இஸ்லாம் ஒரு தூய மார்க்கம். இதன் கொள்கைகளும் கோட்பாடுகளும் ஏக இறைவனாகிய அல்லாஹ் உருவாக்கியவையாகும். 1400 ஆண்டுகளுக்கு முன் அரேபிய நாட்டில் வாழ்ந்த ஒரு சமுதாயத்துக்காக மட்டும் உருவாக்கப் பட்டதல்ல இஸ்லாம். மாறாக, அன்று முதல் இன்று வரை இனிமேல் காலங்கள் உள்ளவரை வாழ்ந்த– வாழ்கின்ற– இனி வாழும் மக்களுக்காக எல்லாக் காலத்திலும்– எல்லாப் பகுதிகளிலும் வாழும் அனைத்து வகை மனிதர்களுக்கும் பொருந்தும் படியான வாழ்க்கைத் திட்டம் தான் இஸ்லாம்.
இஸ்லாத்தின் கொள்கை கோட்பாடுகள்– வணக்க வழிபாடுகள் அனைத்துமே, இறைவனால் திருமறை குர்ஆனில் சொல்லப் பட்டவைகளும், இறுதி நபி பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் சொல்லப் பட்டவைகளும், செய்து காட்டப் பட்டவைகளும், அங்கீகரிக்கப் பட்டவைகளும் மட்டும் தான்.
திரு மறையில் கூறப்படாதவைகளும், திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மூலம் அங்கீகரிக்கப் படாதவைகளும், கொள்கை கோட்பாடுகளாக வணக்க வழிபாடுகளாக ஒரு போதும் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது.
திரு மறை நிறைவு பெற்ற பிறகு – திரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மறைவுக்குப் பிறகு, வேறு யாராவது புதிய வணக்க வழிபாடுகளை புதுமையான செயல்களை உருவாக்கி இவைகளும் இஸ்லாத்தில் உள்ளவை தான்” என்று கூறினால்– அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனது திருத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் எதிரானவர்கள் என்பதில் எள்ளளவும் சந்கேமில்லை.
அவர்கள் எவ்வளவு பெரிய மேதைகளாக இருந்தாலும், மாபெரும் அறிஞர்களாக அங்கீகரிக்கப் பட்டவர்களாக இருந்தாலும் சரியே. அல்லாஹ்வும், அவனது திருத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் எதைச் செய்யும்படி ஏவினார்களோ, அதை மட்டுமே செய்ய வேண்டும். அதில் நம் வசதிக்குத் தகுந்தபடி குறைத்துக் கொள்வதும் குற்றம். நம் விருப்பத்திற் கேற்றபடி கூட்டிக் கொள்வதும் குற்றம்.
மேலும் அல்ல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப் பற்ற்றிக் கட்ட்டளையிட்டு விட்டால், அவர்களுடைய அக்க்காரியத்த்தில் வேறு அபிப்ப்பிராயம் கொள்வ்வதற்கு, ஈமான் கொண்டுள்ள்ள ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை. ஆகவே அல்ல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் எவரேனும் மாறு செய்த்தால் நிச்ச்சயமாக அவர்கள் பகிரங்க்கமான வழிகேட்டிலேயே இருக்க்கிறார்கள். (அல் குர்ஆன் 33 36)
என்று திருமறை குர்ஆன் கூறுகிறது. அல்லாஹ்வும், அவனது திருத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டித் தராத அத்தனை பழக்கங்களும் மூடப்பழக்கங்களே. சொல்லித் தராத அத்தனை நம்பிக்கைகளும் மூட நம்பிக்கைகளே. இன்று முஸ்லிம்களுக்கு மத்தியில் இஸ்லாத்தில் இல்லாத எத்தனையோ மூடப் பழக்கங்கள், மூட நம்பிக்கைகள், அநாச்சாரங்கள், பித்அத்துகள், நீக்கமற எங்கெங்கும் நிறைந்து விட்டன.
அல்லாஹ்வுக்கும், அவனது திருத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் மாற்றமான காரியங்களைக் கண்டு பிடித்துக் களையெடுப்பது அவசியத்திலும் அவசியம். ஏனெனில், அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். நீங்கள் சில பாவச் செயல்களைப் புரிகிறீர்கள், அவை உங்கள் பார்வையில் முடியை விட மெலிதாகத் தோன்றுகின்றன. (ஆனால்) அவற்றை நாங்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் காலத்தில் மூபிகாத் என்றே கருதி வந்தோம். (மூபிகாத் என்றால் பேரழிவை ஏற்படுத்துபவை என்று பொருள்) ஆதாரம். புகாரி
இடைக் காலத்த்தில் ஏற்பட்ட மடமைகள்
இஸ்லாம் ஓர் உலகளாவிய மார்க்கம். இதன் கொள்கை கோட்பாடுகள், வணக்க வழிபாடுகள் அனைத்தும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்க முடியும். இருக்கவும் வேண்டும். உலகில் உள்ள அனைத்து மதங்களையும் விட இஸ்லாமிய மார்க்கத்திற்கு மட்டுமே உரிய தனிச் சிறப்புக்களில் இதுவும் ஒன்று.
பல்வேறு கால கட்டங்களிலும், பல வேறு சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சத்தியத்தை உணர்ந்து அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு அணி திரண்டு வந்தார்கள். பல் வேறு கலாச்சாரங்களையும் பின்பற்றி வாழ்ந்தவர்கள் இனிய இஸ்லாத்தில் இணைந்த போது – ஏற்கனவே தாங்கள் கடைப் பிடித்து வந்த பழக்க வழக்கங்களில் சிலவற்றைத் தங்களையும் அறியாமல் தங்களுடன் கொண்டுவந்து விட்டனர்.
பல்வேறு சமூகத்தினரிடையே பரவி வாழ்ந்து வரும் முஸ்லிம் சமுதாயத்தினரும் – பிற சமூக கலாச்சாரங்களை பார்த்துப் பார்த்துப் பழகிப்போய் – தங்களையும் அறியாமல் தங்களுடன் சேர்த்துக் கொண்டனர். இப்படிச் சிறுகச் சிறுக முஸ்லிம்களுக்கு மத்தியில் நுழைந்து விட்ட மூடப் பழக்கங்கள், கண்மூடிப் பழக்கங்கள், நாளடைவில் வேர்வி;ட்டு கிளை பரப்பி முழு அளவில் முஸ்லிம் சமுதாயத்தை ஆக்கிரமித்துக் கொண்டு விட்டன.
அம்பெய்து குறிபார்த்து அதற்கேற்ப நடந்தவர்கள் – நிர்வாணமாக கஃபாவை வலம் சுற்றி வந்தவர்கள் – மதுவின் போதையில் மதி மயங்கிக் கிடந்தவர்கள் – பெண் குழந்தைகளை உயிருடன் குழி தோண்டிப் புதைத்தவர்கள் – அறியாமைக் காலத்தின் அநாச்சாரங்களில் மூழ்கிக் கிடந்தவர்கள் – இவர்களெல்லாம் அண்ணல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் போதனைகளை ஏற்று– சத்திய இஸ்லாத்திற்கு வந்த போது, முழுக்க முழுக்க அனைத்தையும் தூக்கி எறிந்து விட்டு, முழுமையான முஸ்லிம்களாக வந்தார்கள்.
அப்படிப்பட்ட நபித் தோழர்களின் சரித்திரங்களைச் சற்றேனும் சிந்தித்தால்….. முன்னோர்கள், மூதாதையர் செய்த மூடப் பழக்கங்களிலிருந்தும், பிற சமூக மக்களின் கலாச்சாரங்களிலிருந்து நம்மையும் அறியாமல் நம்மிடையே தொற்றிக் கொண்டு விட்ட அநாச்சாரங்களிலிருந்தும் நாமும் விடுபட முடியும். அல்லாஹ்வும், அவனது திருத் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டிய நேரியவழியில் நம் வாழ்க்கையை அமைது;துக் கொள்ள முடியும்.
”முன்னோர்கள் செய்தார்கள்” என்பதற்காகவும், காலங் காலமாகச் செய்யப்பட்டு வருகின்றன என்பதற்காகவும், பெரும் பாலானவர்கள் செய்கிறார்கள் என்பதற்காகவும், மூடப் பழக்கங்களை ஒரு போதும் நியாயப் படுத்தக் கூடாது. செய்யும் காரியங்கள், குர்ஆனிலும் ஹதீஸிலும் அங்கீகரிக்கப்படாதவையாக இருப்பின் – தயக்கமின்றி அவற்றைத் தவிர்க்க முன் வர வேண்டும்.
”அல்லாஹ் இறக்க்கி அருளிய (வேதத்)த்தின் பாலும், இத் தூதரின் பாலும் வாருங்க்கள்” என அவர்களுக்குக் கூறப்பட்டால், எங்களுடைய தந்தையர் (மூதாதையர்)களை நாங்கள் எ(ந்த மார்க்க்கத்)தில் கண்டோமோ அதுவே எங்களுக்குப் போதுமானது என்று அவர்கள் கூறுகிறார்கள்.
என்ன! அவர்களுடைய தந்தையர் (மூதாதையர்) ஒன்றும் அறியாதவர்களாகவம், நேர் வழியில் நடக்க்காதவர்களாக இருந்த்தாலுமா? (அவர்களைப் பின்ப்பற்றுவார்கள்) (அல்குர்ஆன் 5 104)
பூமியில் உள்ள்ளவர்களில் பெரும்ப்பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்ல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற்ற) வெறும் யூகங்க்களைத் தான் அவர்கள் பின்ப்பற்றுகிறார்கள். இன்னும் அவர்கள் கற்ப்பனையிலேயே மூழ்க்கிக் கிடக்க்கிறார்கள். (அல் குர்ஆன் 6 116)
இன்ஷா அல்லாஹ், தொடரும்