கணவனை புரிந்து கொள்ளுங்கள்!
[ மலர்ந்த பூவை போல் மனைவி எப்போதும் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எல்லா கணவர்களுமே ஆசைபடுகின்றனர். ஆனால் அந்த மாதிரியான சூழலை கணவர்தான் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதை மனைவிமார்கள் உணர்த்துவது நல்லது.
கணவர்களில் சிலர் சரியான டென்ஷன் பார்ட்டிகளாக இருப்பார்கள். இந்த டென்ஷன் கணவர்கள் வாடிய முகத்துடன் வீடு திரும்பும்போது ”இன்றைக்கு என்ன நடந்துச்சு” என்று அவர்களை நச்சரிக்காமல், இன்முகத்துடன் அவர்களை வரவேற்பது நல்லது. பின்னர் கணவருக்கு காபி, டீ ஏதாவது குடிக்க கொடுத்துவிட்டு, ”சாப்பிட்டுவிட்டு அப்புறம் பேசலாம்” என்று அவர்களுடைய கோபத்தை தணிக்கலாம்.
கணவன் எப்படி மனைவியை புரிந்துகொள்ள வேண்டுமோ, அதுபோன்று மனைவியும் கணவனைப்புரிந்து நடந்து கொண்டால் இவ்வுலக வாழ்வு மட்டுமின்றி இன்ஷா அல்லாஹ் மறுவுலக வாழ்வும் சொர்க்கம்தான்.]
உறவுகளில் ஒரு அற்புதமான உறவு கணவன் மனைவி உறவு. மனங்கள் அமைதி பெறும் பொருட்டே உங்களிலிருந்தே உங்கள் துனைவிகளை படைத்துள்ளதாகஅல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்.ஆக, கணவனுக்கு மன அமைதியை கொடுக்க வேண்டிய பொருப்பு மனைவியுடையதாகிறது. மன அமைதி எனும்போது உடல் அமைதியும் அதில் அடக்கமாகிவிடுகிறது.
”மேலும் அவனது அத்தாட்சிகளில் ஒன்று, அதாவது அவன்தான் உங்களுக்கு துணைகளை உங்களிலிருந்தே ஏற்படுத்தினான், நீங்கள் ஒருவரை ஒருவர் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டுமென்பதற்காக, உங்கள் உள்ளங்களில் அன்பையும் கருணையையும் பெருகச் செய்தான். நிச்சயமாக, அறிவுடையோருக்கு இதில் தெளிவான அத்தாட்சி இருக்கிறது” (சூரா: அல்-ரூம் 30:21).
கணவன் எப்படி மனைவியை புரிந்துகொள்ள வேண்டுமோ அதுபோன்று மனைவியும் கணவனைப்புரிந்து நடந்து கொண்டால் இவ்வுலக வாழ்வு மட்டுமின்றி இன்ஷா அல்லாஹ் மறுவுலக வாழ்வும் சொர்க்கம்தான். சுவனம் வேன்டாம் என்று சொல்லக்கூடிய பெண்கள் எவரேனும் உலகில் உண்டா என்ன?! அப்படியெனில் உங்கள் கணவனை புரிந்து நடந்து கொள்ளுங்கள்.
கோபமும் ஆத்திரமும் பெரும்பாலான ஆண்களுக்கு கூடப்பிறந்த ஒன்று. கோபமும், ஆத்திரமும் கலந்த எந்த வேலையும் உருப்படியாக இருக்காது என்று பெரியவர்கள் கூறுவார்கள். அப்படி லேசான விஷயங்களுக்கெல்லாம் முக்கின் நுனியில் கோபத்தைம், பதட்டத்தையும் வைத்துக் கொண்டிருக்கும் ஒருவர் இருந்தாலே அந்த வீட்டில் டென்ஷனுக்கு குறைவிருக்காது. எப்போதும் பதட்டமாய் காணப்படுவார்கள் குடும்பத்தினர். அவர்களை எப்படி சமாளிப்பது!
திருமணமாகி எத்தனை காலம் ஆனாலும் சில பெண்களால் தங்கள் கணவரை புரிந்து கொள்ளவே முடியாமல் தவிப்பார்கள். (பல ஆண்களும் இதே கேஸ்தான்). கணவர்அந்த அளவுக்கு மனைவிக்கு ஒரு சஸ்பென்ஸ் நாயகனாக இருப்பார். அவர் நடைஉடை பாவனைகளில் வெளிப்படுகிற தெளிவு ஒருபோதும் அவரது செயல்களில் இருக்காது. திடுமென ஒரு நாள் இந்த பிரச்சினை நாயகனின் மறைமுக வெளிப்பாடு சூடு பறக்க எடுத்து வெளிப்படும்போதுதான் மனைவி அதிர்ச்சிக்குள்ளாவார்.
இப்படிபட்ட கணவர்களை அடைந்திருக்கும் மனைவியர் முதலிலேயே கணவரிடம் காணப்படுகிற வேறுபாடுகள் பற்றி தெரிந்து கொள்ள முற்பட வேண்டும். பதிலுக்கு கணவர் தரபில் மழுப்பலான சிரப்போ, திடீர் கோபமோ வெளிபட்டால் விஷயத்தை குடும்ப பெரியவர்கள் பார்வைக்கு எடுத்து போக வேண்டும். இதனால் அந்த நேரத்தில் கணவரின் கோபத்துக்கு மனைவி ஆளானாலும் பின்னாளில் ஏற்பட போகும் விபரீதம் தவிர்க்கபட்டு விடும் என்பதால், இந்த அதிரடி நடவடிக்கைக்கு மனைவி உட்பட்டே ஆக வேண்டும்.
சில பெண்கள் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். இந்த ”வளவள” பேச்சு சில கணவர்களை கடுப்பேற்றி விடும். அதுவே தேவையில்லாத சர்ச்சைகளுக்கு வித்திட்டு விடும். எனவே பெண்கள் அளவோடு பேசுங்கள். அதிகமாக பேசுவதால்தான் அது வாக்குவாதமாக மாறி சண்டையில் முடியும். குறைவாக பேசும்போது, உங்கள் பேச்சுக்கு கணவர் மதிப்பு கொடுப்பார். நிறைய பேசுவதை கேட்பதற்கு ஆண்களுக்கு பொறுமை கிடையாது. தேவையில்லாமல் பேசுவதால், தேவையான பேச்சும் கேட்கபடாமல் போய்விடக்கூடும்.
கணவர்களில் சிலர் சரியான டென்ஷன் பார்ட்டிகளாக இருப்பார்கள். இந்த டென்ஷன் கணவர்கள் வாடிய முகத்துடன் வீடு திரும்பும்போது ”இன்றைக்கு என்ன நடந்துச்சு” என்று அவர்களை நச்சரிக்காமல், இன்முகத்துடன் அவர்களை வரவேற்பது நல்லது. பின்னர் கணவருக்கு காபி, டீ ஏதாவது குடிக்க கொடுத்துவிட்டு, ”சாப்பிட்டுவிட்டு அப்புறம் பேசலாம்” என்று அவர்களுடைய கோபத்தை தணிக்கலாம்.
அலுவலகம் கிளம்பும் கணவரிடம் ஏதாவது வாங்கி வருமாறு கூறுவதும் அவர்களுடைய டென்ஷனை அதிகபடுத்தும். அலுவலகம் முடிந்து திரும்பும்போது அவர்களிடம் ஏதாவது ஒரு பொருளை வாங்கி வரச் சொல்லியும் வாங்காமல் வந்தால், வீட்டுக்குள் வந்ததும் அவரிடம், ”ஏங்க சொன்ன பொருளை வாங்கலையா?” என்று ஆரம்பிக்க வேண்டாம்.
ஏனென்றால் ஆபீசில் டென்ஷனாக கிளம்பியவரை இது மேலும் டென்ஷனாக்கும். டென்ஷனாக திரும்பிய கணவரை அழைத்துக் கொண்டு, அவருடன் சுத்தமான காற்றை சுவாசித்தபடி சிறிது தூரம் நடக்கலாம். அப்படி நடந்து போகும்போது மனதில் உள்ள பாரம் இறங்கி, பரபரப்பான மனம் அமைதியாகிவிடும். நீங்களும் உங்களுடைய கணவரின் பிரச்சினைக்கு தீர்வும், ஆலோசனையும் வழங்கலாம்.
இதனால் உங்கள் மீது கணவருக்கு ஈர்ப்பும், நெருக்கமும் அதிகமாகும். நம்பிக்கையும் தோன்றும். இப்படி மனைவி கொடுக்கும் நம்பிக்கையால், உங்களுடைய கணவருக்கு வாழ்க்கையில் நேசமும், நெருக்கமும் உருவாகும்.
மலர்ந்த பூவை போல் மனைவி எப்போதும் சிரித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எல்லா கணவர்களுமே ஆசைபடுகின்றனர். ஆனால் அந்த மாதிரியான சூழலை கணவர்தான் உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதை மனைவிமார்கள் உணர்த்துவது நல்லது.
கணவர் உங்களைத் திட்டுவதையோ… உங்களோடு சண்டை போடுவதையோ, பிறர் முன்பாக செய்வதை நீங்கள் விரும்பவில்லை என்பதை அவரிடம் தனியாக எடுத்து சொல்லுங்கள். கணவரின் நல்ல அம்சங்களைக் கண்டு பெருமை கொள்ளுங்கள். அதை மனம் திறந்து பாராட்டுங்கள். அவர் உங்களை ஒரு பலமாக நினைக்கத் தொடங்குவார்.
கணவரோடு உங்கள் கருத்துகளை பரிமாறிக் கொள்ளுங்கள். அவரை பற்றிய குறைகளை அம்மாவிடமும், தோழிடனும் பேசுவதை விட, அவரிடமே பேசினால் நல்ல பலன் கிடைக்கும்.
கணவருக்கு மட்டுமல்ல, மனைவிக்கும் டென்ஷன் உண்டு என்பதை கணவர் புரிந்து கொள்ள வேண்டும். கணவர் எவ்வளவுதான் டென்ஷனாக இருந்தாலும் மற்றவர்களிடம் ”இவர் டென்ஷன் பார்ட்டி” என்று சொல்லவே கூடாது.