Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

ஜமாஅத் நிர்வாகத்தில் பெண்கள்!

Posted on June 8, 2010July 2, 2021 by admin

20 லட்சம் தமிழக முஸ்லிம்பெண்கள்

மகளிர் பாதுகாப்பு இன்று குடும்ப பாதுகாப்பாக உருமாறிவிட்டது. மத்திய, மாநில அரசுகள் மகளிர் அதிகாரப் போக்குக்கு துணை நிற்கின்றன. இத்தகைய யதார்த்த சூழ்நிலையில் முஸ்லிம் மகளிர் வாழ்வியலை தனித்து, தனிமைப்படுத்தி யோசிக்க வாய்ப்பில்லை.

தமிழகத்தைப் பொருத்தவரை உள்ளாட்சி அமைப்புகளில் விரல்லிட்டு எண்ணக்கூடிய முஸ்லிம் மகளிர், பஞ்சாயத்து தலைவிகள் கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக சேவையாற்றி வந்துள்ளனர் என்றாலும், மத்திய, மாநில உயரதிகாரகள், மாவட்ட ஆட்சித்தலைவர், மாவட்ட வருவாய்த்துறை அதிகாரி, மாவட்ட அமைச்சர் மற்றும் இதர துறை அதிகாரிகளுடன் சட்டபூர்வமான முறையில் நேரடி அணுகுமுறையைக் கை கொண்டவர்கள் மிகவும் குறைவு.

20 லட்சம் எண்ணிக்கையிலுள்ள தமிழக முஸ்லிம் பெண்கள் கிராமப்பஞ்சாயத்து ஆட்சி உயரதிகார அமைப்பில், நிர்வாகத்தில், மாவட்ட ஆட்சி இயக்கத்தில் துணிவுடன் பங்கெடுக்க வேண்டும். மகளிர் அதிகார மையம் உருவாவது இனி தவிர்க்க இயலாதது. அரசாங்க நிதி ஒதுக்கீடு கணிசமான விகிதாச்சார ரீதியில் முஸ்லிம் சமூகத்துக்கு ஆக்கப்பூர்வமாக கிடைக்கும். (ஜூன் 2010 ”முஸ்லிம் முரசு” தலையங்கத்திலிருந்து)

ஜமாஅத் நிர்வாகத்தில் பெண்கள்!

அல்லாஹ்தஆலா தன் அருள்மறை அல்குர்ஆனிலே, ‘‘ஆதலால், அவர்களுடைய இறைவன் அவர்களுடைய இப்பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டான். உங்களில் ஆணோ, பெண்ணோ எவர் (நற்செயல் செய்தாலும்) அவர் செய்த செயலை நிச்சயமாக வீணாக்க மாட்டேன், (ஏனெனில் ஆணாகவோ, பெண்ணாகவோ இருப்பினும்) நீங்கள் ஒருவர் மற்றொருவரில் உள்ளவர் தாம்….’ (3:195)என்று கூறுகின்றான்.

அவ்வாறே, “நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் ‘உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. மேலும், உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளியாவார். தன் பிரஜைகள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளியாவார். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவார்.

பெண், தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். அவளது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள் (அடிமை) தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன், தன் பொறுப்புக்குட்பட்டவை பற்றி விசாரிக்கப்படுவான்’.

இதை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து அறிவித்த இப்னு உமர் ரளியல்லாஹு அன்ஹு அவரகள், ‘நான் இவற்றையெல்லாம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து செவியுற்றேன்.மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், மனிதன் (மகன்) தன் தந்தையின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவனது பொறுப்புக்குட்பட்டவை குறித்து அவன் விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்’ என்று சொன்னதாக எண்ணுகிறேன் என்று கூறினார்கள். (ஸஹீஹ் புகாரி: 2558 Volume:3 Book:49)

என்று கூறியுள்ளார்கள். இதே கருத்துள்ள ஹதீஸ்களை ஸஹீஹ் புகாரியின் பின்வரும் எண்களில் காணலாம்:

2409. Volume:2 Book:43 / 2751. Volume:3 Book:55 / 5188 Volume:5 Book:67 / 7138Volume:7 Book:93

எனவே, ஆணாயினும் பெண்ணாயினும் தமது பொறுப்புக்கள் குறித்து அல்லாஹ்விடம் மறுமொழி கூறவேண்டிய நிலையிலேயே உள்ளனர் என்பது தெளிவு. அந்தவகையில், பெண்கள் தமது முதலாவது கடமையான வீடுசார்ந்த பணிகளைக் குறைவின்றிச் செய்த பின்னர்

எஞ்சிய ஓய்வுநேரத்தில் ஊர் ஜமாஅத் பணிகளில் ஆற்றக்கூடிய பணிகள் எவ்வாறு அமையலாம் என்று நோக்குவோம்.

1. நிர்வாகக் குழு உறுப்பினர்கள் (பெண்கள் பிரிவு) 

o பெண்கள் பிரிவுக்கான தலைவர், உப-தலைவர், செயலாளர், பொருளாளர் முதலான பொறுப்புக்களை

o  உரிய முறையில் வழங்குதல்.

தலைமைப் பொறுப்பேற்பவர் சற்று வயது முதிர்ந்த, மார்க்கத்தை ஆழமாய்க் கற்று, பேணுதலாக நடக்கக்கூடிய ஒரு பெண்மணியாகவும், உப தலைவர் மற்றும் செயலாளர், பொருளாளர் பொறுப்புக்களை, பாரிய குடும்பப் பொறுப்புகள் அற்ற, இளம் வயதான,  மார்க்க விவகாரங்களிலும் (கணினித் தொழினுட்பம் முதலான) உலக விவகாரங்களிலும் சிறப்பாகப் பணியாற்றக்கூடியவர்களாகவும் நியமிக்கப்படுவது சிறந்தது.

அதேநேரம்> இத்தகைய பொறுப்புக்களில் உள்ள பெண்களின் மகன்,  கணவன், தந்தை, சகோதரன் என யாரேனும் ஆண்கள் பிரிவில் ஷூறாவில் இருப்பது இன்றியமையாதது. அப்போது, பெண்கள் தமது ஆலோசனைகள், செயற்பாடுகள் குறித்தெல்லாம்

அவர்களினூடே ஜமாஅத்துக்கு அறிவித்து, இறுதித் தீர்மானங்களை (தேவையற்ற பிரச்சினைகள் இன்றி) இலகுவாகப் பெற முடியுமாக இருக்கும்.

o கல்வி அபிவிருத்திக் குழு (5-10 உறுப்பினர்கள்)

இதன் நோக்கம்,  தமது கிராமத்தின் கல்விநிலையை மேம்படுத்துவதாகும். எனவே,  இதற்குப் பொறுப்பான சகோதரிகள் கண்டிப்பாக நன்கு படித்தவர்களாக, பாடசாலை அதிபர்,  ஆசிரியைகள்,  பட்டதாரி மாணவிகள் என்ற வகையில் இருத்தல் இன்றியமையாததாகும்.

o ஆன்மீகப் பயிற்சிக் குழு (5-10 உறுப்பினர்கள்)

இதன் நோக்கம் பெண்கள், சிறுவர் மத்தியில் ஆன்மீக விழிப்புணர்வூட்டி, அல் குர்ஆன்-ஹதீஸ் ஒளியில் வாழக்கூடிய சீரான எதிர்கால சந்ததியை உருவாக்குதல். இப்பிரிவில், மௌலவியாக்கள், மார்க்கத்தை நன்கு கற்றறிந்துள்ள பட்டதாரி மாணவிகள், தாய்மார்கள் முதலானோர் உறுப்பினராய் அமைவர்.

o சமூக மேம்பாட்டுக் குழு (5-10 உறுப்பினர்கள்)

இதன் நோக்கம், சமூகத்தில் நிலவும் பின்தங்கிய நிலைமைக்கான காரணிகளை ஆராய்ந்து> கள நிலைவரத்திற்கேற்ப அவற்றை முன்னுரிமை அடிப்படையில் வகைப்படுத்தி, தீர்வுக்கான வழிவகைகளை முன்மொழிவது. இதற்காக, ஆன்மீகப் பயிற்சிக் குழு,  சுயதிறன் விருத்திக் குழு ஆகியோரின் உதவிகள் அவ்வப்போது பெறப்படும். சமூகப் பணிகளில் துடிப்புடன் பங்காற்றக்கூடிய இளம் சகோதரிகள், அவர்களுக்கு நல்ல பல ஆலோசனைகள் வழங்கக்கூடிய தாய்மார்கள் இதில் இடம்பெறுவர்.

o சுயதிறன் விருத்திக் குழு (10-15 உறுப்பினர்கள்)

இதன் நோக்கம்> குடும்பங்களின் முன்னேற்றத்திலும் அதனூடே சமூக முன்னேற்றத்திலும் பங்குதாரர்களாகப் பெண்களை ஆக்கும் வகையில் வீட்டில் உள்ள பெண்களிடம் மறைந்துள்ள திறன்களைக் கண்டறிந்து, உரிய பயிற்சிகள் வழங்குவதன் மூலம் அவர்களுக்கேற்ற சுய கைத்தொழில் முயற்சிகளை ஊக்குவித்தல். விதவைகள்,  வறிய குடும்பத்துப் பெண்கள் இப்பிரிவின்கீழ் முதன்மை அவதானத்தைப் பெறுவர். இப்பிரிவிலும் நன்கு படித்த, கைப்பணிகளில் தேர்ச்சியுடைய சகோதரிகள் இடம்பெறுவர்.

2. களத்தில் இறங்குமுன் கைவசம் தரவுகளைப் பெறுதல்

எந்த ஒரு காரியத்தில் இறங்குமுன்னரும் நாம் களநிலைவரம் குறித்து மிக நுணுக்கமாகக் கண்டறிதல் வேண்டும். குஜராத் தாக்குதலுக்கு நெடு நாட்களுக்கு முன்பே,  ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்புகள் குஜராத் முஸ்லிம்களின் மக்கள் தொகை,  சொத்து விபரங்கள்,  அவர்கள் செறிந்து வாழும் பகுதிகளின் வரைபடங்கள் முதலான சகல விபரங்களையும் விரல்நுனியில் வைத்திருந்ததாலேயே, அவர்களால் தமது திட்டத்தை மிகத் துல்லியமாக நிறைவேற்ற முடிந்தது என்பதை நாமறிவோம்.

சதி செய்து ஒரு சமூகத்தைப் பூண்டோடு ஒழித்துக்கட்டவே அவ்வளவு நுணுக்கம் தேவையெனில்,  பின்தங்கியுள்ள ஒரு சமூகத்தை-கிராமத்தை நல்ல முறையில்,  அழகிய முறையில்,  யாருக்கும் கெடுதியற்ற முறையில் சீர்செய்து கட்டியெழுப்புவதற்கு அதைவிட எத்தனையோ மடங்கு தயாரிப்புகளைச் செய்யவேண்டாமா? எனவே,  நல்ல முறையில் எமது புனர்நிர்மாணப் பணிகளைத் திட்டமிடுமுன்பு> நாம் ஜமாஅத்தின் ஆண்கள் பிரிவின் அணுசரனையுடன் பின்வரும் தரவுகளை முதலில் பெற வேண்டும். அதன் பின்பே செயற்திட்டங்களைத் திறமையாக வடிவமைக்க முடியும்.

தேவையான புள்ளிவிபரங்கள் வருமாறு:

1. ஊரிலுள்ள முஸ்லிம்களின் மக்கள்தொகை பற்றிய புள்ளிவிபரம்

இதில்> மொத்த முஸ்லிம் குடும்பங்களின் எண்ணிக்கை, ஆண்கள்- பெண்கள்-குழந்தைகளின் எண்ணிக்கை என்பன இடம்பெறுதல் வேண்டும். மேலும்,  திருமணமாகாத இளைஞர்கள், யுவதியர் மற்றும் தங்கிவாழும் நிலையிலுள்ள வயோதிபர்களின் எண்ணிக்கையும் இதில் அடங்கும்.

2. கல்விநிலைத் தரவுகள்

இதில், ஊரில் அமைந்துள்ள பாடசாலைகள், ஆசிரியர்கள், மாணவர்களின் எண்ணிக்கை (வகுப்பு வாரியாக), பாடசாலைகளில் உள்ள வளங்கள், பற்றாக்குறையாக உள்ள வளங்கள், ஐந்தாம் ஆண்டுப் புலமைப் பரிசில் பரீட்சை- பத்தாம் வகுப்புப் பரீட்சை,  ப்ளஸ் 2 பரீட்சைகளில் கடந்த பத்து வருடகாலப் பெறுபேறுகள்> பல்கலைக்கழகத்துக்குத் தெரிவானோர் எண்ணிக்கை, படித்துவிட்டு வீட்டில் இருப்போர் பற்றிய விபரங்கள்,மத்ரஸாக்களில் மார்க்கம் கற்றவர்களின் எண்ணிக்கை முதலானவை உள்ளடங்கும்.

3. பொருளாதார நிலை சார்ந்த தரவுகள்

இதில், வேலைக்குப் போகும்முஸ்லிம் ஆண்கள்-பெண்கள் பற்றிய தரவுகள்,  முடிந்தவரை தொழில்வாரியாகப் பிரித்துப் பெற்ற தரவுகள். உதாரணமாக,  வெளிநாட்டில் வேலை செய்வோர் எத்தனை பேர்,  ஊரில் விவசாயம்> வியாபாரம்,  கூலித்தொழில் செய்வோர் எத்தனை பேர் என்ற அடிப்படையில் அமைந்திருத்தல். வேலையற்றோர் பற்றிய தரவுகளும் இதில் இடம்பெறுதல் வேண்டும். மேலும்,  ஸகாத் வழங்கும் நிலையிலுள்ளோர்,  ஸகாத் பெறும் நிலையிலிருப்போர் குறித்த தரவுகள் இடம்பெறுவதும் இன்றியமையாதது.

அன்புடன்,

இஸ்லாமிய சகோதரி,

லறீனா அப்துல் ஹக்.

www.nidur.info

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 3 = 1

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb