புற்றுநோயைத் தடுக்கும் ஊசி இருக்கிறதா? என்று கேட்கிறீர்களா? ஆம் உள்ளது.
நவீன மருத்துவ உலகம் எவ்வளவோ முன்னேறிவிட்டது. வியாதிகளும் அவற்றைத் தடுக்கும் முறைகளையும் நாம் அறிந்தால் நிச்சயம் நாம் அவற்றில் பாதியையாவது நாம் தடுக்க முடியும். இந்த ஊசியைப்போட்டு இருந்தால் எனக்கு இந்தப் புற்றுநோய் வந்து இருக்காதே என்று வருந்தும் நிலை யாருக்கும் வரக்கூடாது.
பெண்களுக்கு வரக்கூடிய புற்றுநோயான கர்ப்பப்பைப் புற்றுநோயைத்தடுப்பதற்க்கான தடுப்பூசி இருப்பது நம்மில் பலருக்குத்தெரியாது.
ஆண்டுதோரும் 74,000 பெண்கள் இந்தியாவில் இந்த நோயால் இறக்கிறார்கள்.
இந்தியாவில் 8 பெண்களில் ஒருவர் உடலில் இந்த வைரஸ் கிருமி இருக்கிறது. எப்போது அது நோயை உண்டாக்கும் என்பது தெரியாது. இவர்கள் நோய் பரப்புபவர்கள்(Carrier) ஆவர். இது பெண்களிடமிருந்து ஆண்களுக்கு உடலுறவு மூலம் பரவுகிறது. ஆண்களுக்கு ஆணுறுப்பில் புண் போன்றவற்றையும் உண்டாக்குகிறது.
இதனைத்தடுப்பதற்காக அனைவருக்கும் கர்பப்பைப் பரிசோதனையும் Pap Smear பாப் ஸ்மியர் என்ற சோதனையும் எல்லா மருத்துவமனைகளிலும் செய்யப்படுகிறது.
நோய் ஆரம்பத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டால் உடனே அறுவை சிகிச்சை செய்து கீமோதெரபி என்ற சிகிச்சை முறையை 2-3 தடவை எடுத்துக்கொண்டால் குணப்படுத்திவிடலாம். இது ஒரு குணப்படுத்தக்கூடைய வகைப் புற்றுநோயாகும்.
H P V (human pappilloma Virus) தடுப்பூசிகள் பெண்களுக்கு 9 லிருந்து 26 வயதுவரை போடலாம். ஆயினும் 9-12 க்குள் போடுவது சிறந்தது. 9 வயதில் போடும்போது பெண்ணின் நோய் எதிர்ப்புசக்தியானது அதிக அளவில் உருவாகி வைரஸைத் தாக்கத் தயாராக இருக்கும்.
இந்த தடுப்பூசியானது மேலைநாடுகளில் பள்ளியிலேயே குழந்தைகளுக்கு இலவசமாகப் போடப்படுகிறது.
இதைப் பற்றிய விழிப்புணர்வு அமெரிக்காவிலேயே 40% பெண்களிடம்தான் உள்ளதாம். நம் நாட்டில் இதைப் பற்றிய விழிப்புணர்வு மிக அவசியம்.