ஹவாலா என்ற அரபுச் சொல்லுக்கு பரிவர்த்தனை என்றும், நம்பிக்கை என்றும் பொருள்படுவதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆதிகாலத்தில் மனிதன் பண்டமாற்று முறையை பயன்படுத்தி வணிகத்தை அபிவிருத்தி செய்து வந்தான்
பின்னர் படிப்படியாக தங்க, வெள்ளி நாணயங்கள் புலக்கத்தில் வந்தன.
இப்படிப்பட்ட காலகட்டங்களில் வங்கிகள் அறிமுகப்படுத்தப்படாததும், தற்போது உள்ள போன்ற விரைவான போக்குவரத்து மற்றும் மின்சாதன வசதிகள் இல்லாததும் பெறும் குறையாக இருந்தது.
எனவேதான் பணப்பரிவர்த்தனை முறையை துரிதப்படுத்த அன்றைய சமுதாய மக்கள் ஹவாலா பணப்பரிவர்த்தனை முறையை முறை நடைமுறைப் படுத்தி தங்கள் வணிகத்தை முறைப்படுத்தி வந்தனர்.
ஹவாலாவின் பூர்வீகம் ஏது?
எழுதப்படிக்கத் தெரியாத காலகட்டங்களில் குகை ஓவியங்களும் கோடுகளும் வரைந்து எண்ணிக்கையை கணித்து வற்த மக்களிடம் எண்கணித முறையை கண்டுபிடித்து அதன் அடிப்படையில் கணக்குவழக்குகளை அறிமுகப்படுத்தியவர்கள் முஸ்லீம்களே.
இதே போன்றுதான் 8ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் பணப் பரிவர்த்தனைகளை எளிதாக கையாளவும் துரிதப்படுத்தவும் இஸ்லாமிய அரசாங்கத்தினால் அறிமுகப்படுத்தப்பட்டததுதான் ஹவாலா (பணப்பரிவர்த்தனை) முறையாகும்.
இம்முறையைப் பற்றிய குறிப்புகளும், வரலாற்றுப் பின்னனியும் தெளிவாக உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்!
ஹவாலா-என்றால் என்ன? அதன் பணிகள் தான் என்ன?
o பணப்பரிவர்த்தனைக்கு ஹவாலா என்று பொருள்
o பணப்பரிவர்ததனை மேற்கொள்பவர் ஹவால்தார் ஆவார்
ஹவாலா பணப் பரிவர்த்தனைக்கு இரண்டு ஹவால்தார்கள் இருப்பார்கள் ஒருவர் உள்நாட்டிலும் மற்றொருவர் வெளிநாட்டிலும் இருப்பார். இந்த இரு ஹவால்தார்களும் தங்களிடையே பரஸ்பர ஒப்பந்தம் இருக்கும்.
வங்கியியல் நடைமுறையில் இல்லாத அன்றைய காலகட்டத்தில் வணிகர்கள் அடிக்கடி நாடுகடந்து நெடுந்தூரம் பயணித்து வணிகம் மேற்கொண்டு வந்தனர் இப்படிப்பட்ட பயணங்களில் பெரும் இடர்களும், வழிப்பறிக் கொள்ளைகளிலும் சிக்கி வியாபாரிகள் சுரண்டப்பட்டனர். இப்படிப்பட்ட சுரண்டல்களிலிருந்து தற்காத்துக்கொள்ள கையாளப்பட்ட முறைதான் ஹவாலா பணப்பரிவர்த்தனை முறையாகும்.
அன்றைய ஹவாலா முறையின் நன்மைகள்
ஒரு நாட்டில் உள்ள விற்பனையாளர் அயல் நாட்டில் உள்ள தனது கொள்முதல் வியாபாரிக்கு கொடுக்க வேண்டிய வியாபார தொகையை நேரில் சென்று கொடுப்பதற்கு பதிலாக வியாபார பணத்தை சொந்த நாட்டில் உள்ள ஹவால்தார்களை அணுகி வியாபார பணத்தை கடனாக கொடுப்பார். மேற்படி சொந்த நாட்டில் உள்ள ஹவால்தார்கள் வியாபாரியிடம் பெற்ற பணத்தை தாங்கள் கடன் பெற்றதாக கருதிக்கொண்டு அயல்நாட்டில் தாங்கள் பரஸ்பர ஒப்பந்தம் செய்துக்கொண்டிருக்கும் மற்றொரு ஹவால்தாருக்கு தூது அனுப்பி தன் சார்பாக பணம் செலுத்த கேட்டுக்கொள்வார். இதுதான் அன்றைய காலத்தில் ஹவாலா பணப்பரிவர்த்தனை என்று கருதப்பட்டு வந்தது.
அன்றைய காலகட்டத்தில் ஹவாலா பணபரிவர்த்தனை முடிந்ததும் இந்த பணியை மேற்கொண்டதற்காக இரண்டு ஹவால்தாரர்களுக்கும் தரகு பணமாகவும், ஊக்கத்தொகையாகவும் வியாபாரிகளிடமிருந்து சன்மானம் கிடைக்கும்.
அன்றைய காலகட்டத்தில் இந்த ஹவால்தார்கள் மூலமாக நடக்கும் ஹவலா பரிவர்த்தனை மிகவும் கண்ணியமாக கருதப்பட்டு வந்தது. வழிப்பரி கொள்ளையர்களிடமிருந்து வியாபாரிகள் பாதுகாக்கப்பட்டு வந்தனர். இதுதான் அன்றைய காலகட்டத்தில் ஹவலா பரிவர்த்தனையின் நிறைகளாகும்.
அன்று ஹவாலாவை வரவேற்ற ஐரோப்பிய நாடுகள்
ஹவாலா என்ற அரபு வார்த்தையிலிருந்து பிறந்ததுதான் அவல், அவல்லோ என்ற சொற்களாகும். அதாவது இஸ்லாமியர்கள் அறிமுகப்படுத்திய ஹவாலா பணப்பரிவர்த்தனை முறைகளை முறையே அவல் (AVAL) என்று பிரான்ஸ் நாடும், அவல்லோ (AVALLO) என்று இத்தாலி நாடும் பெயர்சூட்டி இம்முறையை அங்கிகரீத்து தங்கள் நாட்டில் சட்டம் இயற்றியது.
அன்றே ஹவாலா முறையை தடைசெய்த ரோமானியர்கள்
இஸ்லாமிய நாடுகள் மற்றும் ஹவாலா முறையை அங்கீகரித்த மற்ற நாடுகளின் பொதுவான சட்டப்படி ஹவால்தார்களை தங்களுடைய ஒப்பந்த முகமையாக அங்கீகரிப்பதில் எந்தவித சிக்கலும் கிடையாது. இது நேர்மையான வணிக ஒப்பந்த முறையாக அன்று திகழந்தது.
ஆனால் இந்த ஹவாலா பணப்பரிவர்த்தனை முறையின் மூலம் இத்தாலிய மற்றும் முஸ்லிம் வணிகர்களுடன் சிறப்பான வணிக நடைபெற்று வந்தது இதனால் இரு நாட்டு சமுதாய மக்களும் தங்கள் பொருளாதாரத்தை மேம்படுத்தி வந்தனர். இதை தாங்கிக்கொள்ள முடியாத ரோமானிய அரசு இந்த வணிகங்களை தடைசெய்ய சட்டம் இயற்றியது. அதன் படி ஹவாலா முகமையை முகம் தெரியாத குழுவாக கருதப்பட்டு விதிகள் கடுமையாக்கப்பட்டன. ரோம் நாட்டில் ஹாவாலா முறை சட்டம் மாற்றியமைக்கப்பட்டது.
o The agency is an institution unknown to Roman law
o As no individual could conclude a binding contract on behalf of another as his agent.
o The contractor himself may consider the party to the contract and it will take a second contract between the person who acts on behalf of a principal and in latter in order to transfer the rights and the obligations deriving from the contract to him.
என்னதான் ரோமானியர்கள் சட்டம் இயற்றி ஹவாலாவை கட்டுப்படுத்த முற்பட்டாலும் இச் சட்டத்திற்கு எதிராக மத்திய ஐரோப்பிய நாடுகள் வணிக துரித நடவடிக்கைகளுக்காக இஸ்லாமியர்கள் முறைப்படுத்தியிருந்த இந்த ஹவாலா பரிவர்த்தனையை அங்கீகரித்து நடைமுறைப்படுத்தினர்.
நவீன காலத்தில் சீரழிந்து போன ஹவாலா பரிவர்த்தனை
இன்றைய விஞ்ஞான காலகட்டம் மாபெரும் வளர்ச்சி கண்ட பின்னரும் இந்த பழங்கால முறையிலான வர்த்தகம் ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் சோமாலியா போன்ற பின்தங்கிய வங்கியில் கொள்கை கொண்ட நாடுகளில் நடைபெருகிறது அதற்கான மூல காரணம் போதிய கல்வி விழிப்புணர்வு இல்லாமையேயாகும் மேலும் அந்நாடுகளில் அடிக்கடி ஆட்சி மாற்றங்கள் நிகழ்வதாலும் இந்த முறை அமுலில் உள்ளது.
எனவேதான் இன்றும் ஆப்கானிஸ்தான், ஏமன் மற்றும் சோமாலியா நாட்டில் உள்ள அப்பாவி மக்கள் நாகரீக வளர்ச்சியை அடையவில்லை மேலும் வங்கியியல் கொள்கையை மேம்படுத்தும்வரை இவர்கள் நடைமுறைப் படுத்தினால் தவறு கிடையாது! ஆனால் அதே சமயம் பாகிஸ்தான் மற்றும் எகிப்து நாடுகளில் உள்ள அதிகார வர்கத்தினர் ஹவாலா முறைகளை கையாண்டு மக்களை திசை திருப்பி சில தவறான நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் இது வண்மையாக கண்டிக்கத்தக்கதாகும்.
ஹவாலா முறையை சீர்குலைத்த தற்கால குண்டர்கள்
இஸ்லாத்தின் கண்ணியத்தை சீர்குலைக்க அமெரிக்காவிடம் ஊதியம் பெற்று கைக்கூலிகளாக வாழந்துவரும் ஒருசில பெயர்தாங்கி பாகிஸ்தானிய முஸ்லிம்கள் தீவிரவாதம் என்ற பெயரில் உலகெங்கும் குறிப்பாக இந்தியாவில் மாபெரும் அராஜகத்தை அரங்கேற்றிவருகின்றனர் இந்த கைக்கூலிகளின் செயல்களை முன்னிருத்தி அமெரிக்க உட்பட பல ஏகாதிபத்திய அரசாங்கங்கள் அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதி என்று பட்டம் சூட்டி இராக் போன்ற நாடுகளில் உள்ள எண்ணை கிணருகளை சூரையாடி வருகின்றன. இதை கண்கூடாக காண்கிறோம் இந்த பெயர்தாங்கி குண்டர்கள் சமுதாயத்தை சீர்குலைக்கும் செயல்களை அரங்கேற்ற இந்த ஹாவாலா முறையைத்தான் கையாளுகின்றனர். எனவே தற்கான ஹவாலா சீர்குலைகிறது.
ஹவாலா முறையை சீர்குலைத்த பெரிய மோசடி நிறுவனங்கள்
தற்காலத்தில் ஹவாலா பரிவர்த்தனைகளை சாதாரண மக்கள் மேற்கொள்வதில்லை மாறாக வலிமைவாய்ந்த கம்பெனிகளும், குண்டர்களும் தான் மேற்கொள்கின்றனர்.
வணிக நோக்கத்திற்காக பல இலட்சம் கோடி சரக்குகளை அனுதினமும் ஏற்றுமதி இறக்குமதி செய்யும் ஜாம்பவன் கம்பெனிகள் இதற்கான பணத்தை ஹவாலா வழியில் கொடுப்பதால் ஒவ்வொரு நாட்டிற்கும் பல கோடி அந்நியச் செலாவனி இழப்புகள் ஏற்படுகிறது.
உதாரணமாக சவுதியில் உள்ள வணிகர் இந்திய வணிகருடன் வியாபரம் மேற்கொள்கிறார் இருநாடுகளின் பரஸ்பர சட்டப்படி சரக்கு பரிவர்த்தனை நடைபெறுகிறது ஆனால் பணம் மட்டும் ஹவாலா முறையில் மேற்கொள்கிறார்கள் இதன் மூலம் சவுதி அரசாங்கமும், இந்திய அரசாங்கமும் பட்டப்பகலில் ஏமாற்றப்படுகிறது. இந்த இரு நாடுகளின் அந்நியச் செலாவணியில் மோசடி செய்யப்படுகிறது. இது சவுதி மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு எதிராக செய்யும் தேச துரோகமில்லையா? இதை அனுமதிக்கலாமா?
நவீன ஹவாலா மோசடிகள்
வங்கியியல் செம்மைப்படுத்தப்பட்ட பின்னர் தற்போது இந்த ஹவாலா பரிவர்த்தனை சட்டத்திற்கு உட்பட்டு நடக்கும் வியாபாரம் கிடையாது. இப்படிப்பட்ட வர்த்தக உடன்படிக்கையில் எவ்வித எழுத்துப்புர்வ ஆதாரங்களும் இடம்பெறுவதில்லை, ஆனால் அதே சமயம் பணம் பரிபோனால் சட்டப்படி நடவடிக்கை கூட எடுக்க இயலாது.
தற்கால ஹவாலா முகவர்கள் வியாபரிகளிடமிருந்து குறைவான கமிஷன் தொகையை பெற்றுக்கொண்டு உள்நாடு மற்றும் வெளிநாட்டு பண மதிப்பில் உள்ள கூடுதல் தொகையை அபகரித்துக் கொள்கிறார்கள். அதாவது 1 டாலருக்கு இந்திய மதிப்பில் கூடுதல் தொகை பெறப்படும் இது வணிகர்களுக்கு சேர வேண்டிய பணமாகும் ஆனால் இந்த நவீன ஹவால்தார்கள் இந்த கூடுதல் தொகையை அபகரிக்கின்றனர். வணிகர்களும் துரித நடவடிக்கைக்காகவும், அரசுக்கு வரி கட்டாமல் ஏமாற்றவும் பொறுத்துக் கொள்கிறார்கள்.
ஹவாலா முறையால் நாடுகளின் பொருளாதார பின்னடைவு
தற்காலத்தில் ஹவாலா முறையை நாடுகள் கட்டுப்படுத்த இயலாமல் போவதால் ஒவ்வொரு நாட்டிற்கும் வருமான வரி, கரன்சி கன்ட்ரோல், மற்றும் சட்டம் ஆகியவற்றில் தொய்வு ஏற்பட்டு பொருளாதார தேக்க நிலை ஏற்படுகிறது. மேலும் சில தீவிரவாத அமைப்புகளும் குண்டர்கள் அமைப்புகளையும் கட்டுப்படுத்த இயலாமல் அரசாங்கம் திணருகிறது.
இன்று நாம் இந்தியாவிலிருந்து துபாய்க்கு பயணமாகிறோம் இந்திய அரசாங்கம் அனுமதிக்கிறது. நாம் சொந்த ஊரில் இல்லாத போது நம் மனைவி மக்களுக்கு இந்த அரசாங்கம் பாதுகாவலாக இருக்கிறது. அதே சமயம் அரசாங்கத்தில் மோடி சில போன்ற கருப்பு ஆடுகளும் இருக்கத்தான் செய்கின்றன. என்னதான் கருப்பு ஆடுகள் அராஜகம் செய்தாலும் ராணுவம் காவல்துறை மற்றும் நீதிமன்றங்கள் நமக்காக உள்ளன. எனவே நாம் சொந்த ஊரில் இல்லையென்றாலும் நம் குடும்பத்தினர் அரசாங்கம் என்ற ஒரு பாதுகாப்பு வளையத்திற்குள் பத்திரமாக உள்ளனர்.
அரசாங்கம் அனுமதிக்கும் உள்நாட்டு ஹவாலா!
நீங்கள் திருச்சியில் சிறு கடைவைத்து வியாபாரம் செய்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம் மதுரையில் உள்ள ஒரு மொத்த வியாபாரியிடம் சரக்குகளை அனுப்ப வேண்டுகிறீர் ஆனால் அவரோ உடனே பணம் செலுத்தினால் சரக்கை தருவதாக உத்திரவாதம் தருகிறார் ஆனால் தங்களிடம் வங்கி கணக்கு கிடையாது எனவே நீங்கள் அந்த நிறுவனத்தின் முகவரை அணுகி உடனே பணம் செலுத்திவிடுகிறீர்கள் அவரும் அவரது கணக்கிலிருந்து மொத்த வியாபாரிக்கு பணத்தை ஆன்லைன் 1 நிமிடத்தில் அனுப்பிவிடுகிறார் இதுவும் ஹவாலாதானே!
இதை அரசாங்கம் தடை செய்யவில்லையே!
ஆனால் அரசாங்கம் அந்நியச் செலாவணியை பெருவதற்காகவும் பணப்புலக்கம் அறியவும் சட்டம் வகுத்தால் அதை மீறலாமா? உள்நாட்டில் அனுமதியளித்து வெளிநாடுகளிலிருந்து மட்டும் வரும் பணத்திற்கு கணக்கு காட்ட அறிவுறுத்தும் இந்த அரசாங்கத்தை நாம் மோசடி செய்து ஏமாற்றலாமா?
முஃமின்களே! நியாயத்தை நிலை நாட்டுவதற்காக அல்லாஹ்வுக்கு நீங்கள் உறுதியான சாட்சியாக இருங்கள், எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம். நீதி செய்யுங்கள். இதுவே (தக்வாவுக்கு) – பயபக்திக்கு மிக நெருக்கமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன்: 5:8)