நம்மில் பலர் பிஸினஸ் செய்யப்போகிறேன் என்று கிளம்பி சில வருடங்களில் சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் பழைய நிலைக்கே வந்து விடுவதைப் பார்க்கிறோம். காரணம்,
பெரும்பாலும் அவர்களிடம் தெளிவான திட்டமிடல் இருந்திருக்காது. அடிக்க அடிக்க அம்மியும் நகரும், எறும்பு ஊர இரும்பும் தேயும் என்ற பழமொழிக் கொப்ப சோதனைளை தாங்கி எதிர்நீச்சல் போடுவதற்கு நாம் கற்றுக் கொடுக்கப்படவில்லை.
நாம் அறிந்தவரை, வளைகுடா நாடுகளிலிருந்து வணிகம் செய்யவதற்காக தாயகம் திரும்பியவர்களில் மிகச் சிலரைத் தவிர பெரும்பாலானோர் நெருக்கடிகளுக்கு மத்தியிலேயே தங்கள் தொழிலை நடத்துபவர்களாக உள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் கீழ்கண்ட வகைகளில் அடங்குவர்;
ஒரு 10 லட்சமோ, 15 லட்சமோ சம்பாதித்தவுடன் அதை இரட்டிப்பாக்குவது எப்படி என்று சிந்தித்தவர்கள்.
ஒருவருக்கு கீழ் இருந்து வேலை செய்வது பிடிக்காமல், தங்களின் நண்பர்கள் 4 போர்களாக சேர்ந் (து பின்னர் பிரிந்) தவர்கள்.
தாங்கள் பணிபுரிந்த நிறுவனங்களில் நடைபெற்ற (Normal Politics) பிரச்சனைகளால் சொந்த ஊர் திரும்பி வந்தவர்கள்.
நம்மோடு ஃபேமிலியுமில்லே ஒன்னுமில்லே, வாழ்க்கையில நிம்மதியுமில்லே. என்னப்பா ஒரே தொல்லையா இருக்கு, காலங் காத்தாலையே குளிச்சிட்டு இந்த மிஸ்ரி காரங்க, பாலஸ்தீன் காரங்க கண்ணுல முழிக்கணுமா? பேசாம ஊர்ல ஒரு பெட்டிக்கடை வச்சாவது புழைச்சிக்கலாம் என்று நினைத்தவர்கள்.
இவர்களுக்கு மத்தியில் சோதனைகளை எதிர்த்து எதிர்நீச்சல்போட்டு, தடைகற்களை படிக்கற்களாக மாற்றி முன்னேறிய சீமான்களும் உண்டு.
இவர்களின் வெற்றியின் இரகசியம் ”தாம் செய்யவிருந்த வணிகம் பற்றிய தெளிவான திட்டமிடலும், அவர்களின் கடின உழைப்புமே’; என்பதை நாம் அறிகிறோம்.
எனவே அந்த வணிகத்திட்டம் என்னும் Business Plan எவ்வாறு அமையவேண்டும் என்பதை எனக்கு அறிந்த அளவில் இங்கு எழுதியுள்ளேன்.
நீங்கள் (Business Plan) வணிக்த்திட்டத்தை வகுக்கும் போது கீழ்காணும் விஷயங்களை கவனத்தில் கொள்வது அவசியமாகும்.
நம்முடைய குறிக்கோள் மற்றும் நம்முடைய செயல்திறன்கள் என்ன என்பதை முதலில் அறியவேண்டும்.
நாம் துவங்க இருக்கும் வியாபாரம் அல்லது நிறுவனத்தை பற்றிய ஆழமான திறனாய்வு வேண்டும்.
நம்மிடமுள்ள செயல் திறனின் மூலம் நம்முடைய குறிக்கோளை அடைந்து வெற்றிபெறும் வழிகள்பற்றி ஆய்வு செய்வது அவசியம்.
நாம் துவங்கும் நிறுவனம், நிர்வாகம், நம்முடைய பணபலம் மற்றும் முதலீடு பற்றிய முழுமையான செயல் திட்டத்தை வகுக்க வேண்டும்.
நாம் தாயாரிக்க/விற்பனைசெய்ய விரும்பும் தயாரிப்புகள் பற்றிய விபரங்கள் மற்றும் அதன் மூலக் கூறுகள் பற்றிய அறிவு நம்மிடம் இருக்க வேண்டும்.
தற்போதைய வணிகச்சந்தை பற்றிய முழுஅளவிலான அறிவு வேண்டும். தேவைப்பட்டால் இதுபற்றிய அனுபவமுள்ளவர்களை அனுகி அவர்களின் அனுபவங்களை அறிந்து கொள்ளலாம்.
வணிகச் சந்தையின் தேவைகள் பற்றிய தகவல்கள் மற்றும் அதை பூர்த்தி செய்வது பற்றிய திட்டங்களும் மற்றும் சந்தையின் பிற வணிகர்கள் மற்றும் போட்டியாளர்கள் பற்றிய தகவல்களையும் சேகரிப்பது கூடுதல் பலத்தைத் தரும்.
நம்முடைய தயாரிப்யு மற்றும் முதலீட்டில் நஷ்ட- அபாயங்கள் மற்றும் நாம் சந்திக்க நேரிடும் சவால்களை முற்கூட்டியே அறிந்திருத்தல் அவசியம்.
வரையறுக்கப்பட்ட முதலீடு முதல் வரையறுக்கப்பட்ட லாப நஷ்டம் உட்பட நம்முடைய விற்பனைத்திறன் வரை அவசியம் திட்டமிடல் வேண்டும்.
நேர்மை, கடின உழைப்பு மற்றும் லாப நஷ்டங்கள் அனைத்தும் இறைவன் புறத்திலிருந்து வருபவையே என்ற நல்லெண்ணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
மேலும் விபரங்களுக்கு இத்துடன் இணைக்கப்பட்டுள்ள கோப்புகளை பார்வையிடுங்கள்.
நேர்மையான, திறமையான, சமுதாயத்திற்கு பயனளிக்கும் பெரும் வணிகராக நீங்களும் உருவாக பிராத்தனைகளோடு வாழ்த்தும்,
posted by: அஹ்மது ஸாஹிப்.