IAS – IPS Examination
இந்தியாவில் மிக உயர்ந்த அரசு பணிகளில் ஒன்று ஐ.ஏ.எஸ். என்றழைக்கப் படும் இந்திய ஆட்சிப்பணி (Indian Administrative Service) ஆகும். இந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களே மாவட்ட ஆட்சியர், மாநில முதன்மை செயலர், தலைமைத் தேர்தல் ஆணையர் என அனைத்துத் துறை முக்கிய பதவிகளை வகிக்கின்றனர்.
அரசாங்கத்தின் திட்டங்களை உருவாக்கி அமல்படுத்துபவர்கள் இப்பணியினரே. இதனால்தான் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான முக்கியத்துவம் என்றும் குறையாமல் இருக்கிறது. இத்தேர்வு சம்பந்தமான விவரங்களைப் பார்ப்போம்.
சிவில் சர்வீசஸ் பணித் துறைகள்
சிவில் சர்வீசஸ் தேர்வானது 26-க்கும் மேற்பட்ட பணிகளுக்கான தேர்வாகும். இத்தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு இருபத்தியாறு பணித்துறைகளில் ஏதேனும் ஒன்றில் வாய்ப்புக் கிடைக்கிறது. அவை:
1. இந்திய ஆட்சிப் பணி (Indian Administrative Service)
2. இந்திய அயல்நாட்டுப்பணி (Indian Foreign Service)
3. இந்திய காவல் பணி (Indian Police Service)
4. இந்திய அஞ்சலகத் தந்திக் கணக்குகள் மற்றும் நிதி பணி, பிரிவு “அ‘ (Indian P & T Accounts & Finance Service, Group ‘A’)
5. இந்திய கணக்குத் தணிக்கை மற்றும் கணக்கியல் பணி பிரிவு “அ‘ (Indian Audit & Accounts Service, Group ‘A’)
6. இந்திய சுங்கம் மற்றும் கலால் வரி பணி, பிரிவு “அ‘ (Indian Customs & Central Excise Service, Group ‘A’)
7. இந்திய பாதுகாப்புத்துறை கணக்குப் பணிபிரிவு “அ‘ (Indian Defence Accounts Service, Group ‘A’)
8. இந்திய வருவாய் பணி, பிரிவு “அ‘ (Indian Revenue Service, Group ‘A’)
9. இந்தியத் துப்பாக்கித் தொழிற்சாலைகள் பணிபிரிவு “அ‘ (உதவி மேலாளர், தொழில் நுட்பம் சாராதது) (Indian Ordinance Factories Service, Group ‘A’ Assistant Works Manager, Non-Technical)
10. இந்திய அஞ்சல் பணி, பிரிவு “அ‘ (Indian Postal Service, Group ‘A’)
11. இந்தியக் குடிமைக் கணக்குப்பணி, பிரிவு “அ‘ (Indian Civil Accounts Service, Group ‘A’)
12. இந்திய இரயில்வே போக்குவரத்து, பணிபிரிவு “அ‘ (Indian Railway Traffic Service, Group ‘A’)
13. இந்திய இரயில்வே கணக்குப்பணி, பிரிவு “அ‘ (Indian Railway Accounts Service, Group ‘A’)
14. இந்திய இரயில்வே பணியாளர்கள் பணி, பிரிவு “அ‘ (Indian Railway Personnel Service, Group ‘A’)15. இரயில்வே பாதுகாப்புப் படையில், உதவிப் பாதுகாவல் அலுவலர் பிரிவு “அ‘ பதவிகள் (Posts of Assistant Security Officer, Group ‘A’ in Railway Protection Force)
16. இந்தியப் பாதுகாப்பு நிலைகள் பணி, பிரிவு “அ‘ (Indian Defence Estates Service, Group ‘A’)
17. இந்திய தகவல் தொடர்புப் பணி, (இளநிலை) பிரிவு “அ‘ (Indian Information Service, (Junior Grade) Group ‘A’)
18. மையத்தொழிலகப் பாதுகாப்புப் படையில் உதவி ஆணையாளர், பிரிவு “அ‘ பதவிகள் (Posts of Assistant Commandant Group ‘A’ in Central Industrial Security Force)
19. மைய அரசு செயலகப்பணி, பிரிவு “B (பிரிவு அலுவலர் நிலை)
20. புகைவண்டி வாரியச் செயலகப் பணி, பிரிவு “B’ (பிரிவு அலுவலர் நிலை)
21. ஆயுதப்படை தலைமையகக் குடிமைப் பணி பிரிவு “B’ (குடிமக்கள் பணியாள் உதவி அலுவலர் நிலை)
22. சுங்கத்துறை மதிப்பீட்டாளர் பணி, பிரிவு “B’
23. தில்லி, அந்தமான்–நிகோபார் தீவுகள், லட்சத்தீவு, டையூ– டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி குடிமை பணி, பிரிவு “B’‘
24. தில்லி, அந்தமான்– நிகோபார் தீவுகள், இலட்சத்தீவு, டையூ– டாமன், டாட்ரா மற்றும் நாகர்ஹவளி காவல் பணி பிரிவு “B’
25. புதுச்சேரி குடிமைப்பணி, பிரிவு “B
26. புதுச்சேரி காவல் பணி, பிரிவு “B’
இப்பணிகளுக்கான காலியிடங்கள் எவ்வளவு என்பதை இத்தேர்வு அறிவிப்பின் போது, எம்பிளாய்மெண்ட் நியூஸ் இதழில் கொடுக்கப்பட்டிருக்கும். அக்காலியிடங்களுக் குத் தக்கவாறு இத்தேர்வு நடத்தப்படும்
தேர்வுத் திட்டம்
சிவில் சர்வீசஸ் தேர்வானது மூன்று கட்டங்களாக நடத்தப்படுகிறது.
1. முதனிலைத் தேர்வு (Preliminary Exam)
2. பிரதானத்தேர்வு (Main Exam)
3. நேர்முகத்தேர்வு (Interview – Personality Test)
ஆகியவை ஆகும். முதனிலைத்தேர்வு எழுதி தகுதிபெற்றவர்கள் பிரதானத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகின்றனர். அதாவது முதனி லைத் தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவுடன் யு.பி.எஸ்.சி. பிரதானத் தேர்வு எழுத விண்ணப் பத்தை அனுப்பிவைக்கும். அதில் பிரதானத் தேர்வு விபரங்கள் அனைத்தும் அடங்கியிருக் கும். பிரதானத் தேர்வை எழுதி முடித்து அதில் வெற்றிப் பெற்றால் உங்களுடைய பிரதானத் தேர்வு மதிப்பெண்கள் கொண்ட தர வரிசையின் படி நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப் படுவீர்கள். நேர்முகத்தேர்வு முடிந்தவுடன் இறுதி முடிவு வெளியிடப்படும்.
பிரதானத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் அகில இந்திய அளவில் ரேங்க் பட்டியல் வெளியிடப் படும். அதில் நீங்கள் விருப்பம் தெரிவித்த பணியை உங்களின் தரவரிசை மற்றும் இட ஒதுக்கீடு அடிப்படையில் பணி வழங்கப்படும்.
தேர்வு எழுத தகுதிகள்
சிவில் சர்வீசஸ் தேர்வுகளை எழுத விரும்புபவர் ஏதேனும் ஒரு பட்டம் பெற்றிருக்க வேண்டும். கலை, அறிவியல், வணிகம், மருத்துவம், பொறியியல் என ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு போதுமானது. அதே சமயம் கல்லூரி இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பித்து எழுதலாம். தொழில்நுட்பக் கல்வி படித்தவர்கள் தங்களது படிப்பு பட்டப்படிப்புக்கு இணையானது எனில் அவர்களும் விண்ணப்பிக்கலாம். இத்தேர்வில் இளங்கலை பட்டங்கள் பெற்றவர்கள், முதுகலைப்பட்டம், ஆராய்ச்சிப்படிப்பு என அனைவரும் விண்ணப்பிப்பர்.
வயது வரம்பு:
சிவில் சர்வீசஸ் தேர்வுகளில் பங்கு பெறுவதற்கு குறைந்தபட்சம் 21 வயது நிரம்பப் பெற்ற இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும். அதிகபட்ச வயது வரம்பாக 30 வயதுவரை இத்தேர்வினை எழுதலாம். குறைந்தப் பட்ச வயது ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் தேதியிலிருந்து கணக்கிடப்படுகிறது. இந்த 21-30 வயது வரம்பு பொதுப்பிரிவினருக்கு மட்டுமே பொருந்தும்.
அட்டவணை வகுப்பினர் (S.C.), அட்ட வணை பழங்குடியினர் (S.T.) 35 வயதுவரை இத்தேர்வை எழுதலாம்.
இதர பிற்படுத்தப்பட்டோர் (OBC) அதாவது தமிழகத்திலுள்ள பிற்படுத்தப்பட் டோர் (BC) மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் (MBC) பிரிவுகளைச் சேர்ந்த அனைவரும் மத்திய அரசு அளவில் இதர பிற்படுத்தப்பட்டோர் OBC ஆவர். இப்பிரிவினர் 33 வயது வரை இத்தேர்வை எழுதலாம். அதே போல உடல் ஊனமுற்ற பாதுகாப்புப் படைவீரர்களுக்கும், ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரிகளுக்கும் வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. அதன்படி எதிரி நாட்டோடு போர்புரிந்து உடலுறுப்பு பாதிக்கப்பட்டு செயல்பட முடியாத ராணுவத் தினருக்கு மூன்று ஆண்டுகளும் (33 வயது வரை), குறைந்தது ஐந்து ஆண்டுகள் சேவை பணி முடித்த முன்னாள் இராணுவத்தினருக்கு ஐந்து ஆண்டுகளும் (35 வயது வரை) தளர்த்தப்பட்டுள்ளது.
எத்தனை முறை தேர்வு எழுதலாம்?
நாம் கல்லூரியில் படிப்புக்குரிய பாடங் களில் தேர்ச்சி பெறவில்லையெனில், மீண்டும் மீண்டும் தேர்வு எழுதலாம், எழுதிக் கொண்டே இருக்கலாம். ஆனால் சிவில் சர்வீசஸ் தேர்வு அப்படியல்ல. இத்தேர்வு எழுதுவதற்கு சில கட்டுப்பாடுகள் உண்டு. அதாவது ஒருசில தடவை (Number of Attempts) மட்டுமே இத் தேர்வை எழுத முடியும். ஆனாலும் இட ஒதுக்கீட்டு அடிப்படையில் சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி பொதுப்பிரிவினர் நான்கு முறை மட்டுமே இத்தேர்வை எழுத அனுமதிக்கப் படுவர். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (OBC) தங்களின் வயது வரம்பிற்கு உட்பட்டு ஏழு முறை தேர்வை எழுதலாம்.
பட்டியல் வகுப்பினர் (SC/ST) தங்கள் வயது வரம்பிற்கு உட்பட்டு எத்தனை முறை வேண்டு மானாலும் தேர்வை எழுதலாம். தேர்வு நடை பெறும்போது ஒருமுறை தேர்வை எழுதி னாலும் எண்ணிக்கையில் எடுத்துக் கொள்ளப் படும். அதனால் விதிக்கப்பட்டுள்ள கால வரம்புக்குள் நம் அறிவை கொண்டு தேர்வில் வெற்றிப் பெற்றிட வேண்டும்.
விண்ணப்பித்தல்
ஆண்டுதோறும் சிவில் சர்வீசஸ் தேர்வு களுக்கான அறிவிப்பானது Employment News வார இதழில் டிசம்பர் மாத கடைசி வாரத்தில் தேர்வு குறித்து Special Supplementary தனியாக வெளிவரும். அதில் தேர்வு குறித்த முழு விபரம் தரப்பட்டிருக்கும். அதையடுத்து முக்கியமாக, விண்ணப்பம் வாங்க வேண்டும். UPSC விண்ணப்பம் அனைத்து மாவட்டத் தலைமை அஞ்சலகங்களிலும் கிடைக்கும்.
முதனிலைத் தேர்வு (Preliminary Examination)
முதனிலைத் தேர்வில், ஒரு பொது அறிவுத்தாள் மற்றும் ஒரு விருப்பப் பாடத்திற் கான தேர்வு நடைபெறும். இந்தியாவில் பல மையங்களில் இத்தேர்வு நடைபெறும். தமிழகத்தில் ஒரே நாளில் சென்னை, மதுரை ஆகிய மையங்களில் மட்டும் நடைபெறும். விருப்பப்பாடம் காலை நேரத்திலும், மாலை நேரத்தில் பொதுஅறிவுத் தேர்வும் நடத்தப் படுகிறது. விருப்பப்பாடத்தில் 120 கேள்விகள் கேட்கப்படுகிறது. இதற்கு 300 மதிப்பெண்கள்.
பொதுஅறிவுத்தாளில் 150 கேள்விகள் கேட்கப்படும். இதற்கான மதிப்பெண்கள் 150. ஆக இரண்டு தாள்களுக்கும் சேர்த்து 450 மதிப் பெண்களுக்கு முதனிலைத்தேர்வு நடத்தப் படுகிறது. வங்கித்தேர்வை போன்று நெகடிவ் மதிப்பெண்கள் இத்தேர்விலும் உண்டு. இத்தேர்வில் வெற்றிபெற வாய்ப்பு என்கிற போது சுமாராக சொன்னால், விருப்பப் பாடத்தில் 300 மதிப்பெண்களுக்கு குறைந்தது 250 மதிப்பெண்கள்–அதாவது 120 கேள்வி களுக்கு 100 கேள்விகள் சரியாக பதில் அளித்தால் போதுமானது.
பொது அறிவுத் தேர்வில் குறைந்தது 100 மதிப்பெண்கள் பெற்றால் போதும் முதனிலைத் தேர்வில் நீங்கள் வெற்றிபெற்று விடலாம். இந்த தேர்வு முதன்மைத் தேர்வு (Main Exam) எழுதுவதற்கான தகுதித் தேர்வு மட்டும்தான் என்பதை மறந்து விடாதீர்கள்.
தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்