Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கணவன் மனைவி உறவும் பிள்ளை வளர்ப்பும்

Posted on May 4, 2010 by admin

கணவன் மனைவி உறவும் பிள்ளை வளர்ப்பும்

கணவன் மனைவி எனும் பந்தம் உறுதியாக நல்லவிதமாக இருந்தால்தான் பிள்ளைகளை நல்லபடியாக வளர்க்க முடியும்.

சில வீடுகளில் கணவன் மனைவிக்கு இடையே பெரும் மோதல் இருக்கும். அதனால் பிள்ளை மட்டும்தங்கள் விருப்பப்படி இருக்க வேண்டும், அதாவது எனது பிள்ளைதான் என்று சொல்வதில் பெருமை.

சில தகப்பன்கள் பிள்ளையின் எதிரேயே மனைவியை திட்டுவது, அடிப்பது, சண்டையிடுவது ஆகியவற்றை செய்வார்கள்.மிக கீழ்த்தரமான வார்த்தைகளையும் சிலர் ப்ரயோகிப்பார்கள். இது பிள்ளையின் மனதில் தாயின் மரியாதையை குறைத்து விடும்.

மேலும் ஒரு படி மேலே போய் சில தகப்பன்கள் பிள்ளைகளை ஒற்றனைப் போல் வைத்திருப்பார்கள். அதாவது,”நான் இல்லாத போது அம்மா என்ன செய்யறான்னு” எனக்கு சொல்லணும். சொன்னாநான் சாக்லேட் வாங்கித் தருவேன். என்று சொல்வார்கள். இது மிக மிகத் தவறு. இப்படிப்பட்ட மனநிலையில் வரும் பிள்ளையின் எதிர் காலம் என்னவாகும். மனைவியும் சில தவறுகளைச் செய்கிறாள்.

பிள்ளையின் மீது இருக்கும் பாசத்தினால் சில சமயங்களில் பிள்ளையை காக்க தகப்பனிடம் சில விடயங்களை சொல்லாமல் இருந்து விடுவாள்.

”அம்மாவுக்குத்  தெரியும். அம்மா திட்ட மாட்டாங்க. அப்பா கிட்ட சொன்னா தோல உரிச்சிடுவாருன்னு அம்மா அப்பா கிட்டயும் சொல்ல மாட்டாங்கன்னு” சொல்லும் பிள்ளை நல்லதாக வளர்க்கப்பட்டபிள்ளையல்ல”.

சில பெண்கள் பிள்ளையிடன் கடைக்குச் செல்லும்போது, கணவன் திட்டுவார் என்று தெரிந்தும் ஒரு பொருள் தான் ஆசைப்பட்டதை வாங்கியிருப்பார். பிள்ளை போய் போட்டுகொடுத்துவிட்டால்!!

”இந்தா இந்த சாக்லேட் வெச்சுக்கோ. அப்பா கிட்ட இதெல்லாம் சொல்லக்கூடாது!” என்று சொன்னால் நாளை அந்தக் குழந்தைநீ செஞ்சதை நான் சொல்லவில்லை, நான்செய்வதை நீயும் சொல்லாதே” என்றுபிளாக் மெயில் செய்ய ஏதுவாகும்.

மற்ற விடயத்தில் எப்படியோ? கணவன் மனைவி இருவரும் பிள்ளை வளர்ப்பு விடயத்தில் ஒத்தகருத்து உடையவர்களாக இருந்தால் தான் வளரும் தலைமுறை நல்ல குடிமகன்களாக, அன்னை தந்தையின் பால் மரியாதை, பாசம்கொண்ட தலைமுறையாக உருவாகும்.

உனக்கு அம்மாவை பிடிக்குமா? அப்பாவை பிடிக்குமா என்கின்ற கேள்வியே தவறு. அம்மா, அப்பா இல்லாமல் பிள்ளை இல்லை. ஆகவே இருவரும் ஒன்றுஎனும் எண்ணம் பிள்ளைக்கு வரவேண்டும். அம்மாவுக்கு தெரியாமல் அப்பாவிடம் பர்மிஷன்

வாங்கிக் கொள்ளலாம் என்றோ அப்பாவுக்கு தெரியாமல் அம்மாவிடம் சொல்லிவிட்டு சென்றுவிடலாம் என்றோகுழந்தை நடந்து கொள்கிறது என்றால் இருவரும் சேர்ந்து சரியாக வளர்க்க வில்லை என்பது தான் பொருள்.

பெற்றோர்கள் செய்யக்கூடாதவை

1.குழந்தை ஆசையா சொல்லணும்னோ, பேசனும்னோ வந்தா ”நான் பிசியா இருக்கேன் அப்புறம் பேசலாம்!”,மேல விழுந்து கொஞ்சனமாக்கும் தள்ளி நின்னு அப்படின்னுல்லாம் பேசக்கூடாது. அம்மா, அப்பா, தன்னை தவிர்க்கிறார்கள்,உதாசினப்படுத்துகிறார்கள் எனும் எண்ணம் விதைக்கப்படுகிறது.  

2. பெல்டால அடி, குட்டு, கிள்ளுவது, கைல கிடைச்சதால அடிஇவை physica abuse வகை. இவை தரும் நேர்மறை விளைவுகள்.

3. அடிப்பது குத்தம். வாய்க்கு வந்தபடி திட்டுவது மகா  கொடுமை.நம் நாட்டில் பிள்ளைகளை அடிப்பது, திட்டுவது இன்னமும் குற்றமாக இல்லை. மேலை நாடுகளில் எங்கப்பா அடிச்சார், அம்மா திட்டினாங்கன்னு போலிஸ்ல கேஸ் போட முடியும். நம்ம நாட்டுல அந்த வசதி இல்லை என்பதற்காக வரைமுறை இல்லாமல் திட்டுவது.

4.”நான் பெத்தது சரியில்லீங்க!!!” இதெல்லாம் நாளைக்கு எனக்கு சோறா போடப்போகுது!!” இதெல்லாம் தன் மனக்குறையை அடுத்தவங்க கிட்ட சொல்லிக்கிறா மாதிரி பெத்தவங்க பேசுவது. ஆனா இது தவறு. நம்ம பிள்ளையை பத்தி நாமே குறையா அடுத்தவங்க கிட்ட சொல்லக்கூடாது. அதே சமயம் ரொம்பவும் புகழ்ந்தும் சொல்லக்கூடாது.  

5. இந்த உலகத்துல ஒண்ணு கூட சரியில்லை, ”உங்கம்மா ஒரு உதவாக்கரை!!” ‘உங்கப்பனுக்கு மூளையே வேலை செய்யாது” ”நீ பைசா ப்ரோயஜன்ம் இல்லாதவன்” இப்படி அடுத்தவர் பற்றியோ பிள்ளைகள் பற்றி பிள்ளைகளிடமோ குறை சொல்வதும்ஆகாது.

6. அடுத்தவங்களைப் பத்தி பேச வாய்ப்பு கிடைச்சா போதும் மக்களுக்கு.இதுல எதுத்து பேச முடியாத பிள்ளைகளை பத்தி விமர்சனம்செய்ய தயங்கவும் மாட்டாங்க. அந்த விமர்சனங்கள் அவர்களின் வளர்ச்சியை ரொம்பவே பாதிக்கும்.

7. அம்மா, அப்பா சண்டை போட்டுக்கொள்ளும் சூழ்நிலையில் வளரும் குழந்தை பாதுக்காப்பின்மையாக உணர்ந்து கூனிக்குறுகி முன்னேர முடியாமல் போகும் வாய்ப்பிருக்கிறது. இல்லையேல் முரட்டுத்தனமாக மாறிவிட வாய்ப்பு அதிகமாக இருக்கிறது.

8. பசங்க சின்னவங்க என்பதால் அவங்க செய்வது எல்லாமே தவறா இருக்கணும்னு சட்டமில்லை. அவர்களின் செயல்கள், பேச்சுக்கள், நடவடிக்கைகள், எல்லாவற்றையும் தவறாகவேபுரிந்துக்கொள்ளக் கூடாது.  

9. நம் கனவுகளை சுமக்க பிறந்தவங்க இல்லை பிள்ளைகள். அவர்கள் விரும்பும் படிப்பு, வேலை செய்ய அனுமதிக்க வேண்டும்.நாம் சொல்லுவதை கேட்க வேண்டுமென அடம் பிடிக்கக்கூடாது.

10. பிள்ளைகள் விரும்பியதை அவர்கள் அடைந்தே தீர்வார்கள் எனும் நம்பிக்கை நமக்கு முதலில் இருக்க வேண்டும்.

11. ”என் பையன் எதிர்காலம் என்னாகுமோ!!” ”நாளைக்கு அவங்க என்ன ஆவாங்களோ!!” ”எஞ்சினியரிங், டாக்டர் படிகாட்டி கை நிறைய்ய சம்பாதிக்க முடியாதே” போன்ற தேவையில்லாத வருத்தங்கள்பட வேண்டாம். நல்லதே நடக்கும் என நம்புவோம்.  

12. பிள்ளையின் கனவை நனவாக்க நமது தூண்டுகோல் (சுடர் விளக்கைத் தூண்டும் தூண்டுகோல் போல) இருக்க வேண்டும். அவர்கள் சோர்வுறும் தருணத்தில் ஆதரித்து, பேசி முன்னேற்றப் பாதையில் நடக்க வைக்க வேண்டும்.

13. ”வயசாகிடுச்சு இன்னும் என்ன அம்மாவை கட்டிகிட்டு” ”வயசு வந்த பொண்ணு அப்பனை கட்டிக்கிறது எல்லாம்எங்க காலத்துல இல்லை” எனும் பேச்சுக்களை கேட்டிருப்போம். நம் பிள்ளைகளை நாம் கட்டியணைத்து, பேசினால் அவர்களின் தன்னம்பிக்கை வளரும். 

14. அன்றாட வாழ்க்கையில் பசங்களின் நடவடிக்கை, பேச்சு, ஆகியவைகளை கண்காணிப்பது அவசியம். ஏதும் மாறுதல் இருந்தால் அட்வைஸ் மழை பொழியாமல் நட்புடன் பேசுவது போல பேசிகவுன்சிலிங் கொடுக்க வேண்டும்.

15. ”உபகாரம் செய்யாட்டியும் உபத்திரவம் செய்யாம இருந்தா போதும்னு!!” பெரியவங்க சொல்லியிருக்காங்க. பசங்களின் வளர்ச்சிக்கு உதவும் வார்த்தைகள் சொல்லாட்டியும் அவர்களை Demotivate செய்யும் வார்த்தைகளை பேசாமல் இருப்பது உசிதம். 

16. பெரிய தவறுகள் செய்தால் தண்டனை அவசியம்.சின்ன சின்ன தவறுகளுக்கும் பெரிய பெரிய தண்டனை கொடுத்தால் தண்டனையில் தன் தவறை புரிந்து கொள்வது போய் பிள்ளை முரடாக தயாராக வாய்ப்பிருக்கிறது. தண்டனை தவறாக புரிந்து கொள்ளப்படும். நாம் தவறு செய்திருக்கிறோம், அதை மறுமுறை செய்யக்கூடாது என அறிவுறுத்தத்தான் தண்டனை.அந்த பாடத்தை அவர்கள் புரிந்து கொண்டால் நமக்கு பிரச்சினையே இல்லை.

source: http://parentsclub08.blogspot.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

97 − = 87

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb