Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

முயற்சி செய்யுங்கள் தொழில் முனைவர்களாகளாம்

Posted on May 18, 2010 by admin

Download Two Muslim Men Meeting And Talking On Market Street With Clothing Strores Editorial Stock Photo - Image of pakistan, businessman: 92165703

முயற்சி செய்யுங்கள் தொழில் முனைவர்களாகளாம்

      டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)       

நான் சில மாதங்களுக்கு முன்பு, ”நாளை நமதா?” என்ற தலைப்பில் சமுதாய மக்களை வெறும் வியாபாரிகளாக அல்லாமல் தொழில் முனைவர்களாகுங்கள் என்று எழுதியிருந்தேன்.

அந்தக் கட்டுரையினைப் படித்து விட்டு கனடா நாட்டு தலைநகர் டொரண்டோவில் வாழும் சகோதரர் ஹுசைன் அவர்கள் என்னிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் மலேசியா, சிங்கப்பூர், துபை, கனடா போன்ற நாடுகளில் பெரும்பாலான வாழ்க்கையினை அடுத்தவர்களுக்கு வேலை பார்த்து தொழிலாளியாக இருந்து விட்டேன்.

தனக்கு வயது 45 ஆகிறது, இனிமேல் இருக்கிற சேமிப்பினை வைத்து ஏதாவது ஒரு தொழில் தமிழத்தில் உள்ள அவருடைய சொந்த ஊரிலோ அல்லது பக்கத்திலுள்ள பெரிய நகரிலோ ஆரம்பிக்கலாம் என்று நினைப்பதாகவும் ஒரு ஆலோசனை சொல்லுங்கள் என்றார்.

அவருக்கு சில ஆலோசனை வழங்கினேன். அவருடைய உணர்வினைப் பாராட்ட வேண்டும். காலம் முழுவதும் கசக்கி பிழியப்பட்டு, கைகட்டி நிற்கும் வேலைக்காரனாக இருப்பதினை விட்டு விட்டு கம்பீரமாக தொழில் முனைவராக ஆகவேண்டும் என்ற முயற்சிக்காக. இது போன்று எண்ணற்ற சகோதரர்கள், சகோதரிகள் வாழ வழி தெரியாது திக்குத்தெரியாத காட்டில் வாழ்வதினைப் போன்றுள்ளனர். அவர்களை நீங்களும் தொழில் முனைவர்களாக்கலாம் என்பதினை வழியுறுத்தவே இந்த கட்டுரையினை உங்களிடம் சமர்ப்பிக்கிறேன்.

தொழில் தொடங்க வேண்டுமென்றவுடனே முதலில் ஞாபகத்திற்கு வருவது பணம் எப்படிப் புரட்டுவது என்பது தான். ஆனால் என்ன தொழில் ஆரம்பிக்கலாம் என்று யோசனை செய்து அதன் பின்ப பணத்தினைத் தேடுவதில்லை பலர். தேவைகள் ஏற்படும் போது தொழில் ஆரம்பித்தால் வெற்றி பெறலாம். அந்தத்தேவைக்கேற்ப தொழில் கண்டுபிடிப்பு பற்றி சிறிய உண்மை சம்பவத்தினைச் சொல்லி உங்களுக்கு விளக்கலாம் என ஆசைப்படுகிறேன்.

சென்னையில் சிறந்த பள்ளி ஒன்றில் 12ம் வகுப்பு படிக்கும் விஷ்னு என்ற சிறுவன் விடுமுறைக்கு தன் பாட்டி ஊரான காரைக்குடிக்குச் சென்றான். ஆனால் எந்த விடுமுறையினை இனினையாகக் கழிக்கலாமென்று வந்தானோ அந்த குதுகூலம் காரைக்குடி வந்ததும் மறைந்தது. ஏன்?

அங்கு சென்னையிலில்லாத அடிக்கடி மின் வெட்டு இருந்தது. அங்குள்ள அனைவரும் அவதிப்படுவதினை அறிந்தான். உடனே அவன் வாலாதிருக்கவில்லை. தான் தங்கியிருந்த அறைக்கு சுய கண்டுபிடிப்பில் மின் உற்பத்தி செய்து மின் விளக்கும் விசிறியும் ஓடும்படி செய்தான். எப்படி?

தன் பாட்டி வீட்டிலிருந்த பசுமாட்டிலிருந்து 2கிராம் சாணத்தினை எடுத்து 2 மில்லி தண்ணீர் ஊற்றி கலக்கி அதில் 5செ.மீட்டர் நீளம் 4செ.மீட்டர் அகலம் உள்ள எலக்ட்ரிக் வயரை விட்டு ஒரு லைட் எரியும் அளவிற்கு மின் உற்பத்தி செய்தான். அதற்கான செலவு வெறும் ரூபாய் 125 தான். பின்பு கலவையினைக் கூட்டி மின் விசிறி ஓடச் செய்தான். அவனுடைய கண்டு பிடிப்பிற்காக ”ஐ. ஸ்வீப்’ என்ற எரிசக்தி, பொறியியல் ஒலிம்பிக்கில் அவன் அமெரிக்கா டெக்ஸாசில் நடந்த பொருட்காட்சியில் கவுரவிக்கப்பட்டான். வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்று இதிலிருந்து விளங்குகிறதா?

மேற்கூறிய உண்மைச் சம்பவத்தினை நான் உங்களுக்குச் சொல்லக் காரணம் நமதூர்களிலும் மின்வெட்டு இருக்கத்தான் செய்கிறது. அதற்காக அரசினையும் அதன் அதிகாரிகளையும் சாடிக்கொண்டு வாழா வெட்டியாக உட்கார்ந்து விசிறியால் அல்லது காலண்டர் அட்டையால் வீசிக்கொண்டு இருப்போம். ஆனால் அந்தச் சிறுவன் அந்தத் தேவைக்கு என்ன வழி என்று ஒரு மாற்று சக்தியினைக் கண்டுபிடித்துள்ளான்.

அவன் கண்டு பிடிப்பு இரண்டு கோடி மாடுகள் உள்ள இந்தியாவில் வருங்காலத்தில் மின் உற்பத்தி மாற்றுத்தொழில் ஏற்படுத்துவதிற்கும் வழியாகுமல்லவா? ஆகவே நமது சிறிய சேமிப்பினை வைத்து தேவையறிந்து தொழில் செய்ய ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. அதனை பயன்படுத்த நாம் தவறக்கூடாது. மத்திய அரசும் மாநில அரசும் போட்டிப்போட்டுக்கொண்டு தொழில் முனைவோருக்கு மானியம் வழங்குகிறது.

மானியம் வழங்கப்படும் தொழில்கள்:

1) மின் மற்றும் மின்னணு பொருட்கள் உற்பத்தி

2) தோல் சம்பந்தமான பொருட்கள் தயாரிப்பு 

3) வுhகன உதிரிப்பாகங்கள் தயாரிப்பு

4) மருந்துப் பொருட்கள் உற்பத்தி  

5) சூரியசக்தி உபகரணங்கள் உற்பத்தி

6) ஏற்றுமதி ஆபரணங்கள்  

7) மாசுகட்டுப்பாடு உபகரணங்கள்

8) விளையாட்டுப் பொருட்கள்

9) சிக்கன கட்டுமானப் பொருட்கள் 

10) ஆயத்த ஆடைகள் தயாரிப்பு போன்றவைகள்

அரசு வழங்கும் சலுகைகள்:

1) 15 சதவீதம் மானியமாக வழங்கப்படுகிறது.

2) 36 மாதங்களுக்கு 20 சதவீதம் குறைந்த மின் அழுத்த மின்சாரம் வழங்கப்படுகிறது.

3) சிறிய தொழில்களுக்கு உற்பத்தித் தொடங்கி முதல் ஆறு ஆண்டுகளில் தெலுத்தப்படும் மதிப்புக்கூட்டு வரிக்கு((வாட்) ஈடான தொகை மானியமாக மாவட்ட தொழில் மையம் மூலம் வழங்கப்படுகிறது.

4) உற்பத்தித் தொடங்கிய மூன்று ஆண்டுகளிலிருந்து ஐந்து ஆண்டுகள் வரை குறைந்த பட்ச 25 வேலையாட்களை பணியில் ஈடுபடுத்தவும் நிறுவனங்களுக்கு கூடுதலாக ஐந்து சதவீதம் அதிகபட்சமாக ரூபாய் ஐந்து லட்சம் வரை வேலை வாய்ப்பினைப் பெருக்க மானியம் வழங்கப்படுகிறது.

ஒவ்வொரு மாவட்டத்திலும் தொழில் தொடங்கி சலுகைகள் பெற பின்தங்கிய வட்டங்கள் என அறிவிக்கப்பட்டுள்ளன. 1971 ஆம் ஆண்டு சிப்காட் என்ற சிறு தொழில் மையம் அரம்பிக்கப்பட்டு இதுவரை 12 மாவட்டங்களில் 19 தொழில் மையங்கள் நிறுவப்பட்டு 1803 தொழில் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. அவைகள் எவை என மாவட்ட தொழில் மையங்கள் மூலம் அறிந்து தொழில் தொடங்கலாம்.

தொழில் தொடங்க அரசு வங்கிகள் தாராளமாக கடனுதவி செய்கின்றன. அதனைப் பொறுவது எப்படி? வெறும் கையினை வைத்து முழம் போட முடியுமா என சிலர் கேட்பதுண்டு.

தொழில் தொடங்கி கோடீஸ்வரர்களான சென்னையிலிருக்கும் வி.ஜி.பி, எம்.ஜி.எம், சரவண பவன் உரினையாளர்கள் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களிலிருந்து வெறுங்கையுடன் வந்து ஹோட்டலில் வேலை பார்த்து இன்று பெரிய பணக்காரர்கள் ஆகியிருக்கிறார்கள் என்றால் ஆச்சரியமாகவில்லையா? ஏன் அவர்களைப் போல உங்களால் வெறும் கையினை வைத்துக் கர்ணம் போட்டு சாதிக்க முடியாதா? முடியும். உங்கள் கையில் உள்ள சேமிப்பினை வைத்து தொழில் தொடங்க வங்கிகளின் மானேஜரை அனுகி உங்கள் தொழில் தொடங்கும் திட்டம் பற்றி எடுத்துச் சொல்லுங்கள்.

உங்கள் மனுவில் நீங்கள் செய்யப்போகம் தொழில், மொத்த முதலீடு எவ்வளவு, யார்-யார் பங்குதாரர், ஒவ்வொருவருக்கும் எவ்வளவு முதலீடு, செய்யப்போகும் தொழிலின் மார்க்கெட் நிலவரம், வருமானம் எப்படி, வங்கிக்கடனை எந்த வழியில் திருப்பிச் செலுத்துவது, கடனைத் திருப்பிச் செலுத்த வேண்டிய உத்திரவாதம்(சூரிட்டி) போன்ற விபரங்களை மனுவுடன் இணைக்க வேணடும். அதனை வங்கி அதிகாரிகள் ஆய்வு செய்வார்கள்.

கடன் தொகையினை ஒழுங்காக செலுத்தினால் கூடுதலாக கடன் பெறலாம். தொழில் தொடங்கி உற்பத்தி செய்யும் போது அந்த உற்பத்திப் பொருட்களை ஈடாக வைத்து கடன் பெறலாம். தொழிற்சாலை, கட்டிடம், எந்திரம், கச்சாப்பொருட்கள் என்று தனித்தனியாக கடன் பெறலாம். சிலர் கடன் வாங்கினால் வட்டி கட்டவேண்டும் அது இஸ்லாத்திற்கு எதிரானது என்று சொல்லலாம். அரசு வங்கிகளால் வழங்கப்படும் பணம் மக்களாகிய உங்களுடையது.

அந்தப்பணத்தினை பணமதிப்பீடுக்கிணங்க கடனை கூடுதலாக செலுத்துகிறீர்கள். (உதாரணத்திற்கு சென்னை மண்ணடியில் ஒரு கிரவுண்ட் நிலத்தினை இந்த ஆண்டு ஒருவர் ரூபாய் 80 லட்சத்திற்கு வாங்குகிறார் அந்த இடம் மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு அப்போதைய மதிப்பீடுக்கிணங்க ரூபாய் ஒருகோடியே இருபது லட்சத்திற்கு விற்பதில்லையா? அது லாப நோக்கத்திற்காக விற்பதுதானே! ஆகவே நீங்கள் குற்ற உணர்வுடன் அரசு வங்கிளிடமோ அரசு நிறுவனங்களிடமோ கடனைப் பெறுவதினை நோக்க வேண்டாம். அது உங்கள் பணம் என்று உரினையுடன் நினைக்க வேண்டும்.

இரண்டு வாரத்திற்கு முன்பு வெள்ளியன்று சென்னை மண்ணடி செம்புதாஸ் தெருவிலுள்ள பள்ளிவாசலுக்கு தொழுக சென்றிருந்தேன். தொழுகை முடிந்து வரும்போது 35 வயது மிக்க திடகார்த்தமான ஒரு பெண் ”நாலணா எட்டணா” கொடுங்கள் என்று பிச்சை கேட்டுக் கொண்டிருந்தார் அவருடன் நடுத்தர பெண்களும் இருந்தார்கள். ஏன் இந்த நிலை என்று சமுதாய அமைப்பு சகோதரர்கள் சிந்திக்க வேண்டாமா?  

”டாஃபே” என்ற டிராக்டர் நிறுவனம் நடத்தும் சிவசைலம் மகள் மல்லிகா சீனிவாசன் ஆயிரம் கோடி தொழில் அதிபதி என்று இருக்கும் போது நாம் ஏழை எளிய முஸ்லிம் பெண்களுக்கு அரசு ஏற்படுத்தியிருக்கும் சுய வேலை திட்டத்திலாவது அவர்களுக்கு தொழில் தொடங்க ஏற்பாடு செய்யலாமே என்ற ஆதங்கம் எனக்கு இருக்கத்தானே செய்யும்!

இந்திய தாராள பொருளாதார கொள்கைக்கு பின்பு இந்திய பொருளாதார வளர்ச்சி எப்படியுள்ளது என்று அறிய பொருளாதார நிபுணர் டெண்டுல்கர்(கிரிக்கட் வீரர் அல்ல) தலைமையில் ஒரு கமிட்டி அமைக்கப்பட்டது. அந்த கமிட்டி கொடுத்த அறிக்கை பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அது என்ன? வறுமைக்கோட்டிற்கு கீழ்வாழும் மக்கள் தொகை 25 சதவீதத்திலிருந்து 2009ல் 37.2 சதவீதமாக அதிகரித்து விட்டது என்பது தான் அது. ஆகவே வறுமைக் கோட்டின் கீழ் துவண்டு கொண்டுள்ள பெண்களுக்கு சுய வேலை திட்டத்தில் தொழில் துவங்க வழி வகை செய்யலமே!.

சுயவேலை தொழில் எப்படி தொடங்குவது?

ஒரு கிராமத்தில் வசிக்கும் 12 முதல் 20 ஏழை பெண்கள் உறுப்பினர்களாக சேர்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்யும் மனப்பான்மையுடன் உருவாக்கப்பட்டதே சுயவேலைக் குழு. வருமானம், கல்வியறிவு, வேலையின்மை, சொத்து அடிப்படையில் வறுமைக்கோட்டிற்குக் கீழுள்ள 21 வயது முதல் 60வயது வரை பெண்கள் சுய உதவிக்குழு தொடங்கலாம்.

அப்படி தொடங்கப்பட்ட குழு அங்கீகரிக்கப்பட்ட தொண்டு நிறுவனத்தில்(என்.ஜி.ஓ) மூலம் மாவட்ட மகளிர் திட்டத்தில் இணையலாம். அந்தக் குழுவில் கல்வியறிவு பெற்ற ஒருவர் செயல் இயக்குனராகவும், விபரம் தெரிந்தவர் இயக்குனராகவும், மற்றும் இரண்டு பிரதிநிதிகள் கொண்ட செயற்குழுவினை ஏற்படுத்திக் கொள்ளலாம்.

அந்தக் குழு ஆரம்பித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களில் சங்க சேமிப்பில் உறுப்பினர்களுக்கு அவசர மருந்துச் செலவு, கல்விச் செலவு, தொழில் தொடங்க மூலதனம் குறைந்த காலத்தில் திருப்பிச் செலுத்தும் வகையில் ரூ500 லிருந்து கடன் வழங்கலாம். அரசுக் கடனில் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு ரூபாய் 1,75,00 மானியமாகப் பெறலாம். ஆர்ப்பாட்டம், பொதுக்கூட்டம், பேரணிக்கு முஸ்லிம் பெண்களை அழைத்துச் செல்லும் சமுதாய இயக்கங்கள் ஏழைப் பெண்கள் கவுரவமாக வாழ மேற்கூறிய சுயவேலை தொழில் மையங்களை அவர்களுக்கு ஏற்படுத்தலாமே!

ஓருங்கினைப்பு:

முன்பெல்லாம் தொழில் தொடங்க ஒவ்வொரு அலுவலமாக அலைந்து அனுமதி வாங்க வேண்டியதிருந்தது. அதனை ஒருங்கிணைத்து ஒரே இடத்தில் வழங்கச் செய்து எளிதாக்கியுள்ளார்கள். கீழ்கண்ட மையத்தில் மனு செய்தாலே உங்களுக்குத் தேவையான அனுமதி கிடைக்கும்:

செயல் துறைத் தலைவர்(வழிகாட்டுதல் குழு),

தமிழ்நாடு தொழில் வழிகாட்டுதல் மற்றும் ஏற்றுமதி மேம்பாட்டுக்குழு,

19ஏ, ருக்மணி லட்சுமிபதி சாலை, எழும்பூர்,

சென்னை-600001

தொலைபேசி: 044-28553118, 285553866

ஃபேக்ஸ்: 28588364ஃபேக்ஸ்: 28588364

தொழில் நுணுக்கங்கள்:

தொழில் தொடங்கிய உடனே வெற்றியடைய முடியாது. திட்டமிட்டு சரியான இயக்கத்தில் தொடங்கினால் வெற்றி பெற முடியும். நமது வாடிக்கையாளர்களை நம்முடைய அனுகுமுறை வைத்தே தக்க வைக்க முடியும் என்பதிற்கு ஒரு உதாரணத்தினைச் சொல்லலாம் என நினைக்கிறேன். சென்னை ராதாக்கிருஷ்ண சாலையிலுள்ள ”நீல்கிரிஸ் டிப்பார்ட்மெண்ட்” ஸ்டோரில் நாங்கள் மாதாந்தர மளிகை சாமான்கள் 1991 ஆம் ஆண்டு முதல் வாங்குவது; வழக்கம். முதலில் ஒரு வயதானவர் அவரின் மூத்த மகன் கவனித்து வந்தார்கள். வாடிக்கையாளர்கள் மீது கவனம் வைத்து தொழில் செய்து வந்தார்கள்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு அந்தப்பெரியவரின் இளைய மகன் மேற்பார்வையிட்டார். அவர் எம்.பி.ஏ படித்தவர் என்று கேள்விப் பட்டேன். வழக்கம் போல் வாங்கும் மளிகை சாமான்களுடன் வெண்டைக்காய் வற்றல் பாக்கட்டில் அடைத்ததினை வாங்கினேன். வீட்டில் வந்து தேவைக்கு பிரித்தபோது அது பூசனம் அடைந்திருந்தது. உடனே அதனை எடுத்துச் சென்று அந்த இளைஞரிடம் காட்டினேன், அவர் மாற்று வெண்டைக்காய் வற்றல் தரமறுத்து விவாதம் செய்தார். நானும் அதனை பெரிது படுத்தவில்லை. ஆனால் அந்த இளைஞர் வந்து மூன்று மாதத்திற்குள் வுhடிக்கையாளர்கள் கூட்டிம் கழுதை தேய்ந்து கட்டெறும்பானது. சிறப்பாக இயங்கிக் கொண்டிருந்த நிறுவனத்தினை அவர் அணுகு முறை மூலம் கொடுத்துவிட்டார். அதன் பின்பு வேறு நிர்வாகத்தினர் இப்போது நடத்துகின்றனர்.

உங்கள் தொழில் நிறுவன உற்பத்திப் பொருள்கள் போட்டி நிறுவனங்களை விட தரமானது என்று மற்றவர்களுக்கு புரிய வைக்க வேண்டும். மற்றவர்களை கவரும் அனுகுமுறைக்கு தொழில் அதிபரும் வாழும் சீதக்காதியுமான பி.எஸ். அப்துர் ரஹ்மானுடைய உதாரணத்தினைக் கூறலாம். 2007 ஆம் ஆண்டு பி.எஸ்.ஏ பற்றி சிலம்பொலி சு. செல்லப்பன் எழுதிய சரிதை வண்டலூர் இன்ஜினீரியங் கல்லூரியில் நடந்தது. அதில் பி.எஸ்.ஏ உறவினர் சுயம் ஆலிம்சா அவர்கள் பி.எஸ்.ஏ வாடிக்கையாளர்களை கவரும் குணத்தினைச் சொன்னார். பி.எஸ்.ஏயும் சுயம் ஆலிம்சாவும் உறவினர்கள்.

இருவரும் வியட்நாம் தலைநகர் செய்கோன் நகரில் ஒருவரிடம் வைரம் இருப்பதாக 1960ஆம் ஆண்டுக்கு முன்பு சென்றார்கள். அவர்களுக்கு வியட்நாம் நாட்டு மொழி தெரியாது. அந்த வியாபாரியினை இருவரும் சந்தித்து வைரங்களின் விலையினைக் கேட்டார்களாம். வியட்நாம்காரர் விலை ரூபாய் ஏழு லட்சம் என்றாராம். ஆனால் இவர்கள் கொண்டு சென்றது வெறும் ரூபாய் மூன்று லட்சமாம். பேரம் நடந்தது. வியட்நாம் காரர் ரூபாய் ஐந்து லட்சத்திற்கு குறைந்து முடியாது என்று சொல்லிவிட்டார். ஆனால் பி.எஸ்.ஏ அவரை விட வில்லையாம் அந்த வைரங்களின் தரத்தினை எடுத்துச் சொல்லி அந்த விலைதான் பெரும் என்றாராம்.

வியட்நாம்காரருக்கு ஒரு நாள் டைம் கொடுத்துவிட்டு தாங்கள் தங்கியிருந்த அறைக்கு வந்து விட்டார்களாம். சுயம் ஆலிம்சா நாம் தங்கி பிரஜோனம் இல்லை ஊருக்குப் போய் விடலாம் என்றாராம். ஆனால் பி.எஸ்.ஏ, ”பார் அந்த வியட்நாமி நாளைக்கு நம்மை வரச்சொல்லுவார்” என்றாராம். அதன்படியே அடுத்த நாள் வியட்நாமி வியாபாரி அவர்களை வரச்சொல்லி பி.எஸ்.ஏ வாதத்தினை பாராட்டி வைரத்தினை பி.எஸ்.ஏ கேட்ட ரூபாய் மூன்று லட்சத்திற்கே கொடுத்தானாம். ஆகவே தொழிலில் சுமுகமான அணுகு முறையே வெற்றிக்கு வழிவகுக்கும் என்பது பி.எஸ்.ஏயின் அணுகுமுறை ஒரு உதாரணமாக எடுத்துக் கொள்ளலாமே!

ஆகவே சிறிய முதலீட்டினை வைத்து சிறப்பாக சமுதாய மக்களை தொழில் அதிபராக்க அனைத்து அமைப்புகளும் முன் வரவேண்டும் என வேண்டுகிறேன். 

Thanks regards,

posted by : AP,Mohamed Ali 

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

+ 39 = 46

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb