திடுக்கம் நிறைந்த அந்நாளினிலே…
லறீனா அப்துல் ஹக்
சொல்லில் இனிமை நெஞ்சினில் நஞ்சு
பொல்லாச் சுயநலம் பொறாமை குரோதம்
எல்லாம் சேர்ந்திட சமூகத்தில் பிளவெனும்
பெருநெருப்பூதிட கெடுமதி கொண்டோர்
உலகோர் மத்தியில் ‘தீன்தாரி’ வேடம்
புனைந்தே வாழுவர் பிறரையும் ஏய்ப்பர்
வாழ்வு நிரந்தரம் என்றெ(ண்)ணும் மடமையால்-பிறர்
வாழ்வுடன் விளையாடி(யும்) இன்புறுவாரே, எனின்…
மரணம் ஒருநாள் எமை வரவேற்கும் – அதில்
மீண்டிங்கு தரித்திடல் சாத்தியமில்லை
மறுமையில் நம்செயல் பதிவுகள் யாவும்
இருகரம் தரப்படும் தருணத்தை நினைப்போம்
நீதி வழுவாதவன் நித்தியன் அல்லாஹ்
அநீதியாளரை என்றுமே நேசிப்பதில்லை
கொழுந்து விட்டெரியும் நரகினினுள்ளே
வீழ்ந்திழிவடைதல் இனிதாமோ, சொல்வீர்?
செய்திட்ட கொடுஞ்செயல் எண்ணிவருந்திடுவோம்
இனி அவை நிகழாமல் திடமனம் கொள்வோம்!
தூய்மையாய் வாழ்ந்திடும் உயிர்களுக்கெல்லாம் – அவன்
தந்தருள்வான் சுவன வாழ்விது திண்ணம்!
ஆக்கம்: லறீனா அப்துல் ஹக்
ahlareena@yahoo.com