Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

திருக்குர்ஆன்: அப்பழுக்கற்ற தூய்மையான இறைவேதம் (1)

Posted on May 31, 2010 by admin

திருகுர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம். திருகுர்ஆனை இறைவனுடைய வேதம் என்று முஸ்லிம்கள் நம்பினாலும் முஸ்லிமல்லாதவர்கள் பலர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று நினைக்கின்றனர். இது தவறான எண்ணமாகும்.

”அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.” (அல்குர்ஆன் 69:44)

”அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், ‘இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்’ என்று கூறுகிறார்கள். அதற்கு என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக!” (அல்குர்ஆன் 10:15)

‘(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) ‘நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்’ என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்’. (அல்குர்ஆன் 16:101)

இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை.

‘இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!’ என்று.’ (அல்குர்ஆன் 10:37-38)

அல்லது ‘இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்’ என்று அவர்கள் கூறுகிறார்கள்? ‘(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் – நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 11:13)

‘(நபியே! நீர் இதைக் கூறும் போது:) ‘இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்’ என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்: ‘நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும்¢ நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.’ (அல்குர்ஆன் 11:35)

திருக்குர்ஆன் அருளப்பட்ட முறை .

இத் திரு வசனங்கள் பகுதி பகுதியாக கால சூழ்நிலைக்கேற்பவே இறக்கப்பட்டது. ஹிரா குகையில் தங்கியிருக்கும் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இறைவன் ஜிப்ரீல் என்னும் வானவர் மூலமாக குர்-ஆன் வசனங்களை இறக்கி அருளினான். அதாவது ஜிப்ரீல் எனும் வானவரிடம் இறைவன் கூறுபவற்றை அந்த வானவர் முஹம்மது நபியிடம் அறிவிப்பார்.. முதலாவது வசனமாக சூரா அலக்கின் 5 வசனங்கள் இறக்கப்பட்டது.

அன்று முதல் 23 வருடமாக இறக்கப்பட்டு மனதில் பதியப்பட்டது. இது முற்றிலும் இறைவனது வசனங்கள் ஆகும்.

எனினும் இது மனதில் இருந்து மறைந்து விடும் என்று கருதிய நபி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தமது தோழர்களுக்கும் இதனை கற்றுக்கொடுத்தார்கள். மிருகங்களின் தோல், எலும்புகள், ஈத்தம்பழம் விதை போன்றவற்றில் எழுதி வைக்கப்பட்டது.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தின் பின்பு ஆட்சியை பெற்ற கலீபா(அரசன்) அபூபக்கர் ரளியல்லாஹு அன்ஹு அவர்களின் காலத்தின் ஏற்பட்ட யமாமா யுத்தத்தில் குர் ஆனை மனமிட்ட பலர் உயிர் பிரிந்தனர். ஆதலால் கல்வி ஞானமுடையவர்கள் பயமுற்று தொகுக்க எண்ணினர். பின்பு உமர் அவர்களின் உபதேசதிர்ற்கு அமைய இது புத்தகங்களிலும், தோள்களிலும் தொகுக்கப்பட்டது.

தொகுக்கப்பட்டவை ஹஃஸா ரளியல்லாஹு அன்ஹா அவர்களால் பாதுகாக்கப்பட்டது. பின்பு உஸ்மான் அவர்களின் ஆட்சியில் இஸ்லாமிய பிரச்சாரங்களின் பின்பு அக்கால மக்களால் மனனமிடப்பட்டது. அத்தோடு இதன் பிரதிகளும் அச்சிடப்பட்டு வினியோகிக்கபட்டது.

  திருக்குர்ஆனின்  முக்கிய சிறப்பு  

அன்றைய மக்கள் “இது இறைவாக்கல்ல முஹம்மத் குர்ஆனை புனைந்துரைத்துக்கொண்டிருக்கிறார்” என்று மறுத்துரைத்து பேசியதை குர்ஆனே இவ்வாறு கூறுகிறது

“(நபியே,) இவர்கள் இந்த குர்ஆன் முழுதையும் அவர் மீது ஒரேதடவையில் இறக்கப் பட்டிருக்க வேண்டாமா? எனக்கேட்கிறனர், இவ்வாறு சிறிது சிறிதாக இறக்கியதெல்லாம் உமது இதயத்தை திடப்படுத்துவதற்கே'” – (திருக்குர்ஆன்-25:32)

என்று காரணம் கூறியதோடு நின்று விடாமல் உலகிற்கு விட்ட மெய் சிலிர்க்கச்செய்யும் சவாலே ஐரோப்பியர்களான கீழைதேயவாதிகளை அரபி மொழியில் பாண்டித்தியம் பெற வைத்ததையும் ; வரலாற்றாசிரியர்கள், அறிஞர்களை எல்லாம் குர்ஆனை ஆழமாக ஆராயவும் வழியேற்படுத்திக் கொடுத்தையும் காணலாம். இருந்தும் கூட 1400 ஆண்டுகளாக இன்று வரை உலக அறிஞர்களால் இச்சவாலை முறியடிக்க முடியவில்லை என்பதே திருக்குர்ஆனின் சிறப்பம்சமாக கொள்ளப்படுகிறது. இச்சவால் நான்கு தடவைகளில் எதிர்த்தவர்களுக்கு சார்பாக மிகவும் தாழ்ந்து சென்றுள்ளதையும் அவதானிக்க்க முடிகிறது.

01. இந்த குர் ஆனைப்போல ஒன்றை கொண்டு வருவதற்காக, அவர்களில் சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலு கூட இது போன்ற ஒன்றை அவர்களால் கொண்டு வர முடியாது. – (திருக் குர்ஆன்-17:88)

என்று சவாலை முதலில் தொடங்கும் திருக்குர்ஆன், பின்னைய காலத்தில்

02. அல்லது இவ்வேதத்தை அவர்(முஹம்மத்) பொய்யாக கற்பனை செய்து கொண்டார். என்று அவர்கள் கூறுகிறார்களா?அப்படியானால் நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள். நீங்கள் உண்மையாளராக இருந்தால், அல்லாஹ்வை தவிர உங்களுக்கு சத்தியமான அனைத்தயுமே துணைக்கு அழைத்துக் கொள்ளுங்கள் – (திருக்குர்ஆன்-11:13)

என்பதாக பணிந்து வந்த பின்னும் கூட இலக்கியத்தில் பெரும் புலமை கொண்டிருந்த அக்கால அரபிகளால் முடியாது போனதையும் அதனால் திருக்குர்ஆன் மீண்டும்,

03. இன்னும் (முஹம்மத் ) என்ற நம் அடியாருக்கு நாம் அருளியுள்ள (வேதத்)தில் நீங்கள் சந்தேகமுடையோராக இருந்தால் (சந்தேகத்தில் )உண்மையுடையோராகவும் இருந்தால் அல்லாஹ்வை த்தவிர உங்கள் உதவியாளர்களை (மொத்தமாக) அழைத்துக்கொண்டு இது போன்ற ஒரு அத்தியாயமேனும் கொண்டு வாருங்கள்.- (திருக்குர்ஆன்-2:23)

என்பதாகவும் இறுதியாக,

04. ஆகவே, (எழுத, வாசிக்கத்தெரியாத நீர் இட்டுக்கட்டினீர் எனக்கூறும்) அவர்கள் உண்மையாளர்களாக இருந்தால், இ(வ்வேதத்)தைப் போன்ற ஒரு செய்தியையேனும்(வசனத்தையேனும்) அவர்கள் கொண்டு வரட்டும். – (திருக்குர்ஆன்-52:34)

எனவும் கேட்டு தனது பேராற்றலின் முன் இலக்கியவாதிகளை மொத்தமாக மண்டியிட வைத்ததை காணக் கிடைக்கிறது.மொத்தமாக 6666 வசனங்கள் கொண்ட குர்ஆனில் ஒரு வசனத்தையேனும் கொண்டு வருவதில் உள்ள சிக்கல்தான் என்ன என்பதை அறிய, கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகம் மூலம் அரபிலக்கியத்தில் புலமைப் பெற்ற மேற்கத்திய அறிஞர் ஆர்தர் ஜே. ஆர்பெர்ரியின் கூற்று உதவுகிறது

“குர்ஆனுடைய கருத்துகளை வெளிக்கொணர்வதில் முன்னோர்கள் செய்த முயற்சிகளை விட இன்னும் சிறப்பாக செய்ய நாடினேன். ஆனால் அரபு மொழியில் குர்ஆனில் இருக்கும் ஆழத்தையும் நேர்த்தியையும் மிக குறைவாகவே என்னால் கொண்டு வர முடிந்தது. மிகத்துல்லியமாக பின்னிப் பிணைந்து நிற்கும் ஓசைகளை நான் ஆழமாக கவனித்தேன். குர்ஆனில் இருக்கும் கருத்தழகுக்கு சற்றும் குறைந்ததல்ல அதன் இசை நயம் என்பதையுமுணர்ந்தேன். உலக இலக்கியங்களிலேயே குர்ஆனை இவை இணையற்ற ஒன்றாக விளங்கச்செய்கிறன. குர்ஆனின் இந்த வினோதமான அம்சம் அதற்கேயுரிய தனிப் பாணியாகும். பிறரால் முற்றிலும் கையாள முடியாத பாணியாக அது இருக்கிறது. அதனுடைய ஓசை நயமே மக்களின் கண்களை கசியச்செய்கிறது. உள்ளங்களைப் பரவசமடையச்செய்கிறது.” (Arthur J. Arberry, The Koran Interpreted, London: Oxford University Press, 1964, p. X.)

மற்றொரு பிரபல ஜெர்மனிய அறிஞர் கொய்தே (Johann Wolfgang von Goethe) இவ்வாறு கூறுகிறார்.

“குர்ஆனை எத்தனை முறை பார்த்தாலும் அது முதலில் அன்னியமாக தெரிகிறது; பிறகு புதுமையாக தெரிகிறது; அடுத்து ஒரு தென்றல் போல் மனதை கவர்ந்து செல்கிறது; மதிப்பச்சத்தை ஏற்பத்த்துகிறது- அதனுடைய நடையழகு அதனுடைய கருத்துக்கு ஏற்ப கம்பீரமாகவும் வலுவானதாகவும், அச்சத்தை ஏற்படுத்தக்கூடியதாகவும் அதன் மீது மதிப்புக் கொள்ளச்செய்வதாகவும் உள்ளது. இந்த நூல் இவ்வாறு காலங்காலமாக மக்கள் மீது தன் ஆதிக்கத்தைச் செலுத்தக் கூடியதாக இருக்கின்றது. ” (Goethe, quoted in T.P. Hughes’ Dictionary of Islam, p. 526.)

இவ்வாறான சிறப்புகளுடன், குர்ஆஆனினது அறைகூவல் 1400 ஆண்டுகளாக இன்று வரை உலக மக்களை நோக்கி விடுக்கப்பட்டுக் கொண்டே வருவதாகவும்; பல நூற்றாண்டுகளாக அரபிலக்கியம் கற்க படையெடுத்த கீழைத்தேயவாதிகளாலும், மற்றும் எகிப்து, சிரியா, லெபனான், ஈராக், சூடான் என பலநாடுகளில் இலட்சகணக்கில் வாழும் முஸ்லிமல்லாத அரேபிய அறிஞர்களாலும் இச்சவாலை இன்று வரை முறியடிக்க முடியவில்லை என்பதும் வரலாறாகியிருக்கிறது.

திருகுர்ஆனை அணுகுவதற்கு முன் திருக்குர்ஆன் பற்றிய அடிப்படையான சில செய்திகளை அறிந்து கொள்வது அவசியம். திருகுர்ஆனை இறைவனுடைய வேதம் என்று முஸ்லிம்கள் நம்பினாலும் முஸ்லிமல்லாதவர்கள் பலர் முஹம்மது நபி அவர்களால் எழுதப்பட்டதே திருக்குர்ஆன் என்று நினைக்கின்றனர்.

“அகிலத்ததாருக்கெல்லாம் இறைவனிடமிருந்து (இது) இறக்கியருளப்பட்டதாகும். அன்றியும், நம்மீது சொற்களில் சிலவற்றை இட்டுக் கட்டிக் கூறியிருப்பாரானால் -அவருடைய வலக்கையை நாம் பற்றிப் பிடித்துக் கொண்டு- பின்னர், அவருடைய நாடி நரம்பை நாம் தரித்திருப்போம்.” (அல்குர்ஆன் 69:44)

“அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், ‘இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்’ என்று கூறுகிறார்கள். அதற்கு என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக.” (அல்குர்ஆன் 10:15)

“(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) ‘நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்’ என்று அவர்கள் கூறுகிறார்கள்: எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள். ” (அல்குர்ஆன் 16:101)

“இந்த குர்ஆன் அல்லாஹ் அல்லாத வேறு யாராலும் கற்பனை செய்யப்பட்டதன்று; (அல்லாஹ்வே அதை அருளினான்.) அன்றியும், அது முன்னால் அருளப்பட்ட வேதங்களை மெய்ப்பித்து அவற்றிலுள்ளவற்றை விவரிப்பதாகவும் இருக்கிறது. (ஆகவே) இது அகிலங்களுக்கெல்லாம் (இறைவனாகிய) ரப்பிடமிருந்து என்பதில் சந்தேகமேயில்லை. இதை (நம் தூதராகிய) அவர் கற்பனை செய்து கொண்டார் என அவர்கள் கூறுகின்றார்களா? (நபியே!) நீர் கூறும்: ‘நீங்கள் (உங்கள் கூற்றில்) உண்மையாளர்களாக இருந்தால், இதிலுள்ளதைப் போல் ஓர் அத்தியாத்தைக் கொண்டு வாருங்கள்; அல்லாஹ்வையன்றி உங்களால் சாத்தியமானர்வகளை (உங்களுக்கு உதவி செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்!’ என்று.” (அல்குர்ஆன் 10:37-38)

” அல்லது ‘இ(வ் வேதத்)தை அவர் பொய்யாகக் கற்பனை செய்து கொண்டார்’ என்று அவர்கள் கூறுகிறார்கள்? ‘(அப்படியானால்) நீங்களும் இதைப் போன்ற கற்பனை செய்யப்பட்ட பத்து அத்தியாயங்களை கொண்டு வாருங்கள் – நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால்! அல்லாஹ்வைத் தவிர்த்து உங்களுக்கு சாத்தியமான எல்லோரையுமே (இதற்குத் துணை செய்ய) அழைத்துக் கொள்ளுங்கள்’ என்று (நபியே!) நீர் கூறுவீராக. ” (அல்குர்ஆன் 11:13)

“(நபியே! நீர் இதைக் கூறும் போது:) ‘இதனை இவர் இட்டுக் கட்டிச் சொல்கிறார்’ என்று கூறுகிறார்களா? (அதற்கு) நீர் கூறும்: ‘நான் இதனை இட்டுக் கட்டிச் சொல்லியிருந்தால், என் மீதே என் குற்றம் சாரும்¢ நீங்கள் செய்யும் குற்றங்களிலிருந்து நான் நீங்கியவன் ஆவேன்.'” (அல்குர்ஆன் 11:35)

  முரண்பாடின்மை  

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சுயமாகக் கற்பனை செய்து ‘அதை இறைச் செய்தி’ என மக்களிடம் கூறியிருக்கலாம் என்று சிலர் நினைக்கக்கூடும். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாமாக உருவாக்கி இதைக் கூறியிருக்க முடியாது என்பதற்கு ஏற்கத்தக்க நியாயமான பல காரணங்கள் உள்ளன. பொதுவாக மனிதர்களின் பேச்சுக்களில் முரண்பாடுகள் காணப்படும். ஒரு நாள், இரண்டு நாட்கள் வேண்டுமானால் முரண்பாடு ஏற்படாத வகையில் மிகவும் கவனமாகப் பேசிட இயலும். எவ்வித முரண்பாடும் இன்றி எவராலும் ஆண்டுக்கணக்கில் பேசிட இயலாது.

எந்த மாபெரும் அறிஞரின் ஐந்து வருடப் பேச்சுக்களை ஆய்வு செய்தாலும் ஏராளமான விசயங்களில் அவர் முரண்பட்டுப் பேசியிருப்பதைக் காண முடியும்.

o  முன்னர் பேசியதை மறந்து விடுதல்!

o  முன்னர் தவறாக விளங்கியதைப் பின்னர் சரியாக விளங்குதல்!

o  கவலை, துன்பம் போன்ற பாதிப்புகள் காரணமாக போதுமான கவனமின்றி பேசுதல்!

o  யாரிடம் பேசுகிறோமோ அவர்கள் மனம் கோணக் கூடாது என்பதற்காக அல்லது அவர்களிடமிருந்து ஆதாயம் பெறுவதற்காக வளைந்து கொடுத்துப் பேசுதல்!

o  வயது ஏற ஏற மூளையின் திறனில் ஏற்படும் குறைபாடுகள்! • விளைவுகளுக்கும், நெருக்கடிகளுக்கும் அஞ்சி இரட்டை நிலை மேற்கொள்ளுதல்! மற்றும் இது போன்ற ஏராளமான பலவீனங்கள் மனிதனுக்கு இருப்பதால் முரண்பாடுகள் இல்லாத ஒரே ஒருவரைக் கூட காண முடியாது. ஆனால் திருக்குர்ஆனை முகம்மது நபி அவர்கள் சிறிது சிறிதாக 23 ஆண்டுகளாக மக்களிடம் போதித்தார்கள்.

இது அவர்களின் சொந்தக் கற்பனையாக இருந்திருந்தால், 23 வருடப் பேச்சுகளில் ஏராளமான முரண்பாடுகள் அவர்களிடம் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் திருக்குர்ஆனில்; முரண்பாடுகள் எள்ளளவும் இல்லை. மேலே சுட்டிக் காட்டிய பலவீனங்கள் எதுவுமே இல்லாத ஏக இறைவனின் வார்த்தையாக இருந்தால் மட்டுமே முரண்பாடு இல்லாமல் இருக்க முடியும். இறைவனிடமிருந்து வந்ததால்தான் தன்னுள் முரண்பாடு இல்லை என்று மனித குலத்துக்கு திருக்குர்ஆன் அறைகூவல் விடுகிறது.

”அவர்கள் இந்த குர்ஆனை (கவனமாக) சிந்திக்க வேண்டாமா, (இது) அல்லாஹ் அல்லாத பிறரிடமிருந்து வந்திருந்தால், இதில் ஏராளமான முரண்பாடுகளை அவர்கள் கண்டிருப்பார்கள்”. (அல்குர்ஆன் 4:82)

கட்டுரையின் தொடர்ச்சிக்கு “Next” ஐ “கிளிக்” செய்யவும்.

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 4 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb