Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பொறுப்பற்ற தமிழக அரசால் 13 ஆயிரம் கோடிகள் நஷ்டம்!

Posted on June 16, 2010 by admin

விழாக்கள்! விருதுகள்! பொழுதுபோக்குகள்! பொறுப்பற்ற தமிழக அரசால் 13 ஆயிரம் கோடிகள் நஷ்டம்

வாரத்திற்கு 2 நாட்கள் பாராட்டு விழா, இரண்டு நாட்கள் விருது வழங்கும் விழா, 2 நாட்கள் சினிமா, கலை தொடர்பான நிகழ்ச்சிகள் என ‘ஜாலியாக’ இருப்பவர்கள் மக்கள் நலனைப் பற்றி எப்படி கவலைப்படுவார்கள்?

சமீபத்தில் வெளியிடப்பட்ட மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களின் அலட்சியப் போக்கினால் மக்கள் பணம் 13,207.6 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழ்நாடு அரசின் 2007&08 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் மற்றும் சிவில் அறிக்கைகள் குறித்து மத்திய தணிக்கைத் துறையின் அறிக்கை பல்வேறு அவலங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

அறிக்கையின் முக்கிய அம்சங்களை அதன் தலைவர் நாகல்சாமி, துறை அதிகாரி ரஜினி ஆகியோர் புள்ளி விபரங்களுடன் வெளியிட்டுள்ளனர். அதன் முக்கிய அம்சங்கள் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன.

2007-08 ஆம் ஆண்டில், 4,545 கோடியாக இருந்த வருவாய் இருப்பு 2008&09&ல் 1452 கோடியாக குறைந்துவிட்டது. அதா வது தமிழக அரசின் ஊதாரித் தனங்களால் 3093 கோடி ரூபாய் குறைந்திருக்கிறது.

o முதலீடுக்காக பெற்ற வட்டி விகிதம் 0.50 சதவீதம் வாங்கிய இடத்துக்கு அரசு சார்பில் தண்ட வட்டி செலுத்திய தொகை மட்டும் கூடுதலாக 8.4 சதவீதமாகும். 

o பலதுறைகளில் & பல்வேறு திட்டங்களில் ஒதுக்கப்பட்ட நிதியில் 7,31,145 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை. அதாவது கவர்ச்சி அறிவிப்புகளை மட்டுமே செய்த தமிழக அரசு, அதை செயல்படுத்துவதில் அக்கறை காட்டவில்லை.

34 மானிய திட்டங்களை அமல் படுத்துவதாகக் கூறி எடுத்துக் கொள்ளப்பட்ட நிதியில் கூட, வேலை நடக்கவில்லை. அதற்குரிய தொகையான 1,75,856 கோடி ரூபாய் அரசு கருவூலத்திற்கு திரும்ப ஒப்படைக்கப்படவில்லை. அந்தப் பணம் என்ன ஆனது? யார், யாருக்கு பிரிக்கப்பட்டது? அல்லது மீண்டும் ஒப்படைக்கப்படுமா? என் பது ஆண்டவனுக்கே வெளிச்சம்.  

o அரசு நடத்தும் சர்க்கரை ஆலைகளின் மூலம் மொத்தம் 1475 கோடி ரூபாய் அரசுக்கு இழப்பாம்! இயந்திர பழுது, இயந்திரங்களை கையாள்வதில் அலட்சியம், கரும்பு களை வேறு ஆலைகளுக்கு மாற்றுதல், நவீன முறைகளைப் பின்பற்றாதது ஆகியவைதான் இதற்கு காரணம். 1475 கோடி ரூபாய் மிச்சப்படுத்தப்பட்டால், கரும்பு விவசாயிகளுக்கு கூடுதல் விலை, உயர்வு, சர்க்கரை உற்பத்தி, நல்ல விற்பனை ஆகியவை சீராக்கப்பட்டிருக்கும். சர்க்கரை இறக்குமதிக்கும் அவசியம் ஏற்பட்டிருக்காது.

o நில ஆவணங்களை கம்ப்யூட்டர் மயமாக்கும் திட்டத்தில் 9.94 கோடி ரூபாய் பயன்படுத்தப்படவில்லை.

இதில் சாஃப்ட்வேர் வசதிகள் செய்யப்படாததால், 8.21 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்ட கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படவேயில்லையாம்.  

2004-07-க்குள் மீனவர்களுக்கு இலவச வீட்டு வசதி திட்டத்தின் கீழ் கட்டித் தருவதாக வாக்களிக்கப்பட்ட 10 ஆயிரம் வீடுகளில் ஆயிரம் வீடுகள் கூட இதுவரை கட்டிக் கொடுக்கப்படவில்லை.

o சிறப்பு பொருளாதார மண்டலம் அமைப்பது தொடர்பான தவறான நில மதிப்பீடு மூலம் 158.63 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டிருக்கிறது. இதில் ஆளுங்கட்சியினரின் ‘ரியல் எஸ் டேட்’ தொழிலுக்கு ‘உரம்‘ சேர்க்கும் நடவடிக்கைகளே முக்கியக்காரணம் என கூறப்படுகிறது.  

o 11 மாவட்டங்களில் குத்தகைக்கு விடப்பட்ட அரசு நிலத்தில் 1585 ஏக்கர் அரசு நிலம் பயிரிடப்படாத மலைப்பாங்கான பகுதியில் வழங் கப்பட்டதால், அது பயனில் லாமல் போயிருக்கிறது. 

o 7 மாவட்டங்களில் சிறப்பு மருத்துவர்களின் சேவையைப் பெறவும், சுகாதார நிலையங்கள், சுகாதார துணை நிலையங்கள் ஆகியவற்றை தரம் உயர்த்தவும், இழந்த சேமிப்பு வசதி, விபத்து சிகிச்சைக்கான அறைகள், அறுவை சிகிச்சை அறைகள் போன்ற வசதிகளை வட்டார ஆரம்ப சுகாதார நிலையங்களில் அமைத்திட வழங்கப்பட்ட 62 கோடி ரூபாய் செலவிடப்படவில்லை. 2005&2009&ஆம் ஆண்டுகளில் பார்வை குறைபாடுகளை சீராக்க 1 லட்சத்து, 89 ஆயிரத்து, 695 குழந்தைகளுக்கு மூக்கு கண்ணாடிகள் வழங்கப்படவில்லை.

சுருக்கமாக சொல்வதெனில் மக்களின் சுகாதார நலன் சுத்தமாக அலட்சியப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த உண்மைகளை தமிழக அரசு மறுக்கவில்லை. மாறாக, சப்பைக்கட்டுக் கட்டுகிறது. எதற் கெடுத்தாலும் தமிழ கத்தை நம்பர் 1 மாநிலம் என தங்களுக்குத் தாங்களே தம்பட்டம் அடித்துக் கொள்ளும் ஒரு முதல் அமைச்சர் இதற்கு என்ன விளக்கம் அளிக்கப்போகிறார்?

வாரத்திற்கு 2 நாட்கள் பாராட்டு விழா, இரண்டு நாட்கள் விருது வழங்கும் விழா, 2 நாட்கள் சினிமா, கலை தொடர்பான நிகழ்ச்சிகள் என ‘ஜாலியாக’ இருப்பவர்கள் மக்கள் நலனைப் பற்றி எப்படி கவலைப்படுவார்கள்?

இதனைக் கண்காணிக்க வேண்டிய அமைச்சர்கள் முதல்வரின் நிகழ்ச்சிகளில் முன் வரிசையில் அமர்வதற்கு காட்டும் ஆர்வத்தையும், ‘கமிஷன்’ குறித்து பேசுவதற்கு ஒதுக்கும் நேரத்தையும் இதில் ஏனோ காட்டுவதில்லை என்றும் இதனை செயல்படுத்த வேண்டிய அதிகாரிகள் மேலிடத்தை குளிர்விக்கும் வித்தைகளைப் புரிந்து கொண்டதால் அவர்களும் அலட்சியமாக இருக்கிறார்கள் என்றும் அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலவசங்களில் மயங்கும் தமிழக மக்கள்… கவர்ச்சி அரசியலில் மதிமயங்கி, மக்களின் பணம் வீணடிக்கப்படும் அரசு நிர்வா கத்தின் அலட்சியத்திற்கு எதிராக பொங்கி எழ வேண்டும்.

நாட்டுக்குத் தேவை உறுதியான நிர்வாகத்திறன் கொண்டவர்கள் தானே தவிர கவர்ச்சி அரசியலை செய்யக்கூடியவர்கள் அல்ல.

நன்றி: கதிரவன்,  நீதிக்குரல்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 3 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb