நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாழ்வு முழுமையாக எடுத்துரைக்கப்படவில்லை!
மௌலவி, கே.எம். இல்யாஸ் ரியாஜி
[ இஸ்லாத்தை எடுத்துரைப்பது நமது வேலை. வந்தார்களா? வரவில்லையா? என்பது நமது வேலையல்ல. இஸ்லாத்தை தெரிந்து கொள்வதில் நமக்குள்ளேளே வெட்கம் இருக்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்பற்றி எவ்வளவோ செய்திகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் வாழ்க்கையை முழுமையாக எடுத்துரைக்காத துரோகம் முஸ்லீம்களுக்கிடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நபிகளார் வாழ்க்கையில் தொழுகை மட்டும் எடுத்துரைக்கப்படுகிறது. ஆனால் அவர்களது வாழ்க்கையில் தொழுகை வெறும் 50 நிமிடம் மட்டுமே! மீதமுள்ள 23 மணி நேரத்தில் என்ன நடந்தது என்பதை பேச மறுக்கிறோம். இதற்காகவே நீண்டதொரு யுத்தம் நடத்தவேண்டியிருக்கிறது.]
இஸ்லாத்தை முஸ்லீம்கள் எதார்த்த வடிவில் எடுத்துச்சொல்வதில்லை. ஒருபகுதியை மட்டும் பெரிதாகக் காட்டுகின்றனர். அது நோயின் வீக்கம் போல் தெரிகிறது. பத்ரு போரில் பிடிபட்ட கைதிகளை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மன்னித்தார்கள் என்று கூறப்படுகிறது. ஈட்டுத்தொகை பெற்றுக்கொண்டு தான் மன்னித்து விடுதலைச் செய்தார்கள். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தனிப்பட்டு மன்னித்தார்கள். இஸ்லாம் என்றபோது அவர்கள் மன்னிக்கவில்லை.
ஒரு ஹதீஸ் சொல்லும் செய்தி: கைதியாகப் பிடிபட்ட அபூ இஷா என்ற கவிஞர் தன்னை விடுவிக்கும்படி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் கேட்டார். முஸ்லீம்களுக்கு எதிராக எந்த போரிலும் பங்கெடுக்க மாட்டேன் என்ற உறுதியை பெற்று அவரை விடுதலை செய்தார்கள்.
அடுத்து நபியைக் கொல்வதற்காக உஹதுப்போர் நடைபெற்றது. முன்பு விடுவிக்கப்பட்ட அதே நபர் தனது வாக்குறுதியை மீறி உஹது போரில் கலந்த கொண்டு மீண்டும் பிடிபட்டிருந்தார். இம்முறையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் மன்னிப்பு வேண்டினார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அந்த கவிஞரைப் பார்த்து, ”இப்போது உன்னை மன்னித்தால் முஹம்மதை இரண்டு முறை ஏமாற்றி விட்டேன் என்று சொல்வாய், அதனை நான் அனுமதிக்க முடியாது” என்று தாருக் கைஸ்ஸை அழைத்து இவர் உயரத்தை குறையுங்கள் என்று உத்தரவிட்டார்கள். உயரத்தை குறையுங்கள் என்பது சிரச்சேதம் (தலையை சீவுவது) செய்வது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மன்னிக்கக்கூடியவர்கள் தான். ஆனால் ஏமாளியல்ல.
கைபர் யுத்தத்தில் யூதர்களுக்கு பெரிய அவமானம். ஒரு பெண்ணை தயார் செய்து ஆட்டிறைச்சியில் விஷத்தைத்தடவி அனுப்பி வைத்தார்கள். சாப்பிட்டதும் அதில் விஷம் இருப்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்குத் தெரிந்த விட்டது. தன்னுடன் இருந்தவர்களுக்க அதை பகிர்ந்தளிக்கவில்லை. பிஸ்னுப்பரார் என்ற ஸஹாபி மட்டும் அதைச் சாப்பிட்டதால் மரணித்தார். அந்தப் பெண்ணைக்கூப்பட்டு பழிக்கப்பழி வாங்கினார்கள்.
யூதர்கள் செய்த மிகப்பெரிய குற்றத்திற்காக ஒரே நாளில் 600 யுதர்களைக் கொலை செய்தார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் தீர்க்கமான உறுதி இருந்தது. ஒரு ஸஹாபி தனது மனைவியை வேற்று ஆணுடன் படுக்கையில் பார்த்ததாகக்கூறி என்ன செய்ய வேண்டும்? எனக்கேட்கிறார். முறைப்படி நான்கு சாட்சிகள் இருந்தால்தான் தண்டிக்க முடியும் என்கிறார்கள் நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
வாளை எடுத்து தலையை வெட்டச்சொல்லாமல் சாட்சியை தேடச்சொல்கிறீர்களே என்று நபிகள் நாயகம் ஸல்லல்லாஹ{ அலைஹி வஸல்லம் அவர்களிடம் ஸாது ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டபோது, ”உம்மைவிட நான் ரோஷக்காரன், என்னைவிட அல்லாஹ் ரோஷக்காரன் என்று கண்டித்து நான்கு சாட்சி வேண்டும்” என்று கண்டிப்பாக சொல்லி விட்டார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் எல்லா முகமும் இருந்தது. அவர்களது ஒரு முகத்தை மட்டும் காட்டுவது நபிக்கு நாம் செய்யம் துரோகமாகும். குற்றவாளிகள் மீது நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரக்கம் காட்டவில்லை. இன்று குடும்பச்சண்டையை சமூகச்சண்டையாக மாற்றுகின்றனர். உன் சொந்த சண்டையில் மன்னித்துவிடு. சுமூகச்சண்டையில் மன்னிக்காதே என்பதே நபிகளார் வாக்கு.
அதில் படிப்பினையும் பாடமும் இருக்கிறது. நபிகளைப்பற்றிய செய்தியை மற்றவர்க்கு கூறும்போது ஈர்க்கப்படும் விதத்தில் கூறவேண்டும். ஆனால் இன்ற முறையாகக் கூறப்படவில்லை. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்பற்றி முழுமையாக கூறும் விதத்தில் 30 பக்கத்தில் நம்மிடம் புத்தகம் இல்லை. அதனால் தான் நபி கார்டூன்கள், குண்டுகள் வரையப்படுகின்றன. சமுதாயத்தை பல கூறுகளாக அறுவை சிகிச்சைகள் செய்து தவறுகள் செய்திருக்கிறோம். சுன்னத்தை அவமானம் செய்த நமக்குள் நாம் கோபப்படவில்லை. மற்றவர்கள்மீது கோபம் எதற்கு?
இஸ்லாத்தை எடுத்துரைப்பது நமது வேலை. வந்தார்களா? வரவில்லையா? என்பது நமது வேலையல்ல. இஸ்லாத்தை தெரிந்து கொள்வதில் நமக்குள்ளேளே வெட்கம் இருக்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப்பற்றி எவ்வளவோ செய்திகள் இருக்கின்றன. ஆனால் அவர்கள் வாழ்க்கையை முழுமையாக எடுத்துரைக்காத துரோகம் முஸ்லீம்களுக்கிடையில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நபிகளார் வாழ்க்கையில் தொழுகை மட்டும் எடுத்துரைக்கப்படுகிறது. ஆனால் அவர்களது வாழ்க்கையில் தொழுகை வெறும் 50 நிமிடம் மட்டுமே! மீதமுள்ள 23 மணி நேரத்தில் என்ன நடந்தது என்பதை பேச மறுக்கிறோம். இதற்காகவே நீண்டதொரு யுத்தம் நடத்தவேண்டியிருக்கிறது.
நன்றி: முஸ்லீம் முரசு, மே 2010