நண்டு சாப்பிடுவோம்!
அல்லாஹ்வின் கூற்றையும், அவன் திருத்தூதர்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களின் வழிமுறைகளையும் மதிப்பவர்கள் அதற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டும்.
பொருந்தாதக் காரணங்களையும், உதவாத தத்துவங்களையும், ஒரு சில அரபிப் புத்தகங்களின் கருத்துக்களையும், அல்லாஹ்வின் கூற்றுக்கு எதிராகப் பயன்படுத்துவது முஸ்லிம்களின் நடைமுறையாக இருக்கக் கூடாது.
அல்லாஹ் பொதுவாகக் கடல் பிராணிகளை ஹலாலாக்கியதாகக் கூறி இருக்கும் நிலையில் அதில் தன்னிஷ்டத்துக்கு விளக்கம் கூறவும். பல நிபந்தனைகளை விதிக்கவும் எவருக்கும் உரிமை கிடையாது.
எத்தனை காரணங்களை அவர்கள் கூறினாலும் அவை ஏற்கத்தக்கதல்ல; எத்தனை நிபந்தனைகளை அவர்கள் போட்டாலும் அவை செல்லத்தக்கதல்ல. இதை நாம் சொல்லவில்லை. நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொல்கிறார்கள்.
“எவன் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளை விதிக்கின்றானோ, அவை ஒரு நூறு நிபந்தனைகளானாலும் அவை செல்லத்தக்கதல்ல (பாத்தில்)(அறிவிப்பவர்: அன்னை ஆயிஷாரளியல்லாஹு அன்ஹா, நூல்கள் : புகாரி, முஸ்லிம்.)
எந்தக் கிதாபானாலும் புதுப்புது நிபந்தனைகளை விதிக்க அவர்களுக்கு எவ்வித உரிமையும் கிடையாது என்பதை நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் தெளிவாகச் சொல்லிவிட்டார்கள். இது பற்றி இன்னும் அதிக விளக்கம் பெற பின்வரும் நபிமொழியை உங்கள் கவனத்துக்குக் கொண்டு வருகிறோம்.
“அல்லாஹ் சில கட்டளைகளை இட்டிருக்கிறான்; அவற்றை வீணடித்து விடாதீர்கள்! சில வரம்புகளை விதித்துள்ளான்; அவற்றை மீறாதீர்கள்! சில விஷயங்களைப் பற்றி எதுவும் கூறாதிருக்கிறான்; மறதியின் காரணமாக அல்ல. மாறாக உங்களுக்குப் பேரருளாக! அவற்றைப் பற்றி சர்ச்சை செய்யாதீர்கள். அறிவிப்பவர்: அபூஸஃலபாரளியல்லாஹு அன்ஹு, நூல் : தாரகுத்னீ.
“அல்லாஹ் எதை ஹலாலாக்கினானோ அது ஹலால். எதை ஹராமாக்கியுள்ளானோ அது ஹராம். எது பற்றி ஒன்றும் சொல்லாமல் விட்டு விட்டானோ, அது உங்களுக்காக அவன் விட்டுக் கொடுத்ததாகும். (அறிவிப்பவர்: ஸல்மான் பார்ஸிரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : திர்மிதீ, இப்னுமாஜா)
“அல்லாஹ் எதை ஹலாலாக்கினானோ அது ஹலால். எதை ஹராமாக்கினானோ அது ஹராம். எதைப்பற்றி அவன் ஒன்றும் சொல்லவில்லையோ, அது அவன் உங்களுக்கு வழங்கிய சலுகையாகும். அவன் சலுகையை நீங்கள் ஏற்றுக் கொள்ளுங்கள்! ஏனெனில் அல்லாஹ் எதனையும் மறக்கக்கூடியவனல்ல.” (அறிவிப்பவர் : அபுத்தர்தா ரளியல்லாஹு அன்ஹு, நூல்கள் : ஹாகிம், பஸார்.)
“நண்டு தவளையைப் போல் உள்ளது” என்றெல்லாம் காரணம் கூறுவதைவிட்டுவிட்டு குர்ஆன், ஹதீஸ் வழியில் செல்வோம். நண்டு சாப்பிடுவோம்! விருப்பமில்லாவிட்டால் சாப்பிடுபவர்களைக் குறை கூறாதிருப்போம். (நன்றி: தொண்டியான், அந்நஜாத்)
சீனர்கள் விரும்பி சாப்பிடும் ‘ஆன்ம புஷ்டி விருத்தியாகும்’ தமிழக நண்டுகள்
கையில வெண்ணெய்ய வெச்சுக்கிட்டு, நெய்க்கு அலைஞ்ச கதை மாதிரி, நம்ம ஊர்லேயே நண்டு இருக்கும் போது, வெளிநாட்டு வயாகராவ, விவரம் தெரியாம, தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லை.
சீனாக்காரங்களுக்கு முக்கியமான ”எண்டர்டைன்மென்ட்” மனைவிங்க தான்! அதனாலத் தான் என்னவோஉலகத்திலேயே மிகப் பெரிய ஜனத்தொகைன்னு பேரு வாங்கி வச்சிருங்கிறாங்க. இது எப்படி…? எல்லாம் நண்டு செய்ற வேலை தான்!
நண்டுக்கறி சாப்பிட்டா ரொம்ப இயற்கையாவே ஆன்ம புஷ்டி கிடைக்கும். தாம்பத்ய வாழ்க்கை `ஜோரா’ இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
நண்டுக்கறியும், குழம்பும் ஆண்களுக்கு மட்டும் சந்தோஷத்தைக் கொடுக்கும் விஷயம் அல்ல. பெண்களுக்கும் இது ஏக உற்சாகத்தை ஏற்படுத்தும் என்பது முக்கிய தகவல்.
இப்படி சீனாக்காரங்க நண்டு விஷயத்தை எப்படியோ மோப்பம் புடிச்சுட்டு வந்து, இப்ப, தமிழ்நாட்டுல இருந்து ஏகப்பட்ட நண்டு விமானத்துல பறந்துக்கிட்டு இருக்கு.
காரைக்கால் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த 2002ல இருந்து புதுசா நண்டு வளர்க்க ஆரம்பிச்சு, கடந்த 2006ல 450 கிலோ நண்டும், 2007ல 675 கிலோ நண்டும் சீனாவுக்கு போயிருக்கு.
பொதுவா ஒரு நண்டு அரை கிலோ முதல் ஒரு கிலோ வரை இருக்கும். அரை கிலோ நண்டு விலை ரூ.270. ஒரு கிலோ நண்டு விலை ரூ.500 (இது பழைய விலை… இப்போ…)
சீனாக்காரங்களுக்கு புரிஞ்ச ரகசியம், நம்ம ஆட்களுக்கு எப்படி தெரியாம போச்சுன்னு தெரியலை. பரவாயில்லை. இன்னைக்கு ராத்திரியாவது மனைவியை சந்தோஷப்படுத்த நண்டுக்கறி சாப்பிடுங்க!
இல்லறம் சிறக்க சாப்பிடுவோம் நண்டு கறி!