென்று சில பெண்கள், வேலி தாண்டும் வெள்ளாடாகவும் ஆகி விடுகின்றனர். இந்தக் கட்டத்தில் இப்பெண்கள் இஸ்லாத்தை விட்டே ஓடி விடுகின்றனர். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

வட்டிக்காரன்

பொதுவாக நம்முடைய சமுதாயத்தின் பலவீனத்தைப் பிற சமுதாயத்தவர்கள் நன்கு தெரிந்தே வைத்திருக்கின்றனர். வெளிநாட்டுக்குச் செல்கின்றவர்களின் குடும்பங்களை நன்கு நோட்டமிட்டு இரையைப் பார்த்து வட்டமிடுகின்ற கழுகாக கணக்குப் போட்டு தங்கள் நோக்கத்தை நிறைவேற்றிக் கொள்கின்றனர்.

இதில் வட்டிக்கென்றே பெயர் பெற்ற ஒரு சமுதாயத்தினர் முதலிடம் வகிக்கின்றனர். இவர்களிடம் தான் நம்முடைய சமுதாய மக்கள் தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு போய் வட்டிக்கு வாங்குகின்றனர். அதன் பின்னர் கணவன் பயணம் போய் விடுகின்றான். இங்கே இவனுடைய மனைவியிடம் வட்டிக்காரனின் புதிய பயணம் துவங்கி விடுகின்றது. கடனும் அடைத்தபாடில்லை. கள்ளத் தொடர்பும் முடிந்தபாடில்லை. இப்படியே கணவனுக்கு விவகாரம் தெரிய வர விவாகரத்தில் போய் முடிகின்றது.

பலி கொள்ளும் பால்காரன்

பொதுவாகவே பால்காரனின் பார்வைகள் பலான பலன் கிடைக்காதா என்ற ஏக்கப் பார்வைகள் தான். நெல்லை மாவட்டத்தில் ஓர் ஊரில் வெளிநாட்டில் இருக்கின்ற ஒருவரின் மனைவி பால்காரனிடம் வழிதவறுகின்றாள். 5 மணிக்குக் கொடுக்கும் வழக்கத்தை மாற்றி 7 மணிக்குப் பால் கொடுக்கின்றான்; பலனை அனுபவிக்கின்றான்.

மேய வருகின்ற மேஸ்திரி

இது பால்காரனின் பாலியல் விளையாட்டு என்றால் வீடு கட்டுவதற்குக் காண்டிராக்ட் எடுக்கின்ற கொத்தனார் மேஸ்திரியின் மேய்ச்சலை நினைத்தால் வயிறு எரிகின்றது.இவனுக்கும் நமது சமுதாயப் பெண்களின் கற்பு கறிவேப்பிலையாகி விட்டது. இது போல் வீட்டிற்கு வருகின்ற பொற்கொல்லன், ஆசாரி என்று பட்டியலே நீள்கின்றது.

பிரச்சார ஆலிமின் விபச்சாரம்

சென்னை சைதாப்பேட்டையில் இருக்கும் ஒரு பிரச்சார ஆலிமின் பெயர்……… இவருடைய காமக் களியாட்டத்தைப் பாருங்கள்.

வெளிநாட்டில் இருக்கும் ஒரு சகோதரருக்கும் அவரது மனைவிக்கும் இடையே ஒரு விரிசல்! இந்தச் சிறிய இடைவெளியில் இந்த ஆபாச ஆலிம்சா, சமாதானம் செய்கிறேன் என்ற சந்தடி சாக்கில் நுழைந்து விடுகிறார்.

சில துஆக்கள் மூலம் பிரச்சனையைத் தீர்த்து வைக்கிறேன் என்று சதி சரச வலையைப் பின்னுகிறார். ஆலிம் என்ற போர்வையில் கணவனிடம் பேசுகிறான். ஆலிம் என்றால் இந்தச் சமுதாயம் ஈமானையும் இழந்து விடும் அளவுக்கு நம்பும் அல்லவா? அது தான் இங்கு நடந்திருக்கின்றது. இவனும் அடிக்கடி வர ஆரம்பித்திருக்கிறார்.

போன் தொடர்பும் ஏற்பட்டுள்ளது. பிறகு விவகாரம் முற்றிப் போய் ஊர் முழுக்க பரவ ஆரம்பித்திருக்கிறது.

கல்லூரி படிக்கின்ற வயது வந்த மகள், +2 படிக்கின்ற மகனுடன் அந்தப் பெண்ணைக் கடத்திக் கொண்டு ராஜபாளையம் என்ற ஊருக்கு வந்து விடுகின்றார். சைதை ஜமாஅத் கொந்தளித்துப் போய் ராஜபாளையம் வந்து, கையும் களவுமாகப் பிடித்து பிள்ளைகளைக் காப்பாற்றிச் செல்கின்றனர். மனைவி ராமநாதபுரத்தைச் சேர்ந்த வசதி படைத்த பெண். விவாகரத்துச் செய்யப்படுகின்றாள்.

வைப்புக்கு எதிராக வைஃப் போராட்டம்

விவகாரம் இத்துடன் நிற்கவில்லை. இந்த அயோக்கிய ஆலிம்சாவுக்கு ஆராம்பண்ணை என்ற இடத்தில் புரோகித வேலையும் கிடைக்கிறது. பொறுக்கிகளும் இமாமத் வேலை பார்க்கலாம் என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டு. “நான் இருக்கும் போதே இவளை எப்படி இழுத்து வரலாம்‘ என்று இவரது மனைவி போராடுகின்றாள்.

அன்றாடம் தன்னை அலைக்கழிக்கின்ற மனைவியை திட்டமிட்டே இந்த ஷைத்தான் ஒரு ஆசாரியுடன் போகச் சொல்கிறான். அவள் ஆசாரியுடன் சுற்ற ஆரம்பிக்கின்றாள். பூங்கா, ஹோட்டல்கள் என அவ்விருவரும் பொழுதுபோக்க ஆரம்பிக்கின்றனர். இந்தச் சமயத்தில் சமுதாயத்தின் சில இளைஞர்களிடம் இந்தக் கள்ள ஜோடியினர் சிக்கிய போது தான் காமுக ஆலிம்சாவின் கரை படிந்த வரலாறு தெரிய வருகின்றது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 1 = 6

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb