Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

உலக மூட நம்பிக்கை மாநாடு

Posted on June 25, 2010 by admin

தமிழகமே தமிழின் பெயரால் மூட நம்பிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கும் மாநாடு.

முழுக்க முழுக்க இந்து மத இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவை தான் மாநாடு முழுவதும் சிற்பங்களாகவும், ஊர்திகளாகவும் சுவர் ஓவியங்களாகவும் காட்சியளித்தன. மொத்தத்தில் சங்கராச்சாரியார் நடத்தும் இந்து மாநாடு போல் இந்த உலக மூட நம்பிக்கை மாநாடு நடந்து முடிந்துள்ளது.

மற்றவர்கள் நடத்தும் மாநாடு அந்த நம்பிக்கை உள்ளவர்களிடம் திரட்டப்பட்ட நிதியில் நடக்கும். இந்த மாநாடு அனைத்து மதத்தினரின் வரிப்பணத்தில் நடந்து முடிந்துள்ளது.

பகுத்தறிவுப் பகலவன், பெரியாரின் சீடன், சமத்துவப் பெரியார் என்றெல்லாம் சொல்லப்படும் கருணாநிதி அவர்கள் உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என்ற பெயரில் உலக மூட நம்பிக்கை மாநாட்டை நடத்தி தன்னை அடையாளம் காட்டி விட்டார்.

தமிழை வளர்ப்பதற்காக மாநாடு நடத்துவதாகக் கூறிக் கொண்டு இவர் தமிழ் வளர்த்த இலட்சணத்தை நாம் சுட்டிக் காட்டக் கடமைப்பட்டுள்ளோம்.

இலட்சக்கணக்கான மக்கள் கண்டு களித்த ஊர்வலத்தில் இடம் பெற்ற காட்சிகள் அனைத்துமே மூட நம்பிக்கையின் தொகுப்பாகவே இருந்தன.

முல்லைக்கு தேர் கொடுத்த பாரி வள்ளல்

முல்லைக் கொடி வெயிலில் வாடிய போது அதைக் கண்டு பாரி எனும் வேந்தன் வருந்தி அந்தக் கொடி படர்வதற்காக தனது தேரை வழங்கி விட்டான் என்ற கட்டுக்கதையை விளக்கும் வாகனம் அந்த அணிவகுப்பில் இருந்தது.

ஒரு கொடிக்கு, படர்வதற்கு வழியில்லை என்றால் ஒரு குச்சியை அந்த இடத்தில் நட்டு வைத்தால் போதும்,. இலட்சக்கணகான ரூபாய் மதிப்புள்ள தேரைத் தெருவில் விட்டுச் செல்பவன் கிறுக்கனாகத் தான் இருப்பான். மூளையுள்ள் யாரும் இப்படிச் செய்ய மாட்டார்கள். இப்படி ஒரு மன்னன் உண்மையாகவே செய்திருந்தால் அவனை மெண்டல் என்று ஒதுக்குவது தான் பகுத்தறிவு.

இதன் மூலம் கருணாநிதி என்ன சொல்ல வருகிறார். இப்படி ஒவ்வொருவரும் கிறுக்குத் தனமாக நடக்க வேண்டும் என்கிறாரா? இதனைப் பார்க்கும் பிற மொழி மக்கள் தமிழர்களுக்கு மூளை கிடையாது என்று நினைக்க மாட்டார்களா?

தேர்க்காலில் ஏற்றி மகனைக் கொன்ற மனு நீதிச் சோழன்

அடுத்ததாக மனுநீதிச் சோழன் பற்றிய கட்டுக் கதையையும் வாகன அணி வகுப்பில் சேர்த்து தனது பகுத்தறிவை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளார் வாழும் பெரியார்.

மனுநீதிச் சோழனின் மகன் கவனக் குறைவாக ஒரு கன்றுக்குட்டியை தேரில் ஏற்றிக் கொன்று விட்டானாம். உடனே அந்தக் கன்றுக்குட்டியின் தாய்ப்பசு வந்து ஆராய்ச்சி மணியை அடித்ததாம். மன்னனிடம் முறையிட்டதாம். உடனே மன்னன் மனு நீதிச் சோழன் தனது மகனைத் தேர்க்காலில் ஏற்றி கொலை செய்து பசுவுக்கு நீதி வழங்கினானாம்

இப்படி ஒரு கட்டுக்கதை இலக்கியத்தில் உள்ளது. இதை உண்மை போல் சித்தரிக்கும் காட்சிக்கும் தமிழுக்கும் என்ன சம்மந்தம்? இதில் கடுகளவாவது பகுத்தறிவு இருக்கிறதா?

தவறுதலாக ஒரு வாயில்லா ஜீவனைக் கொன்றால் அதற்கு காரணமான் மனிதனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று மூட நம்பிக்கை காவலர் கருணாநிதி சட்டம் கொண்டு வரப் போகிறாரா?

மனிதனுக்கு மட்டும் தான் பகுத்தறிவு உள்ளது. பட்சிச்சாதி நீங்க பகுத்தறிவாளரைப் பார்க்காதீங்க என்று பாட்டெழுதிய பராசக்தி கலைஞருக்கு இந்த உண்மை ஏன் தெரியாமல் போனது?

தனது கன்றுக் குட்டியைக் கொன்றவன் மன்னனின் மகன் என்பது பசுவுக்கு எப்படித் தெரியும்?

ஆராய்ச்சி மணியை அடித்தால் மன்னன் நீதி வழங்குவான் என்பது எப்படி அந்தப் பசுவுக்குத் தெரியும்?

எப்பொருள் யார் வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு என்ற சாதாரண அறிவு கூட முத்தமிழ் வித்தகருக்குத் தெரியவில்லையா?

ஒரு பசுவைத் தவறுதலாகக் கொல்வதே குற்றம் என்றால் இன்று கோடிக்கணக்கான உயிரிங்கள் உணவுக்காகக் கொல்லப்படுகின்றனவே இதற்காக யாரைக் கொல்வது? உலக மூட நம்பிக்கை மாநாட்டிலேயே மட்டன் பிரியாணி சிக்கன் பிரியாணி என்று பல்லாயிரம் ஜீவன்கள் கொல்லப்பட்டதே இதற்கு யாரைத் தேரில் ஏற்றிக் கொல்லப்போகிறார் இந்த நவீன மனுநீதிச் சோழன்?

நடை முறை சாத்தியமில்லாத காரியங்களை சில மூட மன்னர்கள் செய்திருந்தால் அவர்கள் தமிழர்கள் என்பதற்காக அதை நியாயப்படுத்துவதா?

உலக மக்கள் தமிழனைப் பற்றி மூளையற்ற ஜென்மங்கள் என்று எண்ண மாட்டார்களா?

வைரமுத்து போன்ற ஜால்ரா ஒருவன் மனுநீதிச் சோழன் புகழ் பாட இப்படி புளுகி இருக்கிறார் என்பதைக் கூட அறியாதவராக கலைஞர் ஆக வேண்டுமா?

மதுரையை எரித்த கண்ணகி

கற்பனைக் கதையான கண்ணகி மதுரையை எரித்ததற்கும் ஒரு அலங்கார ஊர்தி. கோவலன் அநியாயமாக தண்டிக்கப்பட்டது உண்மைச் சம்பவம் என்று வைத்துக் கொண்டாலும் அதற்காக மதுரை நகரையே கற்பின் சக்தியால் கண்ணகி எரித்தாள் என்பதில் கடுகளவாவது பகுத்தறிவு உள்ளதா?

அப்படியானால் தா.கிருஷ்னன் கொல்லப்பட்ட போது அவரது மனைவியால் ஏன் மதுரையை எரிக்க முடியவில்லை?

பூம்புகார் படத்தில் கலைஞர் வசனம் எழுதியதால் இது உண்மையாகி விடுமா?

அப்படியே மதுரையை எரிக்கும் அளவுக்கு கண்ணகிக்கு தெய்வீக ஆற்றல் இருந்தாலும் அவள் செய்தது பாண்டிய மன்னன் செய்ததை விட பெரிய அநீதி அல்லவா?

ஒரு மன்னன் கோவலனைத் தண்டித்தான் என்பதற்காக பல்லாயிரம் அப்பாவி மக்களைக் கொல்வது எந்த வகை நீதி?

இப்படி ஒரு சம்பவம் உண்மையாக நடந்திருந்தால் கன்னகியைப் போல் மனித குல விரோதி யாரும் இருக்க முடியாது.

மயிலுக்குப் போர்வை வழங்கிய பேகன் எனும் பேயன்

குளிரால் நடுங்கிய மயிலுக்கு பேகன் என்பவன் போர்வை கொடுத்த கட்டுக்கதையும் அலங்கார ஊர்தியில் இருந்தது.

குளிரில் மயில் நடுங்கியது என்பதே கட்டுக்கதை அல்லவா? பறவைகள் குளிரைத் தாங்கும் வகயில் இயற்கையான உடலமைப்பை பெற்றுள்ளன. அவற்றுக்கு போர்வை போர்த்துவது அவற்றைத் தண்டிப்பதாகத் தான் ஆகும். போர்வைக்குள் அவை அடங்கி இருக்காது. போர்வையுடன் பறக்கவும் முடியாது.

இப்படி எவனாவது ஒரு பேயன் (பேகன்) அன்று செய்திருந்தால் அவனது அறியாமையை எண்ணி வருந்தலாமே தவிர வள்ளல் தன்மைக்கு இதை எடுத்துக் காட்டாகக் கூற முடியுமா?

அப்படியானால் வண்டலூர் பூங்காவில் உள்ள பறவைகளுக்கும், விலங்குகளுக்கும் ஸ்வெட்டர் கொடுக்கும் திட்டம் எதுவும் அடுத்த பிறந்த நாளைக்கு கலைஞர் கொண்டு வரப் போகிறாரா? தமிழன் என்றால் முட்டாள் என்று சித்தரிப்பதற்கு மக்கள் பணத்தைப் பாழடிக்க வேண்டுமா?

பிசிராந்தையார் – கோப்பெரும் சோழன்

பிசிராந்தையார் கோப்பெரும் சோழன் இடையே உள்ள நட்பைப் பற்றி விளக்கும் அலங்கார ஊர்தியும் இருந்தது.

பாண்டிய நாட்டில் உள்ளது பிசிர் என்ற ஊர். ஆந்தையார் என்பது இவரது இயற்பெயர். ஆதலால் பிசிராந்தையார் என்று அழைக்கப் பெற்றார். இவர் சோழ மன்னன் கோப்பெருஞ்சோழன் மீது அன்பு கொண்டு அவனைப் பற்றிய பாடல்களைப் பாடியுள்ளார். சோழனைக் காண வேண்டும் என்னும் பேரவா கொண்டிருந்தார். ஆனால் பாண்டிய நாட்டிலுள்ள பிசிர் வெகு தொலைவு உள்ளதால் இவரால் சோழ நாட்டுக்குச் செல்ல இயலவில்லை என்று இவனது கதை நீள்கிறது.

பாண்டிய நாட்டைச் சேர்ந்த ஆந்தையார் பாண்டிய மன்னனுக்கு விசுவாசமாக இல்லாமல் பாண்டியனின் எதிரியாகிய சோழனின் ஆதரவாளராக இருந்துள்ளார். எந்த தேசத்தில் இருக்கிறோமோ அந்த தேசத்தின் எதிரியின் மீது அன்பு வைப்பது தேச விரோதச் செயலாகும். தமிழனின் எதிரியாகச் சித்தரிக்கப்படும் ராஜபக்சேவுக்கு ஒருவன் உற்ற நண்பனாக இருப்பது போன்றது இந்த கூடா நட்பு.

அதைத் தான் பிசிராந்தையார் செய்துள்ளார். அத்துடன் கோப்பெரும் சோழன் உண்ணாமல் தற்கொலை செய்யும் முடிவை எடுத்ததைக் கேள்விப்பட்டு தானும் அவருடன் உயிரை விட்டான் என்பது அந்தக் கட்டுக்கதையில் முடிவு.

அப்படியானால் வடக்கிருத்தல் என்ற தற்கொலை தவத்தை கருணாநிதி ஏற்றுக் கொள்கிறாரா? ஒருவன் கிறுக்குத் தனமாக கோழைத்தனாக தற்கொலை செய்தால் அவனுடன் மற்றவரும் தற்கொலை செய்வது தான் நட்புக்கு இலக்கணமா?

வடக்கிருத்தல் எனும் தற்கொலையை கருனாநிதி ஆதரித்தால் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த வழக்கறிஞர்களை உலக மூடநம்பிக்கை மாநாடு நடக்கும் அதே தினத்தில் கைது செய்து சிறையில் தள்ளியது என்ன நியாயம்?

அவர்கள் கோப்பெரும் சோழன் வழியில் தானே சென்றுள்ளனர். அவர்களை ஆதரித்த ஜெயலலிதாவும் வைகோவும் பிசிராந்தையார் வழியில் தானே சென்றுள்ளனர் என்று கருனாநிதி ஒப்புக் கொள்வாரா?

கையை வெட்டிக் கொண்ட பொற்கைப் பாண்டியன்

பொற்கைப் பாண்டியன் எனும் மூடனின் கதையும் இதில் இடம் பெற்று தமிழர்கள் மூடர்கள் என்பதை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது.

இவனைப் பற்றிய கதை இது தான்

பொற்கைப் பாண்டியன் என்பவன் காவல் காக்கும் பொருட்டு மதுரையில் வீதி வலம் வருவானாம். ஒரு நாள் நள்ளிரவில் வலம் வந்து கொண்டிருந்த பாண்டிய மன்னன் ஒரு வீட்டினுள் பேச்சுக் குரல் கேட்டது. பாண்டியன் உற்றுக் கேட்ட பொழுது கீரந்தை என்ற வேதியன் தன் மனைவியுடன் பேசிக் கொண்டிருந்தான். அவன் “வணிகத்தின் பொருட்டு வெளியூர் செல்கின்றேன்” எனவும் அவனது மனைவி அச்சமாக உள்ளதுதிருடர் பயம் உண்டு எனவும் பதிலளித்தாள்.

வேதியனும் நம் நாட்டு அரசனது செங்கோல் உன்னைக் காக்கும் அஞ்சாதே எனக் கூறிச் சென்றான். இவ்வுரையாடலைக் கேட்ட பாண்டியன் மனம் மகிழ்ந்தது. தனது நாட்டு மக்கள் தன்னிடம் உள்ள பற்றுதலை நினைந்து வியந்தான். அவனும் அத்தெருவினை நாளும் தவறாது காவல் புரிந்தான். ஒரு நாள் இரவு அவ்வேதியன் வீட்டில் பேச்சுக் கேட்டது. ஜயமுற்ற பாண்டியன் கதவைத் தட்டினான். வேதியன் தான் வந்துள்ளதை அறிந்தால் அவன் மனைவி மீது சந்தேகப்படுவானே என்று எண்ணி அவ்வீதியில் அமைந்திருந்த அனைத்து வீட்டுக் கதவுகளையும் தட்டினான் பாண்டியன்.

மறுநாள் அரசவையில் அத்தெரு மக்கள் முறையிட்டனர். அமைச்சர்,படைத்தலைவர், புலவர் அனைவரும் அமர்ந்திருந்தனர். எங்கள் வீட்டுக்கதவைத் தட்டிய திருடன் கையை வெட்ட வேண்டும் என்றும் கூறினர் அம்மக்கள். அரசனும் வாளொன்றைக் கொண்டு வரச்சொல்லி தன் கையையே வெட்டிக் கொண்டான். வியந்த அனைவரிடமும் தானே கதவைத் தட்டியதாகக் கூறியதனைக் கேட்டு மக்கள் வியந்து நின்றனர். பாண்டியனும் பொற்கை ஒன்றினை வைத்துக் கொண்டான் அன்றிலிருந்து பொற்கைப் பாண்டியன் என்ற பெயரைப் பெற்றான் அப்பாண்டிய மன்னன்.

இது உண்மை என்று வைத்துக் கொண்டால் இதில் தமிழனின் பெருமை என்ன இருக்கிறது? அரசவையில் இந்த உண்மையைக் கூறினால் பிரச்சனை தீர்ந்து விடப் போகிறது. இதற்காக எவனாவது தன் கையை வெட்டிக் கொள்வானா? சரியான மெண்டல்கள் தான் தமிழகத்தை ஆட்சி செய்துள்ளனர் என்பதைத் தவிர வெறு ஒரு செய்தியும் இதில் இல்லை.

அட்சயப்பாத்திரத்துக்கும் ஊர்தி

அள்ள அள்ளக் குறயாத அட்சய பாத்திரம் பற்றி புராணங்களில் உள்ளது. கோவலனின் காதலி மாதவியின் மகள் மணிமேகலை. இவளிடம் அட்சய பாத்திரம் இருந்ததாம். அதில் இருந்து அவள் வருவோருக்கெல்லாம் உணவு அளித்து வந்தாளாம். இந்த அட்சய பாத்திர கட்டுக்கதைக்கும் அலங்கார ஊர்தி.

எடுக்க எடுக்க உணவு வந்து கொண்டே இருக்கும் பாத்திரம் ஒன்று இருக்க முடியுமா? இது பகுத்தறிவுக்கோ அறிவியலுக்கோ உகந்ததா?

அப்படியே ஒரு பாத்திரம் இருந்து அதில் இருந்து வருவோர்க்கெல்லாம் உணவு கொட்டுப்பதில் என்ன பெருமை உள்ளது? வடிகட்டிய கஞ்சனிடம் இப்படி ஒரு பாத்திரம் இருந்தால் அவன் கூட கொடுக்கத்தான் செய்வான். ஏனெனில் எவ்வளவு எடுத்தாலும் குறையாது எனும் போது இழப்பு பற்றி கவலை அவனுக்கு இருக்காது.

இல்லாத கட்டுக்கதைகளை நம்புபவன் தான் தமிழன் என்று உலகுக்கு காட்டுவதற்கு கலைஞர் மிகவும் மெனக்கெட்டுள்ளார்.

ரமாயணமும் இந்து மதப்பழக்கங்களும்

ராமர் பாலம் பிரச்சனை வந்த போது ராமாயணமே கட்டுக்கதை என்றார் வாழும் பெரியார். ஆனால் அவர் முன்னிலையில் குடியரசுத் தலைவர் ராமாயணத்தைப் புகழ்ந்து பேசி முகத்தில் கரியைப் பூசிச் சென்று விட்டார்.

அது போல் இந்து மதப் பழக்கவழக்கங்கள் வழிபாட்டு முறைகள் அனைத்துக்கும் சமத்துவப் பெரியாரால் தமிழ்ச்சாயம் பூசப்பட்டன.

மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவில் தமிழ் வளர்ச்சியின் அடையாளமாகக் காட்டப்பட்டது. கரக ஆட்டம், காவடி ஆட்டம், முளைப்பாரி, சிவன் விஷ்னு மற்றும் பலவேறு இந்து தெய்வஙக்ள் வடிவில் வேடமணிந்து ஆட்டம் போட்டனர். ஒரு சர்ச்சோ ஒரு பள்ளிவாசலோ தமிழனின் அடையாளமாகக் காட்டப்படவில்லை.

முழுக்க முழுக்க இந்து மத இதிகாசங்கள் புராணங்கள் ஆகியவை தான் மாநாடு முழுவதும் சிற்பங்களாகவும், ஊர்திகளாகவும் சுவர் ஓவியங்களாகவும் காட்சியளித்தன. மொத்தத்தில் சங்கராச்சாரியார் நடத்தும் இந்து மாநாடு போல் இந்த உலக மூட நம்பிக்கை மாநாடு நடந்து முடிந்துள்ளது.

ஒரே வித்தியாசம் மற்றவர்கள் நடத்தும் மாநாடு அந்த நம்பிக்கை உள்ளவர்களிடம் திரட்டப்பட்ட நிதியில் நடக்கும். இந்த மாநாடு அனைத்து மதத்தினரின் வரிப்பணத்தில் நடந்து முடிந்துள்ளது.

இதற்கு ஆதரவாக காதர் முஹையித்தீன்கள் அறிக்கை விடுகிறார்கள். பகுத்தறிவாளர்கள் எலும்புத்துண்டுகளூக்காக சாமரம் வீசுகிறார்கள். பத்திரிகையாளர்கள் அரசு விளம்பரத்துக்காகவும் அற்பப் பரிசுகளூக்காகவும் விலை போய் விட்டனர். ஒட்டு தமிழர்களை மூடர்களாகச் சித்தரிக்க இவர்கள் முயன்றாலும் உண்மை முஸ்லிம்கள் மட்டுமே இதில் தெளிவாக உள்ளனர் என்பதில் பெருமிதம் கொள்ளலாம்.

ஒட்டு மொத்த தமிழக்மே தமிழின் பெயரால் மூட நம்பிக்கைக்கு அங்கீகாரம் அளிக்கும் போது முஸ்லிம்கள் இந்தச் செய்தியை உரத்துச் சொல்லி சிந்திக்கத் தூண்டும் கடமை உள்ளது எனபதை மறந்து விடக் கூடாது.

source: www.onlinepj.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

70 − 63 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb