காலமும் நேரமும்
நல்ல காரியங்கள் நடத்துவதற்கு நல்ல நேரம் பார்ப்பது பிற சமூகத்தவர் பின் பற்றும் பழக்கம். இஸ்லாத்தில் நல்ல நேரம் கெட்ட நேரம் என்று நேரத்தில் எந்த வித்தியாசமும் இல்லை. காலண்டரைப் பார்த்துக் காலநேரம் பிரிப்பது அறிவுக்கு ஏற்ற செயலும் அல்ல. அல்லாஹ்வுக்கு உகந்த செயலும் அல்ல.
நேரம் காலம் பார்த்து நடத்தப்பட்ட எத்தனையோ திருமணங்கள் விவகாரத்தில் தொடங்கி விவாகரத்தில் முடிந்திருக்கின்றன. காலமும் நேரமும் அவர்களுக்கு கைகொடுக்வில்லை. ஒரு குறிப்பிட்ட நேரத்தைத் தேர்ந்தெடுத்து – முகூர்த்த நேரம் என்று பிற சமூகத்தவர் குறிப்பிடுவதை முபாரக்கான நேரம் என்று அரபியில் குறிப்பிடுவதால் மட்டும் இஸ்லாமிய அங்கீகாரம் பெற்று விட்டதாக ஆகிவிடாது.
பசிக்கும்போது உணவருந்த எவரும் பஞ்சாங்கம் பார்ப்பதில்லை. பிரசவ வேதனையில் துடித்துக் கொண்டிருக்கும் தாய் தன் குழந்தையைப் பெற்றெடுக்க நல்ல நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை. உயிருக்குப் போராடிக் கொண்டிருப்பவர்களுக்கு சிகிச்சை அளிக்க, எந்த மருத்துவரும் கால நேரம் பார்த்துக் காத்திருப்பதில்லை. ரயில் பயணங்கள் ராகு காலத்தில் ரத்து செய்யப் படுவதில்லை.
எமகண்டம் பார்த்து எந்த விமானமும் காத்திருப்பதில்லை. வாழ்க்கையில் ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால், பிறந்த குழந்தையைக் காரணம் காட்டி, ‘இது பிறந்த நேரம் சரியில்லை” என்னுசொல்வதும், குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்பட்டால், வீட்டுக்கு வந்த மருமகளைக் காரணம் காட்டி, ‘இவள் வந்த நேரம் சரியில்லை” என்று சொல்வதும், தொடங்கிய காரியம் தோல்வி அடைந்தால், “ஆரம்பித்த நேரம் சரியில்லை” என்று சொல்வதும், மிகப் பெரும் பாவம் என்பதை உணர வேண்டும்.சிலர் நீண்ட காலமாக வறுமையிலும் – சிரமத்திலும்
இருந்திருப்பார்கள், அதன் பிறகு அல்லாஹ் அவர்களுக்கு பொருளாதார வசதியை அதிகரித்திருப்பான். அந்தக் கால கட்டத்தில் பிறந்த குழந்தையைக் காரணம் காட்டி ‘இது பிறந்த அதிர்ஷ்டம்” என்று சொல்வார்கள். இதுவும் தவறு தான். அல்லாஹ் வழங்கிய அருள் என்பதை மறந்து,குழந்தையை அதிர்ஷ்டம் என்று நம்புவதும் தவறு. எல்லாக் குழந்தையையும் சமமாகக் கருதாமல் ஒரு குழந்தையை மட்டும், அதிர்ஷ்டக் குழந்தை என்று கருதுவதும் தவறு. mவாழ்க்கையில் ஏற்படும் வெற்றியும் தேல்வியும் – அல்லாஹ்வின் நாட்டப் படியே ஏற்படுகின்றது என்று ஈமானில் உறுதி வேண்டும்.
நினைத்த காரியம் நடக்காமல் போவதும், தொடங்கிய காரியம் தோல்வி அடைவதும், இதைவிடச் சிறந்ததை நமக்குத் தருவதற்காகவோ, அல்லது இதன் மூலம் ஏற்படவிருந்த ஆபத்திலிருந்து நம்மை காப்பதற்காகவோ இறைவனுடைய ஏற்பாடாக இருக்கக் கூடும். அதை விட்டு விட்டு காலத்தின் மீதும் நேரத்தின் மீதும் பழி சுமத்துவது பெரும் பாவம். ஏனனில், இறைவன் கூறுகிறான். ‘ காலத்தை ஏசாதீர்கள் நானே காலமாக இருக்கிறேன்.” (ஹதீஸ் குத்ஸி)இறை நம்பிக்கை நமது உள்ளத்தில் ஆழமாகப் பதிய
வேண்டும். அப்போது தான் கால நேரத்தின் மீதுள்ள நம்பிக்கை நம்மை விட்டு மறையும். ஒவ்வொரு நாளின் 24 மணி நேரமும் நல்ல நேரமே! ஒவ்வொரு ஆண்டின் 365 நாட்களும் நல்ல நாட்களே! நமது பேச்சும் செயலும் நல்லவையாக இருக்க வேண்டும். இது தான் முக்கியம்.
‘‘ஒரு போதும் அல்லாஹ் விதித்ததைத் தவிர (வேறு எதுவும்) எங்களை அணுகாது. அவன் தான் எங்களுடைய பாதுகாவலன்”;” என்று;று (நபியே) நீர் கூறும்.;. மூமின்கள் அல்லாஹ்வின் மீதே முழு நம்ப்பிக்i;கை வைப்பார்களாக! (அல்குர்ஆன் 9 51)
சகுனம் பார்ப்ப்பது சரியானதல்ல்ல
ஏதேனும் காரியமாக வெளியில் புறப்படும்போது ‘எங்கே?” என்று யாராவது கேட்டு விட்டால் போகிற காரியம் நடக்காது என்று நம்புவதும் – நடந்து செல்லும்போது, காலில் ஏதேனும் தடுக்கினால், சிறிது நேரம் நின்று விட்டுச் செல்வதும் – போகிற வழியில் பூனை குறுக்கிட்டால், போகிற காரியம் தடங்கல் ஏற்படும் என்று கருதுவதும் – விதவைப் பெண்கள் எதிரில் வந்தால், அபசகுனம் என்று நினைப்பதும், வடிகட்டிய முட்டாள் தனம். நாம் நமது வேலையாகப் போகிறோம். பூனை தனது வேலையாகப் போகிறது. நமது வேலையைக் கெடுப்பது பூனையின் வேலையல்ல. மூளை என்று ஒன்று இருந்தால், கொஞ்சமாவது சிந்திக்க வேண்டும்.பேசிக் கொண்டிருக்கும் போது, சுவர்க்கடிகாரம் மணி
அடித்தாலோ, பல்லி சப்தமிட்டாலோ, சொல்வது உண்மை mஎன்று கடிகாரத்தையும் பல்லியையும் சாட்சிகளாக்குவதும் – ‘பாலன்ஸ்” தவறி பல்லி விழுந்துவிட்டால், பதறித் துடித்து, காலண்டரைத் திருப்பி ‘பல்லி விழும் பலன்” பார்ப்பதும், மூட நம்பிக்கைகளில் உள்ளவை என்பதைப் புரிந்துக் கொள்ள பெரிய ஆராய்ச்சி தேவையில்லை.
தேதி பார்க்க காலண்டர் வாங்கும் போது பல்லி விழும் பலனும், ராசி பலனும் இல்லாத காலண்டர் வாங்கினால் போதும். பெரும்பாலும் இந்த மூடநம்பிக்கைகளிலிருந்துவிடுபடலாம்.
மூடக் கொள்கைகளை முற்றிலும் ஒதுக்கிய – குர்ஆன் வசனங்களும், பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன் மொழிகளும், அடங்கிய இஸ்லாமியக் காலண்டர்கள் பரவலாக இப்போது விற்பனைக்கு வந்து விட்டன. நல்ல சகுனம், கெட்ட சகுனம், எதுவுமே இஸ்லாத்தில் இல்லை. எவ்வித சகுனமும் பார்க்கக்கூடாது. சகுனங்கள் ஒரு போதும் நமது செயல்களில் எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தமாட்டா.
நல்லதும் கெட்டதும் அல்லாஹ் விடமிருந்தே எற்படுகின்றது என்று நம்புவது ‘ஈமான்” என்னும் இறை நம்பிக்கையின் ஓர் அம்சமாகும். அல்லாஹ் விதித்த படி தான் அனைத்துமே நடக்கும், என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை, ஆழமாக நமது உள்ளத்தில் வேரூன்ற வேண்டும். அந்த ஈமானின் உறுதி நமது இதயத்தில் இருக்கும் வரை தீமைகள் எதுவும் ஏற்படாது. நல்லது என்று நாம் நினைத்திருந்த காரியம் நடக்காமல் போகலாம். இதை விடச் சிறந்ததை தருவதற்காகவோ அல்லது இதன் மூலம் கெடுதி ஏற்படலாம் என்பதற்காகவோ இறைவன் தடுத்திருக்கலாம்.நாம் விரும்பாத ஒன்று நடந்திருக்கலாம். நமக்கு அது
தான் சிறந்தது என்று இறைவன் நாடியிருக்கலாம். அல்லது இதைவிடப் பெரிய தீமையிலிருந்து நாம் காப்பாற்றப் பட்டிருக்கலாம். நடந்து முடிந்த அனைத்து காரியங்களையும் இப்படித்தான் அர்த்தப் படுத்திக் கொள்ள வேண்டுமே தவிர, சகுனத்தின் அடிப்படையில் நடந்ததாகவோ, நடக்காமல் போனதாகவோ ஒரு போதும் நம்பக் கூடாது. ‘மந்திரிக்கச் செல்லாமலும், சகுனம் பார்க்காமலும், தங்கள் இறைவன் மீது உறுதியான நம்பிக்கை வைத்த எழுபது ஆயிரம் பேர் எனது சமுதாயத்தில் விசாரனையின்றி சுவர்க்கம் செல்வார்கள்” என்று அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர். இப்னு அப்பாஸ் ரளியல்லாஹு அன்ஹு, ஆதாரம் :புகாரி)
திரு மணத்த்தில் தீய பழக்க்கங்கள்
சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் மூழ்கிப் போன சமூகத்தினர் கூட ‘சீர் திருத்தத் திருமணங்கள்” என்னும் பெயரில், இந் நாகரீகக் காலத்தில் மூடப் பழக்கங்களை விட்டொழித்து விட்டனர். ஆனால் உண்மையான சீர் திருத்தத் திருமணங்களை உலகுக்கு நடத்திக் காட்டிய உத்தம நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழியைப் பின் பற்றி நடப்பதாகக் கூறும் நம் சமுதாயத்தினர் சிலர், இன்னமும் அநாச்சாரங்களிலும், மூடப் பழக்கங்களிலும், மூழ்கிக் கிடப்பதைக் காணும்போது நெஞ்சு பொறுக்குதில்லையே!
மஞ்சள் கயிற்றில் மாங்கல்யம் செய்து, மணப்பெண் கழுத்தில் ‘தாலிகட்டும்” வழக்கம் கருகமணி என்னும் பெயரில் முஸ்லிம் சமுதாயத்தில் முக்கியத்துவம் அடைந்ததும், கழுத்தில் கட்டிய கருப்பு மணிக்கு கணவணுக்குச் சமமான மகிமை அளிப்பதும்- திருமண நிகழ்ச்சிகளில் தேங்காய்க்கும் வாழைப் பழத்துக்கும் முக்கியத்துவம் கொடுப்பதும், அரிசி அளக்க வைத்து அல்லாஹ்வின் இரணத்தை அள்ளி இறைப்பதும், மணமக்களைச் சுற்றி கூட்டமாகக் கூடி நின்று கும்மாளம் போடுவதும், பரிகாசம் என்னும் பெயரில் பருவப் பெண்கள் ஒன்று சேர்ந்து மணமகனைக் கேலி செய்வதும், ஆட்டுத் தலையை வைத்து ஆரத்தி எடுப்பதும், எங்கே போய்க் கொண்டிருக்கிறது இஸ்லாமிய சமுதாயம்?
சமுதாயம் சீர் பெற, இது போன்ற சடங்கு சம்பிரதாயங்களைக் களைய வேண்டும். சத்தியத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காட்டிய நெறியைக் கடைப் பிடிக்க வேண்டும. பெருமைக்காகவும், ஆடம்பரத்துக்காகவும், செய்யும் வீண் செலவுகளைத் தவிர்க்க வேண்டும். அப்போது தான் ஏழ்மையான மக்களின் சிரமங்களைக் குறைக்க முடியும். ”குறைந்த செலவில் நடத்தப்படும் திருமணமே அதிக பரக்கத் நிறைந்ததாகும்.” என்பது நபி மொழி. (அறிவிப்பவர். ஆயிஷா ரளியல்லாஹு அன்ஹா, ஆதாரம் அஹ்மத்)வரதட்சனை என்னும் வன்கொடுமை ஒழிய வேண்டும். சீர் வரிசை என்னும் பெயரில் பெண் வீட்டாரிடம் பணம் பறிக்கும் பாதகர்கள் திருந்த வேண்டும்.கல்யாணத்திற்காகக் காத்திருக்கும் ஏழைப் பெண்களின் கண்ணீரைத் துடைக்க இறையச்சமுள்ள இளைஞர்கள் முன் வரவேண்டும்.
மாபெரும் கொடுமை வரதட்சனை
வரதட்சனை ஒரு மாபெரும் கொடுமை என்பதை உணர்ந்த ஏராளமான இளைஞர்கள் வரதட்சனை வாங்காமல் திருமணம் செய்யத் தயாராகி விட்டனர். என்றாலும் இது ஒரு சாதனை அல்ல. மணப் பெண்ணுக்கு உரிய மஹர் தொகையைக் கொடுத்து மணம் முடிக்க வேண்டும். இதுவே மார்க்கச் சட்டம். சிலர் மஹர் என்னும் பெயரில் சொற்பத் தொகையை நிர்ணயித்து அதையும் கொடுக்காமல், பள்ளிவாசலின் பதிவுப் புத்தகத்தில் பெயரளவில் எழுதி வைத்து விட்டு, கட்டிய மனைவியிடம் கடன்காரனாகக் காலத்தைக் கழிக்கிறார்கள்.
மஹர் தொகையைக் கொடுக்காமல் கடன் காரனாக இருப்பவர்கள் இப்போதாவது கொடுத்து விட வேண்டும். மஹர் தொகையை இப்பேர்து கொடுப்பதால் ‘தலாக்” ஆகி விடும் என்று சிலர் கருதுகின்றனர். இது மிகவும் தவறான நம்பிக்கை. அறியாமல் செய்த தவறுகளுக்கு அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோர வேண்டும்.
”இன்னும், உங்களில் வாழ்க்கைத் துணை இல்லாதவருக்கும், அவ்வ்விதமே சாலிஹான உங்க்கள் அடிமைகளுக்கும், திருடணம் செய்து வையுங்க்கள். அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தன் நல்லருளைக் கொண்டு அவர்களைச் சீமான்களாக்க்கி வைப்பான். மேலும் அல்லாஹ் (கொடையில்) விசாலமானவன். (யாவற்றையும்) நன்கறிந்தவன்.” (அல் குர்ஆன் 24 32)
இன்ஷா அல்லாஹ், தொடரும்