மலக்குமார்கள் நம் கண்ணுக்குத் தெரியாத படைப்பினம். இவர்கள் இறைவனின் கண்ணியமிக்க அடியார்கள்.
இவர்கள் இறைவனை சோர்வோ கலைப்போ இல்லாமல் வணங்கி வழிபட்டுவருபவர்கள். படைத்து பரிபாலிக்கும் இறைத்தன்மையோ எதுவும் இவர்களுக்கு கிடையாது. (அல் குர்ஆன் 21 : 19, 20)
மேலும் இறைவனின் கட்டளைக்கு முழுமையாக கீழ்படியும் தன்மையும் அதனை அமல் படுத்தும் ஆற்றலைப் பெற்றவர்கள். (அல் குர்ஆன் 66 : 6)
மலக்குமார்களின் உருவம்
இது விஷயத்தில் வழித்தவிறிபோன சிலர் வானவர்களுக்கு உருவம் என்பது இல்லை. மேலும் படைப்பினங்களில் மறைந்திருக்கும் சில சக்திகள் தான் மலக்குகள் என்று விளக்கமும் தருகின்றனர்.
இது தவறாக கருத்தாகும். ஏனெனில் இவ்வாறு வைத்துக் கொண்டால் குர்ஆனுக்கும் சுன்னாவிற்கம் மாற்றம் செய்தவர்களாக ஆகிவிடுவோம். ஏனெனில் மலக்குமார்களுக்கு தோற்றம் உண்டு.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் :
வானவர்கள் ஒளியால் படைக்கப்பட்டுள்ளனர். ஜின்கள் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளனர். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் உங்களுக்கு வர்ணிக்கப்பட்ட மண்ணால் படைக்கப்பட்டார்கள். (அறிவிப்பவர் : ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம் 534)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்களை 600 இறக்கைகள் உடையவர்களாக பார்த்தார்கள். (அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊது ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி 4857)
மலக்குமார்கள் சில வேளை இறைவனின் கட்டளைப்படி மனித உருவத்திலும் வருவார்கள். (ஆதாரம் : 19 : 17, 11 : 69, 70)
மேலும் அவர்களுடைய பணிகளுக்குத் தக்கவாரும் அவர்கள் தோற்றம் கொடுக்கப்படுவார்கள்.
உதாரணமாக மண்ணறையில் விசாரனை செய்யும் போது உள்ள மலக்குமார்கள் மிகவும் கருப்பாக அவர்களின் கண்கள் நீல நிறத்தில் உள்ள தோற்றத்தில் இருப்பார்கள். அவர்கள் தான் முன்கர், நகீர், இரண்டு பேருக்கும் வெருக்கத்தக்க கூடிய வகையில் தோற்றம் இருக்கும்.
ஆதாரம் :
மய்யத் அடக்கம் செய்யப்பட்ட உடன் நீல நிற கண்களுடைய இரண்டு கறுப்பு நிற மலக்குகள் அவரிடம் வருவார்கள். அவர்களில் ஒருவர் முன்கர் இன்னொருவர் நகீர். அவ்விருவரும், ”இந்த மனிதர் பற்றி என்ன கூறிக் கொண்டிருந்தீர்கள்” என்று கேட்பார்கள். ”அவர் அல்லாஹ்வின் அடியார் அவனது தூதர் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிச்சயாமக முஹம்மத் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார்” என்று தான் கூறிக் கொண்டிருந்ததாக கூறுவர்.
அதற்கவ்விருவரும், ”நீர் அவ்வாறு தான் கூறிக்கொண்டிருந்தீர் என்பதை நாங்கள் அறிவோம்” என்று கூறவர். பிறகு அவரது அடக்கஸ்தலம் 70வதுக்கு 70 முழமாக விரிவுப்படுத்தப்பட்டு அதில் ஒளி ஏற்படுத்தப்படும். பிறகு அவரிடம், ”நீர் உறங்குவீராக” என்று கூறிப்படும். அப்போது அவர், ”நான் என் குடும்பத்தினரிடம் சென்று சொல்ல வேண்டும்” என்பார். அப்போது அவ்விருவரும், ”நெருக்கமான உறவினர் தவிர மற்றவர்கள் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் உனது இந்த இடத்திலிருந்து அல்லாஹ் உன்னை எழப்பும் வரை உறங்குவீராக” என்று கூறுவர்.
அவன் முனாஃபிக்காக இருந்தால், எனக்குத் தெரியாது மக்கள் சொல்வதைக் கேட்டு நானும் அதையே சொல்லி வந்தேன்” என்று கூறுவான். அதற்கவ்விருவரும், ”நீர் அவ்வாறு தான் சொல்லி வந்தீர் என்பதை நாம் அறிவோம்” என்று கூறுவர். பூமியை நோக்கி, ”இவரை நெருக்கு” என்று கூறிப்படும். அது அவனை நெருக்கும். அவனது விலா எலும்புகள் இடம் மாறும். அவனை அல்லாஹ் அங்கிருந்து எழுப்பும் வரை அதிலேயே வேதனை செய்யப் பட்டுக் கொண்டிருப்பான். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி 991)
பெயர் கூறப்பட்ட மலக்குகள்
1, ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் (அல்குர்ஆன் 2 : 98)
2, மீகாயீல் அலைஹிஸ்ஸலாம் (அல் குர்ஆன் 2 : 98)
3, இஸ்ராஃபீல் அலைஹிஸ்ஸலாம் (முஸ்லிம் 1289)
4, மாலிக் அலைஹிஸ்ஸலாம் (அல் குர்ஆன் 43 : 77)
5, முன்கள் அலைஹிஸ்ஸலாம் (திர்மிதி 991)
6, நகீர் அலைஹிஸ்ஸலாம் (திர்மிதி 991)
குறிப்பு :
ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வேறு சில பெயர்களும் உண்டு.
1, ரூஹுல் குதுஸ் (அல்குர்ஆன் 16 : 102)
2, ரூஹ் அல்குர்ஆன் (அல் குர்ஆன் 97 : 4)
3, ரூஹுல் அமீன் அல்குர்ஆன் (அல் குர்ஆன் 26 : 193)
மலக்குமார்களின் பணிகள்
வானவர்களுக்கென்று சில பணிகள் உண்டு, அதனை இறைவன் அவர்களுக்கு செய்யுமாறு கட்டளையிட்டுள்ளான். (அல் குர்ஆன் 66 : 6)
இதனடிப்படையில் அவர்களுகென்று உள்ள பணிகளை அவர்கள் செய்வார்கள். அந்த பணிகள் என்ன என்பதை சிலவற்றைப் பார்ப்போம் :
1, வஹீயை கொண்டுவருதல் (அல் குர்ஆன் 16 : 2)
2, நன்மை தீமைகளை பதிவு செய்தல் (அல் குர்ஆன் 82 : 10,11,12, 50 : 17, 18)
3, உயிரை கைப்பற்றுதல் (அல் குர்ஆன் 32 : 11)
மலக்குல் மவ்த் என்றே ஒரு தனி மலக்கு இருக்கிறார். அவர் தான் அனைவரின் உயிரையும் கைப்பற்றுவார், என்று சிலர் நினைக்கின்றனர். ஆனால் உண்மை அவ்வாரல்ல ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு உயிரை கைப்பற்றக் கூடிய மலக்குகள் இருக்கிறார்கள். மேலும் அந்த வானவர் பெயர் இஸ்ராயீல் என்றும் சொல்ப்படுகிறது. இதற்கு குர்ஆனிலோ ஹதீஸிலோ எந்த ஆதாரமும் இல்லை. இறைவன் மனித உயிர்களை கைப்பற்றும் போது நல்லவர்களுக்குத் தக்கவாரும் கெட்டவர்களுக்குத் தக்கவாரும் உயிர்களை கைப்பற்றுவான். (அல் குர்ஆன் 8 : 50, 47 : 27, 16 : 32)
4, பாதுகாவல் (அல் குர்ஆன் 13 : 11)
5, அர்ஷை சுமப்பவர்கள். (அல் குர்ஆன் 69 : 17)
6, நரக காவலாளிகள் (அல் குர்ஆன் 74 : 30, 310
7, கருவரையில் விதியை எழதுபவர்கள்
தாய் வயிற்றில் உள்ள கரு 4ன்கு மாதங்களை அடைந்ததும், அல்லாஹ் ஒரு மலக்கை அனுப்பி அவனுடைய வாழ்வாதாரங்கள் ஆயுள் செயல்கள் ஆகியவை எவ்வளவு என்றும் அதன் முடிவு எவ்வாறு அமையும் என்பதையும் எழதுமாரு கட்டளையிடுகிறான். (புகாரீ : 7454)
8, கப்ரில் விசாரனை செய்தல் (திர்மிதி : 991)
மய்யத் அடக்கம் செய்யப்பட்ட உடன் நீல நிற கண்களுடைய இரண்டு கறுப்பு நிற மலக்குகள் அவரிடம் வருவார்கள். அவர்களில் ஒருவர் முன்கர் இன்னொருவர் நகீர். அவ்விருவரும், ”இந்த மனிதர் பற்றி என்ன கூறிக் கொண்டிருந்தீர்கள்” என்று கேட்பார்கள். ”அவர் அல்லாஹ்வின் அடியார் அவனது தூதர் வணக்கத்திற்குறியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை. நிச்சயாமக முஹம்மத் அல்லாஹ்வின் தூதரும் அடியாருமாவார்” என்று தான் கூறிக் கொண்டிருந்ததாக கூறுவர்.
அதற்கவ்விருவரும், ”நீர் அவ்வாறு தான் கூறிக்கொண்டிருந்தீர் என்பதை நாங்கள் அறிவோம்” என்று கூறவர். பிறகு அவரது அடக்கஸ்தலம் 70வதுக்கு 70 முழமாக விரிவுப்படுத்தப்பட்டு அதில் ஒளி ஏற்படுத்தப்படும். பிறகு அவரிடம், ”நீர் உறங்குவீராக” என்று கூறிப்படும்.
அப்போது அவர், ”நான் என் குடும்பத்தினரிடம் சென்று சொல்ல வேண்டும்” என்பார். அப்போது அவ்விருவரும், ”நெருக்கமான உறவினர் தவிர மற்றவர்கள் எழுப்ப முடியாதவாறு புது மணமகன் உறங்குவது போல் உனது இந்த இடத்திலிருந்து அல்லாஹ் உன்னை எழப்பும் வரை உறங்குவீராக” என்று கூறுவர்.
அவன் முனாஃபிக்காக இருந்தால், எனக்குத் தெரியாது மக்கள் சொல்வதைக் கேட்டு நானும் அதையே சொல்லி வந்தேன்” என்று கூறுவான். அதற்கவ்விருவரும், ”நீர் அவ்வாறு தான் சொல்லி வந்தீர் என்பதை நாம் அறிவோம்” என்று கூறுவர். பூமியை நோக்கி, ”இவரை நெருக்கு” என்று கூறிப்படும். அது அவனை நெருக்கும். அவனது விலா எலும்புகள் இடம் மாறும்.
அவனை அல்லாஹ் அங்கிருந்து எழுப்பும் வரை அதிலேயே வேதனை செய்யப் பட்டுக் கொண்டிருப்பான். என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பாள்ர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி 991)
9, சுவர்க வாசிகளை வரவேற்றல் (அல் குர்ஆன் 13 : 24)
10, ஜும்ஆவிற்கு வரக்கூடியவர்களை கணக்கெடுத்தல் (நூல் : புகாரி : 929)
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். ஜுன்ம்ஆ நாள் வந்து விட்டால் வானவர்கள். பள்ளியில் நுழைவாயிலில் நின்ருக்கொண்டு முதலில் வருபவரையும் அதைத் தொடர்ந்து வருபவர்களையும் வரிசைப்படி பதிவு செய்கிறார்கள்.
முதலில் வருபவர் ஒட்டகத்தை குர்பானி கொடுத்தவர் போலவும்
அதற்கடுத்து வருபவர் மாட்டை குர்பானி கொடுத்தவர் போலவும்
அதன் பிறகு ஆடு பிறகு கோழி பிறகு முட்டை ஆகியவற்றை குர்பானி கொடுத்தவர் போலவும் ஆவார்கள்.
இமாம் வந்துவிட்டால் வானவர்கள் தங்கள் ஏடுகளை சுருட்டிவிட்டு சொற்பொழிவு கேட்க ஆரம்பித்துவிடுவார்கள். (அறிவிப்பவர்: அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரீ 929)
வானவர்களின் எண்ணிக்கை
வானவர்களுடைய எண்ணிக்கையை நாம் வரையறுத்துக் கூற முடியாது அதன் எண்ணிக்கையை அல்லாஹ் மட்டும் தான் அறிந்திருக்கிறான்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மிஃராஜ் பயணத்தின் போது ஏழாவது வானத்திற்கு வந்தாப்கள். அங்கு நடந்ததை பற்றி கூறும் போது எனக்கு பைதுல் மஃமூர் காட்டப்பட்டது. நான் அதைப் பற்றி ஜிப்ரிலிடம் கேட்டேன், அவர் இது பைதுல் மஃமூர் ஆகும் இதில் நாள் தோறும் 70,000 மலக்குமார்கள் தொழகின்றனர். அவர்கள் அங்கிருந்து வ்விளயேறிய பின்னர் மீண்டும் அதில் யாரும் நுழைவதில்லை என்று கூறினார்கள். (நூல் : புகாரீ 3207)
جَزَاكَ اللَّهُ خَيْرًا : சத்தியப்பாதை