குழந்தையின் பாலினத்தை நிர்ணயித்தல் தொடர்பான ஹுகும்ஷரியா (1)
கட்டுரையை மேலோட்டமாக பார்க்காமல் முழுமையாக படியுங்கள்
[ பெண்ணுடைய சினைமுட்டை முன்னதாக வெளிப்பட்டு தயார்நிலையில் இருக்கையில் அதன்பின்னர் ஆணின் விந்தணு வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெறுமாயின் பெரும்பாலும் ஆண்குழந்தை உருவாகிறது என்றும் மாறாக ஆணின் விந்தணு முன்னதாக வெளிப்பட்டு தயார்நிலையில் இருக்ககையில் அதன்பின்னர் பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெறுமாயின் பெரும்பாலும் பெண்குழந்தை உருவாகிறது என்றும் கண்டறியப்பட்டது.
உதாரணமாக சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர் தம்பதிகளுக்குள் உடலுறவு ஏற்பட்டு கருவுறுதல் நடைபெற்றது எனில் ஆண்குழந்தை தரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதேவேளையில் தம்பதிகளுக்குள் உடலுறவு ஏற்பட்ட பின்னர் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெற்றது எனில் பெண்குழந்தை தரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
இவ்வாறாக பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்டு 24 மணி நேரத்திற்குள் தம்பதிகளுக்குள் உடலுறவு எற்பட்டால் ஆண்குழந்தைக்கு அதிக வாய்ப்பும். உடலுறவு ஏற்பட்டு சில மணி நேரத்திற்குள் சினைமுட்டை வெளிப்பட்டால் பெண்குழந்தைக்கு அதிக வாய்ப்பும் இருக்கிறது. ஆகவே ஆண்குழந்தையை விரும்பும்போது பெண்ணின் சினைமுட்டை கருவறையில் இருக்கும் நாட்களில் உடலுறவு ஏற்படுத்திக் கொள்ளும்படியும்.
ஆண்குழந்தை விரும்பப்படாதபோது அந்த நாட்களில் உடலுறவு ஏற்படுத்திக் கொள்ளாமலோ அல்லது உடலுறவு கொள்ளும்நிலை ஏற்பட்டால் ஆணின் இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்தும்விடும்படியோ அல்லது உடலுறவின்போது ஆணுறையை பயன்படுத்தும்படியோ மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.]
வரலாற்றுக்கு முந்தைய காலம் தொட்டே மனிதர்கள் குழந்தையின் பாலினத்தை தேர்வுசெய்வதில் விருப்பம் கொள்பவர்களாகவும் விரும்பிய பாலினம் உருவாகும்போது ஏற்றுக்கொள்கிறவர்களாகவும் விரும்பாத பாலினம் உருவாகும்போது அந்தந்த காலகட்டத்தில் கிடைக்கும் செயல்முறையை பிரயோகித்து அவற்றை நீக்குபவர்களாகவும் இருந்து வந்திருக்கிறார்கள்.
அறியாமைக் காலத்தில் ஆண்குழந்தை அதிகமாக விரும்பப்பட்டது, ஏனெனில் அது போர்க்களத்திலும் மற்ற விஷயங்களிலும் தந்தைக்கு உதவியாக இருப்பதோடு சந்ததியையும் நிலைநிறுத்துகிறது, அதேவேளையில் பெண்குழந்தை துயரத்தை கொடுக்கக்கூடியது என்று கருதப்பட்டதால் உயிருடன் புதைக்கப்பட்டது,
அல்லாஹ் سبحانه وتعالى கூறுகிறான்,
وَإِذَا الْمَوْءُودَةُ سُئِلَتْ بِأَيِّ ذَنْبٍ قُتِلَتْ
”உயிருடன் புதைக்கப்பட்ட பெண் குழந்தை எதற்காக கொல்லப்பட்டது என்று வினவப்படும்போது, , , , ,” (அத்தக்வீர் : 8. 9)
பிந்தைய காலகட்டத்தில் விரும்பாத குழந்தைகளை கருவிலேயே நீக்கிவிடும் வழிமுறை ஏற்படுத்தப்பட்டது, தாயின் கருவறையில் ஸ்கேன் செய்து குழந்தையின் பாலினத்தை கண்டறிந்து விருப்பத்திற்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் கருவை கலைத்திடும் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது,
அறிவியல் முன்னேற்றம் அடைந்த இந்தக் காலகட்டத்தில் இவ்விஷயத்தில் நவீன தொழில்நுட்பங்கள் பல ஏற்பட்டிருக்கின்றன. கருவறையில் இருக்கும் கருநிலை சிசுவை கண்காணிக்கவும் அதன் இயக்கத்தை விரும்பியவாறு கட்டுப்படுத்தவும் இப்போது சாத்தியம் இருக்கிறது. கருவறையிலுள்ள கருவின் மரபணு அமிலத்தன்மையின் சூழலில் இருந்தால் பெரும்பாலும் அது பெண் சிசுவாக உருவாகும் என்றும் மரபணு காரத்தன்மையின் சூழலில் இருந்தால் அது பெரும்பாலும் ஆண் சிசுவாக உருவாகும் என்றும் கண்டறியப்பட்டிருக்கிறது.
இதனடிப்படையில் ஆண்குழந்தை மீது விருப்பம் கொள்பவர்கள் உடலுறவு ஏற்படுவதற்கு முன்பு கருவறைக்குழாயில் காரத்தன்மையுள்ள திரவத்தை பீச்சிக்கொள்வதன் மூலம் கருவறையில் காரத்தன்மையின் சூழலை ஏற்படுத்திக் கொள்கிறார்கள், இதற்கு அல்கலைன் டூஷிஸ் என்று பெயராகும், இதன் மூலமாக ஆண்குழந்தை தரிப்பதற்கு அதிகமான வாய்ப்பு இருக்கிறது,
இதற்கு அடுத்தபடியாக பெண்ணின் உடலில் காரத்தன்மையின் சூழல் அல்லது அமிலத்தன்மையின் சூழல் ஆகியவற்றை உருவாக்குவதற்கு உணவுமுறையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன, கருவின் பாலின உருவாக்கத்தில் இரண்டு வழிகளில் மாற்றத்தை ஏற்படுத்தமுடியும் என்று இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டது,
முதலாவது முறை:
கருவறை மற்றும் கருவறைக்குழாய் ஆகியவற்றில் காரத்தன்மையையோ அமிலத்தன்மையையோ செயற்கையாக உருவாக்குதல்,
பொட்டாஷியம் மற்றும் சோடியம் ஆகியவை காரத்தன்மையை ஏற்படுத்தக்கூடியவை என்றும். இவற்றைக் கொண்டு கருவறையின் சூழலை மாற்றும்போது ஆண்குழந்தை உருவாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறதென்றும்; அதேவேளையில் மெக்னீஸியம் மற்றும் கால்ஸியம் ஆகியவை அமிலத்தன்மையை ஏற்படுத்தக்கூடியவை என்றும் இவற்றைக் கொண்டு கருவறையின் சூழலை மாற்றும்போது பெண்குழந்தை உருவாகுவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறதென்றும் கண்டறியப்பட்டது,
இரண்டாவதுமுறை:
உணவுமுறை சினைமுட்டையின் வெளிப்புற சுவரில் விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும் அதன் மூலமாக அது விந்தணுவிலுள்ள ஆண்அணுவையோ அல்லது பெண்அணுவையோ ஈர்க்கும் திறனைப் பெற்றுக்கொள்கிறது என்றும் ஆய்வுசெய்யப்பட்டது,
இதனடிப்படையில் ஆண்குழந்தை மீது விருப்பம் கொள்ளும் தம்பதிகளுக்கு குறிப்பாக மனைவிக்கு காரத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் உணவான உப்பேற்றிய மாமிசம் மசாலா பொருட்கள் கலந்த உணவுகள் பழங்கள் மற்றும் பொட்டாஷிய சத்து மிகுந்த மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்ளவும் பால் மற்றும் பால்பொருட்கள் ஆகியவற்றை தவிர்த்துக் கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டது,
மாறாக பெண்குழந்தை மீது விருப்பம் கொள்ளும் தம்பதிகளுக்கு குறிப்பாக மனைவிக்கு அமிலத்தன்மையை அதிகரிக்கச் செய்யும் உணவான பால் மற்றும் பால் பொருட்கள். கால்ஸிய சத்து மிகுந்த மருந்துகள் ஆகியவற்றை உட்கொள்ளவும் மாமிசம் குறிப்பாக உப்பேற்றிய மாமிசம் பழங்கள் மசாலா மற்றும் நறுமண உணவுப்பொருட்கள் ஆகியவற்றை தவிர்ந்து கொள்ளவும் பரிந்துரை செய்யப்பட்டது,
மூன்றாவது முறை:
இதன்பின்னர் மற்றொரு வழிமுறையும் கண்டறியப்பட்டது. பெண்ணுடைய சினைமுட்டை முன்னதாக வெளிப்பட்டு தயார்நிலையில் இருக்கையில் அதன்பின்னர் ஆணின் விந்தணு வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெறுமாயின் பெரும்பாலும் ஆண்குழந்தை உருவாகிறது என்றும் மாறாக ஆணின் விந்தணு முன்னதாக வெளிப்பட்டு தயார்நிலையில் இருக்ககையில் அதன்பின்னர் பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெறுமாயின் பெரும்பாலும் பெண்குழந்தை உருவாகிறது என்றும் கண்டறியப்பட்டது.
உதாரணமாக சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர் தம்பதிகளுக்குள் உடலுறவு ஏற்பட்டு கருவுறுதல் நடைபெற்றது எனில் ஆண்குழந்தை தரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதேவேளையில் தம்பதிகளுக்குள் உடலுறவு ஏற்பட்ட பின்னர் சினைப்பையிலிருந்து சினைமுட்டை வெளிப்பட்டு கருவுறுதல் நடைபெற்றது எனில் பெண்குழந்தை தரிப்பதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கின்றன.
இவ்வாறாக பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்டு 24 மணி நேரத்திற்குள் தம்பதிகளுக்குள் உடலுறவு எற்பட்டால் ஆண்குழந்தைக்கு அதிக வாய்ப்பும். உடலுறவு ஏற்பட்டு சில மணி நேரத்திற்குள் சினைமுட்டை வெளிப்பட்டால் பெண்குழந்தைக்கு அதிக வாய்ப்பும் இருக்கிறது. ஆகவே ஆண்குழந்தையை விரும்பும்போது பெண்ணின் சினைமுட்டை கருவறையில் இருக்கும் நாட்களில் உடலுறவு ஏற்படுத்திக் கொள்ளும்படியும்,
ஆண்குழந்தை விரும்பப்படாதபோது அந்த நாட்களில் உடலுறவு ஏற்படுத்திக் கொள்ளாமலோ அல்லது உடலுறவு கொள்ளும்நிலை ஏற்பட்டால் ஆணின் இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்தும்விடும்படியோ அல்லது உடலுறவின்போது ஆணுறையை பயன்படுத்தும்படியோ மருத்துவர்கள் ஆலோசனை கூறுகிறார்கள்.
இவ்வாறாக இந்திரியத்தை கருவறையில் செலுத்தாமல் ஆணுறுப்பை வெளியே எடுத்துவிடுதல் அல்லது ஆணுறை போன்ற கருத்தடை சாதனங்களை பயன்படுத்துதல் ஆகியவை குழந்தையின் பாலினத்தை தீர்மானிக்கும் செயல்முறைகளாக இருந்துவருகிறது,
பெண்ணின் கருவறையில் சினைமுட்டை இருக்கும் தேதியை அவளது மாதவிடாய் தேதியை வைத்து தீர்மானித்து விடலாம் என்றபோதும் அது தோராயமான கணிப்பாகத்தான் இருக்கும், கருவறைக்குள் என்டோஸ்கோப்பி கருவிமூலம் உற்றுநோக்கி கணிப்பதன் மூலமே சினைமுட்டையின் வெளிப்பாட்டை துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.
அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள்,
وَأَمَّا الْوَلَدُ فَإِذَا سَبَقَ مَاءُ الرَّجُلِ مَاءَ الْمَرْأَةِ نَزَعَ الْوَلَدَ
وَإِذَا سَبَقَ مَاءُ الْمَرْأَةِ مَاءَ الرَّجُلِ نَزَعَتْ الْوَلَدَ
”ஆணின் இந்திரியத்திற்கு முன்பாக பெண்ணின் இந்திரியம் வெளிப்பட்டால் அது ஆண்குழந்தையாகும். பெண்ணின் இந்திரியத்திற்கு முன்பாக ஆணின் இந்திரியம் வெளிப்பட்டால் அது பெண்குழந்தையாகும்” (ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு, புஹாரி)
யூத ரப்பி (அறிஞர்) ஒருவர் அல்லாஹ்வின் தூதரிடம் صلى الله عليه وسلم ஆண்குழந்தை பற்றி கேள்வி கேட்டார்,அதற்கு பதிலுரையாக அல்லாஹ்வின் தூதர் صلى الله عليه وسلم கூறினார்கள்,
فإذا اجتمعا فعلا مني الرجل مني المرأة أذكرا بإذن الله
وإذا علا مني المرأة مني الرجل آنثا بإذن الله
”அவர்கள் (உடலுறவில்) ஒன்றுபடும்போது ஆணின் இந்திரியமும் பெண்ணின் இந்திரியமும் வெளிப்படுகிறது, ஆணின் இந்திரியம் பெண்ணின் இந்திரியத்தை மிகைக்கும்போது அல்லாஹ்வின் விதிப்படி ஆண்குழந்தை உருவாகிறது. பெண்ணின் இந்திரியம் ஆணின் இந்திரியத்தை மிகைக்கும்போது அல்லாஹ்வின் விதிப்படி பெண்குழந்தை உருவாகிறது” (ஸவ்பான் ரளியல்லாஹு அன்ஹு, முஸ்லிம்)
”ஆணின் இந்திரியம் பெண்ணின் இந்திரியத்தை மிகைத்துவிடுதல்” என்றால் பெண்ணின் சினைமுட்டை வெளிப்பட்ட பின்னர் ஆணின் விந்தணு வெளிப்படுதல் என்று பொருள்படும்,
இதன்பின்னர் மருத்துவ நிபுணர்கள் மேம்பட்ட அறிவியல் வழிமுறையை உருவாக்கினார்கள் அதற்கு ”தேர்வுசெய்து விந்தணுவை செலுத்தும்முறை அல்லது விந்தணுவை கட்டுப்படுத்தும்முறை” என்று பெயராகும், இந்தமுறையில் விந்தணுவில் இடம்பெற்றுள்ள ஆண்பாலுக்குரிய ஹ் குரோமோஸோமிலிருந்து பெண்பாலுக்குரிய ஷ் குரோமோஸோமை பிரித்துவிடுகிறார்கள், இந்த செயல்முறை பெண்ணின் கருவறைக்கு வெளியே சோதனைக்குழாயில் முறையான மருத்துவ தொழில்நுட்பத்தின் மேற்பார்வயில் நடைபெறுகிறது,
ஆணின் விந்தணுவில் ஷ் மற்றும் ஹ் குரோமோஸோம்கள் (மரபணு துகள்கள்) இடம்பெற்றிருக்கின்றன ஆனால் பெண்ணின் சினைமுட்டையில் ஷ்ஷ் குரோமோஸோம்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன, அதாவது ஆணின் விந்தணுவில் ஆண்பாலுக்குரிய குரோமோழ்ஸப்ம்களும் பெண்பாலுக்குரிய குரோமோழ்ஸப்ம்களும் இடம் பெற்றிருக்கின்றன ஆனால் பெண்ணின் சினைமுட்டையில் பெண்பாலுக்குரிய குரோமோஸோம்கள் மட்டுமே இடம்பெற்றிருக்கின்றன.
விந்தணுவிலுள்ள குரோமோஸோம் சினைமுட்டையுடன் இணைந்து கருவுறுதல் ஏற்பட்டால் அதன் விளைவாக ஷ்ஹ் என்ற மரபணு உருவாகிறது, அது ஆண் குழந்தைக்குரியது. மாறாக விந்தணுவிலுள்ள ஷ் குரோமோஸோம் சினைமுட்டையுடன் இணைந்து கருவுறுதல் ஏற்பட்டால் அதன் விளைவாக ஷ்ஷ் என்ற மரபணு உருவாகிறது, அது பெண்குழந்தைக்குரியது.
இதனடிப்படையில் மருத்துவ நிபுணர்கள் மருத்துவ தொழில்நுட்பத்தின் துணைகொண்டு விந்தணுவிலுள்ள (ஆண்பாலுக்குரிய) ஹ் குரோமோஸோம்மிலிருந்து (பெண்பாலுக்குரிய) ஷ் குரோமோஸோமை பிரித்துவிட்டு பின்னர் சோதனைக்குழாயில் சினைமுட்டையுடன் விந்தணுவை இணைத்து கருவூட்டம் செய்கிறார்கள்.
தம்பதிகள் ஆண்குழந்தையை விரும்பும் பட்சத்தில் குரோமோஸோம் உள்ள விந்தணுவுடன் சினைமுட்டையை இணைந்து கருவூட்டம் செய்கிறார்கள் அதன் மூலம் பெரும்பாலும் ஆண்குழந்தை உருவாகிறது, தம்பதிகள் பெண்குழந்தையை விரும்பும் பட்சத்தில் ஷ் குரோமோஸோம் உள்ள விந்தணுவுடன் சினைமுட்டையை இணைந்து கருவூட்டம் செய்கிறார்கள் அதன் மூலம் பெரும்பாலும் பெண்குழந்தை உருவாகிறது,
இதேபோன்று மற்றொரு முறையை மருத்துவ நிபுணர்கள் கண்டறிந்துள்ளார்கள், அது மேற்கூறப்பட்ட முறையிலிருந்து சிறிது வேறுபட்டது, இந்த முறையில் சோதனைக்குழாயில் விந்தணுவுடன் சினைமுட்டையை இணைத்து கருவூட்டம் செய்தபின்னர் கருவுற்ற முட்டையை ஆய்வுசெய்கிறார்கள்.
கருவுற்ற சினைமுட்டை ஷ்ஹ் மரபணுவை பெற்றிருந்தால் அது ஆண்குழந்தைக்குரிய கருவாகும், கருவுற்ற சினைமுட்டை ஷ்ஷ் மரபணுவை பெற்றிருந்தால் அது பெண்குழந்தைக்குரிய கருவாகும்.
ஆகவே ஆண்குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் விரும்பினால் ஷ்ஹ் மரபணு கொண்ட கருமுட்டையை மனைவியின் கருவறையில் செலுத்துகிறார்கள்.
பெண்குழந்தை பெற்றுக்கொள்ள தம்பதிகள் விரும்பினால் ஷ்ஷ் மரபணு கொண்ட கருமுட்டையை மனைவியின் கருவறையில் செலுத்துகிறார்கள்,
இவையனைத்தும் பிறக்கப்போகும் குழந்தையின் பாலினத்தை தேர்வு செய்வதற்காக மனிதர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளாகும், இது வரலாற்றுக்கு முந்தைய காலந்தொட்டு இன்றுவரை நிகழந்துகொண்டிருக்கிறது.
கட்டுரையின் தொடர்ச்சிக்கு கீழே உள்ள “Next” ஐ “கிளிக்” செய்யவும்.
source: http://sindhanai.org/?p=216