ஆண் மலட்டுத்தன்மைக்கு காரணம் என்ன?
மருத்துவ கட்டுரை
o ஆண் மலட்டுத்தன்மைக்கு காரணம்!!!
o உணர்ச்சியைத் தூண்டுமா போதைப்பொருட்கள்?
o பாலியல்உணர்வை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள்!
ஆண் மலட்டுத்தன்மைக்கு காரணம்!
ஆண்மைக்குறைபாடு பற்றி பெரும்பாலான ஆண்களுக்கு சரியாக புரிவதில்லை. ஒரு பெண்ணை திருப்தி படுத்தும் அளவுக்கு உறவு கொள்ள முடிந்தாலே குழந்தை இல்லாமைக்குத் தான் காரணம் இல்லை என்று எண்ணுகிறார்கள். ஆனாலும் சிலருக்கு உறவின்போது வெளிப்படும் உயிரணுவில் குழந்தை பேறு கொடுக்கக்கூடிய அளவு தகுதியான அணுக்கள் இருக்காது. இந்த நிலை தான் ஆண் மலட்டுத் தன்மை எனப்படுகிறது.
பரபரப்பான வாழ்க்கையில் செக்ஸ் என்பதற்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாத அளவுக்கு இளையவர்கள் பல்வேறு மன அழுத்தத்திற்கு ஆளாகிறார்கள். இதுவே ஆண்மைகுறைவுக்கு முக்கிய காரணமாக அமைகிறது.
புகைபிடித்தல் ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது. புகை பிடிப்பவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை 13 சதவிகிதம் முதல் 17 சதவிகிதம் வரை மற்றவர்களை விட குறைவாக இருப்பதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.
இறுக்கமான ஜீன்ஸ் போன்ற உள்ளாடைகள் ஆண்களின் ஆண்மைத் தன்மையை பாதிக்கிறது. செக்ஸ் செயல்பாடுகளையும் பாதிக்கிறது.
வெந்நீர் குளியல் மேற்கொள்பவர்களுக்கு உயிரணுக்கள் எண்ணிக்கை குறையாகவே இருக்கிறது.
அதிக அளவில் காபி குடிக்கும் நபர்களின் உயிரணுக்கள் பாதிக்கப் பட்டிருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.
பிறவிலேயே ‘-‘ குரோமோசோம்களை கொண்டுள்ள ஆண்கள் இந்த குறைபாடுகளால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.
அம்மை நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தால், விரைக்குள் பாதிப்பு உண்டாகி உயிரணு உற்பத்தி பாதிக்கப்படலாம்.
உயிரணுக்கள் வெளிவரும் நாளங்களில் அடைப்பு இருக்கும் பட்சத்தில் பாதிப்பு உண்டாகும்.
பால்வினை நோய்களால் பாதிக்கப் பட்டிருந்தாலும், நோய்த் தொற்று ஏற்பட்டிருந்தாலும் விந்தணு குறைபாடு உருவாகலாம். விந்தணுக் குறைபாடு உள்ளவர்களில் சுமார் எழுபது சதவிகிதம் நபர்கள் உயிரணு குறைபாடுகளால் தான் பாதிக்கப்படுகிறார்கள்.
இந்த குறைந்த அளவில் இருக்கும் உயிரணுவும் ஊர்ந்து செல்வதில் சிரமப்படுவதாகவே இருக்கும்.
உயிரணுக்களின் தலை மற்றும் வால் பகுதி குறைபாடுகளுடன் காணப்படும் பட்சத்திலும் குழந்தை பிறக்க வாய்ப்பில்லாமல் போய் விடுகிறது.
ஆணின் விரையைச் சுற்றியுள்ள வெரிகோஸ வெயின் எனப்படும் நரம்புகள் முறுக்கேறி அதிக வெப்ப நிலையை அடையும் பட்சத்தில் உயிரணு உற்பத்தி பாதிக்கப்படுகிறது.
உணர்ச்சியைத் தூண்டுமா போதைப்பொருட்கள்?
செக்ஸ் மனமொத்த மகிழ்ச்சியான அனுபவம் நம் மனதையும் சூழ்நிலையையும் பொறுத்தது. உடலளவில் பார்த்தால் ‘டெஸ்ட்ரோஸன்’ என்னும் ஹார்மோன் அளவைப்பொறுத்தே அமைகின்றது. இது ஆண், பெண் ஒரு பாலாருக்கும் ஏறக்குறைய ஒரே வயதில்தான் சுரக்கிறது.
போதைப் பொருள்கள் உடலின் ஹார்மோன்களை வேகமாக சுரக்கச் செய்யும் தன்மை வாய்ந்தவை. இயற்கைக்கு மாறாக நரம்புகளைச் சுண்டிவிடும். அதனால்தான் போதை மருந்து உட்கொண்டு விளையாட்டில் வெற்றி பெறுபவரை வெளியேற்றி விடுகின்றனர்.
அதேபோல் செக்ஸிலும், போதைப் பொருட்கள் சில நேரங்களில் உணர்ச்சியைத் தூண்டினாலும் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது, நம் உடல் தன் நிலையை மறந்துவிடத் தொடங்குகிறது. போதைப் பொருட்கள் உணர்ச்சியைத் தூண்டுவது போன்று தெரிந்தாலும் மன நிறைவை ஏற்படுத்தாதது.
அதேபோல் உச்சகட்டத்தைப் பெறவும் உதவாது. சமயங்களில், அந்த நிலையையே தடுத்துவிடும் ஆற்றல் படைத்தது. சிகரெட் பிடித்தாலும் பெண்களுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. இதற்குக் காரணம், சிகரெட்டில் உள்ள ‘நிகோடின்’ ஆகும்.
மன உளைச்சலைக் குறைக்கும் சில மருந்துகளுக்குக் கூட இத்தன்மை உள்ளது. இதுபோன்ற மருந்து வகைகள், ‘சிரோட்டி னின்’ அளவைக் கூட்டுகின்றன. அதேசமயம்,‘டெஸ்ட்ரோன்கள்’ வேலையைக் குறைக்கிறது. ‘டெஸ்ட்ரோனே‘ செக்சைத் தூண்டும் முக்கிய ஹார்மோன் என்பது நாம் அறிந்ததே.
அண்மைக் காலங்களில், கருத்தரிப்பைத் தடுக்க பல்வேறு கருத்தடை மருந்துகள் உட்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக ‘புரோஜஸ்டின்’ எனப்படும் மருந்து வகையை உட்கொள்ளும் பொழுது, செக்ஸ் உணர்வு, குறைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருதப்படுகிறது.
ஆண்களுக்கு 18 அல்லது 20 வயதில் உள்ள அதே அளவுதான் பெண்களுக்கும் உணர்ச்சிகள் இருக்கும். ஆனால் ஆணுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவம், வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் பெண்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை.
பெண் என்பவள், உடலியல் ரீதியாக, இரண்டாம் பட்சமாகவே கருதப்படுகிறாள். அதன் விளைவாக, கட்டுப்பெட்டித்தனம் ஏற்படுகிறது. பெண்கள், தங்களுடைய செக்ஸ் உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொள்ளவும் முடியாது. போதைப் பொருட்கள் போலவே, மதுவும் உடலின் நரம்புடன் நேரடியாக தொடர்பு கொள்வதால், முதலில் மகிழ்ச்சியாக இருக்கும்.ஆனால் நாட்கள் செல்லச் செல்ல, நரம்பு மண்டலத்தை உளையச் செய்துவிடும்.
செக்ஸில் இருவரும் தங்கள் விருப்பங்களைத் தெளிவான முறையில் தெரிவித்துக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், சிக்கல்தான்! சிக்கல் தோன்றிவிட்டால் பிறகு எப்படி முழுமையான இன்பத்தைப் பெறமுடியும்? மன உளைச்சல் ஏற்படும். மன உளைச்சல் ஏற்பட்டால் மற்ற வேலைகளையும் பாதிக்கும். செக்சில் நிறைவைப் பெற விடாமல் தடுக்கக்கூடிய காரணிகளில் ஒன்றான போதைப்பொருள்களை தவிர்ப்பது செக்சிற்கு மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் பயனளிக்கக் கூடியதாகும்.
செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள்!
இப்போதெல்லாம் செக்ஸ் பிரச்சினையில் உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை புதிது புதிதான சந்தேகங்களைத் தாங்களாகவே உருவாக்கிக் கொண்டு அதைத் தீர்க்க வேண்டி மருத்துவர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆண்மைக்குறைவு, விந்து சுரக்காமை, விந்து வெளியேறமை, சிறிய ஆண்குறி, இப்படி அவர்களது பிரச்சினைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். இப்படிப்பட்ட பிரச்சினைகளில் ஒரு முக்கியமானது தான், செக்சில் ஆர்வம் குறைந்து போவது…. இது வயது ஆக ஆகக் குறைந்து போவது இயற்கை தான்.
இருந்தாலும் ஒரு சிலருக்கு, வயதாகும் முன்பே செக்சில் ஆர்வம் குறைந்து போய், திருவிழா நாட்களிலும் பெட்டிக்குள் பூட்டி வைக்கப்பட்ட புத்தாடையாய், மனைவியைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் தான் வாழ்க்கையில் அவர்களுக்கு புயல் வீச ஆரம்பிக்கிறது…
சரி. செக்ஸ் உணர்வை அதிகரித்துக் கொள்ள ஏதாவது உணவு வகை இருக்கிறதா?
உடலுறவு வேட்கையை அதிகரிக்கும் உணவுப் பொருட்களில் வெங்காயம் முதலிடம் வகிக்கிறது. வெங்காயத்திலும் நாட்டு வெங்காயம் எனப்படும் சிறிய வெங்காயம் செக்ஸ் உணர்வை அதிகரிக்கச் செய்கிறது. எனவே இதைத் தவறாமல் நாள்தோறும் உணவில் சேர்த்து வருவது நல்லது.
இதன் காரணமாகத்தான் பெண் வாசனையே இன்றி இருக்க விரும்பும் ஆண்கள் வெங்காயம் சாப்பிடக் கூடாது என்பார்கள்.
அதிலும், சமைக்காத பச்சை வெங்காயமாகச் சாப்பிடும் போது தான் இதன் முழுப்பலனையும் பெற முடியும்.
இன்னும் சிலர், நமது நாட்டில் பரவலாகக் காணப்படும் வெற்றிலை போடும் பழக்கத்தாலும் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் எனவும் கூறுவார்கள்.
இது தவிர, நன்கு வெயிலில் காய்ந்த ஆட்டுக்கறியை எண்ணையில் வறுத்துச் சாப்பிட்டாலும் செக்ஸ் உணர்வு அதிகரிக்கும் எனவும் கூறப்படுகிறது. அதிலும் ஆண்மைத்தன்மை சுத்தமாகக் குறைந்து போனவர்களுக்கு இது நல்ல பலன் அளிப்பதாகவும் கூறப்படுகிறது.
மேலும்,. கடலில் காணப்படும் சிப்பி வகை (ஆய்ஸ்டர்) உணவு, ஆண்களின் செக்ஸ் உணர்ச்சியை அதிகரிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதாக சமீபத்திய ஆராய்ச்சிகளின் முடிவில் தெரிய வந்துள்ளது.
மேற்கூறிய உணவு வகைகள் பற்றி அவ்வளவு உறுதியான முடிவுகள் தெரியவில்லை என்றாலும்., கடைசியாகக் கூறிய, சிப்பி வகை உணவு விஷயத்தில் நூற்றுக்கு நூறு உண்மை இருக்கிறது என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது
நன்றி: இளமை