”ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கும்போது அங்கு மூன்றவதாக ஷைத்தானும் இருக்கிறான்” – அல் ஹதீஸ்
o முதல் வேலையாக உங்கள் கணவரின் நட்பு வட்டாரங்களை வீட்டுக்கு வெளியிலேயே நிறுத்திவிடுங்கள். உறவினர்கள் ஒன்றுகூடும் முக்கிய விழாக்களில் மட்டுமே அவர்கள் வீட்டிற்கு வந்து செல்ல அழைத்திடுங்கள்.
o உங்கள் கணவரைத் தேடி அவரது நண்பர் உங்கள் வீட்டுக்கு அடிக்கடி வந்தால் உஷாராகிவிடுங்கள். அதுவும், உங்கள் கணவர் இல்லாத நேரத்தில், ‘அவர் இருக்கிறாரா?’ என்று கேட்டு வீட்டிற்கு வரும் பார்ட்டிகளிடம் பதில் கூட கூற வேண்டாம். வீட்டுக் கதவையே திறக்காதீர்கள்.
o உங்கள் கணவருக்கு சிறந்த நண்பராக இருக்கும் ஆண், உங்களுக்கும் சிறந்த நண்பராக இருக்க பெரும்பாலும் வாய்ப்பில்லை. அதையும் மீறி ஓப்பனாக பழக ஆரம்பித்தால், ஏதாவது ஒரு சூழ்நிலையில் அவரிடம் இருந்த சபலம் வெளிப்பட்டு விடும். இல்லாவிட்டாலும் வந்துவிடும்.
o உங்கள் கணவரின் நண்பருக்கு உங்கள் பெர்சனல் மொபைலின் நம்பர் எக்காரணம் கொண்டும் தெரிய வேண்டாம். எப்படியோ அதை அவர் தெரிந்துகொண்டு உங்கள் மொபைலில் தொடர்பு கொண்டால் முடிந்தவரை பேச்சை ஒரு சில நொடிகளுக்குள் முடித்துக் கொள்ளுங்கள். உங்கள் சமாளிப்பையும் மீறி அவர் உங்களிடம் பேசுவதிலேயே குறியாக இருந்தால் சட்டென்று இணைப்பை துண்டித்து விடுங்கள்.
o உங்களவர் வெளியூரில் சில நாட்கள் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்போது, உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளாதீர்கள். அந்த நேரத்தில், உங்கள் கணவரின் நண்பர் என்ற முறையில் யார் தொடர்பு கொண்டாலும் பேசுவதையே தவிர்த்து விடுங்கள்.
o எக்காரணம் கொண்டும் ஆபாசமாக உடை அணியாதீர்கள் (புர்கா பேணுவது மிகவும் அவசியம். கணவரின் மிக நெருக்கமான நண்பராக இருந்தாலும் சரியே) அந்த உடையில் உங்கள் கணவரின் நண்பர் உங்களை பார்க்கும் சூழ்நிலை யதார்த்தமாக ஏற்பட்டாலும் கூட அவர் சபலப்பட்டு விடுவார். அந்த உடையில் நீங்கள் உங்கள் நண்பரிடம் சற்று சிரித்துப் பேசினால் கூட, நீங்கள் ‘எதற்கோ’ கிரீன் சிக்னல் கொடுக்கிறீர்கள் என்று அவர் எடுத்துக்கொள்வார்.
o உங்கள் கணவரின் நண்பர், உங்களுக்கு பார்வையாலோ, பேச்சாலோ, அல்லது வேறு எந்த வகையிலோ செக்ஸ் டார்ச்சர் கொடுக்க ஆரம்பித்தால், அதுபற்றி உடனே கணவரிடம் கூறிவிடுங்கள். அந்த நண்பருடனான நட்பை முறித்துக்கொள்ள வற்புறுத்துங்கள். உங்கள் பாதுகாப்புக்கே உலை வைக்கும் அப்படியொரு நட்பு உங்கள் கணவருக்கு தேவையில்லை.
o முக்கியமாக, கணவரின் நண்பனுடன் பேச வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படும்போது, வயதில் மூத்தவராக இருந்தால் அண்ணா என்றோ, இளையவராக இருந்தால் தம்பி என்றோ அழைக்க உங்களை பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். இந்த பழக்கம், உங்கள் மீது விழும் மற்ற ஆண்களின் பார்வையை கண்ணியமானதாக மாற்றும்.
o இறுதியாக, மிகச்சிறந்த வழி எதுவெனில் நீங்கள் வீட்டில் தனித்திருக்கும் வேளையில் உங்கள் கணவரின் நண்பர்கள் எவரேணும் வந்தால் வாசலிலேயே அவரை இருக்க வைத்து நாசூக்காக பேசி அவரை விரைவாக அனுப்பி விடுவதுதான் உகந்தது. ஏனெனில் ஒரு ஆணும் பெண்ணும் தனித்திருக்கும்போது அங்கு மூன்றாவதாக ஷைத்தான் நிச்சயம் இருப்பான் என்பதை மறந்துவிடாதீர்கள். ஷைத்தானின் வேளையே ஆண் பெண்ணின் உணர்ச்சிகளை கிளறிவிடுவது தானே. ஆகவே இவ்விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருங்கள்.
வேலைக்கு போகும் பெண்களா நீங்கள்? அலுவலகத்திலும் எச்சரிக்கைத் தேவை
o ஆண்கள் பலர் வேலை செய்யும் அலுவலகத்தில், நீங்கள், குறிப் பிட்ட ஒரு நபருடன் மட்டும் பேசாதீர்கள். அப்படி, ஒருவருடன் மட்டும் நன்றாக பேசும் போது, அது உங்களை பற்றிய, தவறான எண்ணத்தை பிறரிடம் ஏற்படுத்தி, பலவிதமான விமர்சனங்களை ஏற்படுத்தக் கூடும். அனாவசியமாக பிறரிடம் பேசுவதை தவிர்ப்பது நல்லது.
o உங்கள் குடும்ப பிரச்னைகளை உடன் பணியாற்றுபவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அதிலும், உடன் பணியாற்றும் ஆண்களிடம், பிரச்னைகளை பகிர்ந்து கொள்வதும், உங்கள் வீட்டை பற்றிய தேவையில்லாத செய்தி களை பேசுவதையும் அறவே தவிருங்கள். அப்படி பேசுவது, உங்களை பல்வேறு பிரச்னைகளில் கொண்டு விட வாய்ப்புண்டு.
o உங்களைப் பற்றி பலரும் பலவிதமான கருத்துக்களை கூறக்கூடும். அவற்றை எல்லாம் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். என்றாலும், அவற்றைக் குறித்து எச்சரிக்கையாக இருங்கள். உங்களுக்கே தெரியாமல், நீங்கள் செய்யும் தவறுகள், பிறர் மூலமாக உங்களுக்குத் தெரிய நேரிட்டால், அவற்றை உடனே திருத்திக் கொள்ளத் தவறாதீர்கள்.
o வேலை செய்யும் இடத்தில், தேவையின்றி பேசுவதை தவிருங்கள். சிலர் தேவையில்லாமல் வெட்டிக் கதைகளை பேசுவர். அப்படிப்பட்ட நபர்களிடம் இருந்து சற்று தள்ளியே இருங்கள். அலுவலக நேரங்களில், தேவையின்றி பேசுவதும், அரட்டையடிப்பதும் உங்கள் வேலையை பாதிக்கும். எனவே, அதிகமாக பேசுவதை குறைத்து கொண்டால், வேலையில் கவனச்சிதறல் ஏற்படாமல் தவிர்க்கலாம்.
oநீங்கள் எவ்வளவு தான் திறமைசாலியாகவும், கடினமாக உழைப்பவராகவும் இருந்தாலும், அதிகம் பேசுபவராக இருந்தால், உங்கள் அதிகாரிகளிடம் அவப் பெயரை பெறக் கூடும். இதனால், உங்கள் உழைப்பு பயனற்றதாகி விடும். எனவே, அதிகம் பேசுவதை தவிருங்கள்.
o முக்கியமாக உடை விஷயத்தில் இஸ்லாம் வழிகாட்டும் நெறிமுறைகளைக் கடைப்பிடியுங்கள். மறந்துவிடாதீர்கள் கண்ணியக்குறைவான ஆடைகளை அணிந்து கொண்டு அலுவலகம் செல்லாதீர்கள்.மறைக்க வேண்டிய பகுதிகளை மறைத்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு கண்ணியம் – பாதுகாப்பும்கூட.