ஆத்மாவின் அடி ஆழம் வரை ஊடுருவிச்செல்வது கணவன் – மனைவி உறவுதான்
பெற்றோர் – குழந்தை, நண்பர்கள், ஆசிரியர் – மாணவர் என உறவுகள் பல இருந்தாலும் உடலாலும் மனதாலும் இரண்டறக் கலந்து, ஆத்மாவின் அடி ஆழம் வரை ஊடுருவிச்செல்வது கணவன் – மனைவி உறவுதான்.
மற்றவர்களின் மன ஓட்டங்களை வெறும் பார்வையாளராயிருந்து கவனிக்கு (observe) முடியும். ஆனால் சுகம், துக்கம், விருப்பு, வெறுப்பு, குழப்பம், பயன் என அனைத்து உணர்வுகளும் அப்படியே தாக்குவது இந்த உணர்வில்தான். ஒரே அலைவரிசையிலிருக்கும் கணவன் – மனைவிக்கு அந்தந்த கணத்தில் எண்ணங்களை பரிமாறப்படுவதால் வார்த்தைகளே வீண்தான்..
எந்த ஒரு செயலுகுமே அடிப்படை எண்ணங்கள்தான். தங்களது மன ஓட்டத்தைக் கட்டுப்பாட்டிற்குள் வைக்க முடியாத கணத்தில்தான் பிரச்சினைகள் வெடிக்கின்றன. இன்றைய தினத்தில் அதிகரித்து வரும் குடும்ப உறவுப் பிரச்சினைகளுக்கு அடிப்படைக் காரணம் மனம்தான்.
கணவன் – மனைவு உறவு முழுக்க, முழுக்க உணர்வுகளால் பின்னிப் பிணைந்த ஒரு கூடு. இதில் ஒரு இழை அறுந்து போனாலும் அந்த முழுமையே (whole) ஆட்டங்கண்டுவிடும்.
சின்ன சின்ன உணர்ச்சிகள் கூட பெரிய விபரீதகளுக்கு காரணமாகிவிடும். அப்படி எதுவும் நேர்ந்துவிடக்கூடாதே என்ற முன்னெச்சரிக்கையில் தங்கள் உணர்ச்சிகளுக்கே வேலி போட்டுவிடுவர் சிலர். இந்தப் பாதிப்பு இன்னும் அதிகம். தற்காலிகமாக பிரச்சினையை ஒத்தி வைக்கலாமே தவர, முற்றிலும் தடைபோட முடியாது. ஒரே வழி, உணர்வுகளை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள். பிறகு வெளிப்படுத்துங்கள்!
சந்தேகம்!
இந்த வார்த்தையைப் படிக்கும் போதே நாற்காலியின் நுனிக்கு வந்துவிடுவார்கள் ஆண்கள். பலகுடும்பங்களை ஆட்டிவைக்கும் ஐந்தெழுத்து மந்திரவார்த்தை.
“என்னங்க, நான் உங்க ஆஃபீஸ்க்கு ஃபோன் பண்ணப்ப யாரோ ஒருத்தி எடுத்தாளே, யாரவ? எதுக்கு உங்கள டேபிளுக்கு வரணும்?”
“நான் இன்னைக்கு பூவே வைக்கலையே. உங்கள் மேல எப்படி மல்லிப்பூ வாசனை அடிக்குது?.”
“உங்க ஆஃபீஸ் என்ன பீச் நடுவிலாஇருக்கு? ஷூக்குள்ள ஒரு கிலோ மணல்,,,!”
“கழுதை மிஸ் பண்ணாலும் பண்ணும். நீங்க பண்ணமாட்டீங்க.. ஒரு சினிமா போஸ்டர் விடாம வீட்டுக்கு வாங்க, கண்ணை தோண்டிடறேன்.”
“குதிரைக்கு திரைகட்டற மாதிரி உங்க ரெண்டு கண்ணையும் கட்டணும் ரோட்ல வண்டி ஓட்டறப்ப அப்படி என்ன ரெண்டு பக்கமும் திரும்பி திரும்பிப்பார்த்து ஜொள்ளுவிட வேண்டியிருக்கு…?”
என்ன? இவையெல்லாம் உங்கள் வீட்டு வசனங்கள்தானே?! எல்லா மனைவிகளும் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது மேற்படி வசனங்களைப் பேசிவிடுவார்கள். “வீட்டுக்கு வந்து கவனிச்சுக்கறேன்” என்று சொல்லிவட்டு அதுவரை கூட காத்திருக்க பொறுமையில்லாமல் ‘ஆன் தி ஸ்பாட் ஆக்ஷன்’ எடுக்கும் மனைவிகளுமுண்டு.
“புருஷனையே சந்தேக்படறியே, நீயெல்லாம் ஒரு மனைவியா, சே..!” என்று கணவன் உணர்ச்சிவசப்பட்டுக் கேட்கும்போது சட்டென்று குற்ற உணர்ச்சி ஆட்கொண்டு, ஐயோ, நான் நல்ல மனைவி இல்லையோ… என்ற குழப்பும், கவலையும் வேதனையில் ஆழ்த்தும் நீங்களும் அப்படித்தானா? அப்படியென்றால் ‘சந்தேகம்’ என்ற கடலைப்பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய, மூழ்கி முத்தெடுக்க வேண்டிய விஷயகள் ஏராளம்!
1. பெண்களைப் பொறுத்தவரையில், உங்கள் கணவரைப் புரிந்து கொள்வதற்கு முன் நீங்கள் சந்தேகத்தைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பசி, தூக்கம், காமம் ஆகிய உணர்வுகளைப் போல் சந்தோஷமும் ஒரு உணர்வுதான். நன்றாக யோசித்துப்பார்த்தால் உங்களுக்கு ஒரு விஷயம் புரியும். எப்போதெலாம் உங்கள் கணவரை சந்தேகப்படுகிறீர்கள் என்று கொஞ்சம் நினைவுபடுத்திப் பாருங்கள். நிச்சயமாக மாத்த்தின் எல்லா நாட்களிலும் சந்தேகம் வராது. மாதவிலக்கு நாட்கில் உங்களின் சந்தேக்க்குணம் தலைதூக்கும்.
காரணம், பொதுவாகவே இந்த நாட்களில் உடல் சோர்வுடன், மனச்சோர்வும் சேர்ந்திருக்கும். அதனால், உங்கள் கணவர் லேசாக ஒரு பாடலை முணுமுணுத்தால் கூட, ஏதோ அவர் அதீத சந்தோஷத்தில் மிதப்பதுபோல் தோன்றும். “நான் இங்க இவ்வளவு கஷ்டப்பட்டிருகேன். இவறு இவ்வளவு குசியா இருக்காரே! ஒருவேளை வேற யார்கூடவாத்து சுத்திட்டு வந்திருப்பாரோ?” என்று ஒரு பொறிதட்டும். அந்தப் பொறியை நீங்கள் தட்டிவிட்டீர்கள் என்றால் பிழைத்தீர்கள். (உங்கள் கணவர் பிழைத்தார்) இல்லை, அது கொஞ்சம் கொஞ்சமாகப் பரவி அடுத்தசில மணி நேரங்களில் சந்தேகத்தின் உச்சத்தைத் தொட்டிருப்பீர்கள்.
2. அடுத்தது, அந்த சமயத்தில் சோர்வு மட்டுமில்லாமல், தான் அழகாயில்லையோ என்ற தாழ்வு மனப்பான்மயும் ஏற்படும். (உண்மையில், அப்போதுதன் பெண்கள்ரொம்ப அழிகாயிருப்பார்களாம்). ஒரு வேளை உற்சாக்க் குறைவால் கூட இந்த எண்ணம் தோன்றலாம். அதன் விளைவும் சந்தேகம்தான். தன்னைத் தவிர மற்ற பெண்களெல்லாம் தேவதைபோல் தோன்ற, கணவர் பக்கத்து வீட்டு மாமியிடம் பேசினால் கூட, உங்கள் மனதில் எள்ளும் கொள்ளும் வெடிக்கும்.
சரி, இப்ப என்னதான் செய்யறது என்று கேட்கிறீர்களா?
முதலில் இந்தக் கால சுழற்சியைக் கவனியுங்கள். சந்தேகம் எப்போது வருகிறது எனக் கவனிக்கத் தடங்கினீர்கள் என்றால், காலப்போக்கில் நாளைக்கு ‘கோடீஸ்வரி’ வரும் என்பதப் போல, நாளைக்கு ‘சந்தேகம்’ வரும் எனச் சரியாக ஊக்ககுமளவற்கு எக்ஸ்பர்ட் ஆகிவிடுவீர்கள்.
அடுத்து விழிப்பு: சந்தேகம் வரும் சமயங்களில் விழிப்புடன், தன்னுணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம். சந்தேகம் இப்போது வருவது இயல்புதான் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
மூன்றாவது முக்கியமான விஷயம். சந்தேகத்தை சந்தேகமாகவே எடுத்துக்கொள்ளுங்கள் – அதாவத, நீங்கள் உங்கள கணவரை சந்தேகப்படுகிறீர்கள். அது உண்மையாக இருக்க வேண்டிய அசியமில்லை. கோபம் தணிந்த பிறகு ஓரிரு நாட்களில் கூட “சே, எவ்வளவு முட்டாள்தனமா நினைச்சுட்டேன்” என்று உங்கள் தலையில் நீங்களே கூட குட்டிக்கொள்ள நேரலாம். எனவே உங்கள் சந்தேகத்தை உண்மையென நம்பாதீர்கள்.
சந்தேகப்படும் மனைவிகளே, உங்களை சந்தோஷப்படுத்த சில புள்ளி விபரங்கள்: (ஆய்வின் அடிப்படையில்)
1. சந்தேகப்படும் மனைவிதான் உண்மையான மனைவி என்று நூற்றுக்கு தொண்ணூற்றியெட்டு பெண்களும், எண்பத்தேழு ஆண்களும் கருத்தக் கூறியுள்ளனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம், “சந்தேகம் எப்போது வருகிறது? கணவன் தன்னை விட்டுப்போய்விடக் கூடாது என்ற உணர்வு உச்சநிலையை அடையும்போதுதானே, இந்த உணர்வு மனைவிக்கு எப்போது வருகிறது? கணவன் மேல் அதீத அன்பாயிருக்கும் போதுதான். எனவே, அதீத அன்புதான் சந்தேகமாகிறது.
2. அடுத்தது, ஒரு மனைவி எப்போது சந்தேகப்பட தொடங்குகிறாள் தெரியுமா? (சந்தேகப்படத் தகுதியா என்று சிரிக்காதீர்கள்) தன் கணவனுக்கு உண்மையானவளாயிருக்கும் போதுதான்.
கணவனுக்குத் தெரியாமல் மனைவி தப்பு செய்கிறாள் என்று வைத்துக்கொள்வோம். அவள் மனநிலை எப்படியிருக்கும் தெரியுமா? “இவனும் யார் கூடயாவது போயிட்டால்தான் நிம்மதி. அப்பதான் நாம செய்யறதைக் கண்டுக்க மாட்டான்..” இப்படி நினைப்பவள் தன் குட்டு வெளிப்பட்டுவிடுமே என பயந்து கண்ணைக் கொஞ்சம் கூட சந்தேகப்படவே மாட்டாள்.
தன் மேல் தவறை வைத்துக்கொண்டு எப்படி கணவனை சந்தேகப்பட முடியும்?
3. மனைவிகளே, உங்களுக்கு இன் அதிர்ச்சியூட்டும் இன்னொரு செய்தி என்ன தெரியுமா? மனைவி தன்னை சந்தேகப்படுவதை ஆண்களே விரும்புகிறார்கள் என்பதுதான். மணமான பத்து ஆண்களில் ஒன்பது பேர் சொன்ன கருத்து இதோ:
‘என் மனைவி என்னை ரொம்ப சந்தேகப்படறப்ப கோபம் வரும். என்னடா நம்மளைப் புரிஞ்சுக்க மாட்டேன்கறாளேனு தோணும். ஆனா, கொஞ்சம் கோபம் தணிஞ்சப்புறம் நம்ம மேல இவ்வளவு பொஸஸிவ்வா இருக்காளேன்னு சந்தோஷமா இருக்கும்..”
ஆம். மனைவி தனமேல் பொஸஸிவாக இருக்க வேண்டுமென ஆண்கள் விரும்புகிறார்கள். அன்பின் எதிரொலிதான் சந்தேகம் என்பதைப் புரிந்துகொண்ட கணவர்களுக்கு பெரிதாய் ஒன்றும் கோபம் வருவதில்லை. இதைப் படித்தவுடன் உங்கள் கணவரும் உங்கள் சந்தேகத்தை மதிக்கமாட்டார். கோபத்திற்குப் பதில் அசட்டுச்சிரிப்பு (பெருமையான சிரிப்பு?) சிரித்தாலும் ஆச்சர்யமேதுமில்லை.
4. அவ்வப்போது சந்தேகப்பட்டுக்கொள்ளும், தம்பதியர் பெரும்பாலும் பிரிவதில்லை.
“அவர் என்னை சந்தேகப்பட்டதால்தான் பிரிந்தோம்..” என்று சொல்பவரகள் பெரும்பாலும அதை ஒரு காரணமாகத்தான் சொல்கிறாரகளே ஒழிய, உண்மையான காரணம் வேறு ஏதாவாகத்தானிருக்கம். “நல்லா சந்தஷமா எல்லார் கண்ணும் படறமாதிரிவாழ்ந்தாங்க. இப்ப என்னவோ தரியல பிரிஞ்சுட்டாங்க..” – இந்த ரீதியலான ஸ்டேட்மெண்ட்தான் விவாகரத்து வழக்குகளில் அதிகம் என சம்பந்தப்பட்டவர்கள் சத்தியம் செய்கிறார்கள்.
சந்தேக உணர்ச்சியெல்லாம் இந்த பெண் ஜென்மங்களுக்கு வரும் அற்ப உணர்ச்சி. நாங்கள் அதையெல்லாம் கடந்தவர்கள் என்று காலரை தூக்கிக்கொள்ளும் ஆண்களே, கொஞ்சம் கவனியுங்கள். இராமாயண காலத்திலேயே நின்றுவிடுகிறது. (சமூக, குடும்ப சூழல்ளால்..) ஆனால் பலரின் வாழ்க்கையை வேரோடு அழித்த சம்பவங்களுக்கல்லாம் ஆணிவேர் ஆண்களின் சந்தேகம்தான். மனநலப் பிரச்சினைகளுக்கென வரும் கேஸ்களும் இதற்கு ஓர் எடுத்துக்காட்டு.
உண்மையாகவே சந்தேகப்படும் ஆண்களைவிட மனைவி சந்தேகப்படுதுபோல் நடித்து Misuse செய்பவர்களே அதிகம்.
“என்னங்க, ஏதாவது வேலை தேடுங்களேன் இப்படி சும்மாவே இருக்கிறீர்களே…”
“இந்த மாசம் பணம் பத்தாது போலிருக்கே.” இது போன்ற பொருளாதார பிரச்சினைகளை மனைவி எழுப்பும் போதெல்லாம் ஆண்கள் கையில் எடுத்துக்கொள்ளும் ஒரே ஆயுதம் சந்தேகம்தான். எங்கே அடுத்தமுறை நாம் கேள்வி கேட்டால், இதே போல் சந்தேகப்படுவானோ என்று பயந்து தங்கள் உணர்ச்சிகளை மனதில் புதைத்துக்கொள்வார்கள். அது வேறு எப்படியாவது வெளிப்படும்.!
இது என்ன? பெண்கள் உண்மையாகே மனதில் தோன்றும் சந்தேகங்களைப் பூட்டிவைக்காமல், அதை ஒரு சந்தேகமாகவே வெளிப்படுத்தி, அதற்கு கிடைக்கும் நியாயமான பதிலை உள்வாங்கி ஏற்றுக்கொள்ளுங்கள்..!
C.R.Selin
source: http://tamil-uyir.blogspot.com