Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இணையத்தில் தோற்கும் மைக்ரோசாஃப்ட்

Posted on May 28, 2010 by admin

[ கடந்த சில ஆண்டுகளாகவே போட்டி உலவிகளால் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு ஐரோப்பிய யூனியனின் முடிவு பேரிடியாக அமைந்துவிட்டது.​

அண்மையில் வெளியான கணிப்புப்படி,​​ உலக அளவில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பயன்படுத்துவோரின் அளவு 60 சதவீதத்துக்கும் கீழே சரிந்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.​ அதே நேரத்தில் ஃபயர்ஃபாக்ஸ் மற்றும் கூகுள் க்ரோம் ஆகியவை முறையே சுமார் 25 மற்றும் சுமார் 10 சதவீத பயனாளர்களை ஈர்த்திருக்கின்றன.​ இது அதிரடியான மாற்றம்.

அதிருப்தியில் இருக்கும் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் -​ 9 பதிப்பை ”எச் டி எம் எல் 5” என்கிற வெகுநவீனத் தொழில்நுட்ப வசதியுடன் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறது.​]

கணினித் தொழில்நுட்பங்கள் நாளுக்கு நாள் மாறிக்கொண்டே இருக்கின்றன.​ இன்றைக்கு இருக்கும் தொழில்நுட்பம் இன்னும் எவ்வளவு காலத்துக்குக் காலாவதியாகாமல் இருக்கும் என்பதைக் கணிக்கக்கூட முடியாத அளவுக்கு இந்த மாற்றங்கள் வேகம்பிடித்திருக்கின்றன.​ மாற்றங்களைத் தாங்காத சில தொழில்நுட்பங்கள் நாள் கணக்கிலேயே காணாமல் போய்விடுகின்றன.​ மாற்றங்களை உள்வாங்கிக் கொள்ளும் தொழில்நுட்பங்களுக்கு ஆயுள் அதிகமாக இருக்கிறது.

இதையெல்லாம் சரியாகக் கணித்து தொழில் உத்திகளை வகுத்துக் கொள்ளும் நிறுவனங்கள்தான் தொழில்நுட்பத்துறையில் நீடித்திருக்கின்றன.​ அப்படியொரு தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய நுணுக்கங்களைக் கொண்டிருக்கும் நிறுவனம்தான் மைக்ரோசாஃப்ட்.

தொழில் தந்திரங்களை வகுத்துக் கொள்வதில் மைக்ரோசாஃப்டின் பாணி வியக்கத்தக்கது.​ ஒரு மென்பொருளை விற்கும்போது,​​ அதனைச் சுற்றிய வேறு பல மென்பொருள்களையும் திணித்துவிடுவதுதான் மைக்ரோசாஃப்டின் வழக்கம்.​ அப்படித் திணிக்கப்பட்ட ஒரு மென்பொருள்தான் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்.​ கணினி வழியாக இணையத்துக்குள் நுழைவதற்கான இணைய உலவி இது.

இயக்க அமைப்பு மென்பொருள் சந்தையில் 90 சதவீதத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் மைக்ரோசாஃப்ட்,​​ தனது விண்டோஸ் இயக்க அமைப்புடன் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரையும் நுழைத்துவிடுகிறது.​ இதனால்,​​ இணையத்தைத் தொடர்பு கொள்ள வேண்டுமானால்,​​ இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பயன்படுத்த வேண்டும் என்பதே சில ஆண்டுகளுக்கு முன்புவரை எழுதப்படாத விதியாக இருந்தது.​ அதாவது இணையம் என்பதும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் என்பதும் வெவ்வேறல்ல என்பது போன்ற மாயை இருந்தது.​ இணையத்தில் கரைகண்டவர்கள்தான் வேறுவகையான உலவிகளைப் பற்றித் தெரிந்து வைத்திருந்தார்கள்.​ ​

தொழில் தந்திரங்களின் மூலம் முன்னணியிலிருந்த நெட்ஸ்கேப் நேவிகேட்டர் போன்ற உலவிகளைப் பின்னுக்குத் தள்ளியது மைக்ரோசாஃப்ட்.​ இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் 95 சதவீதம் பேருக்கு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைத் தவிர வேறு எந்த உலவியையும் பயன்படுத்தும் தெளிவில்லை என்று ஆய்வுகள் கூறின.

ஆனால் கணினித் தொழில்நுட்ப உலகின் காலச் சக்கரம் நிபுணர்களின் கணிப்பை விடவும் மிக வேகமாகச் சுழல்கிறது.​ ஆறேழு ஆண்டுகளுக்கு முன்புவரை கணினி மென்பொருள் உலகில் ஏகபோகமாக இருந்த ​ மைக்ரோசாஃப்டுக்கு ஐரோப்பிய யூனியன் வடிவில் சோதனை வந்தது.​ உலகின் மற்ற பகுதிகளெல்லாம் மைக்ரோசாஃப்ட் கொடுப்பதை கேள்விகேட்காமல் வாங்கிக் கொண்டிருந்த நிலையில்,​​ மீடியா ப்ளேயர்,​​ இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் போன்றவற்றை விண்டோஸன்டன் இணைத்துக் கொடுப்பது பற்றி ஐரோப்பிய யூனியன் சந்தேகம் எழுப்பியது.

மற்ற நிறுவனங்களின் மென்பொருள்களைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே இந்தச் செருகல் உத்தியை மைக்ரோசாஃப்ட் பயன்படுத்துவதாகக் குற்றம்சாட்டப்பட்டது.​ இதனால்,​​ மீடியா ப்ளேயர் இல்லாத விண்டோஸ் இயக்க அமைப்பை ஐரோப்பிய யூனியனுக்காகத் தயாரித்து வழங்க வேண்டிதாயிற்று.​ பல ஆயிரம் கோடி அபராதம் வேறு.​ மைக்ரோசாஃப்டின் வியாபாரத் தந்திரத்துக்கு வைக்கப்பட்ட அதிரடியான முதல் குட்டு இதுதான்.

கடந்த ஆண்டு இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கும் சோதனை வந்தது.​ கூகுள் க்ரோம்,​​ ஃபயர்ஃபாக்ஸ் போன்ற உலவிகளுக்கு வாய்ப்பளிக்கும் வகையில்,​​ இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் இல்லாத விண்டோள்ஸ வழங்குமாறு மைக்ரோசாஃப்டுக்கு உத்தரவிடப்பட்டது.​ அதன்படி ”விண்டோஸ்-7” ஐரோப்பிய பதிப்பில் மட்டும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் கிடையாது.​ தேவைப்படுவோர் இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

கடந்த சில ஆண்டுகளாகவே போட்டி உலவிகளால் வீழ்ச்சியைச் சந்தித்துக் கொண்டிருந்த இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்கு ஐரோப்பிய யூனியனின் முடிவு பேரிடியாக அமைந்துவிட்டது.​ அண்மையில் வெளியான கணிப்புப்படி,​​ உலக அளவில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரைப் பயன்படுத்துவோரின் அளவு 60 சதவீதத்துக்கும் கீழே சரிந்திருப்பதாகத் தெரிய வந்திருக்கிறது.​ அதே நேரத்தில் ஃபயர்ஃபாக்ஸ் மற்றும் கூகுள் க்ரோம் ஆகியவை முறையே சுமார் 25 மற்றும் சுமார் 10 சதவீத பயனாளர்களை ஈர்த்திருக்கின்றன.​ இது அதிரடியான மாற்றம்.

இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் வீழ்ச்சிக்கு,​​ பாதுகாப்புக் குறைபாடு ஒரு முக்கியக் காரணமாகும்.​ இது தவிர,​​ அலட்சியம் காரணமாக மேம்பாட்டுப் பணிகளுக்குக் குறைந்த அளவு நிதி ஒதுக்கப்பட்டதாகவும் தெரிகிறது.​ இதனால்,​​ நாள்தோறும் புதுமைகளைப் புகுத்திவரும் பயர்ஃபாக்ஸ் மற்றும் க்ரோம் ஆகியவற்றைத் தேடி விவரம் தெரிந்தவர்கள் செல்லத் தொடங்கிவிட்டனர்.​ இதே வேகத்தில் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரரின் வீழ்ச்சி தொடருமானால்,​​ இன்னும் ஆறேழு ஆண்டுகளில் நெட்ஸ்கேப் நேவிகேட்டர் போல முற்றிலுமாக ஒழிந்துவிடும் என நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.

ஆனால்,​​ இந்த விவரமெல்லாம் மைக்ரோசாஃப்டுக்குத் தெரியாதவையல்ல.​ தோற்றுக் கொண்டிருக்கிறோம் என்பதைப் புரிந்து கொண்டிருக்கும் அந்நிறுவனம்,​​ அதிருப்தியில் இருக்கும் வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் -​ 9 பதிப்பை ”எச் டி எம் எல் 5” என்கிற வெகுநவீனத் தொழில்நுட்ப வசதியுடன் வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறது.​ ஃப்ளாஷ் வீடியோவுக்கு மாற்றாக இந்தத் தொழில்நுட்பம் இருக்கும் என்பதால்,​​ மக்கள் மீண்டும் இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரருக்குத் திரும்புவார்கள் என மைக்ரோசாஃப்ட் நம்புகிறது.​ இது ஒருவேளை ஓரளவு சாத்தியமாகலாம்.​

எம். மணிகண்டன்

நன்றி: தினமணி

 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

77 + = 80

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb