[ அதிகாலை வேலை ஆண்கள் விழித்துக் கொள்ளும் போது எந்த வித பாலியல் உணர்ச்சியும் இல்லாமல் தாமாகவே விறைத்திருக்கும் ஆணுறுப்பைப் பார்த்து தங்களுக்கு ஏதோ நோய் இருப்பதாய் கற்பனை செய்து, வெளியில் சொல்லவும் வெடகப்பட்டு மனரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
உண்மையில் இது வெட்கப்பட வேண்டியதோ அல்லது அச்சப்பட வேண்டிய விஷயமோ அல்ல. சாதாரணமாக இது எல்லா ஆண்களிலும் காணப்படும் உடற் தொழிற்பாட்டு மாற்றமாகும்.
இந்த அதிகாலை விறைப்பு மருத்துவ ரீதியாக முக்கிய பங்கு வகிக்கின்றது.]
பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் மலட்டுத்தன்மை ஏற்படலாம். பெண்களோடு ஒப்பிடும் போது ஆண்களிலே மலட்டுத்தன்மை ஏற்படும் சந்தர்ப்பம் குறைவு என்பதால் குழந்தை பிறக்காவிட்டால் முழுக் குற்றத்தையும் மனைவி மேலேயே சுமத்தி விடுகிறது இந்தச் சமூகம்.
ஆனாலும் மருத்துவ ரீதியாக மலட்டுத்தன்மைக்குரியவர் கணவனா அல்லது மனைவியா என அறிந்துகொள்ள இப்போது ஏராளமான வசதிகள் உள்ளன. குழந்தை உருவாகாமல் இருக்கும் குடும்பத்தைச் சேர்ந்த மனைவி மட்டுமல்ல கணவனும் தங்களை மருத்துவச் சோதனைக்கு உட்படுத்திக் கொள்வது கட்டாயமாகும். ஏனென்றால் இன்றைய மருத்துவ வளர்ச்சியில் அந்தக் குறைபாடுகளை போக்கிக் கொள்ள நிறைய வசதிகள் வந்துவிட்டன.
சரி , ஆணிலே மலட்டுத் தன்மை உள்ளதா என்று எவ்வாறு பரிசோதிக்கப்படுகிறது?
ஒரு குழந்தையின் உருவாக்கத்திற்கு ஆணிலே இருந்து வெளிவரும் விந்து (sperm) எனப்படும் உயிரணு பெண்ணின் முட்டை (ova) எனப்படும் உயிரை அடைந்து கருக்கட்டப்பட வேண்டும். பெண்களிலே முட்டையானது மாதவிடாய்க் காலத்தின் நடுப்பகுதியிலே சூலகம்(ovary) எனப்படும் உறுப்பில் இருந்து வெளிவரும், இது வெளி வந்து மூன்று நாட்களுக்குள் அந்த பெண் உறவில் ஈடுபட்டு அவளின் உறுப்பின் உள்ளே ஆணின் விந்தணு செலுத்தப்பட்டால் அது அந்த முட்டையை கருக்கட்ட சந்தர்ப்பம் உள்ளது.
பெண்களிலே சாதாரணமாக ஒரு நேரத்தில் ஒரு முட்டையே (ova) வெளிவரும். ஆனால் ஆண்களில் அப்படியல்ல ஒரு நேரத்தில் மில்லியன் கணக்கான விந்தணுக்கள் வெளிவரும், ஆனாலும் இதில் ஒன்றே முட்டையை சென்றடைந்து கருக்கட்டி குழந்தையாகும்.
இந்த விந்தணுவானது ஆணின் உறுப்பிலே இருந்து வெளிவரும் சுக்கிலப் பாயம் (seminal fluid) எனப்படும் திரவத்தில் உயிர்வாழ்ந்து கொண்டிருக்கும்.அதாவது ஆண் உடலுறவின் போது வெளியிடும் திரவமானது சுக்கிலப் பாயம்(seminal fluid) எனப்படுகிறது .இந்த சுக்கிலப் பாயத்திலே விந்துகளோடு அவை உயிர் வாழ்வதற்கான அத்தியாவசியமான பதார்த்தங்களும் நிரம்பி இருக்கும்.
ஒரு விந்தின் உருவம் இப்படித்தான் நுணுக்குக் காட்டியில் தெரியும்
ஆணின் குழந்தை உருவாக்குவதற்குரிய தன்மையை அறிய இந்த சுக்கிலப் பாயம் பயன் படுத்தப்படுகிறது.
சுக்கிலப் பாயத்தில் இருக்கும் விந்துகளின் எண்ணிக்கை(sperm count) , அந்த விந்துகளின் அசையும் தன்மை(motility), அந்த விந்துகளின் உருவ அமைப்பு(morphology) என்பவையே முக்கியமாக சோதிக்கப் படுகின்றன. இவை அனைத்தும் குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாக இருக்கும் போதே அந்த ஆனால் ஒரு குழந்தையை உருவாக்க முடியும்.
அதாவது விந்துகளின் எண்ணிக்கை மட்டும் தேவையான அளவு இருந்தால் போதாது அவை உருவ ரீதியாக உகந்ததாகவும், அசையும் தன்மை கொண்டதாகவும் இருக்க வேண்டும்.
பரிசோதனைக்காக இந்த சுக்கிலப் பாயம் எப்படிப் பெறப்படுகிறது?
சுக்கிலப் பாயத்தில் மிதக்கும் விந்துகள்
ஆண் சுய இன்பத்தில் (mastubation)ஈடுபட்டு வெளிவருகின்ற திரவத்தை ஆய்வு கூடத்தில்/வைத்திய சாலையில் இருந்து பெற்றுக் கொண்ட பாத்திரத்தில் சேகரித்துக் கொடுக்கவேண்டும்.
உடலுறவின் போது வெளிவரும் திரவத்தை கொண்டம் மூலம் சேகரித்தும் கொடுக்கலாம்.ஆனால் அதற்கான கொண்டம் எந்த இரசாயனப் பதார்த்தமும் கொண்டிராததாக இருக்க வேண்டும்.
இவ்வாறு சேகரிக்கப்பட்ட சுக்கிலப் பாயம் ஒரு மணி நேரத்தினுள் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப் பட வேண்டும்.
முக்கியமாக சோதனைக்காக சுக்கிலப் பாயத்தை சேகரிக்கும் முன் மூன்று நாட்களுக்கு அந்த ஆண் சுய இன்பத்திலோ, உடலுறவிலோ ஈடுபடாமல் இருப்பது முக்கியம்.
ஆணுறுப்புக்களின் காலை நேர விறைப்பும் நன்மைகளும்
ஆண்கள் பிழையாக புரிந்து கொண்டு அச்சப்படும் விடயங்களில் ஒன்று அதிகாலை நேரத்தில் அவர்களின் ஆணுறுப்பில் இயல்பாக ஏற்படுகின்ற விறைப்புத் தன்மை ஆகும்.
அதாவது அதிகாலை வேலை அவர்கள் விழித்துக் கொள்ளும் போது எந்த வித பாலியல் உணர்ச்சியும் இல்லாமல் தாமாகவே விறைத்திருக்கும் ஆணுறுப்பைப் பார்த்து தங்களுக்கு ஏதோ நோய் இருப்பதாய் கற்பனை செய்து , வெளியில் சொல்லவும் வெடகப்பட்டு மனரீதியாக அழுத்தத்திற்கு உள்ளாகிறார்கள் .
உண்மையில் இது வெட்கப்பட வேண்டியதோ அல்லது அச்சப்பட வேண்டிய விஷயம் அல்ல. சாதாரணமாக இது எல்லா ஆண்களிலும் காணப்படும் உடற் தொழிற்பாட்டு மாற்றமாகும்.
அதிகாலை நேரத்தில் ஆணுறுப்புக்கு அதிகம் ரத்தம் போவதாலே இது ஏற்படுகின்றது.
இந்த விறைப்புத் தன்மையுட சில வேளைகளில் விந்து நீர் வெளியேற்றமும் இயல்பாக ஏற்படலாம்.
இந்த அதிகாலை விறைப்பு மருத்துவ ரீதியாக முக்கிய பங்கு வகிக்கின்றது.
அதாவது தங்களால் உடலுறவின் போது சரியான விறைப்பினை அடையமுடியவில்லை எனும் ஆண்களிலே உண்மையான காரணத்தை கண்டு பிடிப்பதற்கு இது உதவுகின்றது.
அதாவது, விறைப்பினை அடையா முடியாதத்திற்கு முக்கிய காரணம் உளவியல் சம்பந்தப்பட்ட பிரச்சனையாகும்.
இவ்வாறு தங்களால் சரியான விரைப்புத்தன்மையை அடைய முடியவில்லை எனும் ஆண்களின் ஆணுறுப்புக்கள் மற்ற ஆண்களைப் போல அதிகாலையில் தானாக விறைககுமானால், அதன் அர்த்தம் அவர்களின் உடலிலோ அல்லது ஆணுருப்பிலோ எந்த விதமான பிரச்சினையும் இல்லை, உளவியல் பிரச்சினைகளாலே உடலுறவின் போது அவர்களின் ஆணுறுப்புக்கள் விறைக்க மறுக்கின்றன என்பதாகும்.
அதைவிடுத்து உடலுறவின் போது ஆணுறுப்பு விரிக்கவில்லை எனும் ஆனில் இந்த அதிகாலை விறைப்பும் ஏற்பட வில்லை என்றால உளவியல் பிரச்சினைக்கு அப்பால் அவரின் உடலிலே வேறு பிரச்சினை இருக்கலாம்.
ஆகவே ஆண்களே உங்களுக்கு அதிகாலை விறைப்பு மற்றும் விந்து நீர் வெளியேற்றம் ஏற்பட்டாலோ அச்சப்பட வேண்டாம், சந்தோஷப்படுங்கள் நீங்கள் ஆண்மைத்தன்மையானவர் என்று.
உடலுறவின் போது ஆணுறுப்பு சரியான முறையில் விறைக்க மறுக்கிறது எனும் ஆண்களே, சற்று அவதானித்துப் பாருங்கள், உங்களின் ஆணுருப்புக்களிலே அதிகாலை நேரத்தில் விறைப்பு ஏற்படுமானால் உங்களின் உடலில் எந்தப் பிரச்சினையும் இல்லை, உளவியல் ரீதியான உங்கள் அச்சமே உடலுறவின் போது ஆணுறுப்பு விறைக்க மறுப்பதற்கான காரணமாகும்.
நன்றி: தமிழ் மருத்துவம்