திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பும் புரிதலும் (1)
எச்.முஜீபுர் ரஹ்மான்
பொதுவாக வரிக்குவரி செய்யப்படும் மொழிப்பெயர்ப்புக்கும் சாரம்சத்துடன் மொழியாக்கம் செய்யப்படுவதற்கும் பல வித்தியாசங்கள் உண்டு. ஆனால் இரண்டு விதமான மொழிபெயர்ப்பும் சரியான மொழியாக்கத்தை தருமா என்பது சந்தேகமே.
ஒரு பிரதியை உருவாக்கியவரே பிரதியின் மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு மொழிமாற்றம் செய்யும் போது கூட சரியான மொழியாக்கம் நிகழ்வதில்லை. மேலும் இருமொழி புலமை கொண்டவர் பேசவும், எழுதவும் தெரிந்தவர் மொழிபெயர்க்கும் போது ஒரளவுக்கு மொழிமாற்றம் செய்யப்படும்.
ஆனால் முழுமையானதன்று.பேச்சு வழக்கு மொழியறிவை பெறாமல் வெறுமனே மொழியறிவு பெற்று ஒரு மொழியில் இருந்து இன்னொரு மொழிக்கு மொழி பெயர்க்கும் போது அநேக தவறுகள் நிகழ்கின்றன. அல்லது இரு மொழியில் புலமையுள்ளவர்களிடம் சரிபார்க்கப்பட்டு அல்லது பேசும் மொழியறிவு பெற்றவரிடம் சரிபார்க்கப்பட்டு மொழிமாற்றம் செய்யப்பட்ட பிரதி ஒரளவுக்கு தவறுகள் இல்லாமல் இருக்கும்.
இருந்த போதிலும் எழுபது சதமான மொழிபெயர்ப்புக்கு சாத்தியமே இல்லை.ஏனெனில் மொழி என்பது வெறுமனே தகவல் பரிவர்த்தனைக்கான கருவியல்ல. அது மொழி பெசுபவரின் சமூகம், பண்பாடு, வரலாறு, உளவியல், இலக்கியம் போன்ற பல்வேறு விஷயங்களின் சாராம்சத்தை தகவமைத்து கொண்டிருக்கிறது.
எனவே தான் மொழியியல் என்ற துறை மொழியை ஆய்வு செய்யும் துறையாகவும்,சமூகத்தை வாசிக்கும் வாசிப்பாகவும் அமைந்திருக்கிறது. இரு மொழியையும் அறிந்து மொழியியலறிவையும் அறிந்தவர்கள் மொழியாக்கம் செய்யும்போது தவறுகள் குறைகின்றன.
மேலும் மொழியில் வழக்கு சொற்களும்,திசைச் சொற்களும், பழ்மொழிகளும், பண்பாடு சார்ந்த உருவக, உருவ, குறியியல் மொழிகளும் என பல்வேறு மொழி அமைப்புகள் பல பொதிந்து கிடக்கின்றன.இவை எல்லாம் அறிந்து கொண்டு மொழி பெயர்ப்பது அவ்வளவு எளிதானதன்று.ஆனால் இவை எல்லாம் ஒரளவுக்காவது தெரியாமல் மொழிபெயர்த்தால் பிழைகள் தான் உருவாகும்.
மொழியில் பேச்சும், இசையும் பல்வேறு செயல்பாடுகளில் இணைந்தே இருக்கிறது.சமூக அமைப்பில் தெளிவான பேச்சு முறை இருந்த போதிலும் வரலாற்றின் வளர்ச்சியோடு இயைந்த திசைமொழியும், வட்டரா வழக்குகளும் காணப்படுகிறது. ஒவ்வொரு மொழிக்கும் ஒவ்வொரு இலக்கண அமைப்பு உண்டு. ஆனால் அனைத்து மொழிகளும் பொதுவான சில அமைப்பு கோட்பாடுகளை கொண்டிருக்கின்றன. இத்தகைய கோட்பாடுகள் தருக்கவியல் கோட்பாடுகளோடு தொடர்பு கொண்டதாக இலக்கண ரீதியில் அமைந்த வாக்கியத்தின் பெருக்கமும் சுருக்கமும் தருக்கவியல் பரப்பின் பெருக்கத்தோடும், சுருக்கத்தோடும் இணைந்தவையாகும்.மொழி சமூகத்தோடு நெருங்கிய தொடர்புடையதாகும்.
எனவே மொழியியல் மொழியை சமூகத்தின் விளைபொருளாக [product of society] கருதுகிறது.மேலும் மொழி வரலாற்றின் விளை பொருள் [product of history] என்றும் மனித மனத்தின் விளைபொருள் [product of human mind] என்றும் கூறப்படுகிறது.மொழியும் சமூகமும் நெருங்கி பின்னிப் பிணைந்தவை. தொல்குடி மக்களின் பண்பாட்டை மானுடவியல் படி ஆய்வது போல பண்பாட்டு கூறுகள் அதிகம் நிறைந்த மொழியை ஆய்வதும் முக்கியமாக இருக்கிறது.
வரலாற்றின் விளைபொருள்களான புனித நூற்கள் குறித்து அதிகம் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.மேலும் வரலாற்று விளைப்பொருளான புனித நூலை இலக்கிய பிரதியாக அணுகப்படாததின் குறையும் இருக்கிறது.இந்த நிலையில் திருக்குர்ஆன் என்ற புனித நூலின் இலக்கிய தன்மையை சாதாரணமாக கருதிவிட முடியாது. திருகுர்ஆன் போன்ற பன்முக ஆளுமை நிறைந்த நூலை மொழிக்கலை நூலாகவே கருத முடிகிறது. எனவே மொழியியல் நோக்கில் திருக்குர்ஆன் இலக்கிய நூலாகவும் இருக்கிறது என்பதை சுட்டிகாட்டியாக வேண்டியிருக்கிறது. மொழியே இலக்கியத்தின் ஊடகம் என்ற வகையில் இலக்கியம் மொழியியலின் ஆய்வு பரப்புக்குள் அடங்கிவிடுகிறது.
ஒருவர் பேசும் குறிப்பிட்ட மொழி மரபணுபாரம்பரியத்தால் மட்டுமல்ல அம்மனிதர் வாழும் சமூக சூழலின் பண்பாட்டு பாரம்பரியத்தாலும் கிடைக்கிறது.இதனால் மொழி தானே பெறப்படுவதில்லை.கற்கப்படுகிறது என்லாம்.ஆகவே மானுடவியலாளர் [anthropologists] மொழியையும் பண்பாட்டு காரணமாக வரும் நடத்தையோடு இணைக்கின்றனர்.மொழியில் கருத்து பரிமாற்றம் முக்கிய இடம் பெறுவதால் ஒருவர் பேச மற்றவர் புரிந்து கொள்ளுவதாகிய மொழிதல் மூன்று படிகளுடன் திகழ்கிறது.
அவை
1] குறி ஆக்கம் [encoding]
2] பரப்புதல் [transmission]
3] குறி அவிழ்ப்பு [decoding]
எனலாம்.
இதை சற்று விளக்கமாக சொன்னால்
1] பொருட்குறி ஆக்கம்[semantic encoding]
2] இலக்கண குறியாக்கம் [grammatical encoding]
3] ஒலிக்குறியாக்கம் [phonological encoding]
4] அனுப்புதல்
5] பரப்புதல்
6] ஏற்றல்
7] ஒலிக்குறி அவிழ்ப்பு
8] இலக்கண குறியவிழ்ப்பு
9] பொருட்குறி அவிழ்ப்பு
என வகைப்படுத்தலாம்.
மொழியியல் பன்முக ஆய்வுகள் நிரம்பிய மாபெரும் துறையாகும்.மொழியின் ஒலிப்பு,ஒலியின் குறிகள் ஆகியவற்றை ஒலியனியலாக [phonology/phonemics] என்ற வகையிலும் பேச்சுறுப்புகளின் செயல்பாடு[articulartory/phonetics] என்ற வகையிலும் கேட்பவர் தன் காதில் இவ்வொலிகள் பதிவாகுதல் [auditory phonetics] குறித்தும் பேசும் போது காற்றில் ஏற்படும் ஒலியலைகள் [acoustic phonetics] என்ற வகையிலும் ஆய்வு பரப்புகள் நிறைய இருக்கின்றன.
இத்துடன் பொருண்மை குறி பற்றிய ஆய்வாக சொற்பொருளியல் [semantics] இருக்கிறது.நில மொழியியல் அல்லது மொழி புவியியல் [linguistic geography]இடவேறுபாடு காரணமாக மொழியில் அமையும் மாற்றங்களை ஆய்வு செய்கிறது. மரபு நிலையில் சமுதாய மொழியியலில் தான் சமூக மொழியியல் [socio linguistics] உட்படுத்தப்பட்டிருக்கிறது. வெவ்வேறு சமூக அடுக்கின் மொழிப்பயன்பாடு,வேறுபாடு,மொழிமாற்றம்,உறவு ஆகியவை முக்கியமானவை.மேலும் ஒத்தகால / ஒரே கால மொழியியல் [synchronic linguistics] மற்றும் காலங்களுக்கிடையேயான மொழியியல் [diachronic linguistics] ஆகியவை உள்ளன.
இவைகள் மூலம் காலம், சூழல், இடம் ஆகியவை மொழியை பாதிக்கும் காரணங்களாக இருப்பது தெளிவாக்கப்பட்டிருக்கிறது. மேலும் வரலாற்று மொழியியல் [historic linguistics] வரலாற்றில் பல்வேறு இனக்குழுக்களிடம் ஒரே மொழி பலவிதமான மாற்றங்களை கொண்டிருப்பதை விளக்குகிறது. அது போல ஒப்பு மொழியியல் [comparative liguistics] ஒரு மொழிக்கும் இன்னொரு மொழிக்குமான பொதுவான இணக்கங்களையிம் விலகல்களையும் சுட்டிக்காட்டுகிறது. மேலும் ஒரு மொழியில் வேறோரு மொழி ஏற்படுத்தும் பாதிப்புகளையும் சுட்டுகிறது.
மேலும் மானுட மொழியியல் [anthropological linguistics] மனிதன் மொழியை பயன்படுத்த கற்றுக்கொண்டது பற்றி விவரிக்கிறது. உளமொழியியல் மொழி ஏற்படுத்தும் உள ஒருமையையும், வேறுபடுதலையும், பொதுபுத்தி கட்டமைப்புக்கு மொழி செய்யும் பாதிப்பகளையும் விவரிக்கிறது. கணித மொழியியல் மொழியில் கணித அடிப்படையில் இலக்கண வாக்கிய மொழியமைப்பு எப்படி அமைகிறது என்றும் கணித அடிப்படையில் செயற்க்கையான கம்பியூட்டர் மொழியை உருவாக்குவதையும் காட்டுகிறது. இந்த மொழியியலின் வகைபாடுகள் மூலம் திருககுரான் வசனங்களை ஆயும் போது அதன் புரிதலும், மொழிமாற்றத்துக்கான வாசல்களும் பன்முக பட்டிருக்கிறது என்பது தெளிவாகிறது.
மொழியியல் வகைகள்
திருக்குர்ஆன் அத்தியாயங்கள்
உதாரணங்கள்
நில மொழியியல் تﺎﻳراﺬﻟا
புழுதியைக் கிளப்பும் காற்றுகள்
சமூக மொழியியல் –
குறைஷிகள்
ஒத்தகால/ஒரேகால மொழியியல் باﺮﺣﻻا
சதிகார அணியினர்
காலங்களுடேயான மொழியியல் – ا ﺺ
வரலாறுகள்
வரலாற்று மொழியியல் موﺮﻟا
ரோமானிய பேரரசு
ஒப்பு மொழியியல் –
ஈமான் கொண்டவர்
விளக்க மொழியியல் – nرﺎﻘﻟا
திடுக்கிடச்செய்யும் நிகழ்ச்சி
மானுட மொழியியல் – ءﺁﺮﺳا ﻰﻨﺑ
இஸ்ராயீலின் சந்ததிகள்
அமைப்பு மொழியியல் جرﺎﻌﻤﻟا
உயர்வழிகள்
கணித மொழியியல்:- ّﻔّﻄﻤﻟا
அளவு,நிறுவையில் மோசம் செய்தல்
உள மொழியியல்:- கடுகடுத்தார்
உதாரணமாக ஒத்தகால அல்லது ஒரேகால மொழியியல் தன்மையை விளக்கும் வகையில் அமைந்த சூரத்துர் ரூம் ஆரம்பவசனங்களை பார்க்கிற போது மொழிப்பெயர்ப்பு ஆங்கிலத்திலும் தமிழிலும் காலமாற்றத்தை கவனத்தில் கொள்ளாததினால் துண்டாடப்பட்ட விவரணைகளாக மாறி போவதை காண்கிறோம்.ஒவ்வொரு மொழிக்கும் அதன் அடிப்படையில் அமையும் இலக்கணத்தின் பேரில் காலமாற்றங்கள் குறித்த அளவுகோலின் படி மொழிமாற்றம் நிகழுமேயானால் தவறிருக்காது.
தொடர்ச்சிக்கு ”Next” ஐ ”கிளிக்” செய்யவும்