எம்.ஷாமில் முஹம்மது
[ ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தது. ஆனால் ஈராக்கில் அதிகமான பொருளாதார ஒப்பந்தங்களை செய்திருப்பது அமெரிக்கா அல்லாத நாடுகள் தான். அதிலும் சீனா தான் அதிகமான பொருளாதார ஒப்பந்தங்களை செய்துள்ளது.
அதேபோன்று ஆப்கானிஸ்தானில் ஒரு துப்பாகி குண்டையும் பயன்படுத்தாமல் எந்த உயிர் இழப்பும் இன்றி அமெரிக்காவை புறம் தள்ளி சீனா 2007 ஆண்டு கனிமத் தாது ஒப்ந்ததை செய்து கொண்டது. இவைகள் அமெரிக்க ஆக்கிரமிப்பின் பிரதான நோக்கத்தை மிகவும் தொளிவாக காட்டுகின்றது.
ஆகவே அமெரிக்க ஆக்கிரமிப்பின் பிரதான நோக்கமாக எண்ணெய் வளங்களை கைப்பற்றுதல், வளங்களை தமது கட்டுபாட்டின் கீழ் வைத்திருத்தல் என்பதற்கு அப்பால் உலகில் எழுச்சி பெற்றுவரும் இஸ்லாமிய சக்திகளை அழிப்பதுதான் பிரதானமாக இருக்கிறது.
நிச்சயமாக அல்லாஹ் வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்; நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர். (அல்குர்ஆன்:31:20)]
உலகில் இன்று அதிகமாம ஆச்சரியமாக பார்க்கப்படும் விடையமாக ஆப்கானிஸ்தானின் கனிமத் தாதுக்கள் விடயம் கருதபடுகின்றது ஆப்கானிஸ்தானில் கண்டறியப்பட்டுள்ள கனிமத் தாதுக்களின் மதிப்பு மட்டும் ஒன்று தொடக்கம் இரண்டு ட்ரில்லியன் டொலர்கள் என தகவல்கள் கூறுகின்றன. ஆனாலும் அதன் மதிப்பு இன்னும் அதிகமாக இருக்கும் என நம்பப்படுகிறது.
ஒரு ட்ரில்லியன் டாலர்கள் என வைத்து கொண்டாலும் 1 ட்ரில்லியன் டாலர் இதை பில்லியன் கணக்கில் -மில்லியன் கணக்கில் அல்ல – சொன்னால் 1000 பில்லியன் டாலர்கள் ஆகும் இவ்வளவு பெரிய கனிமத் தாதுக்களை ஆப்கானிஸ்தான் எப்படிப் பயன்படுத்தப் போகிறது இதை அமெரிக்காவும் மற்ற மேலாதிக்க நாடுகளும் எப்படி சுருட்டப் போகிறது என்பது தான் இன்றைய பொருளாதார உலகின் பிரதான வினா. இந்த வினாக்களுக்கு அப்பால் சில விடையங்களை நாம் பார்போம்.
லித்தியம் ,இரும்பு, தாமிரம், தங்கம், கோபால்ட் மற்றும் இரத்தினம் போன்ற கனிமங்களின் தாதுக்கள் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு ஆப்கானிஸ்தானில் இருப்பதை முதலில் அமெரிக்காவின் பாதுகாப்புத்துறையான பெண்டகன் தான் கண்டுகொண்டது என்று அமெரிக்கா கூறியது. ஆனால் முதல் முதலில் 1974ஆம் ஆண்டு தெற்கு காபூல் பகுதியில் பல மில்லியன் தொன் நாகம் இருப்பதாக அறியப்பட்டது. இந்த தெற்கு காபூலின் நாகப் படிவு பற்றிய ஆய்வை 1974 ஆண்டு ஆப்கானிஸ்தான் அரசு ரஷ்யா உதவியுடன் மேற்கொண்டது.
தொடர்ந்து வந்த காலபகுதியில் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது 1979 தொடக்கம் 1989 வரையிலான 10 வருட ஆக்கிரமிப்புக்கு விரிவாக பார்க்க ஆப்கான் உள்ளானது. இதனால் ஆப்கானிஸ்தான் மக்கள் சுயமாக ஆய்வுகளை செய்து தமது புதையல்களை கண்டு கொள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு அனுமதிக்க வில்லை என்று கூறவேண்டும் ரஷ்யா ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. அங்கு எதையும் சாதிக்க முடியவில்லை.
இந்த ஆக்கிரமிப்பு மிக பாரிய தோல்வியாக ரஷ்யாவுக்கு அமைந்தது. ரஷ்யா ஆப்கான் இஸ்லாமிய போராளிகளிடம் மிகவும் மோசமாக தோற்றதாலும், அதை தொடர்ந்து சோவித் ரஷ்யா பல துண்டுகளாக உடைந்தமையாலும், கனிமங்களின் தாதுக்கள் பற்றிய ஆய்வுகளை அகழ்வுகளை ரஷ்யா செய்ய முடியாது போய்விட்டது.
ரஷ்ய ஆக்கிரமிப்பு ஆப்கானிஸ்தான் மக்கள் சுயமாக முழுமையான ஒரு ஆய்வை செய்து தமது புதையல்களை கண்டு கொள்ள ஆப்கானிஸ்தான் மக்களை அனுமதிக்க வில்லை என்று கூறவேண்டும். எனினும் தாதுகள் பற்றிய முதல் கண்டுபிடிப்பை ஆப்கானிஸ்தான் மக்கள் தான் மேற்கொண்டார்கள். ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு பின்னர் சிறிய காலம்தான் ஆப்கான் மக்கள் ஆப்கானிஸ்தானை ஆண்டார்கள்.
தாலிபான் அரசு மிகவும் சிறப்பான ஊழல் அற்ற அரசாக மேற்கு நாடுகளாலும் பார்க்கப்பட்டது இந்த இஸ்லாமிய அரசு தன்னை பலப் படுத்த முன்னர் 2001 ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்பு படை ஆப்கானிஸ்தானை தனது கட்டுபாட்டின் கீழ் கொண்டுவந்தது இந்த அமெரிக்க ஆக்கிரமிப்பு. இன்று வரை தொடர்கின்றது
இந்த ரஷ்ய அமெரிக்க மேலாதிக்க சக்திகள் ஆப்கானிஸ்தான் மக்களை சுதந்திரமாக வாழ அனுமதித்திருந்தால் ஆப்கானிஸ்தான் இன்று இஸ்லாமிய பொருளாதார வல்லரசாக வளர்த்திருக்கும் , உலகின் கிலாபத் மீள் எழுச்சியின் தலை நகராகவும் மிளிர்ந்திருக்கும் ரஷ்ய அமெரிக்க மேலாதிக்க பேய்களின் வெறியாட்டத்தால் ஆப்கான் மக்கள் தொடர்ந்து வதைக்கப்படும் நிலையில் அவர்கள் எப்படி ஆய்வுகளையும், அகழ்வுகளையும் செய்வார்கள். ஆகவே ஆப்கானிஸ்தான் மக்களின் இன்றைய நிலைக்கு ஆப்கான மக்கள் காரணமல்ல, இந்த மேலாதிக்க சக்திகள் தான் முழு காரணம்.
அதேபோன்று ஆப்கானிஸ்தானுடன் முதல் கனிமத் தாதுக்கள் தொடர்பான ஒப்பந்தம் செய்து கொண்ட நாடு சீனா, சீனாவின் – China Metallurgical Group என்ற அரச நிறுவனம் இந்த ஒப்பந்ததை 2007 ஆண்டு செய்து கொண்டது. சீனா காபூலின் தொன்பகுதியில் காணப்பட்ட தாது அகழ்வுக்கான ப்ராஜெக்ட்டை 3.4 பில்லியன் டாலர் செலுத்தி பெற்றுக்கொண்டது.
தன்னுடன் போட்டியிட்ட மற்ற நாடுகளை விடவும் 1.0 பில்லியன் டாலர் அதிகமாக செலுத்தியும் 30 மில்லியன் அமெரிக்க டாலர்களை ஆப்கானிஸ்தான் முக்கிய அமைச்சர் ஒருவருக்கு லஞ்சமாக வழங்கியும் இந்த ஒப்பந்ததை ஆப்கானிஸ்தானுடன் செய்து கொண்டது என்று அன்று அமெரிக்க செய்திகள் தெரிவித்தன.
ஒப்பந்ததை செய்வதில் சீனா அமெரிக்காவை விடவும் ஏனைய மேற்கு நாடுகளை விடவும் முந்திக்கொண்டு இந்த இந்த ஒப்ந்ததை செய்துகொண்டது சினாவுக்கு போட்டியாக அமெரிக்க நிறுவனமான Phelps Dodge, ரஷ்ய நிறுவனமான Strikeforce ,பிரிட்டன் நிறுவனமான Kazakhmys Consortium, மற்றும் கனடா நிறுவனமான Hunter Dickinson ஆகியன கடும் போட்டி போட்டன இறுதியல் சீனா வென்றது.
இங்கு சீனா அமெரிக்காவையும் ஏனைய மேற்கு நாடுகளையும் முந்திக்கொண்டு ஒப்பந்தம் செய்தமை அமெரிக்காவும், மேற்கு நாடுகளும் பொருளாதார வளங்கள் என்பதையும் விட இஸ்லாமிய எழுச்சியை தடை செய்வதில் முழு கவனத்தையும் கொண்டுள்ளமையை காட்டுகின்றது.
ஈராக்கிலும் , ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்க மற்றும் மேற்கு நாடுகளைவிடவும் சீனா பொருளாதார தளத்தில் ஆழமாக கால் பதித்துள்ளது.
வாஷிங்டனை தளமாக கொண்டு இயங்கும் மத்திய ஆசிய கவ்காஸ் என்ற சுதந்திர ஆய்வு நிறுவனத்தின், –The Central Asia-Caucasus Institute- தலைவர் எஸ் . பேட்ரிக் ஸ்டார் –S. Frederick Starr – ‘ இது ஆச்சரியமான விடையம் அமெரிக்காவும், நேட்டோவும் ஆப்கானில் சீனாவின் பொருளாதார உள்நுளைவுக்கு அறிவிக்கபடாத ஒரு தயாரிப்புகளை செய்கிறார்களா என்றும் நாங்கள் சுமைகளை சுமக்கிறோம் அவர்களோ- சீனா- பலனை அறுவடை செய்கின்றார்கள்’-“We do the heavy lifting,” he said. “And they pick the fruit.”- என்றும் குறிபிட்டார்.
ஆகவே அமெரிக்க, மற்றும் மேற்கு நாடுகளின் ஆக்கிரமிப்புகளின் பிரதான நோக்கமாக உலகின் வளங்களை தமது கட்டுபாட்டின் கீழ் வைத்திருத்தல் என்பது ஈராக் , ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ,யமன் போன்ற முஸ்லிம் நாடுகளில் மாறுபடுகின்றது. அமெரிக்கா உலகில் 75 நாடுகளில் தமது தளங்களை அமைத்துள்ளது. இதன் பிரதான நோக்கம் வேறாகவும் ஈராக், ஆப்கானிஸ்தான் , பாகிஸ்தான் ,யமன் போன்ற நாடுகளின் மீதான மேலாதிக்க அல்லது ஆக்கிரமிப்பின் நோக்கம் வேறாகவும் இருக்கிறது இங்கு பொருளாதாரம் இவர்களுக்கு இரண்டாவதாகவும் இஸ்லாமிய எழுச்சியை அடக்குதல் முதல்மையனதாகவும் இருக்கிறது.
கடந்த வருடம் ஓய்வு பெற்ற பிரிட்டிஷ் இராணுவ தளபதி றிச்சர்ட் டன்னட் General Richard Dannatt – ஆப்கான மீதான போர் கிலாபத்- இஸ்லாமிய ஆட்சிமுறை – மீண்டும் ஏற்படுத்தப்படாமல் தடுக்கும் போர் என்பதை உறுதிப்படுத்தினார்.
இவர் BBC’s Today program இக்கு வழங்கிய செவ்வியில் ‘ இஸ்லாமிய திட்டமுறை Islamist agenda ஒன்று இருக்கிறது. அதை நாம் தென் ஆப்கானிஸ்தானில் அல்லது ஆப்கானிஸ்தானில் அல்லது தெற்கு ஆசியாவில் அவற்றை எதிர்க்காவிட்டால், அதன் செல்வாக்கு வெளிப்டையாக வளரும் அது நன்றாக வளரக்கூடியது, அது தெற்கு ஆசியாவில் இருந்து மத்திய கிழக்கு, வட ஆபிரிக்கா நோக்கி 14 ஆம், 15 ஆம் நூற்றாண்டு கிலாபத்தின் பதிவுகளை கொண்டு நகர்வதை நாம் காணமுடியும்’ என்று கூறினார்.
ஈராக்கை அமெரிக்கா ஆக்கிரமித்தது. ஆனால் ஈராக்கில் அதிகமான பொருளாதார ஒப்பந்தங்களை செய்திருப்பது அமெரிக்கா அல்லாத நாடுகள் தான். அதிலும் சீனா தான் அதிகமான பொருளாதார ஒப்பந்தங்களை செய்துள்ளது. அதேபோன்று ஆப்கானிஸ்தானில் ஒரு துப்பாகி குண்டையும் பயன்படுத்தாமல் எந்த உயிர் இழப்பும் இன்றி அமெரிக்காவை புறம் தள்ளி சீனா 2007 ஆண்டு கனிமத் தாது ஒப்ந்ததை செய்து கொண்டது.
இவைகள் அமெரிக்க ஆக்கிரமிப்பின் பிரதான நோக்கத்தை மிகவும் தொளிவாக காட்டுகின்றது. ஆகவே அமெரிக்க ஆக்கிரமிப்பின் பிரதான நோக்கமாக எண்ணெய் வளங்களை கைப்பற்றுதல் , வளங்களை தமது கட்டுபாட்டின் கீழ் வைத்திருத்தல் என்பதற்கு அப்பால் உலகில் எழுச்சி பெற்றுவரும் இஸ்லாமிய சக்திகளை அழிப்பதுதான் பிரதானமாக இருக்கிறது.
நிச்சயமாக அல்லாஹ், வானங்களில் உள்ளவற்றையும், பூமியில் உள்ளவற்றையும், உங்களுக்கு வசப்படுத்தி இருக்கிறான் என்பதையும்; இன்னும் தன் அருட் கொடைகளை உங்கள் மீது புறத்திலும், அகத்திலும் நிரம்பச் செய்திருக்கிறான் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆயினும், மக்களில் சிலர் இருக்கிறார்கள்; அவர்கள் போதிய கல்வியறிவில்லாமலும்; நேர்வழி இல்லாமலும், ஒளிமிக்க வேதமில்லாமலும் அல்லாஹ்வைக் குறித்துத் தர்க்கம் செய்கின்றனர். (அல்குர்ஆன்:31:20)
source: www.Ourummah.org