Skip to content

Menu
  • இஸ்லாம்
    • ஆய்வுக்கட்டுரைகள்
    • இமாம் கஸ்ஸாலி (ரஹ்)
    • இம்மை மறுமை
    • இஸ்லாத்தை தழுவியோர்
    • கட்டுரைகள்
    • குர்ஆனும் விஞ்ஞானமும்
    • குர்ஆன்
    • கேள்வி பதில்
    • சிந்தனைக்கு
    • சொற்பொழிவுகள்
    • ஜகாத்
    • தொழுகை
    • நபிமார்கள் வரலாறு
    • நூல்கள்
    • நோன்பு
    • வரலாறு
    • ஸஹாபாக்கள் வரலாறு
    • ஹஜ்
    • ஹதீஸ்
    • ஹஸீனா அம்மா பக்கங்கள்
    • ‘துஆ’க்கள்
    • ‘ஷிர்க்’ – இணை வைப்பு
  • கட்டுரைகள்
    • Dr.A.P.முஹம்மது அலி, I.P.S.(rd)
    • அப்துர் ரஹ்மான் உமரி
    • அரசியல்
    • உடல் நலம்
    • எச்சரிக்கை!
    • கதைகள்
    • கதையல்ல நிஜம்
    • கல்வி
    • கவிதைகள்
    • குண நலன்கள்
    • சட்டங்கள்
    • சமூக அக்கரை
    • நாட்டு நடப்பு
    • பொது
    • பொருளாதாரம்
    • விஞ்ஞானம்
  • குடும்பம்
    • M.A. முஹம்மது அலீ
    • M.A.P. ரஹ்மத்துல்லாஹ்
    • S.A. மன்சூர் அலீ
    • ஆண்-பெண் பாலியல்
    • ஆண்கள்
    • இல்லறம்
    • குழந்தைகள்
    • செய்திகள்
    • நிகழ்வுகள்
    • பெண்கள்
    • பெற்றோர்-உறவினர்
  • சிந்தனைக்கு
    • சிந்தனைக்கு
  • செய்திகள்
    • முக்கிய நிகழ்வுகள்
    • இந்தியா
    • தமிழ் நாடு
    • உலகம்
    • கல்வி
    • வாசகர் பக்கம்
    • வேலை வாய்ப்பு
    • ஒரு வரி
Menu

கப்ஸாக் களஞ்சியம் (1)

Posted on April 22, 2010July 2, 2021 by admin

[ பச்சை ஷிர்க்கான தர்ஹா வழிபாடும் கப்ரில் மரணித்தவர்களிடம் பிரார்த்திப்பதும் இவர்களைப் பொறுத்தவரை இபாதத்களாகக் கருதப்படுவதால்தானோ என்னவோ தப்லீக்கின் கேந்திர ஸ்த்தலமாகிய டில்லி மர்க்கஸின் முன் இருக்கும் தர்ஹாவில் நடக்கும் அத்தனை அனாச்சாரங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்.

டில்லி மர்கஸ் பள்ளிவளாகத்திலும் மூன்று கப்ருகள் இன்று வரைக்கும் அகற்றப்படாமல் உள்ளன. இவர்களைப் பொறுத்த வரைக்கும் கப்ர் வணக்கமெல்லாம் இபாதத்களல்லவா? அவற்றை எப்படி அகற்ற முடியும்?.

”எனது கப்ரை விழா எடுக்கப்படும் இடமாக்கி விடாதீர்கள். யூத கிறிஷ்தவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். ஏனெனில் அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரை அடக்கி விட்டு (அதில் கட்டடம் கட்டி) அதனை வணங்குமிடமாக்கிக் கொள்வார்கள். இவர்கள்தான் படைப் பினங்களிலேயே மிகக் கெட்டவர்கள் என்றார்கள்”. (ஆதாரம் புகாரி, பக்கம் 480).

அதே போன்றே கப்ரை வலம் வரல், கப்ரின் மண்ணை எடுத்து பரக்கத்துப் பெறல், அதன் பெயரில் நேர்ச்சை செய்தல், கப்ராளிகளுக்கு நன்மைகளைச் செய்து ஹதிய்யாச் செய்தல் அனைத்துமே இஸ்லாம் தடை செய்த பித்அத்தான ஷிர்க்கான விடயங்களாகும்.

இந்த அனைத்து விடயங்களும் தப்லீக் பெரியார்களால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் ஏன்? அவர்களே முன்னின்று இந்த விடயங்களைச் செய்ததற்காக ஆதாரங்களைக் காணும் போது தான் ஆச்சரியங்கலந்த வேதனையாகவிருக்கின்றது.] 



ஸதகாவின் சிறப்பில் வருவதாவது. ..

முஹம்மதிப்னு முன்கதிர் என்பவர் சொல்கின்றார். எனது தந்தையிடத்தில் ஒருவர் ஒருதொகைப் பணத்தை அமானிதமாக ஒப்படைத்து விட்டு ஜிஹாதுக்குச் சென்றார். உமக்குத் தேவைப்பட்டால் அதை எடுத்துச் செலவு செய்யுங்கள் பிறகு எடுத்துக் கொள்ளலாம் என்றும் சொல்லிச் சென்றார். எனது தந்தைக்கு அவசியத்தேவை ஏற்பட்டதனால் அதை எடுத்துச் செலவு செய்யும்படியாகி விட்டது. பின்னர் அம்மனிதர் வந்து தனது பணத்தைக் கேட்ட போது (அவரிடம் பணமில்லை) அடுத்த நாள் தருகின்றேன் என்று வாக்களித்து விட்டார்கள்.

பின்பு கவலையுடன் நபியவர்களுடைய கப்றுக்குச் சென்று அங்கு தனது பிரச்சினையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் முறையிட்டுப் பிரார்த்தித்தார்கள். பின் மிம்பறுக்குப் பக்கத்திலும் சென்று பிரார்த்தித்தார்கள். ஸுபுஹ் வேளை நெருங்கியிருக்கும். எனது தந்தை கப்ரிடத்தில் பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள்.

என்ன ஆச்சரியம்!! இருளிலே ஒரு அசரீரி… முஹம்மதின் தந்தையே இதைப் பிடியுங்கள்! என்று ஒரு சத்தம். என் தந்தை கையை நீட்டியதும் ஒரு பணப்பையை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கப்றுக்குள் இருந்தவாறே கொடுத்தார்கள். அதை எடுத்து தனது அமானிதத்தை தந்தை உரியவரிடம் ஒப்படைத்தார். (ஸதகாவின் சிறப்பு 943)

தீன் என்பது அல்லாஹ்வுடைய கட்டளையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய வாழ்க்கை வழிமுறையும் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் அல்லாஹ்வும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தடுத்த, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது வாழ்நாள் அனைத்தையும் எதை ஒழித்துக்கட்டப் பாடுபட்டார்களோ அந்த ஷிர்க்கையும் தர்ஹா வழிபாட்டையும் இபாதத் எனும் பேரில் பாவமறியா பாமர வெள்ளை உள்ளம் கொண்ட மக்களிடம் விதைக்கும் இந்த நிலையை யாரிடம் முறையிடுவது? அல்லாஹ்தான் நேர்வழி காட்ட வேண்டும்.

இவ்வாறான விடயங்கள் தீனுடையவை என்பதை இவர்களுக்கு அல்லாஹ் சொன்னானா? நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்களா? இவையெல்லாம் பச்சை ஷிர்க் என்று அல்லாஹ்வும் றஸூலும் சொல்லவில்லையா? அப்படியிருக்க,

குர்ஆன் ஹதீஸில் தடுக்கப்பட்டவைகளையெல்லாம் இபாதத் என அறிமுகப்படுத்தும் இவர்கள் தீன் என்பது அல்லாஹ்வின் கட்டளையும் நபியுடைய வழியும் என்று சொல்லி அழைப்பது எவ்வளவு பெரிய மோசடி!

இந்த பச்சை ஷிர்க்கான தர்ஹா வழிபாடும் கப்ரில் மரணித்தவர்களிடம் பிரார்த்திப்பதும் இவர்களைப் பொறுத்தவரை இபாதத்களாகக் கருதப்படுவதால்தானோ என்னவோ தப்லீக்கின் கேந்திர ஸ்த்தலமாகிய டில்லி மர்க்கஸின் முன் இருக்கும் தர்ஹாவில் நடக்கும் அத்தனை அனாச்சாரங்களையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள். டில்லி மர்கஸ் பள்ளிவளாகத்திலும் மூன்று கப்ருகள் இன்று வரைக்கும் அகற் றப்படாமல் உள்ளன. இவர்களைப் பொறுத்த வரைக்கும் கப்ர் வணக்கமெல்லாம் இபாதத்களல்லவா? அவற்றை எப்படி அகற்ற முடியும்?.

இது போல ஹஜ்ஜூக்குச் சென்ற ஒருவர் பசியேற்பட்ட போது நபியவர்களிடம் நான் உங்கள் விருந்தாளி என்று கப்ரில் சொல்லி விட்டு உட்காந்திருக்க கப்ரிலிருந்து நபியவர்களின் கைவெளிப்பட்டு ஒரு பண முடிப்பைக் கொடுத்தாகவும் அதிலுள்ள பணத்தின் பரக்கத் காரணமாக நீண்ட நாட்களுக்கு அதை செலவுசெய்த கதையைப் பாருங்கள் (பளாயிலுல் ஹஜ் 925)

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கப்ரிலிருந்தவாறே ஒருவருக்குப் போர்வை கொடுத்த கதை பார்க்க: ஹஜ்ஜின் சிறப்பு 944.

நபியவர்கள் கப்ரிலிருந்தவாறே ரொட்டி கொடுத்த சம்பவம் பார்க்க வேண்டுமா? பாருங்கள் ஹஜ்ஜின் சிறப்பு பக்கம் 797

மற்றுமொருவர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் பசிக்கு உணவளிக்குமாறு பிரார்த்தித்ததும் கிச்சடியும் குழம்பும் கொடுத்த நிகழ்ச்சியைப் பார்க்க விரும்பின் புரட்டுங்கள் ஹஜ்ஜின் சிறப்பு பக்கம் 945 ஷாஹ் வலிய்யுல்லாஹ் ஒருமுறை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் உணவு கேட்டு முறையிட்ட போது நபியவர்கள் கனவில் சுவையான சோறும் நெய்யும் அடங்கிய மரவையைக் கொடுத்தாகவும் பின்னர் நீர் புகட்டியதாகவும் விழித்துப் பார்த்த போது கையில் உணவின் நெய்மணம் வீசியதாகவுமுள்ள சம்பவத்தைப் பார்க்க ஸதகாவின் சிறப்பு பக்கம் 799

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது தோழர்களுக்குப் போதனை செய்த போது நீ எதைக் கேட்டாலும் அல்லாஹ்விடமே கேள் எவ்வித உதவி தேடுவதாயினும் அல்லாஹ்விடமே தேடு என்று போதித்தார்களல்லவா? அவர்களின் கப்ரின் முன்னாலேயே அவர்களது பெயரிலேயே இத்தனை அனாச்சாரங்களும்; அரங்கேற்றப்படுகின்றன. இத்தனைக்கும் வஸ்த்துக்களால் எதுவும் ஆவதில்லை. அல்லாஹ்வினால்தான் அனைத்துமே ஆகின்றன என்றும் சொல்லிக் கொள்வார்கள்.

கப்ர் வணக்கம் கூடுமா? கப்ரிடம் பரக்கத் தேடலாமா? கப்ராளிகளுக்கு நல்லமல்கள் செய்து அனுப்பலாமா? அவர்களுக்கு நடப்பவை எமக்குத் தெரியுமா? எமக்கு நடப்பவை அவர்களுக்குத் தெரியுமா?

ஆம் என்பதே தப்லீக் நூல்களிலிருந்தும் அதன் பெரியார்களின் வழிகாட்டல்களிலிருந்தும் எமக்குக் கிடைக்கும் பதிலாகும். அதற்கு முன் இதைப் பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொல்லியிருக்கின்றார்கள்?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியுள்ளார்கள்

”எனது கப்ரை விழா எடுக்கப்படும் இடமாக்கி விடாதீர்கள். யூத கிறிஷ்தவர்களுக்கு அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும். ஏனெனில் அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரை அடக்கி விட்டு (அதில் கட்டடம் கட்டி) அதனை வணங்குமிடமாக்கிக் கொள்வார்கள். இவர்கள்தான் படைப் பினங்களிலேயே மிகக் கெட்டவர்கள் என்றார்கள்”. (ஆதாரம் புகாரி, பக்கம் 480) .

அதே போன்றே கப்ரை வலம் வரல், கப்ரின் மண்ணை எடுத்து பரக்கத்துப் பெறல், அதன் பெயரில் நேர்ச்சை செய்தல், கப்ராளிகளுக்கு நன்மைகளைச் செய்து ஹதிய்யாச் செய்தல் அனைத்துமே இஸ்லாம் தடை செய்த பித்அத்தான ஷிர்க்கான விடயங்களாகும்.

இந்த அனைத்து விடயங்களும் தப்லீக் பெரியார்களால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் ஏன்? அவர்களே முன்னின்று இந்த விடயங்களைச் செய்ததற்காக ஆதாரங்களைக் காணும் போது தான் ஆச்சரியங்கலந்த வேதனையாகவிருக்கின்றது.

மௌலானா ஜக்கரிய்யா சொல்கின்றார்கள். ..

கப்றிலுள்ள பெரியார்களுக்கு நல்லமல்களைச் செய்து அனுப்புவதில் அதிக கவனஞ் செலுத்துங்கள். ஏனெனில் நீங்கள் இப்படிச் செய்யும் போது கப்ராளிகளுடைய ரூஹுகள் உங்களின் பக்கம் திரும்பும் அவற்றிலிருந்து பல பரக்கத்துக்களும் உதவிகளும் உங்களுக்கு உண்டாகும். (தீஸ் மஜாலிஸ், பக்கம் 211)

மேற்படி செய்த அல்லாஹ்வின் கட்டளையா? நபியின் வழிமுறையா?,

மற்றுமொரு இடத்தில். .. அவ்லியாக்களுடைய கப்ருகளைத் தரிசித்து அதன் மூலம் ஏதேனும் உதவிகளை ஒருவர் பெற்றால் அது தான் பைஅத் செய்திருக்கும் குருநாதர் – ஷேக்கிடமிருந்தே உண்டானது என எண்ண வேண்டும். ஏனெனில் அந்த அவ்லியாவின் கப்ரிலிருந்து கிடைத்த பரக்கத் இந்த ஷேய்க்கின் ஊடாகவே கிடைத்திருக்கின்றது. (ஸக்காலத்துல் குலூப், பக்கம் 137)

ஸவானிஹூ முஹம்மத் எனும் தப்லீக் பெரியாரின் நூலொன்றில் உள்ளதாவது. ..

ஜக்கரிய்யா மௌலானா அவர்களது சீடர்களில் ஒருவர் ஷேய்க் கன்கோயி அவர்களின் கப்ரைத் தரிசித்தார். அப்போது ஷேக் அவர்கள் கப்ரினுள் ‘கவ்கப் துர்ரிய‘ எனும் கிதாபை வாசித்துக் கொண்டிருக்கக் கண்டார். அதே போல் கன்கோயி அவர்கள் மரணித்த வேளை செய்யித் முஹம்மத் என்பவர் அவர்களது கப்ருக்கு அருகிலேயே முறாக்கபாவில் இருந்து கொண்டிருந்தார்கள். (ஸவானிவ் முஹம்மது யூஸூஃப், பக்கம் 135)

ஷேய்க் சர்தார் முஹம்மது பாக்கிஸ்த்தானி அவர்கள் கூறுகின்றார்கள் மதீனாவிலுள்ள மஸ்ஜிதுன் நபவியின் அல் மஜீத் கதவுக்குட்பட்ட இடம் பத்து வருடங்களாக தப்லீக் ஜமா அத்தினரின் கேந்திர ஸ்த்தலமாக இருந்து வந்தது. அப்போது தப்லீக்கின் அமீராக இருந்த முஹம்மது யூஸூப் திஹ்லவி அவர்களுடன் டில்லியில் நிலாமுத்தீன் பகுதியில் இருந்த இல்யாஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்களின் கப்றுக்கு நள்ளிரவில் செல்வோம்.

அங்கு கப்ரைச் சுற்றி நீண்ட நேரம் தலைகளைத் தாழ்த்தியவர்களாக முறாக்கபா எனும் சிந்தனையில் இருப்போம். அப்போது (ஹயாத்துஸ் ஸஹாபா) எனும் நூலை எழுதிய யூஸூஃப் ரஹ்மதுல்லாஹி அலைஹி சொல்வார்கள் ‘நிச்சயமாக இந்தக் கப்றிலிருக்கும் மௌலானா இல்யாஸ் ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் தனக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறங்கும் ஒளியினைத் தமது சீடர்களுக்கு அவரவர் தரீக்காவின் மீது கொண்ட பற்று நம்பிக்கைக் கேற்ப பங்கு வைத்துக் கொடுப்பார்கள்‘ என்று கூறினார்கள். (தப்லீக் ஜமாஅத் எனும் நூல் பக்கம் 63-65)

மறைவான ஞானத்தை மனிதனும் அறியலாமா ?

அல்லாஹ்கூறுகின்றான்…

நபியே சொல்லுங்கள். அல்லாஹ்வைத்தவிர வானத்திலோ பூமியிலோ உள்ள எவருமே மறைவான விடயங்களை அறிய மாட் டார்கள். (அந் நம்ல் 65)

நபியே கூறுங்கள்.. எனக்கு மறைவான விடயங்கள் தெரியுமென்றிருந்தால் எனக்கு நன்மை பயப்பவைகளை மாத்திமே செய்து கொண்டிருந்திருப்பேன். எவ்வித தீங்குகளும் எனக்கு ஏற்பட்டிருக்காது. . (அல் அன்பால் 188)

இவற்றைக் கவனத்தில் வைத்துக் கொண்டு பின்வரும் பெரியார்கள் பற்றிய திகிலூட்டும் சம்பவங்களையும் வாசியுங்கள்.

தான் மரணிக்கும் நேரத்தை முன்கூட்டியே சொன்ன பெரியார்கள்.

யஃகூப் அஸ்ஸனூஸிய் சொன்னதாக ஜக்கரியா மௌலானா சொல்கின்றார்கள். .

எனது சீடர்களில் ஒருவர் என்னிடத்தில் வந்து நான் நாளை ளுஹருக்குப் பின் மரணிப்பேன் என்றார். மறுநாள் ளுஹர் நேர மானதும் சென்று கஃபாவைத் தவாபு செய்தார். அதன் பின் சொன்னது போன்றே மரணித்து விட்டார். நானே அவரைக் குளிப்பாட்டி கபனும் செய்தேன். கப்றுக்குள் அவரை வைத்த போது கண்களைத் திறந்து விட்டார். நானோ ஆச்சரியத்துடன் மரணித்ததன் பின் எப்படி உயிர் பெற்றாய்? என்றதும் ஆம் நான் உயிருடன் தான் இருக்கின்றேன் அல்லாஹ்வின் மீது காதல் வைத்திருக்கும் எவரும் மரணிப்பதில்லை என்றார். (ஸதக்காவின் சிறப்பு 657)

இதில் எத்தனை அபத்தங்கள் என்பதைப் பார்ப்போம்.

ஷேக்குக்கே தெரியாத ஞானம் சிஷ்யனுக்குத் தெரிந்திருக்கின்றது. இவ்வகையில் இவர் குருவைமிஞ்சிய சீடன்.

இவர் மரணமடைந்த நேரம் நாள் போன்றவற்றைத் துல்லியமாக அறிந்து வைத்திருந்திருக்கின்றார். அப்படியானால் அல்லாஹ் குர்ஆனில் கூறும் பின்வரும் வசனம்? பற்றி

”எந்தவொரு ஆத்மாவும் நாளைக்கு என்ன நடக்குமென அறியாது. எந்த ஆத்மாவும் எவ்விடத்தில் மரணிக்குமென்றும் அறியாது அல்லாஹ்தான் நிச்சயமாக அனைத்தையும் அறிந் தவனும் ஞானமுள்ளவனுமாகும்”. (ஸூரா 34) என்று ஏக இறைவன் அல்லாஹ் சொல்வது தானே உண்மையாக இருக்க முடியும்.

இவர் உயிரோடு இருந்திருப்பின் தன்னைப் பிறர் குளிப்பாட்டி தனது மறைவிடங்களைப் பார்க்க அனுமதித்திருக்கின்றாரே!

இவருக்கு வெட்கம் சூடு சொறணை எதுவுமில்லையா?

வெட்கம் ஈமானின் ஒரு பகுதியென நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியிருக்கின்றார்களே அப்படியாயின் ஈமான் முழுமையற்ற இவர் எப்படி இறை நேசராக முடிந்தது.?

இவர் உயிரோடிருக்கின்றார் என்று அறிந்து கொண்டே இவரது குரு இவரைப் புதைத்திருக்கின்றார். இது பாரதூர மானதொரு கொலைக்குற்றமாகும். இஸ்லாமியச் சட்டத்தின் படி இவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டுமே?

Source:   சூபித்துவத் தரீக்காக்கள்… அன்றும் இன்றும் ஏ.சீ முஹம்மது ஜலீல் (மதனீ)

www.nidur.info

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 2 =

Categories

Archives

Recent Posts

  • ஈத் முபாரக்
  • இந்திய நாட்டை உருவாக்கியவர்கள் முஸ்லிம்களே!
  • ரமளானை வரவேற்போம்
  • துன்பம் நேரும் போது இறை நம்பிக்கை உள்ளவர் எப்படி நடக்க வேண்டும்?
  • இறை நெருக்கம் வேண்டுமா ? இறைவனே கூறும் யுக்தி!
©2023 | Built using WordPress and Responsive Blogily theme by Superb