மிஸ்ரோமில் 162 நபர்களுடன் வசிக்கும் குடும்பம் ஒன்று உள்ளது. பாங்காங்கிலிருந்து 100 கி.மீ. தொலைவில் இருக்கும் பிக்சரகியூ கிராமத்தில் இவர்கள் அனைவரும் ஒன்றாக வசிக்கின்றனர்.
அந்த குடும்பத்தின் 66 வயதுடைய முதியவர் ஜியோனா(குடும்பத் தலைவர்), 38 பெண்களை மணம் முடித்துள்ளார்.
இவருக்கு மொத்தம் 94 குழந்தைகள் உள்ளனர். அவர்களில் சிலருக்கு திருமணம் முடிந்துள்ளது.
இவர்கள் அனைவரும் ஒரே வீட்டில் தனித்தனி அறைகளில் வசித்தாலும் உணவு சமைப்பது மட்டும் ஒன்றாக உள்ளது.
இவர்களுக்கு ஒரு நேரத்திற்கு 30-35 கிலோ இறைச்சியும், 50 கிலோ அரிசியும் தேவைப்படுகிறது.
உலகிலேயே அதிக நபர்களுடன் கூட்டுக் குடும்பமாக ஒற்றுமையாக வசிப்பவர்கள் ஜியோனாவின் குடும்பம் என்ற பெருமையையும் பெற்றுள்ளனர்.
Source: http://muthupet.org/?p=5157