பெண்களின் மீது பாலியல் பலாத்காரம் செய்வதில் உலகிலேயே முதலிடம் வகிக்கும் அமெரிக்காவில், இராணுவத்தில் பணிபுரியும் பெண் சிப்பாய்கள் மீதும் பாலியல் பலாத்காரம் அதிகரித்து வருவதாக அதிர்ச்சியளிக்கும் ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
உலகில் பாலியல் பலாத்காரங்கள் மிகவும் அதிகமாக நடைபெறும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்காதான் முதல் இடத்தைத் தொடர்ந்து கைப்பற்றி வருகின்றது.
தற்போது வெளி வரும் அறிக்கைகள் இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான பாலியல் பலாத்காரத்திலும் அமெரிக்காவை எவரும் முந்தி விட முடியாது என்று கூறுகின்றது. அமெரிக்க இராணுவ பெண் சிப்பாய்கள் மீதான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்து வருவதாக அமெரிக்காவிலிருந்தே வெளியாகியுள்ள ஆய்வு அறிக்கைகள் கூறுகின்றன.
கடந்த வருடங்களில் 2009 மட்டும் 37000 பெண் சிப்பாய்கள் பாலியல் பலாத்காரங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அந்த அறிக்கை கூறுகின்றது. எனினும் இந்த எண்ணிக்கை மிகவும் சிறியது என்றும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட அதிகமான பெண் சிப்பாய்கள் அது பற்றி முறைப்பாடு செய்வது இல்லை என்றும் மீறி முறைப்பாடு செய்தால் அவர்கள் பழிவாங்கப் படுவதாகவும் அதே ஆய்வறிக்கைக் கூறுகிறது.
அமெரிக்க இராணுவத்திலுள்ள பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் பலாத்காரத்தில் 25 சதவீதம் ஈராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் உள்ள அமெரிக்க இராணுவத்தில் நடை பெறுவதாகவும் பெண்டகன் அறிக்கை ஒன்று கூறுகின்றது.
அமெரிக்கா முழுவதும் பாலியல் தொடர்பான குற்றங்களைப் புரிந்தவர்களின் எண்ணிக்கை 4 லட்சத்தை விடவும் கூடுதல் என்று சமீபத்திய மற்றொரு ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. பாலியல் தொடர்பான குற்றங்கள் அங்கு அதிகரித்து வருவதையே இது காட்டுகிறது.
இதற்காக அமெரிக்காவில் பாலியல் குற்றவாளிகள் என்று அடையாளம் காணப்பட்டவர்களின் முகவரி உள்ளிட்டவை அடங்கிய சேவையை தனியார் நிறுவனம் ஒன்று வழங்குகிறது. “இதன்மூலம், ஒருவர் தாம் வாழும் பகுதிக்கு அருகில் பாலியல் குற்றங்களைப் புரிவோர் என்று கருதப்படுவோர் யாரேனும் இருக்கிறார்களா என்பதை உறுதி செய்து கொள்ள முடியும்” என்று அந்நிறுவனம் விளம்பரப்படுத்தி வருகின்றது என்பது குறிபிடதக்கது.
முன்னேற்றமடைந்த நாடு எனவும் பெண்களின் சுதந்திரத்திற்கு முன்னுதாரணமான நாடு எனவும் நாகரீகத்தின் உச்சியில் உள்ள நாடு எனவும் மக்களால் தவறாக கருதப்படும் நாடுகளின் பட்டியலில் அமெரிக்கா தான் முன்னணியில் இருக்கும் போலிருக்கிறது!
ஒரு புள்ளிவிபரம்
லூயிஸ் ஹாரிஸ் என்ற அமைப்பு அண்மையில் 782 தொழிலாளர்களிடம் தொலைபேசி உரையாடல் மூலமாக ஒரு புள்ளிவிபரத்தைத் தயாரித்தது.
அதில், பணியில் இருக்கும் 37 சதவீதப் பெண்கள் தாங்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தப்படுவதாகக் குற்றம் சாட்டினார்கள்.
7 சதவீதப் பெண்கள் தங்களது தொழிலகங்களில் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதாகவும்,
62 சதவீத பலாத்காரங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை என்றும்
இதில் 100 சதவீதப் பெண்கள் தங்களை பலாத்காரம் செய்வது ஆண்களே என்றும் 59 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரம் செய்வது பெண்களே என்றும்,
41 சதவீத ஆண்கள் தங்களை பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்குவோர் வெளியில் உள்ள ஆண்கள் என்றும் குற்றம்சாட்டுகின்றனர்
பெண்களில் பலாத்காரத்திற்கு உள்ளாவோர் :
43 சதவீதப் பெண்களை அவர்களது முதன்மை அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்
27 சதவீதப் பெண்களை அவர்களது சீனியர் அதிகாரிகளே பலாத்காரம் செய்கின்றனர்
19 சதவீதப் பெண்களை அவர்களது தரத்தில் உள்ளவர்களாலும்
அருந்தினால் 8 சதவீதப் பெண்களை அவர்களை விட தரத்தில் கீழ் நிலையில் உள்ளவர்களாலும் பலாத்காரம் செய்யப்படுகின்றனர்.
கல்விக் கூடங்களில் :
அமெரிக்கப் பல்கலைக்கழகங்களில் பயிலும் பெண்களின் குழுமத்தினால் 8-11 வயதுடைய 1632 மாணவர்களிடம் எடுக்கப்பட்டதொரு புள்ளிவிபரத்தில் :
85 சதவீத மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்
76 சதவீத மாணவர்கள் பாலியல் பலாத்காரத்திற்குள்ளாக்கப்படுகின்றனர்
31 சதவீத மாணவிகள் அடிக்கடியும்
18 சதவீத மாணவர்கள் அடிக்கடியும்
13 சதவீத மாணவிகள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்
அதேபோல் 9 சதவீத மாணவர்கள் முத்தத்தை விட.., அதற்கும் மேலாக பாலியல் வல்லுறவுக்கு வற்புறுத்தப்படுவதாகவும்,
25 சதவீத மாணவிகளை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும்,
10 சதவீத மாணவர்களை அவர்களது பள்ளிக்கூடத்தில் பணிபுரிபவர்களாலும் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்படுகின்றனர் என்று அந்த ஆய்வு கூறுகின்றதஅமெரிக்காவில் உள்ள American Psychological Association என்ற அமைப்பு பெண் பட்டதாரிகளிடம் எடுத்ததொரு ஆய்வில்
12.7 சதவீத பெண்கள் பாலியல் பலாத்காரத்தில் உட்படுத்தப்பட்டவர்களாகவும்
21 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்குப் பயந்து வகுப்புக்களை தவிர்க்கக் கூடியவர்களாகவும்
11 சதவீதப் பெண்கள் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை புகார்களாகத் தெரித்தவர்களாகவும்
3 சதவீதப் பெண்கள் பாலியல் பலாத்காரத்தின் காரணமாக பள்ளிப்படிப்பை விட்டு விட்டவர்களாகவும் இருந்தனர்.
அமெரிக்காவில் உள்ள Minnesota high school students (reported by Susan Strauss, Sexual Harassment and Teens) அறிக்கை இவ்வாறு கூறுகின்றது :
பள்ளிக்கூடங்களில் பாலியல் பலாத்காரங்கள் இடம் பெறுகின்றன என்பதை 80 சதவீதமானவர்கள் அறிந்தே வைத்திருக்கின்றனர்
இதில் 75 சதவீதம் மாணவர்களுக்கு இடையே நடைபெறுகின்றன என்பதையும்
50 சதவீதமானவைகள் அவர்களது பள்ளிக்கூட ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினரால் நடைபெறுகின்றன.
பெண்கள் முன்னேற்றம் என்ற பெயரில், ஆண்களின் போகப்பொருளாக பெண்களை மாற்றும் கலாச்சாரம் இன்று அதிகரித்து வருகிறது. இப்போதெல்லாம் நடு ரோட்டில் தண்ணியடித்தாலும், ஒழுக்க் சீர்கேடான விஷயங்களை செய்தாலும் தவரில்லை என்று கருதப்படுகிறது. ஆனால், தவறுகளைப் பற்றி அரிவுறுத்த யாரேனும் முற்ப்பட்டால் அவர்கள் இன்னல்களுக்கு ஆளாவது சகஜமாகிவிட்டது.
இது போன்ற பாலியல் பலாத்காரம் புரியும் கேவலாமான ராணுவத்தை உலகின் ஒளி விளக்கை போலவும், அதை எதிர்க்கும் யுவான் ரிட்லீ போன்ற பத்திரிக்கையாளர்கள் தாக்கப் படுவதும் சாதாரணமாகிவிட்டது.
ராணுவத்தில் பணிபுரியும் பெண்களுக்கே இந்த நிலமை என்றால், ராணுவத்தால் கைது செய்யப்படும் பெண்கள்? சொல்ல முடியாத அவலங்கள். அந்த பட்டியல் இன்னும் நீளும். அவர்களை இறைவன் பாதுகாக்கவேண்டும்.
source: www.lankamuslim.org