”அவனது மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்.” (திருக்குர்ஆன், 68:16)
பார்வை மற்றும் கைரேகையை வைத்து மட்டும் சமூக விரோதிகளை அடையாளம் காணுவது கடினம். உடனடி பலனும் கிடைக்காது. இதற்கு மாற்றுவழியைத் தேடி விஞ்ஞானிகள் ஆராய்ந்து வந்தனர்.
அவர்களின் முயற்சிக்கு பலன் தந்து புதிய துப்பறியும் உறுப்பாக அமைந்துவிட்டது மூக்கு. முகத்தில் எல்லா நேரத்திலும் பளிச்சென்று முன்நோக்கி அமைந்திருக்கும் உறுப்பு மூக்கு. அதனாலோ என்னவோ ஒருவரை அடையாளம் காட்டுவதிலும் முன்னோடியாக இருப்பதாக தெரியவந்துள்ளது.
கண், காது, ரேகை இவற்றைவிட மூக்கு ஒருவரை துல்லியமாக அடையாளம் காட்டுவதாக விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பலவித மாதிரி மூக்குகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் உலகம் முழுவதும் உள்ள மூக்குகளை 6 விதமாக வகைப்படுத்தி உள்ளனர். ரோமன், கிரேக்கம், பியாக், வாக், ஸ்நப் மற்றும் டர்ன்அப் போன்றவை அந்த 6 வகையாகும்.
மூக்குகளை பல்வேறு கோணங்களில் முப்பரிமாண (3 D) வடிவில் படம் பிடித்து ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டது. 160 விதமான சோதனைகளுக்குப் பிறகு, மூக்கின் வடிவம், அவற்றின் நிழல் அமைப்பு, சுவாசம் செய்யும் முறையை ஒப்பிட்டு ஒரு மென்பொருள் தயாரிக்கப்பட்டது.
இது குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காண உதவியது. எனவே இந்த புதிய முறையைக் கொண்டு புதுவித பாதுகாப்பு கருவியை வடிவமைக்கத் திட்டமிடப்பட்டு உள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த பாத் பல்கலைக் கழகம் இந்த நவீன யுக்தியை கண்டுபிடித்தது.
ஆய்வாளர் ஒருவர் கூறும்போது, ”குற்றவாளிகளை பார்வையை வைத்து கண்டுபிடிப்பது கடினம். கண்ணின் கருவிழியின் தெளிவற்ற தன்மை, கண் விரிவதற்கேற்ப ஏற்படும் மாற்றம் போன்றவை குற்றவாளியை தெளிவாக அடையாளம் காண சிக்கலாக அமைகிறது.
காதுகளையும் எளிதில் அடர்ந்த தலைமுடி மறைத்துவிடுகிறது. ஆனால் முக்கானது எளிதில் மறைக்க முடியாத உறுப்பு. அறுவைச் சிகிச்சை செய்து மாற்றிக் கொண்டாலும் சுவாசமுறை தீவிரவாதியை எளிதில் காட்டிக் கொடுக்கும். எனவே வருங்காலங்களில் குற்றத்தைக் குறைக்கும் அதிமுக்கிய கருவியாக ‘சுவாச ஸ்கேனிங்‘ பயன்படும்” என்றார்
அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்:
”அவனது மூக்கின் மேல் அடையாளம் இடுவோம்.”(68:16)
மனிதனைத் தனியாக வேறுபடுத்திக் காட்ட முக்கிய அடையாளங்கள் இரண்டு. ஒன்று ரேகைகள். இதை அனைவராலும் கண்டுபிடிக்க முடியாது. ஆயினும் ஆய்வு செய்து எந்த மனிதனின் ரேகை என்பதைக் கண்டு கொள்ளலாம். ஒருவரின் ரேகை போல் இன்னொருவரின் ரேகை இருக்காது.
அனைவராலும் தெரிந்து கொள்ளக் கூடிய மற்றொரு அடையாளம் மூக்கு. எவ்வளவு நெருக்கமான மனிதராக இருந்தாலும் மூக்கை மறைத்துக் கொண்டால் துல்லி-யமாக அடையாளம் காண முடியாது.
எனவே தான் மூக்கின் மேல் அடையாளமிடுவோம் என்ற சொல் 68:16 வசனத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
source: http://islamicdvd.blogspot.com/