Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி: தமிழகத்தில் நேற்று தொடங்கியது.

Posted on June 2, 2010July 2, 2021 by admin

மிகவும் முக்கியம்

மீண்டும் முழுமையாக படியுங்கள்

[ ”கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு கணக்கெடுக்க வரும்போது,

வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அல்லது வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றிருந்தால், தாசில்தார், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் தகவல் கொடுத்தால், மற்றொரு நாளில் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுக்க வருவர்.

வீடுகளில் கணக்கெடுப்பு முடிந்தவுடன், அந்த வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படும்.

வெளிநாட்டு இந்தியர்கள் கணக்கெடுப்பில் இடம்பெற மாட்டார்கள்.

அவர்கள் மீண்டும் இந்தியாவில் குடியேறிவிட்டால், மக்கள் கணக்கெடுப்பில் விண்ணப்பித்து, தங்களது பெயரை இணைத்து கொள்ளலாம்”. – மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குனர் ]


2011-ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி தமிழகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (ஜூன் 1) தொடங்கியது. தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் துணை முதல்வர் வீடுகளில் ஆரம்பித்து மாநிலம் முழுவதும் 45 நாள்களுக்கு கணக்கெடுப்புப் பணி நடத்தப்பட உள்ளது.கணக்கெடுப்பு பணி முடிவடையும்போது ஒவ்வொருவருக்கும் தனிநபர் அடையாள அட்டை வழங்கப்படும். 

ஏற்கனவே, ஏப்ரல் 1-ம் தேதி முதல் மே மாதம் வரை, 29 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடைபெற்றது. தமிழகம் உள்பட எஞ்சியுள்ள மாநிலங்களில் ஜூன் 1-ம் தேதி தொடங்கி, ஜூலை 15-ம் தேதி வரை நடத்தப்படுகிறது.

இம்முறை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சேர்த்து, தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன.

ஒவ்வொரு வீட்டின் அமைப்பு (குடிசை வீடா, ஓட்டு வீடா, மாடி வீடா),

வீட்டில் உள்ள நபர்களின் எண்ணிக்கை,

மணமான தம்பதிகள் எத்தனை பேர் உள்ளனர்?

வீட்டில் மின் இணைப்பு உள்ளதா?

குடிநீர் இணைப்பு உள்ளதா?

கழிவுநீர் வசதி உள்ளதா?

எரிவாயு இணைப்பு உள்ளதா?

உள்ளிட்ட விவரங்கள் சேகரிக்கப்பட உள்ளன.மேலும், இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர் உள்ளதா?

செல்பேசி மற்றும் லேண்ட்லைன் போன் உள்ளதா?

சைக்கிள், மோட்டார் வாகனம் அல்லது கார் உள்ளதா?

வங்கிக் கணக்கு உள்ளதா?

தற்போதைய முகவரி மற்றும் நிரந்தர முகவரி என்ன? இந்தியரா அல்லது வெளிநாட்டவரா?

உள்ளிட்ட விவரங்களும் சேகரிக்கப்பட உள்ளன.

ஒப்புகைச் சீட்டை பத்திரமாக வைத்திருக்க வேண்டும்

இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின், விவரங்களை சேகரித்த அரசு ஊழியரும், குடியிருப்பில் இருப்பவரும் கையெழுத்து இடவேண்டும். இதற்கு ஒப்புகைச் சீட்டு ஒன்றும் குடியிருப்பில் இருப்பவருக்கு வழங்கப்படும். இந்த ஒப்புகைச் சீட்டை மக்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு குடும்பமும் மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்க வரும் பணியாளர்களிடம், தகவல்களை அளிக்க வேண்டியது கட்டாயமாகும். இந்தத் தகவல்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும். பொதுமக்கள் தங்களுடைய புகைப்படத்தையோ, வேறு நகல்களையோ கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. தகவல்களை மட்டும் தெரிவித்தால் போதும்.

சிறப்பு முகாம்:

இந்த விவரங்கள் சேகரிக்கப்பட்ட பின் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதத்தில் அந்தந்தப் பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

இந்த முகாம்களில் 15 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு புகைப்படமும், கைரேகை பதிவும் எடுக்கப்படும்.

இந்த முகாமுக்கு வரும்போது இப்போது அளிக்கப்படும் ஒப்புகைச் சீட்டை மக்கள் கொண்டுவர வேண்டியது அவசியம்.

இந்த முகாமுக்குப் பின் ஒவ்வொருக்கும் தனிநபர் அடையாள அட்டை வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

வெளிநாட்டில் இருக்கும் சகோதர சகோதரிகள் சம்பந்தப் பட்டவர்களுக்கு உடனே தெரியப் படுத்தவும்.

சென்னை, பெசன்ட் நகரிலுள்ள ராஜாஜி பவனில், கோபாலகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழகம் முழுவதும் அடுத்த மாதம் 15ம் தேதி வரை, வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு, தேசிய மக்கள் தொகை பதிவேட்டிற்கான விவரங்கள் சேகரிக்கும் பணிகள் நடைபெறும். இப்பணியில், 1 லட்சத்து 50 ஆயிரம் களப் பணியாளர்கள் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர். அதில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்டங்களாக நடைபெறுகிறது.

முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு,

இரண்டாவது கட்டமாக, 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறவுள்ளது.

வீட்டு பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பின் போது, வீடு அமைப்பு விவரம் மற்றும் குடிநீர் வசதி, கழிவுநீர் வசதி, “டிவி,’ கம்ப்யூட்டர் போன்ற பொருட்கள் உள்ளதா என்ற விவரம் சேகரிக்கப்படும். தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் விவரங்களில், தனி நபர் பெயர், அவர் படித்த ஊர், பிறந்த தேதி, பெற்றோர் பெயர் உள்ளிட்ட விவரமும் பெறப்படும்.

அதன்பின் ஒப்புகை சீட்டு வழங்கப்படும். பதினைந்து வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அனைத்து நபர்களின் புகைப்படங்கள் மற்றும் கைரேகை பதிவுகளை சேகரிக்கும் பணியும் நடைபெறும்.

அடுத்த ஆண்டில் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்படும். அதோடு, பிரத்யேக அடையாள எண்களும் வழங்கப்படும்.

கணக்கெடுப்பாளர்கள் வீடுகளுக்கு கணக்கெடுக்க வரும்போது, வாடகை வீட்டில் வசிப்பவர்கள் அல்லது வீட்டின் உரிமையாளர்கள் வெளியே சென்றிருந்தால், தாசில்தார், நகராட்சி, மாநகராட்சி அலுவலகங்களில் தகவல் கொடுத்தால், மற்றொரு நாளில் கணக்கெடுப்பாளர்கள் கணக்கெடுக்க வருவர்.

வீடுகளில் கணக்கெடுப்பு முடிந்தவுடன், அந்த வீட்டில் ஸ்டிக்கர் ஒட்டப்படும். வெளிநாட்டு இந்தியர்கள் கணக்கெடுப்பில் இடம் பெற மாட்டார்கள். அவர்கள் மீண்டும் இந்தியாவில் குடியேறிவிட்டால், மக்கள் கணக்கெடுப்பில் விண்ணப்பித்து, தங்களது பெயரை இணைத்து கொள்ளலாம்.

கணக்கெடுப்பில் இலங்கை, பர்மா அகதிகள் இடம் பெறுவர். கணக்கெடுப்பாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. கணக்கெடுப்பாளர்கள் போர்வையில், திருடர்கள் வீடுகளில் நுழைந்து விடும் அபாயமிருப்பதால், அடையாள அட்டை இல்லாதவர்களிடம் கணக்கெடுப்பு குறித்த விவரத்தை, பொதுமக்கள் தெரிவிக்க வேண்டாம். இவ்வாறு கோபாலகிருஷ்ணன் கூறினார்.

posted by: A.Sarfudeen

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 22 = 24

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb