Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

சமீபத்திய உலக நடப்புகள் உணர்த்தும் உண்மைத் தத்துவம்

Posted on April 28, 2010July 2, 2021 by admin

டாக்டர் ஏ.பீ. முஹம்மது அலி, பி.எச்.டி, ஐ.பீ.எஸ்(ஓ)

உலகினைப் படைத்து பரிபாலிக்கிற எல்லாம் வல்ல அல்லாஹ் மலக்குகளுக்கோ அல்லது ஜின்களுக்கோ அளிக்காத தனி மதிப்பினை ஆதம் அலைஹிஸ்ஸலாம் மற்றும் ஹவ்வா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குக் கொடுத்து அகிலத்திலிருந்து பூமி அதற்கு ஒளிதரும் சூரியன், ஓய்வினைத்தரும் சந்திரன் உள்பட அனைத்து கிரகங்களைப் படைத்து அதனை தன் தனி சக்தியால் அதன் வட்டத்தில் ஒன்றை ஒன்று முந்தாது மோதாது சுழன்று செயலாற்றும் திறனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளான் என்று மாமறை அல்குர்ஆன் சொல்வதினை அனைவரும் படித்திருக்கிறோம்.

அதனை சோதனை செய்யும் முறையில் விஞ்ஞானிகள் பல கோடி ஆண்டுகளுக்கு முன்பு இந்த அகிலம் எவ்வாறு உருவாக்கப் பட்டிருக்குமென்று ஒரு ஆராய்ச்சியில் இறங்கினார்கள். ஐரோப்பிய வானவியல் விஞ்ஞானிகள் ஜெனிவாவில் அந்த ஆராய்ச்சி மையம் ”செண்டர் ஃபார் நியூகிலியர் ரிசர்ச்” ஆகும். அதற்கு ஒன்பதாயிரத்து நானூறு ஆயிரம் டாலர் செலவழித்து பிரான்ஸ்-ஸ்விஸ் எல்லைப்பகுதியில் 30.3.2010 அன்று ”பிக் மெஷின்” ”பிக் பேங்க்” என்று பெயரிட்டு ஒரு செயற்கை அண்ட அகில அமைப்பு உருவானதினை அறிய சோதனை நடத்தினார்கள்.

அந்த ஆராய்ச்சியின் மாற்றங்கள் எந்தளவிற்கு ஏற்பட்டிருக்கிறது என்று அறிய இரண்டு மாதங்கள் ஆகுமாம். ஆனால் அகிலத்தினைப்படைக்க அல்லாஹ் எடுத்த நாட்கள் நான்கேயாகும். பல கோடி ஆண்டுகளானாலும் விஞ்ஞானிகள் அல்லாவஹ்வின் அற்புதங்களை இன்னும் அறிய முடியவில்லை என்பதிற்கு இது தலையாய உதாரணமாகாதா?

இறை மறுப்பாளர்களும், இணை வைப்பவர்களும் ஸமூத், ஆத், லூத், மத்யன; சாலிஹ் நபிமார்களை பொய்யாக்கி துன்புறுத்தினார்கள். ஆனால் அவர்களுக்கு கிடைத்த இறை வேதனை ப+மியை புரட்டிப்போடுகின்ற பூகம்பம், சூறாவளி, அனல்காற்று அள்ளி வீசும் ஒளிப்பிழம்பு. இன்று உலக ஆதிக்க அரசுகளாக திகழ்கின்ற மேலை நாடுகள் தங்களது ஆயுத பலத்தால் இஸ்லாமிய நாடுகளுக்கு ஒரு அச்சுறுத்தாக இருக்கின்றன. குண்டுகளை அள்ளிப் பொழியும் நவீன விமானங்கள் தான் அவர்கள் பலம் வாய்ந்த ஆயுதங்கள்.

ஆனால் சமீபத்தில் ஐஸ்லாண்டில் 200 ஆண்டுகள் அமிங்கிக்கிடந்த எரிமலை வெடித்து ஐரோப்பிய வானத்தினை கருமேக மூட்டத்தால் மறைக்குமளவிற்கும், தீ பிளம்புகள் 100 மீட்டர் அளவிற்கு உயரே கிளம்பும் அளவிற்கும் தனது தனலினை கொட்டியதென்றால் அமெரிக்கா, இஸ்ரேயில், ஐரோப்பிய ஆதிக்க நாடுகள் நினைத்த நேரத்தில் உடனே இஸ்லாமிய நாடுகளின் மீது வான்வெளி போர்தொடுக்க முடியாத நிலை ஏற்பட அது ஒரு உதாரணமாகக் கொள்ளலாம்.

அல்லாஹ் நினைத்தால் ஐஸ்லாண்டு எரிமலையினால் எப்படி ஒருவாரம் வானூர்திகள் இயக்க முடியவில்லையோ அவ்வாறு ஐஸ்லாண்டு பனிப்பாறைகள் வெடித்தது போன்று செயல்களை செயல்படுத்த வல்லமைமிக்கவன் அல்லாஹ். அந்த எரிமலை வெடிக்கும் அதனால் ஒருவாரம் ஐரோப்பிய வான்வெளிப்பயண மக்களுக்கு ஒரு சோதனையாக அமையும் என்று ஏன் வல்லமை மிக்க வல்லரசுகள் கண்டுபிடிக்க முடியவில்லை?

நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம் அவர்களை துன்புறத்தியவர்கள் 2004 ஆண்டு டிசம்பர் 24ந்தேதி அன்று ஆசிய நாடுகளில் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலைபோல் அழிக்கப்பட்ட சம்பவம் அந்த அலைகளைப்பார்த்த பின்னும் மக்களுக்கு அடையாளமாகத் தெரியவில்லையா?இறை மறுப்பவர்கள் மற்றும்; சில மேதாவி பெயரளவிலுள்ள முஸ்லிம்கள் மலக்குகள,; ஜின்கள் வாழ்ந்ததினையும்-வாழ்வதினையும் நரகம் என்ற இறைத்தண்டனை-சொர்க்கம் என்ற இறைக்கொடைகள் இருப்பதினையும் கேலியும் கிண்டலும் செய்கிறார்கள்.

ஆனால் அமெரிக்காவின் இயற்பியல் விஞ்ஞானி ஊனமுற்றவர், தனது குறும் படங்களின் படைப்புகளால், ”டிஸ்கவரி சேனலில்” ஒளிபரப்பாகி புகழ் பெற்றவர். அவர் சில தினங்களுக்கு முன்பு அளித்த பேட்டியில், ”நட்சத்திரங்களுக்கும், கிரகங்களுக்கும் இடைப்பட்ட வெளியிலுள்ள பால் மண்டலங்களில் மிதந்தபடி உள்ள மனிதர்கள் இருக்கிறார்கள். பூமியில் நாம் இருப்பதுபோல மற்ற கிரகங்களிலும் மனிதர்கள் உயிர் வாழ வாய்ப்புள்ளது. அவர்கள் நம்மைப்போலத்தான் இருப்பார்கள் என எண்ணக்கூடாது.

ஆனால் அவர்கள் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டால் அது பேரழிவை ஏற்படுத்தும்” என்கிறார். இதிலிருந்து அல் குர்ஆன் கூற்றுப்படி மலக்குகள்-ஜின்களும் நபிமார்களுக்கு வழிநடத்தியும்; இக்கட்டான நேரங்களில் பாதுகாவலில் ஈடுபட்டதும் புலனாகவில்லையா? உஹதுப் போரில் குரைசியர்கள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தாலும்; நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முகத்தில் ரத்தக்காயம் பட்டாலும் நபியவர்களையும் மற்ற முக்கிய தோழர்களையும் கொல்லப்படாது காத்தது கண்களுக்குத் தெரியாத ஜின்கள்தான் என்றால் உண்மைதான் என்று எண்ணத்தோன்றவில்லையா?

அல்குர்ஆனில் நபிமார்கள் இறைவனின் பிள்ளைகளல்லவென்றும் நபிமார்கள் கடவுளல்லவென்பதினையும் பல இடங்களில் எடுத்தியம்பப்பட்டுள்ளது. ஆனால் ஈசா நபியினை ஹிருத்துவ மக்கள் கடவுளின் ஆவதாரமாக இயேசுபிரான் என்று அறியாமையில் அழைக்கின்றனர்.

பிலிப் புல்மேன் என்ற ஹிருத்துவ எழுத்தாளர், ”தி காட்மேன் ஜீசஸ் மற்றும் ஸ்கவுன்ட்ரல் கிறிஸ்ட்” என்ற புத்தகம் எழுதி சமீபத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ”ஜீசஸ் ஒரு மனிதர் அவர் வரலாற்று நாயகர், ஆனால் அவர் கடவுளல்ல” என்றும் எழுதியுள்ளார் என்று ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.

இந்தக் கூற்றுப்படி அல்குர்ஆனில் சொல்லிய வாசகம் உண்மை உணர்த்தவில்லையா?

சமீபத்தில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் நடந்த ஒரு செய்தியினை தமிழ் பத்திரிக்கைகள் சாதனையாக விளம்பரப்படுத்தயிருந்தன. அது என்ன தெரியுமா? அங்குள்ள கைதிகளுக்கு, படித்த கைதிகள் படிப்பதிற்கு பாடமெடுத்த செய்திதான் அது. ஆனால் 1400 ஆண்டுகளுக்கு முன்பு அதனை பெருமானர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினாவில் செய்துள்ளார்கள்.

பத்ர் போரில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் படை போர் தொடுத்த மக்கா குறைசியர்களை ஓட ஓட விரட்டினார்கள். அதில் சிறைப்பிடிக்கப்பட்ட கைதிகள் மதீனா நகருக்குக் கொண்டுவரப்பட்டு ஈட்டுத்தொகை கொடுக்க திராணியுள்ளவர்களை மன்னித்து விடுதலை செய்து விட்டு, ஈட்டுத்தொகை கொடுக்க முடியாதவர்களை மதினாவாழ் மக்கள் பத்து நபர்களுக்கு ஒரு கைதி வீதம் படிப்பினைப் போதிக்க வேண்டுமென ஆணையிட்டார்கள் என்றது வரலாறு.

ஆகவே கைதிகளுக்குக் கூட கல்வி போதிப்பதில் இஸ்லாம் வழிகாட்டியாக இருந்திருக்கின்றதென்பது தெரியவில்லையா?சென்ற மாதம் மிகவும் பரபரப்பாக தமிழக மக்களிடையே பேசப்பட்ட செய்தியாக இருந்தது இறை மறுப்பாளராக இருந்த டாக்டர் பெரியார்தாசன் இஸலாத்தினை ஏற்றுக் கொண்டு தனது பெயரினை அப்துல்லாஹ் என்றும் மாற்றிக் கொண்டது. இறை மறுப்பார்கள் இஸ்லாத்தில் சேருவது ஒன்றும் ஆச்சரியமில்லை என்கிறது அல்குர்ஆன், அல்அஹ்காப் ”(மணல்மேடுகள்) வசனங்கள (36) கீழ்கண்டவாறு கூறுகிறன்றது,

(வமவல்லாயுகிப் தாகியல்லாஹ பலைச பிமுஹிசி சிபில்அருளி வலைச லகு மின் குக்ளிகி அவைலியாவ் உலாயிக பிலஸாலிம் முபின்) அதாவது, ”எவன் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவர்களுக்குப் பதில் கூறவில்லையோ, அவன் பூமியில் எங்கு ஓடிய போதிலும் அல்லாஹ்வினைத் தோற்கடிக்க முடியாது. அல்லாஹ்வினையன்றி அவனுக்கு பாதுபாப்பவர் ஒருவருமில்லை. அவனை புறக்கணிப்பவர்கள் பகிரங்க வழிக்கேட்டில் தான் இருப்பார்கள்”. ஆகவே இறை மறுப்பாளர்களும், பெயரளவில் முஸ்லிம்களாக இருப்பவர்களும் இஸ்லாம் கூறும் உண்மைத்  தத்துவங்களை உதாரணமாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையினை இனிமேலும் செம்மைப் படுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொள்வது சரிதானே என் சொந்தங்களே?

posted by: MUDUVAI HIDAYATH

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

− 7 = 2

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb