இப்னு குறைஷ்
இஸ்லாத்தின் பெயரால் ஜாஹிலிய்யா (மடமை)
நாம் இவ்வுலகில் முஸ்லிம்களாக வாழ்ந்துகொண்டிருக்க நம்மிடமிருந்து இஸ்லாம் எடுபட்டுபோய்க்கொண்டே இருப்பதும், உலக முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் இஸ்லாத்தின் பெயரால் ஜாஹிலிய்யாவில் (மடமையில்) வீழ்ந்து பிரிவினையில் மேலோங்கிக் கிடப்பதும்தான் காரணம்.
இன்றைய முஸ்லிம்களில் பெரும்பான்மையோர் மடமையில் வீழ்ந்து தாழ்வுமனப்பான்மையில் மூழ்கியிருப்பதை கண்கூடாகக் காண்கிறோம். முஸ்லிம்கள் தனது வேதமான குர்ஆனையும் தமக்கு வழிகாட்டியான நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் பின்பற்றுவதைவிட அவரவருக்குப் பிடித்தமான அறிஞர்களைப் பின்பற்றுவதில் அதிக கவனம் செலுத்தியதால் அவ்வரிஞர்களின் மூலம் விதைக்கப்பட்ட மடமைகளையும் உண்மை என நம்பி அப்படியே ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அதற்கோர் உதாரணம், இன்றைய உலகின் முஸ்லிம்களின் பரிதாப நிலையையும், முஸ்லிம்களுக்கெதிராகத் தொடுக்கப்படும் சவால்களையும் எவரேனும் எடுத்துச்சொல்லி விட்டால் அல்லது எடுத்தெழுதிவிட்டால் பெரும்பான்மை முஸ்லிம்களின் கருத்து எவ்வாறாக இருக்கிறது? என்றால்,
”முஸ்லிம்களாகிய நாம் மிகவும் பலவீனமானவர்களாக இருக்கிறோம். இத்தகைய சூழ்நிலைகள் நமக்கு ஏற்படத்தான் செய்யும் இவைகளை தவிர்க்கவே இயலாது. ஏனெனில் இவைகளையெல்லாம் நாம் சந்திக்க நேரிடுமென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முன்னறிவிப்பு செய்துவிட்டார்கள்.” என்று தத்தமது அறிஞர்களின் கூற்றை முன்மொழிகிறார்கள்.
அவ்வரிஞர்கள் எனப்படுவோர் முஸ்லிம்களுக்கும் இஸ்லாத்திற்கும் எதிராகத் தொடுக்கப்படும் சவால்களுக்கு குர்ஆன் சுன்னாவின் ஒளியில் தீர்வைச் சொல்லாமல் ஜாஹிலிய்யாவில் தாம் வீழ்ந்தது மட்டுமல்லாது மேற்குறிப்பிட்ட அவர்களின் கூற்றிற்கு சிறந்த ஆதாரம் எனக்கருதி கீழ்க்காணும் நபிமொழியை மக்கள் மன்றத்திலும் எடுத்துவைக்கிறார்கள்.
அந்த நபிமொழியின் சுருக்கமானது,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ”ஒரு காலம் வரும் அப்போது நன்கு பசித்திருப்பவன் உணவைக் கண்டவுடன் அதைநோக்கி எவ்வாறு பாய்வானோ அவ்வாறு நம் முஸ்லிம் சமூகத்தை நோக்கி மற்றவர்கள் பாய்வார்கள்.”
அதற்கு நபித்தோழர்கள் வினவினார்கள் : ”அல்லாஹ்வின் தூதரே! அப்பொழுது முஸ்லிம்கள் மிகக்குறைந்த எண்ணிக்கையில் இருப்பார்களோ ?”
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ”இல்லை மிக அதிக எண்ணிக்கையில் இருப்பார்கள் ஆனால் வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடுவார்கள். அவர்கள் உள்ளத்தில் ‘வஹ்ன்‘ வந்துவிடும்.”
அதன்பின் நபித்தோழர்கள் வினவினார்கள் : ”அல்லாஹ்வின் தூதரே! ‘வஹ்ன்‘ என்றால் என்ன?.”
அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் கூறினார்கள் : ”இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றும் மரணத்தை அஞ்சுவதும்.” என்பதாகும்.
மேற்கண்ட நபிமொழிக்கு நாம் எவ்வாறு பொருள் கொள்ளவேண்டும்?
வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடவேண்டும் மேலும் இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றும் வைத்து மரணத்தை வெறுக்கவும் வேண்டும் என்றா பொருள்?’ இல்லையே. ”வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடுவார்கள்” என்றால் அவ்வாறு நீங்கள் ஆகிவிடக்கூடாது மாறாக ”வெள்ளத்தின் விசைபோல் ஆகிவிடுங்கள், வீரத்துடன் வாழுங்கள்” என்ற நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஒரு எச்சரிக்கை பிரகடனமல்லவா அது.
அதைப்போல ”இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றுவைப்பார்கள் மரணத்தை அஞ்சுவார்கள்” என்றால் இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றுவைக்காதீர்கள் மேலும் இறைவன் விதித்த மரணத்திற்கும், இறைவனுடைய பாதையில் மரணமாவதற்கும் அஞ்சாதீர்கள் என்றல்லவா பொருள்.
எனவே மேற்கண்ட நபிமொழிக்கு உண்மைக்கு மாற்றமான தவறான பொருள் கொண்டால் மட்டும்தான் நாம் பலகீனமாகிவிட்டோம், வெள்ளத்தின் நுரைபோல இருக்கிறோம் எனவே நமக்கு இழைக்கப்படும் அநீதிகளை தட்டிக்கேட்க இயலாது என்ற தாழ்வு மனப்பான்மையான முடிவிற்கு வர இயலும்.
சரியான முறையில் சிந்தித்தோமென்றால் வெள்ளத்தின் நுரைபோல ஆகிவிடக்கூடாது, மறுமை வாழ்கையைவிட இவ்வுலத்தின் மீது அதிகமான பற்றுவைக்கக் கூடாது, வீர மரணத்திற்கு அஞ்சிடக் கூடாது என்ற நிலைபாட்டிற்கே நம்மால் வர இயலுகிறது.
இதுவரை நீங்கள் படித்தது கட்டுரையின் ஒரு பகுதியே! முழுமையான கட்டுரைக்கு கீழே ”கிளிக்” செய்யவும்.