Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

திருக்குர்ஆன்: அப்பழுக்கற்ற தூய்மையான இறைவேதம் (2)

Posted on May 31, 2010 by admin

இந்த நூற்றான்டின் • அது போல் மனிதன் மற்றும் உயிரினங்கள், அவற்றின் உள் அமைப்புகள், உயிரினங்கள் உற்பத்தியாகும் விதம் எனப் பல விசயங்களைக் குர்ஆன் பேசுகிறது. 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதன் பேசுவது போல் பேசவில்லை. இந்த நூற்றாண்டின் தேர்ந்த மருத்துவ மேதை பேசுவதை விட அழகாகப் பேசுகிறது.

தாவரங்களைப் பற்றிப் பேசினாலும், மலைகளைப் பற்றிப் பேசினாலும், நதிகளைப் பற்றிப் பேசினாலும் 14 நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்தவர் பேசியது போல் திருக்குர்ஆனின் பேச்சு இல்லை.

• அது மட்டுமின்றி சென்ற நூற்றாண்டுக்கு முன்னால் வரை கண்டுபிடிக்கப்படாத, தற்போது கண்டு பிடிக்கப்பட்ட பல விசயங்களை குர்ஆன் அன்றே சொல்லியிருக்கிறது.

• இன்று வாழும் பல்வேறு துறைகளிலும் தேர்ந்த அறிவுடைய ஒருவர் பேசுவதை விடச் சிறப்பாக திருக்குர்ஆன் பேசுவதையும், நபிகள் நாயகத்தின் காலச் சூழ்நிலையையும் ஒரு சேர சிந்திக்கும் யாரும் இது முகம்மது நபி அவர்களின் சொந்த வார்த்தையாக இருக்க முடியாது: முக்காலமும் உணர்ந்த இறைவனின் வார்த்தையாகத் தான் இருக்க முடியும் என்ற முடிவுக்குத் தான் வந்தாக வேண்டும்.

• அறிவியல், நவீன கண்டுபிடிப்புகள் மட்டுமின்றி குர்ஆன் கூறுகின்ற அரசியல் சட்டங்கள், குற்றவியல் மற்றும் சிவில் சட்டங்களை ஒருவர் ஆய்வு செய்தால் இன்று உலகமெங்கும் உள்ள எல்லாச் சட்டங்களை விடவும் அது சிறந்து விளங்குவதையும், மனித குலத்துக்கு அதிகப் பயன் தரக்கூடிய வகையில் அமைந்திருப்பதையும் அறிந்து கொள்வார். முஸ்லிமல்லாதவர்கள் கூட குர்ஆன் கூறும் சட்டங்களை அமுல்படுத்தக் கோரும் அளவுக்கு குர்ஆன் கூறும் சட்டங்கள் அமைந்துள்ளன.

• ஏராளமான சட்டங்களையும், மரபுகளையும், முன் அனுபவங்களையும் ஆய்வு செய்து பல்வேறு சட்டமேதைகள் உருவாக்கிய சட்டங்களே ஆண்டு தோறும் திருத்தப்பட்டு வரும் நிலையில் இறைச் சட்டங்கள் என முகம்மது நபி அவர்கள் அறிமுகப்படுத்திய சட்டங்கள் பலராலும் வரவேற்கப்படுவது முகம்மது நபி அவர்களின் சொந்தக் கூற்றாக இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்றாக உள்ளது.

• அது போல் உலகம் சந்திக்கின்ற தீர்க்க முடியாத பல பிரச்சனைகளுக்கு ஏற்கத் தக்க அற்புதமான தீர்வுகளைக் குர்ஆன் கூறுவதும் இது முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொந்தக் கூற்று இல்லை என்பதற்கான ஆதாரமாக உள்ளது.

குலம், கோத்திரம், சாதி இவற்றால் ஏற்படும் தீண்டாமை ஆகியவை உலகில் பல நாடுகளில் பல நூறு ஆண்டுகளாக தீர்க்கப்படாத பிரச்சனைகளாக உள்ளன. இந்த சிக்கலான பிரச்சனைக்கும் மிக எளிதான தீர்வை வழங்கி இவற்றை திருக்குர்ஆன் அடியோடு ஒழித்துக் கட்டியதை இதற்கு உதாரணமாகக் குறிப்பிடலாம்.

எதிர் காலத்தில் நடக்கவுள்ள பல செய்திகளைக் குர்ஆன் கூறுகிறது. அது கூறியவாறு அவற்றுள் பல நிகழ்வுகள் நடந்து முடிந்துள்ளன.வார்த்தைக்கு வார்த்தை நிறைவேறிய இத்தகைய முன்னறிவிப்புகள் ஏராளம். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சொந்தக் கூற்றாக குர்ஆன் இருக்கவே முடியாது என்பதற்கு இவையாவும் ஆதாரங்களாக உள்ளன.

எழுதப் படிக்கத் தெரியாத ஒருவர் இதைக் கற்பனை செய்தார் என்று நீங்கள் கூறுவது உண்மையானால் இது போல் ஒரு அத்தியாயத்தையாவது கொண்டு வந்து காட்டுங்கள் என்று குர்ஆன் அறை கூவல் விடுகிறது. (பார்க்க அல்குர்ஆன் 2:23, 10;:38, 11:13, 17:88, 52:34)

இந்த அறைகூவல் 14 நூற்றாண்டுகளாக யாராலும் எதிர் கொள்ளப்படவில்லை. யாராலும் எதிர் கொள்ளப்பட முடியாது எனவும் குர்ஆன் முன்கூட்டியே திட்டவட்டமாக அறிவிக்கிறது.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறைவேதம் என்று அறிமுகப்படுத்திய குர்ஆனை விட பல மடங்கு அதிகமாகப் பேசியுள்ளனர். இறைத்தூதர் என்று தம்மை அறிவித்த பின் அவர்கள் வாழ்ந்த 23 வருடங்களில் பேசிய பேச்சுகள் பாதுகாக்கப் பட்டுள்ளன.

அந்தப் பேச்சுக்களையும், குர்ஆனையும் எந்த மொழியியல் அறிஞர் ஆய்வு செய்தாலும் இரண்டும் ஒரே நபரின் கூற்றாக இருக்க முடியாது என்று திட்டவட்டமாகக் கூறுவார். இரண்டுக்குமிடையே இலக்கியச் சுவையிலும், நடையிலும் பெரிய வேறுபாட்டைக் காண்பார்.

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழக்கமான பேச்சுக்கு மாற்றமாகவும், அதை விடப் பன்மடங்கு உயர்ந்தும் நிற்கின்ற அதன் அழகே இறை வேதம் என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது. முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைக் கூறியிருக்க முடியாது என்று ஒப்புக் கொள்ளும் ஆய்வாளர்கள், யூத கிறித்தவ சமுதாய மக்களின் வேதங்களிலிருந்து கற்று இவர் கூறுகிறார் எனக் கூறியதுண்டு. இன்றைக்கும் கூட சில கிறித்துவ நண்பர்கள் இவ்வாறு கூறுவதுண்டு.

ஏனெனில் நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முன் வாழ்ந்த ஆதாம், நோவா, மோசே, யோவான், யோபு, தாவீது, ஸாலமோன், இயேசு போன்ற பல்வேறு இறைத் தூதர்கள் பற்றி யூத கிறித்தவ வேதங்கள் கூறுகின்றன. குர்ஆனும் இவர்களைப் பற்றிப் பேசுவதால் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முந்தைய வேதங்கள் வழியாக அறிந்து அதைக் கூறுகிறார் எனக் கூறுகின்றனர். பல காரணங்களால் இது தவறாகும்.

மேற்கண்ட நன்மக்களின் பெயர்களைத் தான் குர்ஆன் கூறுகிறதே தவிர யூத கிறித்தவ வேதங்கள் கூறுவது போல் அவர்களைப் பற்றிக் கூறவில்லை.

இவர் அவரைப் பெற்றார், அவர் இவரைப் பெற்றார் என்று யூத கிறித்தவ வேதங்களில் உள்ளது போல் தலைமுறைப் பட்டியல் ஏதும் குர்ஆனில் இல்லை.

மேற்கண்ட நன்மக்கள் குடி, விபச்சாரம், மோசடி போன்ற தீய பழக்க வழக்கங்கள் உடையோராக இருந்தனர் என்று மற்ற வேதங்கள் கூறுவது போல் குர்ஆன் கூறவில்லை. மாறாக அவர்கள் நன்மக்களாகத் திகழ்ந்தார்கள் என்று கூறுகிறது.

அவர்கள் வாழ்வில் நாம் படிப்பினை பெறத் தேவையான முக்கிய நிகழ்ச்சிகளை மட்டுமே குர்ஆன் கூறுகிறது. அதுவும் மற்ற வேதங்கள் கூறுவதற்கு எதிராகக் கூறுகிறது.

இவ்வாறிருக்க முந்தைய வேதங்களை முஹம்மது நபிஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காப்பியடித்து விட்டார்கள் எனக் கருத முடியாது.

யூத, கிறித்தவ வேதங்களில் மிகப் பெருமளவுக்கு வரலாறுகளும் மிகச் சிறிய அளவுக்கு சில போதனைகளும் மட்டுமே உள்ளன. வாழ்வின் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் அந்த வேதங்களில் எவ்வித வழிகாட்டுதலும் காணப்படவில்லை. ஆனால், திருக்குர்ஆன் மிகக் குறைந்த அளவில் மனிதர்கள் படிப்பினை பெற தேவையான சில வரலாற்றுத் துணுக்குகளை மட்டுமே குறிப்பிடுகிறது. மேலும் மனிதன் சந்திக்கின்ற அனைத்துப் பிரச்சனைகளிலும் ஏற்கத் தக்க தீர்வையும் கூறுகிறது. இவை யூத கிறித்தவ வேதங்களில் கூறப்படாதவை. எனவே, அவ்வேதங்களிலிருந்து திருக்குர்ஆன் காப்பியடிக்கப்பட்டது என்று கூறுவது அடிப்படையற்றதாகும்.

மற்ற சமுதாய மக்களைப் போலவே யூத கிறித்தவ மக்களும் அதிக அளவில் நபிகள் நாயகத்தை இறைத் தூதராக ஏற்றனர். தங்கள் வேதங்களில் உள்ளதையே காப்பியடித்துக் கூறும் ஒருவரைத் தங்கள் வழி காட்டியாக அம்மக்கள் ஏற்றிருக்க மாட்டார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளத் தக்கது.

எனவே முற்றிலும் இது இறைவன் புறத்திலுருந்து நபிகள் நாயகத்துக்கு அருளப்பட்ட செய்தி தான் என்பதும், முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாமாக உருவாக்கிக் கொள்ளவில்லை என்பதும் எவ்வித சந்தேகத்திற்கும் அப்பாற்பட்டது.

எதிர்பார்ப்புகள் இல்லை

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொந்தமாகக் கற்பனை செய்தார் என்று வைத்துக் கொண்டால் கடவுளின் பெயரைப் பயன்படுத்தி அவர் கற்பனை செய்ததற்கு நிச்சயமாக ஒரு எதிர்பார்ப்பு இருக்க வேண்டும். தாமாகக் கற்பனை செய்து அதைக் கடவுளின் வார்த்தை என்று கூறியதன் மூலம் அவர் அடைந்த லாபம் என்ன என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் 25ஆம் வயதில் வணிகராகவும் நாற்பதாம் வயதில் ஊரிலேயே பெரிய செல்வந்தராகவும் ஆனார்கள். இந்த வயதில் தான் தமக்கு இறைவனிடமிருந்து செய்தி வருவதாக அவர்கள் வாதிட்டனர். எனவே இதன் மூலம் செல்வம் திரட்டும் நோக்கம் ஏதும் அவர்களுக்கு இருந்திருக்க இயலாது என்பதை அறியலாம். இருக்கின்ற செல்வத்தை பெருக்கிக் கொள்வதும் நோக்கமாக இருந்ததா என்றால் அதுவுமில்லை. ஏனெனில் அவர்கள் சொந்த ஊரை விட்டும், தமது சொத்துக்கள் விட்டும் ஓட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டார்கள்.

தாம் இறைத் தூதர் என்று கூறுவதையும், தமது பிரச்சாரத்தையும் கைவிடுவதாக இருந்தால் ஊரை விட்டு விரட்டப்படுவதிலிருந்து அவர்கள் தப்பித்திருக்க முடியும்.அந்தச் சமுதாயம் இதைத் தான் அவர்களிடம் வேண்டியது. ஆனாலும் அனைத்தையும் துறந்து விட்டு வெறுங்கையுடன் ஊரை விட்டு வெளியேறினார்கள். பல்லாண்டுகள் பாடுபட்டு திரட்டிய செல்வங்கள் அனைத்தையும் தமது கொள்கைக்காக இழக்கத் துணிந்தவருக்கு பொருளாதாரத்தைப் பெருக்கிக் கொள்வது நோக்கமாக இருந்திருக்க முடியாது என்பதை இதிலிருந்து அறியலாம். பொருளாதாரத்தைத் திரட்டுவதற்காக இறைவனின் பெயரால் கற்பனை செய்தவர் இருக்கின்ற பொருளாதாரத்தை இழப்பதற்கு முன் வர மாட்டார்.

ஊரை விட்டு விரட்டப்பட்டு மதீனா நகரில் ஓரு ஆட்சியை நிறுவிய பிறகு அவர்கள் நினைத்திருந்தால் பொருளாதாரத்தை விரும்பிய அளவுக்கு திரட்டியிருக்க முடியும். ஏனெனில் அவர்களின் ஆட்சி அவ்வளவு செழிப்பாக இருந்தது. • இந்த நிலையிலும் அவர்கள் தமக்காக செல்வம் திரட்டவில்லை. • அரண்மனையில் வசிக்கவில்லை. • கடைசி வரை குடிசையிலேயே வாழ்ந்து குடிசையிலேயே மரணித்தார்கள். • அவர்களும், அவர்களின் குடும்பத்தினரும் அன்றாடம் வயிறார சாப்பிடவில்லை. • ஒரு மாதம் அளவுக்கு வீட்டில் அடுப்பு மூட்டாமல் பேரீச்சம் பழங்களையும், தண்ணீரையும் மட்டுமே உணவாக உட்கொண்டு வாழ்ந்தார்கள்.

நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு சிறிய போர்வைகளையே மேலாடையாகவும், கீழாடையாகவும் அணிந்தனர். விஷேச நாட்களில் அணிந்து கொள்வற்காக தைக்கப்பட்ட ஆடைகள் ஒன்றிரண்டு மட்டுமே அவர்களிடம் இருந்தன. • வாழ்நாள் முழுவதும் அவர்கள் வீட்டில் விளக்கு இருந்ததே இல்லை. இருட்டிலே தான் அவர்கள் இரவுப் பொழுதைக் கழித்திருக்கிறார்கள். • தமது கவச ஆடையை அடைமானம் வைத்து மீட்காமலே மரணித்தார்கள். • ஒரு நிலப்பரப்பு, குதிரை, சில ஆடுகள் ஆகியவை தாம் அவர்கள் விட்டுச் சென்றவை. அதுவும் தமது மரணத்திற்குப் பின் அரசுக்குச் சேர வேண்டும்: தமது குடும்பத்தினர் வாரிசாகக் கூடாது என்று பிரகடனம் செய்தார்கள்.

நபிகள் நாயகத்தின் இந்தத் தூய வரலாற்றை அறிகின்ற எவரும் பொருள் திரட்டுவற்காக இறைவன் பெயரால் நபிகள் நாயகம் கற்பனை செய்தார்கள் என்று நினைக்க மாட்டார்.

மக்களிடம் புகழ், மரியாதை அடைவற்காக இப்படிக் கடவுள் பெயரைப் பயன்படுத்தியிருப்பார்களோ என்று நினைத்தால் அதுவும் தவறாகும். ஏனெனில் திருக்குர்ஆனை ஒருவர் முழுமையாக வாசித்தாலே இந்தச் சந்தேகத்திலிருந்து விடுபடுவார். புகழுக்காக ஆசைப்படும் ஒருவர் தமது மரியாதைக்கும், கௌரவத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் சொற்களைக் கடவுள் பெயரால் கற்பனை செய்ய மாட்டார்.

• ‘இறைவன் முன்னால் நிறுத்தப்படும் போது வெற்றி பெறுவேனா என்பது எனக்குத் தெரியாது’

• ‘என்னிடம் இறைவனி பொக்கிஷங்கள் இல்லை: எனக்கு மறைவானது தெரியாது’

• ‘தப்புச் செய்தால் நானும் கடவுளிடம் தப்பிக்க முடியாது’

• ‘நானும் உங்களைப் போன்ற மனிதனே’ என்றெல்லாம் மனிதர்களிடம் தெளிவாகத் தெரிவிக்குமாறு திருக்குர்ஆன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கட்டளையிடுகிறது.

நீர் எப்படி மனிதருக்கு அஞ்சுகிறீர் எனக்கு ஏன் அஞ்சவில்லை என்று கடவுள் தம்மைக் கண்டித்ததாகக் கூறினார்கள்.

கண் தெரியாத ஒருவரை நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கடிந்து கொண்ட போது, அது கண் தெரியாதவருக்குத் தெரியாத நிலையிலும் அவரிடம் தான் நடந்து கொண்ட முறையை இறைவன் கண்டித்ததாகக் கூறினார்கள்.

நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் கூட மக்கள் மத்தியில் தமது மரியாதை குறைவதை ஜீரணிக்க மாட்டோம். நபிகள் நாயகம் அவர்களோ தம்மைக் கண்டித்து தமது மதிப்மைக் குலைக்கும் சொற்கள் பலவற்றை இறை வார்த்தை என்று அறிவித்தார்கள். தானே கடவுள் என்று அறிவித்தாலும் நம்பும் அளவுக்கு மக்கள் அவர்கள் மீது அன்பு வைத்திருந்தும் தம்மையும் அவர்களைப் போன்ற மனிதராகவே கருதினார்கள்.

இந்த விபரங்கள் யாவும் இறைச் செய்தி என்று நபிகள் நாயகம்ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அறிமுகம் செய்த திருக்குர்ஆனிலேயே காணப்படுகின்றன. தம்மைக் கண்டிக்கின்ற தமது மரியாதைக்குப் பங்கம் ஏற்படுத்துகின்ற செய்திகளை தமக்கு எதிராகவே ஒருவர் எவ்வாறு கற்பனை செய்வார் என்று சிந்தித்தால் திருக்குர்ஆன் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கற்பனையாக இருக்கவே முடியாது என்பதை அறிந்து கொள்ள முடியும்.

• அவர்களுக்குப் பல்லக்கு இருக்கவில்லை! • அவர்களுக்கு வாயிற் காப்போன் இருக்கவில்லை!

• காலில் விழுவதை அவர்கள் அனுமதிக்கவில்லை!

• தமக்காக பிறர் எழுந்து நிற்பதையும் தடுத்தார்கள்!

• இயேசுவை (ஈஸா நபியை) மற்றவர்கள் புகழ்வது போல் என்னை வரம்பு மீறிப் புகழாதீர்கள்’ என்று எச்சரித்தார்கள்!

மிகச் சாதாரண ஒரு மனிதன் எதிர்பார்க்கும் புகழைக் கூட அவர் விரும்பவில்லை, மக்களிடம் பெற்றதுமில்லை.மக்களிடம் மதிப்பையும், மரியாதையையும் பெறுவதற்காகக் கடவுள் வார்த்தை என்று கற்பனை செய்தார்கள் என்பதும் ஏற்க முடியாததாகும்.

மேற்கத்தியர்களின் திருக் குர்ஆன் ஆய்வுகள்.

” உலகத்திலுள்ள பெரும் மத கிரந்தங்களில் குர் ஆன் திண்ணமாக முக்கிய இடத்தை வகிக்கிறது. உலகில் புரட்சி சகாப்தத்தை தோற்றுவித்த இந்த கிரந்தங்களில் அது இளைய வயது கொண்டதாக இருந்த போதிலும் மக்களின் உள்ளங்களை மாற்றுவதிலும், பெரும் மக்கள் கூட்டத்தையே வியக்கத்தக்க முறையில் மாற்றியமைப்பதிலும், அதற்கு இணையான வேறு கிரந்தம் இல்லை.

அது முற்றிலும் புதிய சிந்தனையை மக்கள் மத்தியில் தோற்றுவிக்கிறது . நவீன பண்பாட்டை உருவாக்குகிறது. அது முதலில் அரேபிய பாலைவனத்தில் சிதறிக்கிடந்த மக்களை இலட்சியத்தை பேணும் குழுவாக ஒன்றினைத்தது. அவர்களை மக்களில் சிறந்தவர்களாய் மாற்றியது. ஐரோப்பிய மக்களும் கிழக்கத்திய மக்களும் இன்றைக்கும் மதிக்கும் அளவுக்கு சமய , அரசியல் அமைப்புக்களை அது தோற்றுவித்துள்ளது. ” – G. மார்கோலத் (G. Margoliouth: Introduction to J.M. Rodwell’s ‘The Koran’, New York: Everyman’s Library, 1977, p. VII.)

” நான் மேலே கூறிவந்த (அவரது நூலில்) விபரங்கள் முஹம்மத் குர் ஆணைப் புனைந்தார் என்று கூறுவதை அடிப்படை யற்றது என தெளிவாக காட்டுகிறன. கல்வி அறிவில்லாத ஒருவர் திடீரென சிறந்த இலக்கிய நயம் வாய்ந்த ஒரு கிரந்தத்தின் இன்றைக்கும் அரபி இலக்கியத்தில் இணையற்று விளங்கும் ஒரு கிரந்தத்தின் ஆசிரியராய் ஆக முடியுமா? அது மட்டுமல்ல அந்த நூற்றாண்டில் வாழ்ந்த மனிதன் கற்பனை செய்தும் பார்த்திராத இன்றைய விஞ்சான வளர்ச்சியின் மகத்தான கண்டு பிடிப்புகளின் எதார்த்த நிலையை அன்றைக்கே அவரால் எப்படித்துல்லியமாக தெரிவிக்க முடிந்தது? ” – Dr.மாரிஸ் புகைல் (Dr. Maurice Bucaille – author of “The Bible, the Quran and Science” 1978, p. 125)

” அதனுடைய வலிமையை இலக்கிய நயம் மற்றும் முன் கூட்டியே வைத்த சில துலாக் கோள்களைக் கொண்டு பார்க்கக் கூடாது. மாறாக, அன்று அவருடன் வாழ்ந்த மக்கள் மீது அது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியது, அந்நாட்டு மக்களிடையே அது எத்தகைய மாற்றங்களை உருவாக்கியது என்பதைக்கொண்டே அதன் வலிமையை நாம் கணிக்க வேண்டும்.

கருத்துகளில் முற்றிலும் மாறுபட்ட பரஸ்பர பகைமை கொண்ட மக்களின் உள்ளங்களை அது தொட்டு அவர்களின் உணர்ச்சிகளை மாற்றி, ஓர் இணக்கமான சமூகமாக பிணைத்தது என்பது வரலாற்று உண்மையாகும். இந்த உண்மையே அது அளவற்ற இலக்கிய நயம் கொண்ட வேதம் என்பதை தெளிவாக்குகிறது. பண்பாடற்ற மக்களை மிகவும் நாகரிகம் வாய்ந்த சமுகமாக மாற்றி வரலாற்றின் வெற்றிச் சிகரத்திற்கு அவர்களை இட்டுச்சென்றிருப்பதிலிருந்தே அந்த வேதத்தின் மகிமையை நாம் உணரலாம். ” – Dr.ஸ்டெயின் காஸ் (Dr. Steingass, quoted in Hughes’ Dictionary of Islam, p. 528)

கட்டுரையின் தொடர்ச்சிக்கு ”Next” ஐ ‘‘கிளிக்” செய்யவும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 68 = 70

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb