Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

இறைவனிடம் கை ஏந்துங்கள்…

Posted on May 22, 2010 by admin

இறைவனிடம் கை ஏந்துங்கள்…

சில மாதத்துக்கு முன்பு முன்பு நான் தாம்பரத்தில் இருந்து மாம்பலத்திற்கு மின்சார ரயிலில் வந்துக் கொண்டு இருந்தேன், என்ன காரணம் என்று தெரியவில்லை மனது எதோ பாரமாக இருந்தது. ரயிலில் நல்ல கூட்டம், மூச்சு விட கூட சிரமமாக இருந்தது.

கூட்டம் என்றாலே அலர்ஜி எனக்கு, எல்லாருக்கும் தான், அதுவும் ரயில் பஸ் பயணங்களில் கூட்டம் என்றால் கொடுமையில் உச்சம். மக்கள் அனைவரும் ஒருவர் கால் மீது இன்னொருவர் நின்றுக் கொண்டு இருந்தார்கள், கூச்சல், குழப்பம், சண்டைகள், எல்லாம் நிகழ்ந்தது அந்த ரயிலில் நிற்பதற்கு வசதி இல்லாமல் ஒருவர் காதை பிடித்து ஒருவர் நிற்க வேண்டிய நிலைமை.

நானும் கம்பியை பிடித்துக் கொண்டு கண்களை மூடியபடியே நின்றுக் கொண்டும் வந்தேன். ஆனால் தூங்க வில்லை. மனதில் எதோ எண்ணங்கள் வந்து மறைந்தன. நான் ஓடி வந்து ரயிலை பிடித்ததில் என்னுடைய சட்டை வியர்வையால் முழுவதுமாக நனைந்து விட்டது, அன்று பார்த்து நான் என்னுடைய கைகுட்டையை எடுத்துக் கொண்டு வரவில்லை. என்ன வாழ்க்கை இது என்ற எரிச்சல் இருந்தது. எதோ ஒரு நிறுத்தத்தில் யாரோ ஒருவர்,

”சார் கொஞ்சம் வழிவிடுங்க சார், கண்ணு தெரியாதவன் சார், கொஞ்சம் வழிவிடுங்க சார்” என்று கெஞ்சல் குரலில் உள்ளே வந்தார் ஒருவர்.

”ஏம்பா இங்கையே எல்லாரும் ஒருத்தர் மீது ஒருத்தர் நின்றுக் கொண்டு வருகிறோம், இதில் நீ வேற” என்று திட்டிக் கொண்டே வழிவிட்டார் அதில் ஒருவர். அந்த கண் தெரியாத முதியவரும் ”சாரி சார் சாரி சார்” என்று சொல்லிக் கொண்டு உள்ளே வந்தார்.

வந்து ஒரு இடத்தில் நின்றார், கையில் இருக்கும் மோளத்தை தட்டிக் கொண்டு பாட ஆரம்பித்தார். அவரை பார்க்க நான் எட்டி பார்த்தேன். ஆனால் கூட்டத்தில் அவரை பார்க்க முடியவில்லை, அவரின் வெங்கல குரல் மட்டும் இனிமையாக ஒலித்தது.

”இறைவனிடம் கை ஏந்துங்கள்

அவன் இல்லை என்று சொல்லுவதில்லை

பொறுமையுடன் கேட்டு பாருங்கள்

அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை”

அனைவரும் ”ப்ச்ச்” என்று சொல்ல ஆரம்பித்தார்கள், அந்த ”ப்ச்ச்” அர்த்தம் ”நாங்களே இங்கு இடம் இல்லாம் இருக்கிறோம், இதில் நீ வேறு வந்து பாட்டு பாடி எங்களை சாவடிக்காதேனு”. அந்த ”ப்ச்ச்” சில் என்னுடையது இருந்தது. எங்களின் எரிச்சலை மனக்கண்ணால் கண்டிப்பாக அந்த முஸ்லீம் பெரியவர் பார்த்து இருப்பார் போல, அவர் குரலில் கொஞ்சம் தடுமாற்றம் இருந்தது. பின்பு எதை பற்றியும் கவலைப்படாமல், ரயில் இரைச்சலில் கூட அருமையான ஸ்ருதியில் பாட ஆரம்பித்தார் அடுத்த வரிகளை;

”இல்லை என்ற சொல்லும் மனம் இல்லாதவன்

ஈடு இணை இல்லாத கருணை உள்ளவன்

இன்னல் பட்டு எழும் குரலைக் கேட்கின்றவன்

எண்ணங்களை இதயங்களை பார்க்கின்றவன்

இறைவனிடம் கை ஏந்துங்கள்………”

எல்லோருடைய ப்ச்ச் சத்தம் நின்றது, அவரின் குரலை எல்லோரும் கவனிக்க ஆரம்பித்தார்கள், நானும் அவரின் முகத்தை பார்க்க எவ்வளவோ முயற்சி செய்தேன், முடியவில்லை குரல் மட்டும் கேட்டது. நாங்கள் இருந்த இடமே அமைதியாக அவரின் குரலுக்கு அடிமையாக ஆரம்பித்தது. அவர் அடுத்த வரிகளை பாட ஆரம்பித்தார்

”தேடும் நேயர் நெஞ்சினில் குடியிருப்பவன்

தேடாத மனிதருக்கும் உணவளிப்பவன்

வாடும் இதயம் வளர்வதற்கு வழிவகுப்பவன்

வாஞ்சையோடு யாவருக்கும் துணை நிற்பவன்

அலை முழங்கும் கடல் அமைத்து அழுகு பார்ப்பவன்

அலையின் மீதும் மலையின் மீதும் ஆட்சி செய்பவன்

தலை வணங்கி கேட்பவருக்கு தந்து மகிழ்பவன்

தரணி யெங்கும் நிறைந்து இருக்கும் மகா வல்லவன்”

எங்க பெட்டியில் இருந்த அனைவரும் கிட்டதட்ட அந்த குரலுக்கு அடிமையாகி விட்டோம் என்று தான் சொல்ல வேண்டும், சிலர் கண் மூடிக் கொண்டு ரசித்தனர், என்னை போல சிலரின் கண்களில் கண்ணீர் கசிந்தது, சிலர் தலையை ஆட்டிக் கொண்டு ரசித்தனர். அனைவரும் தங்களின் பர்ஸ்ஸில் இருந்து சில்லரைகளை எடுத்து தயாராக வைத்து இருந்தனர், என்னையும் சேர்த்து தான்.

அந்த பெரியவர் பாடலின் கடைசி வரிகளை பாடினார்.

”ஆசையுடன் கேட்பவருக்கு அள்ளித்தருபவன்

அள்ளல் துன்பம் துயரங்களை கிள்ளி எறிபவன்

பாசத்தோடு யாவரையும் பார்க்கின்றவன்

பாவங்களை பார்வையினால் மாய்கின்றவன்

அள்ளல்படும் மாந்தர்களே அயராதீர்கள்

அல்லாவின் பேற் அருளை நம்பி நில்லுங்கள்

அவனிடத்தில் குறை அனைத்து சொல்லிக் காட்டுங்கள்

அன்புனோர்க்கு தருக என்று அழுது கேளுங்கள்…

இறைவனிடம் கையெந்துங்கள்

அவன் இல்லை என்று சொல்லுவதில்லை…….”

என்று அவர் பாடி முடிப்பதற்கும் ரயில் ஸ்டேஷனை அடைவதற்கும் சரியாக இருந்தது,

அந்த முஸ்லீம் பெரியவர் யாரிடமும் காசு வாங்காமல் இறங்கிச் சென்று விட்டார், பெட்டியில் இருந்த சிலர் அவமானத்தால் கூனி குறுகினார்கள்.

நாங்கள் அவரை முதலில் அவமதித்தாலும் அவர் எங்களை தன்னுடைய பாடலினால் சந்தோஷப்படுத்தி விட்டு எங்களிடம் காசு வாங்கிக் கொள்ளாமல் சென்று விட்டார். கடைசி வரை அவரின் முகத்தை கூட என்னால் பார்க்க முடியவில்லை. மனது இன்னும் பாரமாக இருந்தது. அவருக்கு போட வைத்து இருந்த 2 ரூபாயை அப்படியே என்னுடைய சட்டை பாக்கெட்டில் போட்டுக் கொண்டேன்.

மாம்பலம் வந்தது ரயிலை விட்டு இறங்குவற்கு மறுபடியும் ஒரு போராட்டம், சட்டை வியர்வையால் இன்னும் நனைந்தது. கண்களில் வியர்வை பட்டு எரிந்தது, ரயிலை விட்டு இறங்கி படிக்கட்டில் ஏறினேன், கீழே இருந்து படிக்கட்டின் மேலே பார்த்தேன், கால் ஊனமுற்ற ஒருவன் படிக்கட்டின் ஓரத்தில் நின்றுக் கொண்டு அனைவரிடமும் கையை நீட்டிக் கொண்டு இருந்தான்.

சரி அந்த பெரியவருக்கு போட வைத்து இருந்த 2 ரூபாயை எடுத்து இவனுக்கு போட்டு விடலாம் என்று நினைத்து, அவனிடம் சென்று இந்தாப்பா என்று 2 ரூபாயை கொடுத்தேன். அவன் என்னை ஒரு மாதிரியாக அவமானத்துடன் பார்த்தான், பார்த்துவிட்டு  ”அண்ணா நான் பிச்சைக்காரன் இல்லண்ணா” என்றான் சோகமாக என்னுடைய கண்களை நேராக பார்த்து. எனக்கு இது தமர்சங்கடமாக இருந்தது.
”சாரிப்பா நீ கை நீட்டினு இருந்தியா அதான் அப்படி நினைத்துவிட்டேன், சாரிப்பா”

”இல்லண்ணா, இந்த மூட்டையை தூக்க கொஞ்சம் உதவ முடியுமான்னு எல்லார்கிட்டயும் கேட்னு இருந்தேன்” என்று பக்கத்தில் இருக்கும் மூட்டையை காண்பித்தான். நானும் சரி என்று எங்கே போகவேண்டும் என்று கேட்ட படி அந்த மூட்டையை தூக்கி பார்த்தேன், கண்டிப்பாக ஒரு முப்பது கிலோ எடை இருக்கும். ”ஏம்ப்பா! இதையெல்லாம் தூக்க முடியாதுப்பா, இதை நீ எப்படினு தூக்கினு வந்தாய்?” என்று கேட்டேன்.

அவன் உடனே ”இது என்னுடையது இல்லை அண்ணா. என்னுடைய ஃப்ரண்டுது, அதோ இருக்கான் பாருங்க” என்று ஒரு இடத்தில் கையை காட்டினான். அங்கே பார்த்தால் இடுப்புக்கு கீழே ஒண்ணுமே இல்லாத ஒரு ஊனமுற்ற ஒருவனும், இவர்கள் இருவரும் வந்த இரண்டு மூன்றுசக்கர வாகனமும் இருந்தது, இதேப்போல இன்னொரு மூட்டையும் இருந்தது.
அவனே தொடர்ந்தான் ”இல்லண்ணா அவனால் தூக்க முடியாதுனு தான் நானும் கூட வந்தேன்” என்றான் பெருமையாக. இவனுக்கு கால் வளைந்து எக்ஸ் மாதிரி இருந்தது. எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை.

”எப்படி நீங்க இந்த இடத்துக்கு வந்தீங்க,…………… சரிப்பா இப்ப என்ன செய்யணும்” என்றேன் என்னுடைய வாட்சில் டைம்மை பார்த்துக் கொண்டு. 

”இல்லண்ணே நாங்க இரண்டு பேரும் வியாபரத்துக்கு, அந்த சைடு போகணும், சுத்தினு டிராப்பிக்கில் போக ரொம்ப நேரம் ஆகும், அதனால் தான் இந்த பிரிஜ் வழியா போகலாம்னு வந்தோம், உங்கள மாதிரி நான்கு அண்ணன்கள் தான் எங்களை மேலே ஏற்றிவிட்டனர், அதற்குள் ரயில் வந்து விட்டதுனு போய்டாங்க. ஒரு மணி நேரமா நிக்கிறோம், யாரும் இறங்குவதற்கு உதவி செய்யவில்லை அண்ணா. கொஞ்சம் இதை தூக்கி என் தலையில் வச்சிங்கன்னா நான் போய் இறக்கிவிட்டு வந்துவிடுவோன்” என்றான்.

நானும் சரி எழுந்து நில்லு என்று சொல்லி அந்த மூட்டையை தூக்கி அவன் தலையில் வைக்க போனேன், ஆனால் அவனால் எதையும் பிடிக்காமல் நிற்கவே முடியவில்லை, அப்படியும் அவன் ”அண்ணா என் தலையில் வைங்க அண்ணா வைங்க அண்ணா” என்று சொன்னான். நான் சொத்தை திண்பதால் என்னால் அப்படி என்னால் செய்ய முடியவில்லை, அப்படியே என்னுடைய தலையில் அந்த மூட்டையை வைத்துக் கொண்டேன், கழுத்து உடைந்து விடும் போல இருந்தது அவ்வளவு கனம். என்னுடைய கைபையை அவனிடம் கொடுத்து விட்டு. படிக்கட்டில் இறங்க தொடங்கினேன்.

கை, கால் நன்றாக இருக்கும் எனக்கே படிக்கட்டில் ஒழுங்காக நடக்க முடியவில்லை, திரும்பவும் வந்தேன் இன்னொரு மூட்டையை தூக்கி நடக்க ஆரம்பித்தேன். என்னுடைய ஃப்ளாடில் வசிக்கும் எனக்கு தெரிந்த குடும்பம், மூட்டையை தூக்கிக் கொண்டு இருக்கும் என்னை வித்தியாசமாக பார்த்தார்கள், மனதுக்குள் ச்சே என்னடா இது மூட்டை தூக்கும் வேலை செய்கிறோமே என்று அவமானமாக இருந்தது.

இருந்தாலும் பரவாயில்லை என்று படிக்கட்டில் இறங்கி அதையும் வைத்து திரும்பவும் படிக்கட்டில் சோர்வுடன் நடக்க ஆரம்பித்தேன். இப்பொழுது என்னுடைய சட்டை முழுவதும் நனைந்து இருந்தது, முகத்தில் வியர்வை ஆறாக ஓடியது. திரும்பவும் வந்து அவர்கள் இருவரின் மூன்று சக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு கீழே இறக்கி வைத்தேன். இப்பொழுது என்னுடைய இடுப்பு ஒடிந்து விடும் போல இருந்தது. நான் ஒவ்வொரு முறை அவர்களின் மூட்டையை தூக்கும் பொழுது அவர்கள் இருவரும் ”ரொம்ப தாங்க்ஸ் அண்ணா” என்று சொல்லிக் கொண்டே இருந்தார்கள்.

கடைசியாக ஒருவனை என்னுடைய தோள் மீது தூக்கிக் கொண்டும், இன்னொருவனை என்னுடைய கையில் பிடித்துக் கொண்டும் கீழே இறங்கி வந்தேன். அவர்கள் இருவரும் என்னை நன்றியுடன் பார்த்தார்கள் அதில் ஒருவன் சொன்னான்.
”ஒரு மணி நேரமா இறைவனை வேண்டினு இருந்தோம் அண்ணா, அவர் தான் உங்களை இங்கே அனுப்பி இருக்கார்”

நான் சிரித்துக் கொண்டு ”அவர் அனுப்பவில்லை என்றாலும் நான் இங்க தான் வந்து ஆகணும், ஏன்னா என்னுடைய வீடு இங்க தான் இருக்கு” என்றேன். அவர்களும் சிரித்தார்கள்.

”அண்ணா வாங்கன்னா டீ சாப்பிட்டு போலாம்” என்று ஒருவன் என் கையை பிடித்தான். ”இல்லப்பா என்னை பாரு உடம்பு பூரா வியர்த்து சாக்கடை அள்றவன் மாதிரி இருக்கேன், நீங்க போங்க இன்னொரு முறை சந்திக்கலாம்” என்று நகர்ந்தேன். உடனே ஒருவன் தன்னுடைய பையில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்தான், இன்னொருவன் அந்த மூட்டையை கிழித்து உள்ளே இருந்து ஒரு புது துண்டையை (டவல்) எடுத்து ”இந்தாங்கன்னா, முகத்தை கழுவிக் கொண்டு போங்க” என்று அந்த துண்டை கொடுத்தான். எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை.
”ஆமாப்பா என்னை கடவுள் தான் உங்களிடம் அனுப்பி இருக்கார்னு சொன்னேன்” இருவரும் பெருமித்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

”இறைவனிடம் கை ஏந்துங்கள்

அவன் இல்லை என்று சொல்லுவது இல்லை

பொறுமையுடன் கேட்டு பாருங்கள்

அவன் பொக்கிஷத்தை மூடுவதில்லை”

உதவி செய்வதும், உதவி பெறுவதும் தானே வாழ்க்கை. நாம் நம்முடைய வாழ்க்கையில் பல விதமான இறைவனை பார்க்கிறோம், என்ன பிரச்சனை என்றால் அதுதான் இறைவன் என்று நம் அறிவுக் கண்ணுக்கு தெரிவதில்லை. என்னை இறைவன் அனுப்பினான் என்று என்னுடைய ஊனமுற்ற தம்பி சொன்னான், ஆனால் அவனை தான் இறைவன் எனக்கு அனுப்பினான்.

ஏனென்றால் அந்த நொடிப் பொழுதில் எனக்கு தங்கத்தை விட ஒரு காய்ந்த துண்டு துணி தான் விலை மதிப்பற்றதாக இருந்தது.

இறைவனிடம் கை ஏந்துங்கள்…. எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத நாகூர் E M ஹனீஃபா பாடிய பாடல் அல்லவா!

நன்றி: நிலா முற்றம் 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

72 − 65 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb