முதனிலைத் தேர்வு விருப்பப்பாடம்
சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் ஒரு விருப்பப்பாடத்தை தேர்வு செய்ய வேண்டும். இப்போது என்னென்ன விருப்பப் பாடங்கள் உள்ளன என்பதைப் பார்ப்போம்.
1. வேளாண்மை (Agriculture)
2. கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary Science)
3. தாவரவியல் (Botany)
4. வேதியியல் (Chemistry)
5. கட்டுமானப் பொறியியல் ((Civil Engineering)
6. வணிகவியல் (Commerce)
7. பொருளாதாரம் (Economics)
8. மின் பொறியியல்(Electrical Engineering)
9. புவியியல் (Geography)
10. புவியமைப்பியல் (Geology)
11. இந்திய வரலாறு (Indian History)
12. சட்டம் (Law)
13. கணிதம் (Mathematics))
14. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)
15. மருத்துவ அறிவியல் (Medical Science)
16. தத்துவம் (Philosophy)
17. இயற்பியல் (Physics)
18. அரசியல் அறிவியல்(Political Science)
19. உளவியல் (Psychology)
20. பொது நிர்வாகம் (Public administration)
21. சமூகவியல் (Sociology)
22. புள்ளியியல் (Statistics)
23. விலங்கியல் (Zoology) போன்ற 23 விருப்பப்பாடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதில் நீங்கள் விரும்பும் விருப்பப் பாடத்தை தேர்ந்தெடுத்து விண்ணப்பத்தில் குறித்திட வேண்டும்.
பிரதானத்தேர்வு (Main Exam)
சிவில் சர்வீசஸ் முதனிலைத் தேர்வில் வெற்றி பெற்றதாக தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டவரே பிரதானத்தேர்வை எழுதத் தகுதிப் பெற்றவர் ஆவார். பிரதானத் தேர்வு என்பது எழுத்துத்தேர்வு மற்றும் நேர் முகத்தேர்வு ஆகிய இரண்டையும் உள்ளடக் கியது. இதுவே இந்திய அரசின் பல்வேறு உயர்நிலை பணிகளுக்குத் தகுதியானவர்களை தேர்ந்தெடுக்கப் பயன்படுகிறது. முதனிலைத் தேர்வு முடிவுகள் வெளியானதும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பிரதானத் தேர்வுக்கான விண்ணப்பம் அனுப்பப்படும். அதனைப் பெற்று மீண்டும் இத்தேர்வுக்காக விண்ணப் பிக்க வேண்டும். எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளனவோ அதைவிட 12 அல்லது 13 மடங்கு விண்ணப்பதாரர்கள் பிரதானத் தேர்வுக்கு அனுப்ப தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
இந்த பிரதானத்தேர்வுதான் உங்களின் வெற்றி மற்றும் பணியிடங்களை தீர்மானிக் கிறது. இத்தேர்வானது விண்ணப்பதாரரின் புத்திக்கூர்மையையும் புரிந்துகொள்ளும் தன்மையையும் மதிப்பீடு செய்வதாகும். இத்தேர்வு முழுக்க முழுக்க விரிவாக விடை யெழுதும் கட்டுரை வடிவிலான எழுத்துத் தேர்வு. இதில் உங்களின் பதில் அளிக்கும் திறனே முக்கியமானதாகும்.
பிரதானத்தேர்வு ஒன்பது தாள்களைக் கொண்டது
o தாள் I ஏதேனும் ஒரு இந்திய மொழி (அரசியலமைப்பு அட்டவணையில் உள்ளடங்கிய இந்திய மொழிகளில் ஏதேனும் ஒன்றை விண்ணப்பித்தவரே தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்)
இதற்கு 300 மதிப்பெண்கள்
o தாள் II ஆங்கிலம் (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 300 மதிப்பெண்கள்
o தாள் III கட்டுரை (அனைவருக்கும் கட்டாயமானது) இதற்கு 200 மதிப்பெண்கள்
o தாள் IV (அ) பொது அறிவு – 1 இதற்கு 300 மதிப்பெண்கள்
o தாள் V (ஆ) பொது அறிவு – 2 இதற்கு 300 மதிப்பெண்கள்
o தாள் யஒ விருப்பப்பாடம் 1 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்
o தாள் VI விருப்பப்பாடம் 1 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்
o தாள் VII விருப்பப்பாடம் 2 (அ) இதற்கு 300 மதிப்பெண்கள்
o தாள் VIII விருப்பப்பாடம் 2 (ஆ) இதற்கு 300 மதிப்பெண்கள்
விருப்பப் பாடங்களைப் பொறுத்தவரை இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்து ஒவ்வொரு பாடத்திலிருந்து இரண்டு தாள்கள் 1 (அ) 1 (ஆ) & 2 (அ) 2 (ஆ) ) ஆக மொத்தம் நான்கு தாள்கள் (2×2=VI, VII, VIII, IX) எழுத வேண்டும். இது தவிர இரண்டு மொழித் தாள்கள் (I, II), இரண்டு பொது அறிவுத் தாள்கள் (IV, V), ஒரு கட்டுரை (III)ஆக மொத்தம் 9 தாள்கள் எழுத வேண்டும். இரண்டு மொழித் தாள்களுக்கான மதிப்பெண்களை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இவைகளுக்கு மொத்தம் 2000 மதிப்பெண்கள் ஆகும்.
பிரதானத்தேர்வு விருப்பப் பாடத்திற்குத் தேர்வாணையத்தில் அனுமதிக்கப்பட்ட பட்டியலிலிருந்து ஏதேனும் இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
பிரதானத்தேர்வுக்கான விருப்பப் பாடங்கள்:
1. வேளாண்மை (Agriculture)
2. கால்நடைப் பராமரிப்பு மற்றும் மருத்துவம் (Animal Husbandry & Veterinary)
3. மானிடவியல் (Anthropology)
4. தாவரவியல் (Botany)
5. வேதியியல் (Chemistry)
6. கட்டடப் பொறியியல் (Civil Engineering)
7. வணிகவியலும் கணக்கியலும் (Commerce & Accountancy)
8. பொருளாதாரம் (Economics)
9. மின் பொறியியல் (Electrical Engineering)
10. புவியியல் (Geography)
11. புவியமைப்பியல் (Geology)
12. வரலாறு (History)
13. சட்டம் (Law)
14. மேலாண்மை (Management)
15. கணிதம் (Mathematics)
16. எந்திரப் பொறியியல் (Mechanical Engineering)
17. மருத்துவ அறிவியல் (Medical Science)
18. தத்துவம் (Philosophy)
19. இயற்பியல்(Physics)
20. அரசியல் மற்றும் பன்னாட்டுத் தொடர்புகள் (Political and International Relations)
21. உளவியல் (Psychology)
22. பொது நிர்வாகம்(Public Administration)
23. சமூகவியல் (Sociology)
24. புள்ளியியல் (Statistics)
25. விலங்கியல் (Zoology)
26. இலக்கியம் (Literature)
(இது பின்வரும் ஏதேனும் ஒரு மொழி இலக்கியத்திலிருந்தும் தேர்ந்தெடுக்கலாம்.)
1. தமிழ் 2. ஆங்கிலம் 3. மலையாளம் 4. தெலுங்கு 5. கன்னடம் 6. இந்தி 7. மராத்தி 8. உருது 9. ஒரியா 10. சமஸ்கிருதம் 11. குஜராத்தி 12. வங்காளம் 13. பஞ்சாபி 14. நேப்பாளி 15. சிந்தி 16. மணிப்பூரி 17. காஷ்மீரி 18. கொங்கணி 19. பாலி 20. பெர்சியன் 21. அஸ்ஸாமி 22. அரபு 23. சீனம் 24. பிரெஞ்ச் 25. ஜெர்மனி 26. ரஷ்யன்.
பிரதானத்தேர்வில் இரண்டு விருப்பப் பாடங்கள் என்றாலும் சில விருப்பப் பாடங்களைச் சேர்த்து எழுத முடியாது.
நேர்முகத்தேர்வு
(Personality Test)
பிரதானத் தேர்வில் தேர்வாணையத்தால் தீர்மானிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்களை பெற்றவர்கள்– அவர்களின் ஆளுமையை சோதிப்பதற்காக நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இந்த நேர்முகத்தேர்வு 300 மதிப்பெண்களைக் கொண்டது. (தகுதிக்கு குறைந்தபட்ச மதிப்பெண்கள் எதுவும் கிடையாது)
இதில் புத்திக்கூர்மை, நடப்பு நிகழ்வுகளில் உள்ள அக்கறை, சமூக சேவை மனப்பான்மை, பாடத்தில் புரிந்துகொண்ட திறன், ஒழுக்கம், உடல்மொழி (body language), சமயோகித புத்தி, தலைமை தாங்கும் திறன் போன்றவற்றைச் சோதித்து அறிவார்கள்.
சுருக்கமாகக் கூறினால் சிவில் சர்வீசஸ் பதவிகளுக்கு நீங்கள் எவ்விதத்தில் பொருத்தமானவர் என்பது நேர்முகத் தேர்வில் மதிப்பீடு செய்யப்படுகிறது. இறுதியில் மெயின் தேர்வு மொத்த மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வின் மதிப்பெண்கள் இரண்டையும் கூட்டி இந்திய அளவில் ரேங்க் பட்டியல் தயாரிப்பர். அதன் அடிப்படையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற 26 பணிகளில் ஏதேனும் ஒன்றில் நியமிப்பர்.
Thanks : பொது அறிவு உலகம்
(அன்பு சகோதரர்களே! நம்முடைய பிள்ளைகளை சிவில் சர்வீஸ் தேர்வு எழுத இன்றே தயார் செய்வோம்)
”Jazaakallaahu khairan” Rajaghiri Gazzali