Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இளமைத்துடிப்புடன் வாழ!

Posted on June 26, 2010July 2, 2021 by admin

ஆயுளை நீடிக்க, முதுமையைத் தள்ளிப் போட்டு இளமைத்துடிப்புடன் வாழ வேண்டுமெனில் உடல் நலத்தை அடிக்கடி புதுப்பித்துக் கொள்ள வேண்டும். ஆயுள் நீடிப்பு என்பது உடல்நலம். அதன்மூலம் கிடைக்கும் இனிமையான வாழ்வையே குறிக்கிறது.

o சுக்கு மிளகு திப்பிலி இந்த மூன்றையும் இடித்து வைத்துக் கொண்டால் காய்ச்சல் இருமல் ஜலதோஷம் முதலியவற்றின் போது இவற்றைக் கஷாயமாகப் போட்டு அருந்தினால் உடனே குணம் கிடைக்கும். மற்ற நாட்களில் சுக்கு காபி அல்லது கொத்தமல்லி காபி தினமும் ஒரு வேளை அருந்திவர வேண்டும். இதனால் கொலஸ்டிரால் பிரச்சினையும் தினமும் கட்டுப்படுத்தப்படும். 

o தினமும் உணவில் இஞ்சி சேர்த்தால் உடல் வலியோ செரிமானக் கோளாறோ ஏற்படாது. வயதானவர்கள் பசியில்லை என்று சொல்லமாட்டார்கள். குழந்தைகளும் நன்கு சாப்பிடுவார்கள்.



o சாம்பாரிலும் இரசத்திலும் சேரும் புளியில் டீ மற்றும் ஊ வைட்டமின் டார்டாரிக் அமிலம் கால்சியம் முதலியன உள்ளன. இந்த டார்டாரிக் அமிலம் அதிக மாவுப் பொருட்களால் உடல் நலம் கெடாமல் பார்த்துக் கொள்கிறது. எனவே காய்ச்சல் ஜலதோஷம் முதலியவை தாக்கினால் மிளகு பூண்டு புளி சேர்த்த இரசம் தவறாமல் ஒரு டம்ளராவது அருந்துங்கள். சாம்பாரும் இரசமும் தினமும் இடம்பெறட்டும் உங்கள் மதிய உணவில்!

o துளசி இலைக்கு மன இறுக்கம் நரம்புக்கோளாறு ஞாபகசக்தி இன்மை ஆஸ்துமா இருமல் தொண்டை நோய்கள் முதலியவற்றுக்கு உடனுக்குடன் குணமாக்கும் சக்தி உண்டு.

துளசி இலைச் சாற்றில் தேன், இஞ்சி முதலியன கலந்து ஒரு தேக்கரண்டி அருந்தலாம். சளி இருமல் உள்ள குழந்தைகளுக்குத் தினமும் மூன்று வேளை மூன்று தேக்கரண்டி இந்தத் துளசிக் கஷாயம் கொடுத்தால் போதும். குழந்தைகளின் சளிக்காகச் செலவு செய்துவரும் தொகையில் 100 சதவிகிதமும் குறையும்.

ஆங்கில மருத்துவத்தில் தரப்படும் ஆன்டி பயாட்டிக்குகள் நல்லதல்ல. எந்த வயதுக்காரராக இருந்தாலும் சரி ஒரு தேக்கரண்டி துளசிச்சாறில் அதே அளவு சுக்குத்தூள்இ தேன் சேர்த்து தினமும் ஒரு வேளை சாப்பிடவும். நுரையீரல்கள் பலம் பெறும். சளி இருமல் தொந்தரவுகள் எட்டிப்பார்க்காது!

o பேரிக்காயிலும் காரெட்டிலும் புற்று நோயைக் குணமாக்கும் போரான் என்ற உப்பு இருக்கிறது. காரெட்டை லேசாக அவியவைத்து சாப்பிடவும். பேரிக்காய்களை சீசனில் நன்கு சாப்பிடவும். 

o மூட்டுக்களில் வலி இருந்தால் தினசரி 100 கிராம் வேர்க்கடலையை அவித்தோ அல்லது எண்ணெய் சேர்க்காமல் வறுத்தோ சாப்பிடவும். இதில் உள்ள பான்தோனிக் அமிலம் மூட்டு வலியை விரைந்து குறைக்கும். மஞ்சள் சுக்குகாபி நல்லெண்ணெய் கரிசலாங்கண்ணி கீரை முதலியவற்றையும் உணவில் நன்கு சேர்த்து வரவும்.

o உலர்ந்த நன்னாரி வேரை இடித்து வைத்துக் கொள்ளவும். தினமும் 30 கிராம் அளவு வேரை தேநீராகவோ அல்லது சர்பத்தாகவோ தயாரித்து அருந்தி வந்தால் உடலுக்குச் சத்து கிடைக்கும். இரத்தம் சுத்தமாகும். எல்லா உறுப்புகளும் சீராகச் செயல்படும். காயச்சலின் போது நன்னாரி தேநீர் அருந்தினால் உடல் வியர்த்து காய்ச்சல் பறந்து விடும். 

o சோற்றுக் கற்றாழை இலையின் சாறு மந்தமான சிந்தனை சக்தி மலட்டுத்தன்மை கல்லீரல் கோளாறுகள் மற்றும் குழந்தைகளின் குடலில் உள்ள பூச்சிகளுக்கு நல்ல மருந்தாகும். வாரம் மூன்று முறையாவது எல்லா வயதுக்காரர்களும் சோற்றுக்கற்றாழை இலையின் சாறை 50 மில்லிக்குக் குறையாமல் அருந்தி வருவது நல்லது.

o உணவில் சேரும் சோம்பு கண் கோளாறுகளைத் தடுக்கிறது. சோம்புக் கஷாயம் மாதவிலக்குக் கோளாறுகளை ஆஸ்துமாவுக்குப் போடும் ஊசி போல மட்டுப்படுத்துகிறது. 

o சுரைக்காயும் பூசணிக்காயும் சிறுநீரகக் கோளாறுகளைக் குணமாக்குகிறது. நீரிழிவு நோயாளிகளும், கொழுத்த சரீரம் உள்ளவர்களும் தினமும் இவற்றைச் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.

o வயிற்றுப் பொருமல் தொந்தி முதலியவற்றை விளாம்பழம் எளிதில் குணப்படுத்துகிறது. தொந்தியைக் குறைக்க உணவைக் குறைக்கவும். உடனடியாக இதற்கான யோகாசனத்தைக் கற்றுக் கொண்டு தினமும் அதைச் செய்துவந்தால் தொந்தி குறையும். தினமும் மூன்று டம்ளர் வெந்நீரும், மூன்று டம்ளர் பாலும் அருந்தி வந்தால் தொந்தியில் சேர்ந்துள்ள கொழுப்பு எளிதில் குறைய ஆரம்பிக்கும். 

o இதய நோயாளிகளும் சோர்வானவர்களும் இரண்டு கிராம் அமுக்கிராங்கிழங்கைப் பாலில் கலந்து சாப்பிட்டு வரவும். புதுமணத்தம்பதிகள் நான்கு கிராம் பவுடரைப் பாலில் கலந்து அருந்தி வரவும்.

o கல்லீரல் கோளாறுகளைக் கரிசலாங்கண்ணிக் கீரைச் சாறால் எளிதில் குணமாக்க இயலும். குடிப்பழக்கமும் மஞ்சள் காமாலையும் இருந்தால் கரிசலாங்கண்ணிக் கீரையுடன் கீழாநெல்லியையும் சேர்த்து அரைத்து ஒரு நாட்டு நெல்லிக்காய் அளவு எடுத்து மோரில் கலந்து குடித்து வரவும். கரிசலாங்கண்ணிக் கீரைப் பொடி தோல் நோய்களைப் படிப்படியாகக் குணப்படுத்தும். எனவே இந்தப் பொடியை மூலிகை மருந்துக் கடையில் வாங்கி வைத்துக் கொள்ளவும். காலையும் மாலையும் தலா இரண்டு தேக்கரண்டி பொடியைத் தண்ணீருடன் சேர்த்துச் சாப்பிடவும். 

o சர்க்கரை நோயாளிகளுக்கு அருகம்புல் சாறும் வாத நோயாளிகளுக்குச் சிற்றாமுட்டி வேர்த்தைலமும் கெட்டிச் சளிக்கு ஆடாதொடைச் சாறைத் தேனுடன் சேர்த்து சாப்பிடுவதும் கைகண்ட மூலிகை மருந்துகளாகும்.

o கிராம்பு ஏலக்காய் பூண்டுஅதிமதுரம் வசாகா குப்பைமேனி போன்றவையும் மூலிகைகள்தாம். 

o ஆயுர்வேத மருத்துவர்கள் மூலம் இந்த மூலிகைகளைக் குறைந்த செலவில் பயன்படுத்திக் கொண்டு ஆயுளை நீட்டித்துக் கொள்ள வாய்ப்பிருக்கிறது.

எனவே உணவு மருத்துவத்தையும் ஹோமியோபதி மருத்துவத்தையும் பயன்படுத்துங்கள். நாட்பட்ட பிரச்னை என்றால் சித்தா ஆயுர்வேதம் யுனானி ஆகிய ஏதேனும் ஒன்றில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் நோய்கள் விரைந்து கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். இந்தப் பகுதியில் உள்ள குறிப்புகளை உங்கள் பிரச்னைக்கு ஏற்பப் பயன்படுத்துங்கள். இதனால் நோய்கள் இருந்தாலும் முதுமையைத் தள்ளிப் போட்டு இளமைத்துடிப்புடன் வாழலாம்.

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

56 + = 63

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb