Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

பாலியல் தொழில் கண்டிப்பாக ஒடுக்கப்பட வேண்டும்

Posted on June 16, 2010 by admin

பாலியல் தொழில் கண்டிப்பாக ஒடுக்கப்பட வேண்டும்

பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் பெற்றுத்தர முயற்சிப்பது,​​ இந்தியாவின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை உலக வரலாற்றின் பக்கங்களிலிருந்து நாமே அகற்ற முயல்வதற்குச் சமமாகும்.​ ​

இந்தியாவில் 28 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் இருப்பதாகவும்,​​ இதில் 35 சதவிகிதத்தினர் குழந்தைத் தொழிலாளர்கள் என்பதும் அண்மையில் மக்களவையில் தெரிவிக்கப்பட்ட தகவல்.​

மகிழ்ச்சியற்ற திருமண வாழ்வு,​​ பெற்றோர்களின் பரிவின்மை,​​ போதிய பாலியல் கல்வி அறிவின்மை,​​ ​ விழிப்புணர்வின்மை,​​ ஊடகங்கள்,​​ காதல்,​​ சமுதாயத் தொடர்பு போன்றவற்றால் பாலியல் தொழிலில் நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.​

பாலியல் தொழில் சேவை என்றும் இச்சேவையை நடைமுறைப்படுத்தி அங்கீகரிக்க சட்டம் கொண்டு​வர வேண்டும் என்றும் ஒரு சிலர் வலியுறுத்தி வருகின்றனர்.​ குடும்பப் ​ பொறுப்புகளாலும்,​​ சமுதாயச்சூழல்களாலும் திருமணம் செய்யாமல் இருப்பவர்களுக்கும்,​​ திருமணம் மற்றும் குடும்ப வாழ்வைச் சுமை என்று கருதுபவர்களுக்கும் பாலியல் தொழில் சேவையாகத் தெரியலாம்.​ ​ ​ ​ ​ ​

பாலியல் தொழிலுக்குச் சட்ட அங்கீகாரம் கிடைத்து​விட்டால்,​​ குடும்பச்சூழல் காரணமாகவும்,​​ வயிற்றுப்பசியைப் போக்கி​கொள்ளவும் வாழ்க்கையோடு ஒவ்வொரு நாளும் போராடிக்​கொண்டிருக்கும் பெண்கள் பலர் இத்தொழிலுக்கு உள்ளே இழுத்துவரப்படும் மிகமோசமான நிலை ஏற்படும்.​

அரசு அங்கீகாரத்துடன் பாலியல் தொழில் நடைபெறும் ​ தாய்லாந்து,​​ இந்தோனேஷியா போன்ற நாடுகளுக்​குச்சுற்றுலா என்ற பெயரில் வெளிநாட்டினர் சென்று வருவது போன்ற நிலை இந்தியாவுக்கும் ஏற்பட்டால்,​​ உலக வரலாற்றில் நம் நாட்டின் பண்பாடு,​​ கலாசாரப் பக்கங்கள் காணாமல் போய்வி​டும்.​ ​ ​

திருமண வாழ்வின் மீதிருக்கும் பயத்தைப் போக்க முறையான பாலியல் கல்வி,​​ குடும்ப வாழ்வைச் சுமையாகக் கருதுபவர்களுக்கு கவுன்சலிங் போன்றவை பாலியல் தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த உதவும்.​​

இது​போன்று பாலியல் தொழிலுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்படும் பட்சத்தில் இத்தொழிலில் குழந்தை தொழிலாளர்களின் வருகையை முற்றிலுமாகத் தடுக்க முடியும்.​ ​

சேவையோ,​​ தொழிலோ பாலியல் தொழில் கண்டிப்பாக ஒடுக்கப்பட வேண்டும்.​ பலரது வாழ்க்கையைச் சீரழித்த லாட்டரிக்கும்,​​ பாலியல் தொழிலுக்கும் பெரிய அளவில் வித்தியாசமில்லை.​

source: தினமணியில் வெளியான ”காணாமல் போகும் கலாசாரப் பக்கங்கள்” கட்டுரையிலிருந்து

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 2 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb