பர்தாவைப்பற்றிய ஊடகங்களின் சூழ்ச்சிக்கு இரையாகாதீர்கள்
பர்தாவை எப்படியாவது சந்திக்கு இழுத்து அதை மதிப்பிழக்கச்செய்ய வேண்டும், முஸ்லீம் பெண்கள் மத்தியில் அதைப்பற்றி தவறான அபிப்ராயத்தை ஏற்படுத்த வேண்டும், அதை எப்படியாவது ஒழித்துகட்டியே தீர வேண்டும்என்று உலக ஊடகங்கள் தலைகீழாக குட்டிக்கரணம் போட்டுக்கொண்டே இருக்கின்றன.
அதன் ஒரு பகுதியாக 02 05 2010 NDTV-யில் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தனர். நமது நாட்டிலுள்ள முஸ்லீம் பெண்களில் ‘புர்கா’ அணியாத பெண்களை விட ‘புர்கா’ அணியும் பெண்கள்தான் அதிகம் என்பது உலகத்துக்கே தெரிந்த விஷயம். ஆனல் அந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியில் 90% முஸ்லீம் பெண்கள் (!!!) தலையை திறந்து போட்டுக் கொண்டு கலந்து கொண்டதிலிருந்தே அந்த தொலைக்காட்சியின் சூழ்ச்சி என்னவென்பதை புரிந்து கொள்ள முடியும்.
இந்த நிகழ்ச்சிக்கு தங்களுடைய மகளை அனுப்பி வைத்த முஸ்லீம் பெற்றோர்களுக்கு ஒரு விஷயம் விளங்க வேண்டும். அதாவது ஒரு முஸ்லீமான பெண் ‘புர்கா’ அணியாமல் திரிவது ஷரீஅத்தின் பார்வையில் நிச்சயமாக குற்றம்தான். இதை எவரும் மாற்ற முடியாது என்பதோடு அப்படிப்பட்ட பெண்களை நரகத்தில் கண்டபோது அதற்கான தண்டனை என்னவென்பதையும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அறிந்து உலகுக்கு தெரிவித்தும் விட்டார்கள்.
புர்காவை முஸ்லீம் பெண்கள் அணியாமல் இருப்பது ஒரு குற்றமென்றால் அதை அணியாமல் இருப்பதற்கு ஆதரவு தெரிவிப்பது, வக்காலத்து வாங்குவது அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமான கருத்தை இவர்கள் சொல்வதாக ஆகிவிடும். இது அப்பட்டமான இறை நிராகரிப்பில் கொண்டு போய் விட்டுவிடும்.
ஆம்! தவறு செய்வது ஒரு குற்றமென்றால் அந்த தவறை சரி என்று வாதிடுவது அதை விட பெரிய குற்றமாகும். ஆகவே பெற்றோர்கள் தங்கள் பெண் பிள்ளைகளுக்கு புர்கா அணிவதைப்பற்றிய மேண்மையினை எடுத்துச்சொல்வதோடு சமீபத்தில் இஸ்லாத்தை தழுவும் பெண்கள் புர்காவை பெண்களின் நாகரீகக்குறியீடாக பறைசாற்றுவதையும் எடுத்துச்சொல்ல வேண்டும்.
எம்.ஏ.முஹம்மது அலீ, நிர்வாகி, நீடூர்.இன்ஃபோ.
——————————————————————–
ஒரு முஸ்லீம் சகோதரியின் உயர்வான மார்க்கப்பேணுதலுக்கு கிடைத்த சமூக அங்கிராத்தைப்பற்றி சில மணித்துளிக்கு முன்னால் வந்த ஒரு இ மெயில் கீழே:
அஸ்ஸலாமு அலைக்கும்! எல்லா புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே!
இந்த பர்தா அணிவது பற்றி கடந்த வாரம் you tube இல் ஒரு வீடியோ பார்த்தேன்.அதனுடைய சாரம்சம் பர்தா அணிவது கூடாது என்று சொல்லி இருந்தார் மாற்று சமுதாய சகோதரி.அதற்கு நம்முடைய சகோதரர்கள் எதிர்ப்பு சொல்லி இருந்தனர்.அதனால் இதனை பற்றி எழுத வேண்டும் என்று நினைத்து இந்த இழையில் பதிக்கிறேன். பர்தா அணிவது பற்றி என் வீட்டில் நடந்த சம்பவத்தை சொன்னால் உங்களுக்கு எளிதில் புரியும். எனது இரண்டு சகோதரிகள் பர்தா அணியும் பழக்கம் உண்டு.
அதில் இரண்டாவது சகோதரி அதில் தீவிரம் உள்ளவர்.அவர்கள் இப்போது பெங்களூர் இல் சாப்ட்வேர்(WIPROW) Engineer ஆக உள்ளார்.அவரை முதல் நாள் சேர்த்து விடும் போது எனது வாப்பாவும் போனார்கள்.அப்போது என் வாப்பா எனது சகோதரிடம்,”இந்த கம்பெனி மிக பெரியது.இந்த கம்பெனி இல் எல்லா சமுதாய மக்களும் உள்ளனர் .அதனால் நீ ‘பர்தா’ அணிந்து உன்னை தனியாக காட்ட வேண்டாம் என்று சொல்லி விட்டார்.அவளும் அப்போது வாப்பாவை எதிர்த்து பேச வேண்டாம் என்று தலை ஆட்டி விட்டார்.(அவருடைய மன திருப்திக்காக மட்டும்).ஆனால் அதை அவள் செய்ய வில்லை.பர்தா அணிந்தே சென்றார்.
முதல் ஒரு வருடம் யாரும் ஒன்று சொல்லவில்லை. இரண்டாம் வருடம் ஒரு நாள் அங்கு இருக்கும் ஒரு மேலாதாகிரி(மாற்று சமுதாய சகோதரர்)அவரை கூப்பிட்டு சொன்னார். “வாழ்த்துக்கள் !.. நான் உங்களை ஒரு வருடமாக பார்க்கறேன் …நீங்கள் உங்களை மாற்றி கொள்ள வில்லை.ஆனால் இங்கு நான் நிறைய பெண்களை பார்த்து இருக்கிறேன், அவர்கள் முதலில் ஒழுங்காக வருவார்கள்ஆனால் போக போக அவர்கள் மாறி போவர். சில இஸ்லாமிய பெண்கள் கூட.. அதனால் உங்களை ஒரு வருடம் பார்த்தேன்.உங்களுடைய விஷயம் உங்கள் இஸ்லாத்தின் மீது ஒரு தாக்கத்தை உண்டு பண்ணி விட்டது” என்றார். இதனை பிறகு ஒரு நாள் எங்கள் வாப்பவிடம் சொன்னார்.அவரும் தன் தவறுக்காக மனம் வருந்தினார். இன்று வரையில் (நான்கு வருடங்கள் )பர்தா அணிந்து தான் செல்கிறார். ஆகவே சகோதரர்களே!
பர்தா அணிவதை பற்றி உங்கள் பிள்ளைகளிடம் சொல்லுங்கள். ஆனால் யாரையும் கட்டயா படுத்த வேண்டாம் .அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்.
அப்துல் ஹக்கீம்,திருநெல்வேலி
புர்காவின் சிறப்பை விளங்க நேற்று (02 05 2010) இவ்விணையதளத்தில் நாம் வெளிட்டுள்ள ”நீச்சலுடையை எறிந்து விட்டு நிகாபுக்கு ஏன் மாறினேன்?” கட்டுரையையும் படியுங்கள். உங்கள் வீட்டுப்பெண்மணிகளிடம் எடுத்துச்சொல்லுங்கள். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.
-Adm. www.nidur.info