Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

தட்கல் முறையில் பாஸ்போர்ட்; 2 நாட்களில்!

Posted on July 5, 2010 by admin

சென்னையில் விரைவில் அறிமுகம்! தட்கல் முறையில் பாஸ்போர்ட் 2 நாட்களில் கிடைக்கும்.

விண்ணப்பித்த 2 நாட்களில் `தட்கல்’ முறையில் பாஸ்போர்ட் வழங்கும் முறை அறிமுகப்படுத்தப்படும் என்று பாஸ்போர்ட் அதிகாரி தவுலத் தமீம் தெரிவித்தார்.

இது பற்றி, சென்னை பிராந்திய துணை பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ்.தவுலத் தமீம் கூறியதாவது:

தினசரி ஆயிரத்துக்கு மேல்…

சென்னை பிராந்திய பாஸ்போர்ட் அலுவலகத்தின் மூலம் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 9 மாவட்டங்களுக்கான பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது.

சாதாரண பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பித்த 2 மாதங்களிலும், தட்கல் விண்ணப்பங்களுக்கு குறைந்தது 5 நாட்களிலும் பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுகின்றன.

இது தவிர விலாச மாற்றம், புதிதாக திருமணம் செய்தவர்கள் கணவன், மனைவி பெயரில் செய்துகொள்ளும் திருத்தங்கள் என 400-க்கும் மேற்பட்ட பாஸ்போர்ட்டுகள் கையாளப்படுகின்றன.

தனியார் பங்களிப்புடன் புதிய திட்டம்

புதிய பாஸ்போர்ட் கேட்டு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு தேசிய பாஸ்போர்ட் சேவை திட்டம் என்ற பெயரில் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்து உள்ளது. தனியார் (டி.சி.எஸ்.) பங்களிப்போடு இது அமல்படுத்தப்படுகிறது.

முதல் கட்டமாக பெங்களூர், சண்டிகார் நகரங்களில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டு உள்ளது.

விரைவில் சென்னையில்

சென்னையில் விரைவில் இந்த திட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. சென்னையில் 3 இடங்களில் இதற்கான அலுவலகங்கள் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தின் மூலம் தட்கல் பாஸ்போர்ட்டுகள் 2 நாட்களிலும், சாதாரண பாஸ்போர்ட்டுகள் இப்போது வழங்குவதைவிட விரைவாகவும் வழங்கப்படும்.

சென்னையைத்தொடர்ந்து, மதுரை, நெல்லை, திருச்சி, கோவை, தஞ்சாவூர் ஆகிய நகரங்களுக்கும் இந்த திட்டம் கொண்டுவரப்படும்.

தற்போது ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. விண்ணப்பிப்பவருக்கு பாஸ்போர்ட் அலுவலகம் குறிப்பிடும் தேதியில் தான் வரவேண்டும். அன்றைய தினத்தில் பணத்தைக்கட்டிவிட்டால் போதும். ஆன்லைன் விண்ணப்பம் செயல்பாட்டுக்கு வந்துள்ளதால், பாஸ்போர்ட் அலுவலகத்தில் முன்பிருந்ததைவிட கூட்டம் குறைந்துள்ளது. இந்த நிலையில், தேசிய பாஸ்போர்ட் சேவை திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது இப்போது இருப்பதைவிட வேகமாக எல்லா வேலைகளும் நடைபெறும். என்று கே.எஸ்.தவுலத் தமீம் கூறினார். (செய்தி உதவி: லால்பேட்டை எக்ஸ்பிரஸ்)

 

திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல்

சென்னை:தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதை வருகிற 16ம் தேதி வரை பொதுமக்கள் குறிப்பிட்ட இடங்களில் பார்வையிடலாம்.

அந்தந்த பகுதியில் உள்ள வாக்குச்சாவடி மற்றும் மண்டல அலுவலகம் உள்பட வரைவு வாக்காளர் பட்டியல் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கு சென்று பார்வையிட்டு அதில் திருத்தம் தேவைப்பட்டால் செய்து கொள்ளலாம்.

புகைப்படம், பெயர், குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள் விடுபட்டிருந்தால் அல்லது தவறாக இருந்தால் அதை சரி செய்து கொள்ளலாம். இதற்காக சம்பந்தப்பட்ட மையங்களில் உள்ள அதிகாரிகளிடம், 6, 7, 8, 8ஏ ஆகிய படிவங்களை பெற்று பூர்த்தி செய்து அங்கேயே கொடுக்கலாம். 16 ந்தேதிவரை மட்டுமே விண்ணப்பங்கள் எற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கல்லூரி முதல்வர்களுக்கு கிடுக்கிப்பிடி:

ஐந்தாண்டுக்கு மேல் பதவி கிடையாது!

புதுடில்லி : கல்லூரி முதல்வர்களின் பதவிக் காலம் இனி ஐந்தாண்டுகள் மட்டும் தான் என்று, பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது. இதனால், இனி புதிதாக நியமிக்கப்படும் கல்லூரி முதல்வர்கள் ஐந்தாண்டுகள் மட்டுமே முதல்வர் பதவியில் இருக்க முடியும். தற்போது நாட்டிலுள்ள கல்லூரிகளில், ஒருவர் முதல்வர் பதவியில் 65 வயது முடியும் வரை இருக்க முடியும்.

பல்கலைக்கழக மானியக்குழுவின் உத்தரவுப்படி, இனி முதல்வர் பதவியில் ஒருவர் ஐந்தாண்டுகள் மட்டுமே இருக்க முடியும். தேவைப்பட்டால், மீண்டும் ஒரு ஐந்தாண்டுகளுக்கு அவர் நீடிக்க முடியும். அப்படி இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்படும் போது, முதன் முறை தேர்வின் போது என்னென்ன விதிகள் பின்பற்றப்பட்டனவோ அதே விதிமுறைகள் இரண்டாவது தேர்விலும் கடைபிடிக்கப்படும்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

94 − 90 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb